பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 09, 2008

வந்த வினாக்களும் தந்த விடைகளும்

எளிமையின் அடையாளம்ன திரு நல்லகண்ணுவின் நேர்கானல் புத்தகம் பற்றிய செய்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்த தோழர் நல்லகண்ணு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
கே. ஜீவபாரதி இந்த நூலை தொகுத்துள்ளார்.

"வந்த வினாக்களும் தந்த விடைகளும்' என்னும் தலைப்பில் இந்த புத்தகம் வெளியாகி உள்ளது. அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையானவர் என்ற அடைமொழி யுடனேயே குறிப்பிடப்படுபவர் நல்லகண்ணு. கேள்விகளுக்கான அவரது பதில்களிலும் இந்த தன்மையை பார்க்க முடிகிறது.

எந்த கேள்விக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், கேள்வியின் நோக்கத் திற்கு மட்டுமே பதில் அளித்துள்ளார். மற்றொரு முக்கிய அம்சம், பூசிமழுப்புதலோ, தடுமாற்றமோ இல்லாமல் அவர் பதில்கள் வெளிப்படையாக அமைந்திருப்பது நல்லகண்ணுவின் அரசியலை நன்கு அறிந்து கொள்ள முடிவதோடு, அவரது சொந்த வாழ்க்கை பற்றியும் ஓரளவு அறிய முடிகிறது. தா. பாண்டியன் முன்னுரையோடு நல்லகண்ணு பற்றிய ஒரு சில கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளது.

நல்லகண்ணுவின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மகத்தான தலைவரிடம் குறைவான அளவிலேயே நேர்காணல் நடத்தப்பட்டுள்ளதை புத்தகம் உணர்த்துகிறது. குமரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

"வந்த வினாக்களும்
தந்த விடைகளும்'
ஆசிரியர்: கே. ஜீவபாரதி
விலை: ரூ. 60.00
வெளியீடு: குமரன் பதிப்பகம்
3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை17 போன்: 28153742.
(செய்தி: மாலைமலர்)

0 Comments: