குமுதம் 9.1.08 இதழில் பாரமரன் எழுதிய பகுதியை, லீனாமணிமேகலை 'படித்துவிட்டு கிழிப்பதும்' இந்த பதிவில்...
குமுதம் 9.1.08 பாமரனின் படித்ததும் கிழித்ததும் ...நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்.
வடலூரில் இருக்கும் வள்ளலாரின் வாழ்விடத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள் தந்தை பெரியாரை. நடக்கவே சிரமப்பட்டு, தட்டுத் தடுமாறி ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடி வருகிறார் பெரியார். அம்மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கியபடி ஊரன் அடிகளும் மற்றவர்களும் உடன் வருகிறார்கள். ஒரு பிரதான அறையைக் கண்டவுடன் உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று விடுகிறார் பெரியார். அழைத்துப் போனவர்கள் ஏன் அய்யா நின்று விட்டீர்கள்? உள்ளே வாருங்கள் என்று கூற........அந்த அறையின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த அறிவிப்பினைக் காட்டுகிறார் பெரியார். அதில்: கொலை புலை தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம் என்றிருக்கிறது.
பெரியாரோ சுத்த அசைவம்.
“பரவாயில்லை அய்யா........உங்கள் மீது எமக்கு நிரம்ப மரியாதை உண்டு........நீங்கள் வாருங்கள்........’’ என்கிறார்கள் அழைத்தவர்கள்.
“உண்மைதான்........அதைப் போலவே நீங்கள் வைத்திருக்கும் அடிப்படைக் கொள்கைகளையும் நான் மதித்தால் அல்லவா நீங்கள் எனது கருத்துக்கள் மீதும் மரியாதை வைப்பீர்கள்? மற்றவர்கள் உங்களிடம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ........அப்படி நீங்களும் மற்றவர்களிடம் நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம்........வாங்கய்யா மற்ற பகுதிகளைப் பார்ப்போம்........’’ என்று திரும்பி நடக்கிறார் தந்தை பெரியார்.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எழுதிப் பழகினாலும் அந்தப் பாமரப் பெரியாரின் பண்புகள் எங்கே........?
கல்லூரிக்குப் போனாலும்
கவுன் போட்டுக் கொண்டுதான் போவேன்........
பள்ளிக்கூடத்துக்குப் போனாலும்
பர்முடாஸ் போட்டுக் கொண்டுதான் போவேன்........
என்று அடம்பிடிக்கிற தமிழகத்தின் ஒரு சில இலக்கிய மேதாவிகள் எங்கே?.
23.1.08 கோழை நீங்கள் ! - லீனாமணிமேகலையின் எதிர்ப்பு அன்புள்ள திரு.பாமரன் அவர்களுக்கு
வணக்கம் 9.1.2008 தேதியிட்ட குமுதத்தில் 'உங்கள் பக்கங்களில்' இறுதியாக பெரியாரின் வடலூர் சம்பவத்தைப் படித்தையும், கல்லூரி-பள்ளிக்குச் செல்லும்போது கவுனையும் பெர்மூடாஸயும் போட்டுக்கொள்ள விரும்பும் இலக்கிய மேதாவிகளை 'கிழித்தை'யும் கவனித்தேன்.
பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக குறிப்பிட்டுக்கூட விவாதிக்க முடியாத கோழையாகிய நீங்கள், பல தளங்களிலும் சமுக விஷயங்களை அலசுவது, விமர்சிப்பதுமாய் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் பார்வைக்கு:
"ஒரு நாட்டிற்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக்காட்டுவதற்கும் ஆதாரமாயிருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும் உடைகளில் ஆண்-பெண் வித்தியாசம் இருக்க கூடாது. பெண்கள் ஜிப்பா போட வேண்டும், கிராப் வைத்துக்கொள்ள வேண்டும் அப்படி செய்பவர்களுக்கு 500 ரூபாய் பணம் கூட பரிசாகத் தருகிறேன்..."
(பெரியார் வாழ்க்கை நெறி, ரூ-10 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியீடு)
நீங்கள் இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க முயற்சிக்க வேண்டும். சே.குமேராவை டி-சர்ட்டில் அணிந்துகொள்வது, பெரியார் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இணைய தளத்தில் கூட்டம் சேர்த்து, விஷக்கிருமிகளைவிட மோசமான விவாதங்களைச் செய்வதையெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் உருப்படியாக அருகில் உள்ள நூலகம் தேடி உறுப்பினராகலாம். படிக்க இயலவில்லையென்றால் கற்றறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிந்து கொள்ளலாம். பெரியாரும், சே குரேராவும் 'பிராண்ட்' இல்லை. வாழ்க்கை நெறி; தத்துவம்
நன்றி
அக்கறையுள்ள
லீனாமணிமேகலை
( குமுதத்திலிருந்து தட்டச்சு செய்ததால் அச்சு பிழைகள் இருக்கலாம், குமுதத்தில் சே குவேரா டி.சர்ட்டில் பாமரன், ஸ்கேன் செய்யாததால் இங்கு போட முடியவில்லை, மன்னிக்கவும் )
பத்து ரூபாய் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கு இந்த பகுதி:
ஆன்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும்.ஜிப்பா போட வேண்டும்.உடைகளில் ஆண்--பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது.ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்க வேண்டும்.ஆண்களைப்போலவே தாங்களும் ஆகவேண்டுமே என்றில்லாமல் வீண் அலங்காரம் செய்து கொண்டு திரிவது பெண் சமுதாயத்தின் கீழ்ப் போக்குக்குத்தான் பயன்படும்.
