பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 11, 2008

சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன் - ரிமிக்ஸ் கலாட்டா

"சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்" என்று ரீமிக்ஸ் படல்களை கேட்டு பழைய பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் பாட ஆரபித்திருக்கிறார்கள். இன்று வடிவேலுவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.


போன மாசம் வந்த குமுதத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் பேட்டி
புதுசா வந்திருக்கிற மியூசிக் டைரக்டர்ங்ககிட்டருந்து நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு’’ என்று எப்படித்தான் சொல்ல முடிகிறதோ ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ். விஸ்வநாதனுக்கு பெருந்தன்மை.

‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் ‘பொன்மகள் வந்தாள்...’ பாட்டும், ‘பொல்லாதவன்’ படத்தில் ‘எங்கேயும்.. எப்போதும்..’ பாட்டும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது அடுத்து ‘பில்லா’விலும் ‘மை... நேம் இஸ் பில்லா’... பாடலும் சுடச்சுட ரீ மிக்ஸில் கலக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த மூன்று பாடல்களும் அந்தக் காலத்தில் எம்.எஸ்.வி. இசையமைத்தவை என்பதுதான் ஹை லைட்.

ஒரு மாலை நேரத்தில் மெல்லிசை மன்னரைச் சந்தித்தோம்.

‘‘எப்படி இருக்கீங்க?’’ என்றதும்,

‘‘ஹார்ட் ஆபரேசனுக்குப் பிறகு நல்லா ரெஸ்ட் எடுத்தேன். தினமும் ‘பிஸியோதெரபி’ எடுத்துக்குறேன். இப்போ ஆல்ரைட். பழைய வேகம் வந்துடுச்சு. சமீபத்துல கூட ‘குங்குமக்காரி’ என்ற பக்தி ஆல்பத்துக்கும், ‘மணல்மேரி மாதா’ என்ற ஆல்பத்துக்கும் ஒரே வாரத்துல ரெக்கார்டிங் செய்து முடிச்சேன்.’’

‘‘சினிமா இசை இப்போ எப்படி இருக்கு?’’

‘‘எல்லாரும்... நல்லா பண்றாங்க. பிரமாதமான பாட்டெல்லாம் வருது. ஒரே ஒரு குறை, வார்த்தைகளைக் கடித்துத் துப்புறாங்க. கேட்கவே வருத்தமாயிருக்கு. நான் புதுசா மியூசிக் பண்ண வந்த சமயம் ‘தேவதாஸ்’ படத்துக்கு பாட்டு கம்போஸ் நடந்துக்கிட்டிருந்துச்சு. உடுமலை நாராயணகவி பாட்டை எழுதினார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்ன நான் நாராயணகவி கிட்ட வேட்டி, சட்டை துவைச்சு போட்டுக்கிட்டு இருந்தேன். பிறகு தான் மியூசிக் பண்ற வாய்ப்புக் கிடைச்சது. ‘தேவதாஸ்’ படத்துல கவிராயர் எழுதின, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்ற பாட்டை கண்டசாலா பாடினார். தமிழ் சரியா உச்சரிக்க வராம ‘உல்கே மாயம்’னு பாடிட்டார். எவ்வளவோ சொல்லிக் குடுத்தும் வரல. சரின்னு அப்படியே பதிவு பண்ணிட்டோம். இதைக் கேட்டுட்டு உடுமலை நாராயணகவிராயர் என் கன்னத்துல ஓங்கி ஒரு அறை விட்டுட்டு, ‘ஏண்டா தமிழை இப்படிக் கொலை பண்றீங்க’ன்னு கோபப்பட்டார். அதுக்கப்புறம் ரொம்ப கவனமா பாடல் வரிகள் நல்லா கேட்கிற மாதிரி மியூசிக் பண்ணினேன். ஆனா கவிராயர் அன்னிக்கு பயந்தது மாதிரி இப்ப நடந்துட்டுருக்கு. கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இப்படிப் பாடமுடியாது. ஆனா தமிழர்கள் தான் மன்னிச்சு ஏத்துக்கிறாங்க.

இது ஒரு பெரும் குறையா இருந்தாலும், புதிய புதிய பாடல்கள் வித்தியாசமான குரல்கள்னு ஒரு வெரைட்டியா கேட்க முடியுது.’’

‘‘எல்லாரும் நல்லா பண்றதா சொன்னீங்க. இப்ப, பழைய பாடல்களை ரீ_மிக்ஸ் செய்யுறாங்க. அதில் அதிகமா உங்கள் பாடல்களாகவே இருக்கு. இது போன்ற முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ இந்தக் கேள்வியைக் கேட்டதும் எம்.எஸ்.வி. முகம் மாறுகிறது. அதைத் தன் பளீர் புன்னகையால் மறைத்து விட்டுப் பேசுகிறார்.

‘‘நானும் கேட்டேன். நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ‘‘தொட்டால் பூ மலரும்..’’ பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும்.
ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் ‘காச் மூச்’னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா ‘பழமை மாறாமல்’ செய்யணும். இப்ப கூட ‘பில்லா’ படத்துல ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா? இது தப்பு. சரியில்ல...

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். ‘கத்தாழங் காட்டுக்குள்ள... விறகொடிக்கப் போனபுள்ள’ இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், ‘எங்கேயும் எப்போதும்’னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது’’ என்றவர், ‘‘சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்’’ என்று உச்ச ஸ்தாயியில் பாட ஆரம்பித்தார்..இன்றைய தினத்தந்தி செய்தி

தமிழ் படங்களில் சமீபகாலமாக `ரீமிக்ஸ்' என்ற பெயரில் பழைய பாடல்களை `உல்ட்டா' செய்து வருகிறார்கள். எஸ்.ஜே.சூர்யா நடித்த `நியூ' படத்தில் முதன்முதலாக ``தொட்டால் பூ மலரும்'' என்ற பழைய எம்.ஜி.ஆர். பாடலை `ரீமிக்ஸ்' செய்து இருந்தார்கள். அந்த பாடலுக்கு இசையமைத்தவர், ஏ.ஆர்.ரகுமான்.

