பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 20, 2008

ரீமிக்ஸ் பற்றி எஸ்.பி.பி, புலமைபித்தன், ஏ.ஆர்.ரஹ்மான்

சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன் - ரிமிக்ஸ் கலாட்டா பதிவை தொடர்ந்து எஸ்.பி.பி, புலமைபித்தன், ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து...எஸ்.பி.பி பேட்டி ( ஆனந்த விகடன் 18.1.08)
"அதென்ன, அப்படி ஒரு கோபம் உங்களுக்கு ரீமிக்ஸ் மேலே?"

''கோபம் இருக்காதா? என்னிக் குமே ஒரிஜினாலிட்டிக்குக் கிடைக்கிற மரியாதையே தனி! பழைய பாடல்கள் எல்லாமே பொக்கிஷங்கள்! அதைக் கட்டிக்காக்காவிட்டாலும் பரவாயில்லை. அதோட ஜீவனைக் கெடுக்காம இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, இன்னிக்குப் போயிட்டு இருக்குற ரீமிக்ஸ் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமா நம்ம பொக்கிஷங்களைச் செல்லரிச்சுக் கிட்டு இருக்குன்னு தோணுது! இதை இதோடு நிறுத்திக்கிட்டா நல்லாருக்கும். நான் நம்ம மியூஸிக் டைரக் டர்ஸைக் குற்றம் சொல்ல மாட்டேன். படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவங்ககிட்டே, 'அந்தப் பழைய பாட்டோட ரீமிக்ஸ் வேணும்!'னு கேட்டு வாங்குற டைரக்டர்கள், புரொடியூஸர்கள்மேலதான் குற்றம் சொல்றேன். இந்த ஐடியாவில் புதுமை இருக்குன்னாலும், போகிற பாதை தப்பானது. தயவுசெஞ்சு இந்தத் தப்பை நாம நிறுத்திக்கலாம்!''

''இப்ப இருக்கிறவங்க எம்.எஸ்.வி. போட்ட எச்சிலைத்தான் சாப்பிடுறாங்கன்னு மேடையில உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டீங்களே?''

''ரஹ்மானுக்கு நன்றி சொல்லணும். எம்.எஸ்.வி. பத்தி நான் பேசினதை அழகா ஆமோதிச்சிருந்தார். இங்கே நான் எல்லோர் மேலயும் கோபத்துல இருக்கிறதா ஒரு பிம்பத்தை உருவாக்கிடுவாங்களோனு பேசிய பிறகு பயந்துட்டேன். ஆனாலும், இப்பவும் சொல்றேன்... அவர் போட்ட மிச்சத்தைதான் நாம எல்லோரும் சாப்பிடுறோம். அது என் கருத்து. அதுக்காக ராஜாவோ, ரஹ்மானோ சாதாரணம்னு சொல்ல வரலை. எல்லோரும் இங்கே திறமைசாலிகள்தான். தெலுங்குல கேட்டிருந்தா கண்டசாலாவோட மிச்சத்தை சாப்பிட்டோம்னு சொல்லுவேன். திரை இசையிலே ஒரு சகாப்தத்தை, நமக்கு முன்பே பிறந்து எம்.எஸ்.வி. சாதிச்சுட்டார். அப்போ நாம அவர் போட்ட மிச்சத்தை தானே சாப்பிட்டா கணும். அவர்கிட்டே கேட்டால், கே.வி. மகாதேவனைக் கொண்டாடுவார். யாரும் சுயம்புவா உருவாக முடியாது. நம்மை பாதிச்சவங்களை நாம கொண் டாட மறக்கக் கூடாது. அதனால தான் அப்படிப் பேசினேன். நான் பேசினதுல தப்பில்லைன்னுதான் இப்பவும் நினைக்கிறேன்!''
ஏ.ஆர்.ரஹ்மான் ( குமுதன் 9.1.08 )
ரீ_மிக்ஸ் பாடல்கள் பத்தி என்ன நினைக்கிறீங்க?