நம்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை,நகை,துணி, அலங்கார வேசங்கள்தான் என்பதை 'அவர்கள்' உணரவேண்டும்.
பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்ளுவது அநாகரிகமும்--தேவையற்ற தொல்லையுமாகும்.ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக்கொள்ள வேண்டும்
நூல்: "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி, விலை ரூ-10"
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, January 21, 2008
பாமரன் நீங்கள் கோழை - லீனாமணிமேகலை
Posted by IdlyVadai at 1/21/2008 10:25:00 AM
Labels: கருத்து, பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
But periyar grew a long beard.
Is it right if men grow hair in the
front and is it wrong if women grow
hair in the back.
Btb Leena is having a long hair,
not a bob cut :)
Periyar and their followers are having regard with Valluvar, I HOpe. According to Kural'' mazhiththalum nettalum vendavam, ulagam pazhiththathu ozhiththu vidin" - then why periyar is having a long beard.suppamani
ஐய்யய்யோ எனக்கு ரெண்டு விஷயங்கள் புரியலீங்கோ.
முதலில், கல்லூரிக்குக் கவுன் போட்டுக் கொண்டு போனது யாருங்கோ?
ரெண்டாவது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்பவே வித்தியாசம் தெரியலீங்கோ, உடம்பிலேயும் சரி, உடையிலேயும் சரி, இன்னும் பெரியார் சொன்ன மாதிரி செய்தால், குழந்தைகள் குழம்பிப் போய்விடும் சாமிகளா.
அடுத்த சந்தேகம், லீனா மணிமேகலை, பாமரனைக் குற்றம் சொல்லுகிறார் என்பது சரி. ஆனால், அவரி பெரியார் உள்ளே செல்லாததையும் தவறு என்று சொல்கிறாரா? அல்லது பெரியார் உடைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னதை எதிர்க்கிறாரா? ஏன் கேட்கிறேனென்றால், பெரியாரின் "புதிய உடை"க் கொள்கையை ஆதரித்தால், இவரும் ஆண் மாதிரி அல்லவா இருக்க வேண்டும்? அம்மணி, இந்த உலகத்தில், எல்லா ஜீவராசிகளிலும் ஆணினம் தான் இயற்கையிலேயே அழகு. ஆண் மயில், சிங்கம், சேவல் என்று எல்லாமும் ஆணினத்தில் தான் அழகு. பெண்கள் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுகிறேன் என்று இருப்பதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். மேலும், பெரியாரை இவ்வளவு தலைகீழாகக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள், அவரின் கொள்கைப்படி முடியைக் கத்தரித்துக் கொள்ளாதது ஏன்? ஒரு வேளை, பெரியாரின் கொள்கைகளை நீங்கள் "வெளியிலுருந்து" ஆதரிக்கிறீர்களோ?
www.chanakyansays.blogspot.com
பெரியார் வடலூர் வள்ளலாரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து புலால் உண்கிற தான் உள்ளே நுழையலாகாது என்று திரும்பியது அவரது பெருந்தன்மைக்குச் சான்று என்றால், அதே பெரியார் பிறப்பை காரணம் காட்டி ஈழவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லப்பட்ட வைக்கம் கோவிலுக்குள் அவர்களை அழைத்துச் சென்றாரே, அது அவரது கலகத் தன்மைக்கு சான்று. எங்கே அடுத்தவர் கருத்துக்கு மதிப்புக் கொடுக்கலாம் எங்கே அடக்குமுறையை எதிர்க்கலாம் என்பதையெல்லாம் அறிந்ததால்தான் அவர் பெரியார்.
இன்னும் சிலர் இப்படி ஒரு சமரசத் தீர்வு சொல்கிறார்கள் - "நமக்குப் பிடிக்காத ஒரு விதிமுறை அமுலில் இருக்குமிடம் என்றால் அங்கே போகாதிருந்து விடுவதுதானே? அவர்கள் விதிமுறையை நாம் பின்பற்ற முடியாதென்றால் நாம் அங்கே போவதைத் தவிர்க்கலாமே தவிர அவர்களை விமர்சிக்கலாகாது. அவர்கள் கல்லூரி - அவர்கள் விருப்பம் போல்தான் விதிமுறைகள் இருக்கும். உங்களுக்கென்ன?" இந்த சமரசவாதிகளிடம் ஒரு கேள்வி - சில தேநீர்க்கடைகளில் ஜாதிரீதியிலான பாகுபாடு இரட்டைக் குவளை வடிவில் இருக்கிறது. நமக்கு பிடிக்காதென்பதால் அங்கே போவதைத் தவிர்ப்பது மட்டுமே இந்நிலையில் சரியான தீர்வாகிவிடுமா? பிறப்பினடிப்படையில் நம்மை இழிவு படுத்த யாருக்கும் உரிமையில்லை என்றுதானே போர்க்கொடி தூக்குகிறோம்? அதே போன்றதே இது. பெண்ணாய்ப் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட முறையில்தான் நீ உடையணிந்தாக வேண்டுமென்று சொல்லும்போது அதைக் கேள்வி கேட்பதும் விமர்சிப்பதும் எவ்விதத்தில் குறைவானது?