இதையடுத்து, விஷால் நடித்த `மலைக்கோட்டை' படத்தில், ``ஆத்தா, ஆத்தோரமா வாரீயா'' என்ற பழைய பாடல் `ரீமிக்ஸ்' செய்யப்பட்டது. அந்த பாடலுக்கு இசையமைத்தவர், மணிசர்மா.

விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த `அழகிய தமிழ்மகன்' படத்தில், ``பொன்மகள் வந்தாள்'' என்ற பழைய சிவாஜி பாடல் `ரீமிக்ஸ்' செய்யப்பட்டு இருந்தது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர், ஏ.ஆர்.ரகுமான். தனுஷ் நடித்த `பொல்லாதவன்' படத்தில், ``எங்கேயும் எப்போதும் சங்கீதம்...சந்தோஷம்'' என்ற ரஜினிகாந்தின் பழைய பாடல் `ரீமிக்ஸ்' செய்யப்பட்டது. இந்த பாடலுக்கு, யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருந்தார்.

பழைய பாடல்கள் `ரீமிக்ஸ்' செய்யப்படுவதற்கு, தமிழ் பட உலகில் பரவலாக எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. பழைய இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் அனைவரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தர்மசங்கடத்தில் இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், `அய்யாவழி' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல் ஆசிரியர் புலமைப்பித்தன் பேசும்போது, ``பழைய பாடல்களை இனிமேல் ரீமிக்ஸ் செய்தால், கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்'' என்று பேசினார். குறிப்பாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை கடுமையாக தாக்கி பேசினார். ``ஏ.ஆர்.ரகுமான் இசைப்பள்ளி தொடங்குவதற்கு முன், தமிழை கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.


`ரீமிக்ஸ்' பாடல்களை பற்றிய புலமைப்பித்தன் கருத்துக்கு, நடிகர் வடிவேல் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். பழைய பாடல்கள் `ரீமிக்ஸ்' செய்யப்படுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.``ரீமிக்ஸ் பாடல்கள், பழைய பாடல்களின் இனிமையை சிதைப்பது போல் இருக்கிறது. பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வாலி போன்றவர்கள் `ரீமிக்ஸ்' பாடல்களை கேட்டு வருத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். இப்போது, புலமைப்பித்தனும் வருத்தப்பட்டு இருக்கிறார்.

உண்மையிலேயே `ரீமிக்ஸ்' பாடல்கள், பழைய பாடல்களை மானபங்கப்படுத்துவது போல்தான் இருக்கிறது.''
- நடிகர் வடிவேல்

என்னை கேட்டால் நிறைய ரீமிக்ஸ் செய்யனும் அப்பதான் பழைய பாடல்கள் இன்னும் நல்லா இருக்கும் :-)

8 Comments:

ILA (a) இளா said...

இதற்கு எல்லாம் முன்னோடியா உலவும் தென்றல்ன்னு 1995ல கேஸட் வந்துச்சுங்க. அது பழமை மாறாம கத்தாம பழைய வரிகள், முடிந்தவரையில் அதே மாதிரியான குரல்வளம் வெச்சு செஞ்சு இருந்தாங்க. அது போல செஞ்சால் சந்தோசப்படுவேன்.

Anonymous said...

I completely agree with you...
it doesnt have to be remix kind of.. with extra fittings.. but the "thottal poo malarum" kind is very refreshing.. sure remixes will make old songs enjoyable..

ஹரன்பிரசன்னா said...

ரீ மிக்ஸ் ஒரு கொடுமை. இது கண்றாவியான விஷயமாகத்தான் எனக்குத் தெரிகிறது.

Boston Bala said...

சாம்பிளுக்கு ஒரு ஐந்து செகண்ட் எடுத்துக் கொள்ளும்வரை சரியாகத்தான் இருந்தது. அதே பாட்டை அப்படியே இட்டுவிட்டு, ரீ மிக்ஸ், ராப், சொந்த சரக்கு என்று பீலா விடுவது அக்கிரமம்.

SP said...

a remix is just another song/music!. if you like it, hear it, if you don't like it, change the station/CD/switch off the radio/TV/player!!.
if idly is an original version, fried idly is a remixed version!.
because you love idly, you should not file a case against those who sell fried idly!!
no remixed version will stop some one from enjoying/disliking the original version!!.

யோசிப்பவர் said...

I think, "Thottal poo malarum" and "Ponmagal vanthal", both were remixed in a very good fashion. But I dont agree with the other songs.

Anonymous said...

ARR insists so much for his rights/royalty etc etc when it comes to score music for his films. I believe he was removed as MD of OSO because of this insistence. When it comes to re-mix, did he get the permission of the original MD who tuned the songs? From MSVs reactions, it looks like not. So, does it smack of double standards on the part of ARR?

Anonymous said...

"எஸ்.ஜே.சூர்யா நடித்த `நியூ' படத்தில் முதன்முதலாக ``தொட்டால் பூ மலரும்'' என்ற பழைய எம்.ஜி.ஆர். பாடலை `ரீமிக்ஸ்' செய்து இருந்தார்கள்."

Not true. The first remix song was from Kurumbu - Aasai 100 vagai originally from Aduththa Varisu.