பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 25, 2008

ஞானசேகரனுக்கு நன்றி

காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் நேற்று சட்டசபையில் இவ்வாறு பேசியுள்ளார்:

அரிசி விலை ரூ.2 என்றாலும் ஒரு இட்லி ரூ.5-க்கு விற்கப்படுகிறது. ஓட்டல்களில் ரூ.34 வரை தோசை விற்கிறது. இதுபோன்ற விலை உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.


கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ஞானசேகரனுக்கு நன்றி :-)

3 Comments:

Anonymous said...

தமிழகத்தின் பிரபல அரசியல் விமர்சகரும் துக்ளக்
பத்திரிகையின் ஆசிரியருமான திரு சோ ராமசாமி அவர்கள்
19.01.2008இல் ரீ பீ சீக்கு வழங்கிய செவ்விசெவ்வி கண்டவர் ரீ பீ சீயின் பணிப்பாளர் திரு வீ ராம்ராஜ்
கேள்வி இப்பொழுது இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்து
இருதரப்பினரும் கடுமையான மோதலை நோக்கிச் செல்கின்றனர். இந்த
நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?பதில்: போர் நிறுத்த ஒப்பந்தமென்பது வெறும் காகித அளவில்தான்
இருந்ததே தவிர அது பலமுறைகள் விடுதலைப் புலிகளினாலும் சிங்கள
அரசினாலும் மீறப்பட்டு வந்தது. போர் நிறுத்தம் என்ற பெயரைப் பயன்
படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகள் நிதி, ஆயுதம் மற்றும்
சிறுவர்களைப் படையில் சேர்ப்பது விடயங்களை வளர்த்துக்கொள்வதில்
தான் கவனமாக இருந்தனர். அத்தோடு நாசவேலைகளையும் நடத்திக்
கொண்டுதான் இருந்தனர். கொலைகளும் நடந்துகொண்டுதான் இருந்தன.
சிங்கள இராணுவமும் விடுதலைப் புலிகளைத் தாக்கிக்கொண்டுதான்
இருந்தனர். ஆகையால் ஏதோ போர் நிறுத்தம் ஒன்று முழுமையாக
அமுலில் இருந்து இப்போது போய்விட்டதுபோல் நான் நினைக்கவில்லை.
காகித அளவில் இருந்ததை இப்போது தூக்கி எறிந்துவிட்டர்கள்
அவ்வளவுதான்.கேள்வி: இந்த நிலைமைக்கு யார் முழுமையான பொறுப்பேற்க
வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?பதில்: பெரும்பான்மையாகவும் அதிகமானதாகவும் விடுதலைப் புலிகள்
தான் காரணம் என்பது என் கருத்து.கேள்வி: இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமுல் படுத்தினாலே இலங்
கையின் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடுமென்று சிலதரப்
பினரால் கூறப்படுகிறது. இலங்கை ஜனாதிபதி அண்மையில் இந்தியாவில்
வைத்து இவ்வாறு கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த
நிலைப்பாடு குறித்து உங்களுடைய கருத்து எவ்வாறு இருக்கிறது?பதில்: இந்திய இலங்கை ஒப்பந்தம்தான் இதுவரை தமிழர்களுக்கு
கிடைத்துள்ள தீர்வுகளில் மிகவும் ஏற்கத்தக்கதாக விளங்கியது. அதைக்
கெடுத்ததும் அதை அமுல்படுத்த முடியாமல் தடுத்ததும் விடுதலைப்
புலிகளின் நடவடிக்கைகள்தான். அந்த அடிப்படையில் இருதரப்பினரும்
அமர்ந்து இலங்கைவாழ் தமிழர்களுக்கு சிங்களவர்களோடு சம
உரிமையும் தந்து ஒரு கூட்டரசுக் கோட்பாட்டு அமைப்பின் சமஷ்டி அமைப்
பு உருவாக வழிசெய்வது பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். இதை நான்
ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்பொழுதும் கூறுகிறேன்.கேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவிலும் வேறு பல
நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த அமைப்பின் கடந்