I have personally come across undue advantage taken by Leena Manimegalai in public places (Shoppers Stop).
It is important to accept practices of the place where you are going other wise donot go there.
Loyola didnot mind her not coming. Her presence was not vital.
லீனா மணிமேகலை எப்படிப் பட்டவர் என்று எனக்கு தெரியாது. ஆனால், லக்ஷ்மியின் கருத்துகளுக்கு கை தட்டுகிறேன்.
பாமரன் என்றுமே குறை சொல்வதோடு நிறுத்திக் கொள்வார். "தீர்வு" என்பது அவருக்கு தெரியாத வார்த்தை. ச்சும்மா டைம் பாஸ் பண்ணுவதற்குதான் அவரது எழுத்து உதவும். Nothing Productive.
ஆண்களுக்கும்தான் இப்படி உடையணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் உள்ளன. எந்த ஆணாவது பாவாடை தாவணி போட்டுக் கொள்ள முடியுமா? புடவை கட்ட முடியுமா? நீங்க மட்டும் ஏன் எங்க உடையளையும் எடுத்துக்கறீங்க? எந்த ஆணாவது தனது உடலில் இடுப்புக்கு மேலே உள்ள பாகங்கள் தெரிய உடை அணிகிறானா? அல்லது இடுப்பைக் காட்டிக் கொண்டு திரிகிறானா? அல்லது முதுகை பிளாட் போட்டு விற்கிறானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு திருமணத்தில் வாழ்த்தும்போது "உடலும் ஆடையும் போல" இருங்கள் என்று வாழ்த்தினார். யாருக்கும் புரியவில்லை. அவரது சிஷ்யர்கள் அவரிடம் விளக்கம் கேட்ட போது அவர் கூறினார் "ஒரு மனிதனின் மானத்தைக் காப்பது அவனது ஆடையே. அது அவனோடு/அவளோடு எப்போதும் இருக்கும். அது போல கணவன் , மனைவி ஆகியோர் பரஸ்பரம் புரிதலோடு, மானத்தைக் காப்பாற்றுபவராக எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும்".
அம்மணி, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து கொள்ளுங்கள். நாங்கள் தடை சொல்லவில்லை. கண்ணுக்குக் குளிர்ச்சியாக, கவர்ச்சியாகத் தான் உடையணிந்து வருவோம் என்று நீங்கள் சொன்னால் எந்த ஆண் மகனும் தடை சொல்ல மாட்டான். (உங்கள் அப்பா, சகோதரன் அல்லது கணவனைத்தவிர). மெஜாரிடி நாங்கதான். நீங்க தூள் கிளப்புங்க அம்மணி.
சாணக்யன்
www.chanakyansays.blogspot.com
EVR's action is NOT to respect a different belief. There is a great political cunning behind his action of not entering Vadalur temple.
EVR and Co., have worked for the high caste people excluding the brahmins. His life, thinking, and struggles are to suppress the Brahmins and Dalits, and to float the hegemony of other high caste people like Naidus, Naickers, Pillaimars, Mudhaliars, Thevars, etc.
That is the reason of EVR showing respect to Vadalur temple, which has been in the control of one of the high caste (that is not a brahmin caste).
If he had entered that place people of that caste who controll the Vadalur temple would have turned against him, which is not good for his political agenda.
Wheras, it is mandatory for him to get a name as an "anti-brahmin". So, he leveraged the vaikkam struggle which has got almost completed when he entered the scene.
The credit he and his folks claim to have received are mere show off business. You must notice that he was given this name by his own followers, and NOT by the Izhava community that was fighting for temple entry.
He has cleverly manipulated to get the name of "Vaikkam veerar" against a community that was gaining equal supremacy among the high castes.
So, Ms. Lakshmi, please understand the cunningness of a politician before crediting the wreath on a dead body.
first of all pamaran should undrestand and leena opposer should understand.
pant shirt ,jeans t shirt is not only registred for men. leena is not a slave donkey to men so she cant bear compulsory thuppatha.
if leena wants to wear thuppatha first pamaran should compel the college administation men to wear thuppatha?
if any men or women compuls women to wear thuptha or sarey first they shuold compel the men to wear sarey or thuppatha.
there are lots of eve teasing dialougs in tamil cinema,and tv serials which is oppose to women equality demaocrasy, andself confidence did pamaran questioned about that?
blaming on women victum and their dress and make the poruki eve treasing commiter male escape is very awful one.
what leena did is only a small step for tamil women democrasy tamil womens have lot of male domination to break
Post a Comment