‘‘ரீமிக்ஸ் செய்வதில் தப்பில்லை. அது ஒரு டிரெண்ட், இந்த பாட்டுகள் மக்கள் விரும்புகிற வரைதான். அப்புறம் ஆட்டோமெட்டிக்கா அதுவே காணாம போயிடும். நல்ல ரீ_மிக்ஸும் இருக்கு. மோசமான ரீ_மிக்ஸும் இருக்கு. பழைய பாடலின் தன்மை கெடாமல் பண்றது வேற. கெடுத்து குட்டிச்சுவராக்குறது என்பது வேற’’ (சிரிக்கிறார்).

சமீபத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் ஒரு மேடையில் பேசும் போது, ‘இப்போதுள்ள மியூசிக் டைரக்டர்கள் எம்.எஸ்.வி. சாப்பிட்டு விட்டு போட்ட மிச்சத்தைத்தான் சாப்பிடுகிறார்கள்’ என்று கொஞ்சம் காட்டமாக சொல்லி இருந்தார். அது பற்றி?

‘‘அவர் சொன்னதை ஒரு பாராட்டா ஏன் எடுக்கக்கூடாது? அவர் நல்லவிதமாகத்தான் சொல்லியிருப்பார். எம்.எஸ்.வி. ஒரு முன்னோடி. அவர் வழியைப் பின்பற்றுங்கன்னு கூட சொல்லி இருக்கலாம். அதுதான் உண்மை. கொஞ்சம் உணர்ச்சி வேகத்தில் எச்சில், கிச்சில்னு சொல்லியிருக்கலாம். நிச்சயமாக தவறா பேசியிருக்கமாட்டார் என்பதுதான் என்னோட அபிப்ராயம்.’’.


புலமைப்பித்தன் பேட்டி ( குமுதம் 23.1.08 )
அன்று பாடலை அழகுபடுத்தின இளையராஜாவின் வாரிசு யுவன்சங்கர்தானே இப்போது இசையமைத்துள்ளார் ?
"ரகுமான் செய்தாலும் தப்புதான் யுவன் செய்தாலும் தப்புத்தான். இவங்க மோசமான பாட்டைத் தர்றது இல்லாம, ஏற்கெனவே உள்ள அற்புதமான பாடல்களையெல்லாம் அசிங்கபடுத்த ஆரம்பித்துவிட்டார்கள். 'பொன்மகள் வந்தாள்...' பாடலை எம்.எஸ்.வி எவ்வளவு பிரமாதமா செய்திருப்பார் அது இப்போது காட்டுக் கூச்சல், ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது. ஒரிஜினலாக இசையமைத்த மாமேதைகளை இவர்கள் இழுவுபடுத்துகிறார்கள்."

( புலமைப்பித்தன் போனில் லேட்டஸ்ட் பில்லா பாடலான 'மை நேம் இஸ் பில்லா' பாடல் தான் காலர் ட்யூனாக ஒலிக்கிறது !)

மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்க ? சைடுல ஓட்டு போடுங்க

5 Comments:

இலவசக்கொத்தனார் said...

ஆனாலும் கடைசி வரி பஞ்ச் சூப்பர்! அது உம்மளுதா? :)

IdlyVadai said...

அதுவும் குமுதத்தில் வந்தது தான் :-)

கால்கரி சிவா said...

பழைய போட்டோகளை கொஞ்சம் டச்-அப் பண்ணி வச்சிகிறதில்லையா அந்த மாதிரிதான் இதுவும்.

கோபமே வராத எஸ்பிபிக்கு இவ்வளவு கோபம் வந்ததுன்னா ஏதோ காரணம் இருக்கு.

யோசிப்பவர் said...

எஸ்.பி.பி நியாயமாக பேசியிருக்கிறார்.
ரஹ்மான் பண்போடு பேசியிருக்கிறார்.
புலமைபித்தன் வெற்று அரசியலுக்காக பேசியிருக்கிறார்.

Anonymous said...

remix illatti, nalla nalla old songs ellam younger generationku theriyaamaye poyirum.. i have a suggestion.. why dont SPB and Ilyaraja themselves remix their own goldies in a good way?