தகால நடவடிக்கைகள்தான் காரணமெனக் கூறப்பட்டபோதிலும் பல
சந்தர்ப்பங்களில் பல தரப்பினரும் விடுதலைப் புலிகளையும் இலங்கைத்
தமிழர்களின் பிரச்சனையையும் ஒன்றாகப் பார்ப்பதால் தமிழர்களின்
பிரச்சனை பின்தள்ளப்படுகின்ற ஒரு நிலைமை இன்று காணப்படுகிதே.
இதனை எவ்வாறு தவிர்க்கலாமென்று நீங்கள் கூறுகிறீர்கள்?
பதில்: இலங்கைத் தமிழர்களின் பல தலைவர்களை விடுதலைப்
புலிகள் தீர்த்துவிட்டார்கள். இலங்கைத் தமிழர்களுக்குத் தங்களைவிட்
டால் வேறு தலைமை கிடையாது என்ற நிலையைத் தோற்றுவிப்பதற்
காக இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் பலரை அவர்கள் கொலை
செய்திருக்கிறார்கள். அதனால்தான் இப்போது இலங்கைத் தமிழர்களின்
பிரச்சனை என்றால் விடுதலைப் புலிகள் தொடர்பாகவே பார்க்கப்
படுகிறது. ஆகையால் இதற்கும் தவறு விடுதலைப் புலிகள்மீதுதான்
இருக்கவேண்டுமே தவிர அந்தப் பார்வையாளர்கள் மீது அல்ல.கேள்வி: நீங்கள் தற்போது கூறினீர்கள் இலங்கைத் தமிழரைப் பொறுத்
தமட்டில் இனப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வாக இலங்கை இந்திய
ஒப்பந்தம் இருந்ததாக. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய விளைவாகக் கருதப்
படுகின்ற வட கிழக்கு மாகாண சபைகளின் இணைப்பை இலங்கை
நீதிமன்றம் இரத்து செய்துவிட்டது. இது நீதித்துறை சம்பந்தப்பட்ட தீர்ப்
பாக இருந்தபோதிலும் இதனை அரசியல் ரீதியிலான அழுத்தங்களின்
மூலம் மாற்ற இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்தோடு
இலங்கையின் இனப்பிரச்சனை இவ்வளவு மோசமான நிலையை அடைந்
துள்ள நிலையில் தனத அண்டைய நாட்டின் இந்த விவகாரத்தில் இந்
தியா தொடர்ந்து மௌனம் காத்துவருகிறது. இதுபோன்று இந்தியா செயல்
படுவது சரியென நினைக்கிறீர்களா?
பதில்: இந்தியா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று சொல்வது தவறான குற்றச்சாட்டு. இந்தியா எந்த
நடவடிக்கையும் எடுக்கவிடாமல் செய்யப்பட்டது. அதற்குக் காரணம்
விடுதலைப் புலிகள்தான். அவர்கள் அங்கு அமைந்த மாகாண கவுன்
சிலை எதிர்த்து ஜனநாயக வழிமுறைகளை எதிர்த்து மக்களை அச்சுறுத்
தி இந்திய இராணுவத்தின்மீது அபாண்டமான பழிகளைக் கூறி இந்திய
இராணுவம் இந்தியாவுக்கு வந்துசேருமாறு செய்தார்கள். ஆகையால்
அந்த நிலையில் பழியை ஏற்கவேண்டியது விடுதலைப் புலிகளே தவிர
இந்தியா அல்ல. இப்போது இந்தியா என்ன செய்யவேண்டுமென்று கேட்
டால் முன்பு நடந்த ஒரு கசப்பான அனுபவம.; அதை எதிர்த்து இலங்
கைத் தமிழர்களிடையே யாரும் குரல்; எழுப்பாத ஒரு துன்பகரமான
விடயம.; ஆகயவை சேர்ந்ததுதான் இப்போது இந்தியா ஒதுங்கியிருப்பதற்
கான காரணமாக இருக்கின்றன.கேள்வி: இலங்கை விவகாரம் குறித்து இந்திய மத்த்pய அரசின்
முடிவுகளும் செயல்பாடுகளும் தமிழக அரசாங்கங்கள் மற்றும் கட்சிகளின்
அழுத்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக
இந்த விவகாரம் குறித்த விடயங்களில் டெல்லியில் இல்லாமல் சென்
னையில் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் வருகின்றனவே
இவற்றை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?பதில்: சென்னையில் இப்போதுள்ள அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு
மறைமுகமாக ஆதரவு தருகிறது. ஆகையால் நீங்கள் சொல்கின்ற
நிலைமை இருக்கலாமே தவிர டெல்லி இலங்கை விடயங்களை தமிழக
அரசைவிட உன்னிப்பாகக் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த
வாய்ப்பும் டெல்லிக்கு இருக்கிறது. டெல்லி கவனித்து தான் ஏற்காத
ஒர முடிவை தமிழகத்துத் தலைவர்கள் சொல்வதால் டெல்லி ஏற்றுக்
கொள்ளவில்லை.கேள்வி: தமிழக மக்களைப் பொறுத்தவரையில் அங்குள்ள கட்சிகளைப்
பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர்களின் அவலங்கள் மற்றும்
விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அவர்களின்
நிலைப்பாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? தமிழகத்தில் விடுதலைப்
புலிகளுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவதைப் பற்றி உங்
களுடைய கருத்து எவ்வாறிருக்கிறது?பதில்: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் அதிகரித்திருக்
கிறதேயொழியே விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துவிடவில்
லை. முதலில் விடுதலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு தமிழகத்
தில் இருந்தது. நான் ஒருவன்தான் அப்போதும் எதிர்த்துக்கொண்டிருந்
தேன். அதற்காகப் பல தடவை நான் தூற்றப்பட்டேன். ஆனால் பத்
மநாபா மற்றும் 14பேர் கொலையுண்ட பிறகு மேலும் பல நிகழச்சிகள்
தமிழகப் பொலீசுக்கு எதிராக நடந்ததைத் தொடர்ந்து ராஜீவ் காந்தியின்
கொலைக்குப் பின்னர் நிலைமை முழுவதுமாக மாறிவிட்டது. தமிழகத்தில்
விடுதலைப் புலிகளுக்கு கணிசமான ஆதரவு கிடையாது. ஏதோ சில
அமைப்புக்கள் ஏதோ சில காரணங்களுக்காக விடுதலைப் புலிகளை
ஆதரிக்லாமே தவிர மக்களிடையே ஆதரவு கிடையாது. அதனால்தான்
தமிழகத்தில் எந்தவொரு கட்சியும் எந்தவொரு தேர்தலிலும் விடுதலைப்
புலி ஆதரவு என்பதை ஒரு பிரச்சனையாக ஒரு கோரிக்கையாக ஒரு
வாக்குறுதியாக தமிழக மக்கள் முன் வைப்பதே கிடையாது. ஏனென்றால்
விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு என்பது இன்று தமிழக மக்
களிடையே எடுபடவில்லை என்பதுதான் உண்மை.கேள்வி: விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற தமிழ் கட்சிகள் தமிழ் நாட்
டில் அவர்களுக்கு எவ்வாறு செல்வாக்கு இருக்கின்றதென்பதை நீங்கள்
சற்று விளக்கமுடியுமா?பதில்: அவர்களுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. ஒரு நகராண்மைக்
கட்சித் தேர்தலில்கூட தானாக ஜெயிக்க முடியா அளவில் இருக்கின்ற
கட்சிகள்தான் அவை.கேள்வி: ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலைப் புலிகளின்
அமைப்பின் தலைவர் மற்றும் அந்த அமைப்பின் உளவுப் பிரிவின்
தலைவர் ஆகியோரைக் கைதுசெய்யவேண்டுமென்ற உத்தரவை இந்திய
நீதிமன்றம் பிறப்பித்துள்ளதென்று நினைக்கிறோம். ஆனால் அதை
நடைமுறைப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாகத்
தெரியவில்லையே அப்படியானால் இந்த உத்தரவு வெறும் வாய் வார்த்
தை மாத்திரம்தானா?பதில்: அதாவது அதை நடைமுறைப்படுத்தவேண்டுமென்றால் இராணுவ
நடவடிக்கை தேவைப்படும். அதை இந்தியா தவிர்த்துக்கொண்
டுவருகிறது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு அப்படியேதான் இருக்
கிறது. அது அமுலாக்கப்படும் காலம் எதிர்காலத்தில் வரலாம்.கேள்வி: இனிமேல் இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும்
தலையிடும் சாத்தியம் ஏதாவது இருக்கிறதா? அது எப்படியான
தலையீடாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?பதில்: இப்போதும்கூட இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை தருகின்
ற கூட்டரசுக் கோட்பாட்டு அமைப்பு வரவேண்டுமென்பதை இந்தியா வற்
புறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.கேள்வி: இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு உருவாகவேண்டுமானால்
தென்னிலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளிடையில் ஒரு ஒருமித்த கருத்
து உருவாகவேண்டுமென்பது அவசியம். அந்த விடயத்தில் இந்தியா எந்
த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அந்தக் கட்சிகளை ஒன்
றிணைப்பதற்கு ஏதாவது சாத்தியம் உள்ளதா?பதில்: எந்த நாட்டிலுமே அரசியல் காணங்களுக்காக அரசியல் ஆதாயங்
களுக்காக அரசியல் ஆதாயத்துக்காக ஆளும் கட்சி செய்வதை எதிர்க்
கட்சிகள் போராட்டங்கள் செய்து எதிர்த்துக்கொண்டுதான் இருக்கும். இதற்
கு இலங்கையும் இந்தியாவும் விதிவிலக்கல்ல எந்த ஜனநாயக நாடுமே
இதற்கு விதிவிலக்கல்ல.ஆகையால் நீங்கள் சொல்கின்ற ஒரு நிலையை
உண்டாக்க அதாவது இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இலங்கையிலுள்
ள கட்சிகள் அதாவது தென்பகுதியிலுள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து
செயல்படுகின்ற ஒரு நிலையைத் தோற்றுவிப்பது ஒரு அரசியல் ரீதியான
சிக்கலான விடயம். அது உடனடியாக வந்துவிடாது. ஆனால் உண்
மையான சமாதானம் விடுதலைப் புலிகள் ஏமாற்றுகின்ற வளர்த்துக்கொள்
ளப் பயன்படுத்துகின்ற சமாதானமாக இல்லாமல் உண்மையான
சமாதானம் வர ஒரு அரசு இங்கே வழிசெய்தால் மக்களிடையே ஆதரவு
பெருகும். நீங்கள் சொல்கின்ற ஒரு அரசியல் சூழ்நிலை உருவாகலாம்.
இந்தியா சொல்லி அது உருவாகாது.கேள்வி: இலங்கையில் ஆயுத இயக்கங்களுக்கு இந்தியா ஒரு காலத்
தில் உதவி செய்தது. ஆனால் ஆயதப் போராட்டத்தினால் இலங்கைத்
தமிழர் பிரச்சனைக்குத் தீர்வ காணமுடியாதென்ற ஒரு நிலை தற்போது
இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இலங்கையிலும் அரசியல்
ரீதியிலான தீர்வைத் தற்பொழுது வலியுறுத்தி வருகிறது. ஆனால்
ஆயுதக் குழுக்களுக்கு மத்தியில் குறிப்பாக விடுதலைப் புலிகளின்
நடவடிக்கைகளுக்கு மத்தியில் இலங்கையில் தற்பொழுது அரசியல்
ரீதியிலான தீர்வுகளை முன்னெடுக்கும் மிதவாதக் கட்சிகளும் சரியாகச்
செயல்படமுடியாத ஒரு நிலையே தற்போது காணப்படுகிறது. இந்த
நிலையில் இலங்கையில் மிதவாதத் தலைமைகளை ஊக்கப்படுத்த இந்
தியா ஏதாவது செய்வதற்கான சாத்தியம் உள்ளதா?பதில்: அவர்கள் எல்லாம் இந்திய அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேசிக்
கொண்டிருக்கிறார்கள். இலங்கைப் பிரச்சனை பற்றி டெல்லியில் விவாதிக்
கப்படுகிறது. டெல்லி இலங்கையிடம் பேசிக்கொண்டிருக்கிறது. இதைத்
தான் இப்போது இந்தியா செய்யமுடியும்.கேள்வி: இந்த விடயத்தில் இலங்கை அரசு இந்த காலகட்டத்தில்
எவ்வாறு செயல்படவேண்டுமென்று நினைக்கிறீர்கள்?பதில்: இலங்கை அரசு முதலில் உடனடியாக அமுல்படுத்தாவிட்
டாலும்கூட என்ன தீர்ப்பு, எப்படிப்பட்ட சமஷ்டி அமைப்பு, என்னென்ன
அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும,; தமிழர்களுக்கு சம
உரிமை என்பதற்கு என்ன தீர்வு காணப்படும் என்பதை எல்லாம் அறிக்
கையாக வெளியிடவேண்டும். அதைச் செயல்படுத்துவதற்கு தாமதம்
ஆகலாம். அந்த அறிக்கையிலேயேகூட முழுமையான போர்நிறுத்தம்
மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் அந்த சமயத்
தில் இது செயல்படுத்தப்படும் என்றுகூட அரசு தெளிவுபடுத்திவிடலாம்.
ஆனால் இந்த மாதிரி ஒரு பிரகடனம் தேவைப்படுகிறது. இதைத்தான்
இப்பொழுது சிங்கள அரசு செய்யவேண்டும்.கேள்வி: இதைச் செய்யுமென்று எதிர்பார்க்கின்றீர்களா?பதில்: செய்யக்கூடிய நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகுமென்று நான்
எதிர்பார்க்கிறேன்.கேள்வி: ஆம் நீங்கள் தற்போது கூறினீர்கள் தமிழகத்தில் தற்போது
இருக்கின்ற ஆட்சி புலிகளுக்குச் சார்பான ஒரு ஆட்சியாக இருக்கின்றது
என்று. அது எந்த மாதிரியான ஆதரவைக் காட்டுவதாக நீங்கள் நினைக்
கிறீர்கள்?பதில்: இங்கு நடக்கிற புலிகளின் பிரச்சாரத்திற்கு தமிழக அரசின்
ஆசீர்வாதம் உண்டு. இல்லாவிட்டால் இந்தமாதிரி பிரச்சாரம் நடக்காது.கேள்வி: அதற்கு மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்
கொள்ளவேண்டும்?பதில்: அந்தப் பிரச்சாரத்தைத் தடுக்கவேண்டும்.கேள்வி: அது எந்த வகையிலே?பதில்: தடுக்கவேண்டும். அதற்கு அனுமதி தரக்கூடாது. மீறிப் பிரச்சாரம்
செய்பவர்கள் கைதுசெய்யப்படவேண்டும்.கேள்வி: இந்தியாவிலே இருக்கின்ற சிலர் விடுதலைப் புலிகளுக்கு
ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்ற ரீதியில் தடா சட்டத்தின் கீழ்
கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தடா சட்டம் தற்
போதும் அங்கே நடைமுறையில் உள்ளது. அப்படியிருந்தும் அங்குள்ள
சில தலைவர்கள் புலிகளை ஆதரிப்பதற்கு சுயநலம்தான் காரணமென்று
நினைக்கிறீர்களா அல்லது வேறு ஏதாவது தொடர்பு இருக்கிறதென்று
நினைக்கிறீர்களா?பதில்: அதற்கு என்ன காரணம் இருக்கிறதென்பது எனக்குத் தெரியவில்
லை. ஆனால் அவர்கள் ஒரு விபரீதமான வழிமுறையை அவர்கள் மேற்
கொண்டிருக்கிறார்கள். அதற்கான காரணத்தை என்னால் யூகிக்கமுடியவில்
லை. ஏனென்றால் மக்களிடையே அதற்க ஆதரவு இருக்கவில்லை. மக்
கள் ஆதரவு இருந்தாலாவது அதற்காகச் செய்கிறார்கள் என்று சொல்
லலாம். அதுவம் கிடையாது.கேள்வி: நீங்கள் புலிகளுக்கெதிரான கருத்துக்களைத் தெரிவிப்
பதாகவும் பத்திரிகையூடாகவும் நீங்கள் சந்திக்கும் மக்களுடாகவும்
அரசியல்வாதிகளுடாகவும் கூறப்பட்ட நிலையில் உங்களுடைய துக்ளக்
பத்திரிகை அண்மையில் பிரான்ஸ் நாட்டில் தீயிடப்பட்டத இதைப்பற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?பதில்: நல்ல விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் என்று நான் அவர்களுக்
கு நன்றி சொல்கிறேன்.கேள்வி: இறுதியான கேள்வியாக எங்களுடைய வானொலி இப்போது
உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த வானொலியூடாக
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நீங்கள் கூற விரும்பும் கருத்து
என்ன?பதில்: உலகிலுள்ள அத்தனை தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும்
அறிவுரையோ அல்லது யொசனையோ சொல்கிற அளவில் நான் இல்லை.
உலகின் பொருளாதார முன்னேற்றம் மிகவும் முக்கியமாகி வருவதால்
அதை நோக்கி எல்லோரும் செல்கிறபோது தமிழர்களும் அந்தப்
பாதையிலேயே செல்வார்கள் அதனால் பல பிரச்சனைகள் தீரும் என்று
நான் நம்புகிறேன்.

Anonymous said...

இதனை தனி பதிவாகவே போட்டிருக்கலாமே, சோ ரசிகர் இட்லிவடை?

Anonymous said...

give audio link