பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 21, 2008

டிராவிட், கங்குலி நீக்கம் சரியா, தவறா ?

நேற்று மத்தியானம் டிவியில் 'Breaking News' என்று கங்குலி, டிராவிட் நீக்கம் பற்றி எல்லா சேனல்களும் தங்கள் பங்கிற்கு கொளுத்தி போட்டது. வெங்சர்க்கர் பாரபட்சமான முறையில் தேர்வை நடத்தியுள்ளார் என்று கோபத்தில் திட்டினார்கள். சித்து NDTVல் நல்லா காமெடி செய்தார்.

எனக்கு என்னவோ இது டோனி எடுத்த முடிவு போல தெரிகிறது. ஆனால் துணிச்சலான முடிவு என்பேன்.

* ஆஸ்திரேலியா போன்ற வேகமான பிட்சில் நம் ஜூனியர் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க இது நல்ல சந்தர்ப்பம். ஜூனியர் வீரர்களை விளையாட தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அடுத்த உலக கோப்பைக்கு இப்பவே தயார் செய்ய வேண்டும்.

* சீனியர் வீரர்கள் ஒரு நாள் போட்டிக்கும், 20-20க்கும் லாயக்கு இல்லை. இங்கே சுறுசுறுப்பு அவசியம். running between the wickets and rotating strike ரொம்ப அவசியம்.

* மகேந்திர சிங் டோனி புதிய கேப்டன் டிரஸிங் ரூமில் சீனியர் பிளேயர் இருந்தால் அவருக்கு 'ஒரு மாதிரி' இருக்கும் அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் நம்புகிறேன். சச்சினுக்கு கூட நாளை இந்த நிலை வரலாம்.

இந்த அதிரடி முடிவினால் டிராவிட், கங்குலி நான்காவது டெஸ்ட் போட்டியில் அடிப்பார்களா, அடி படுவார்களா ?

11 Comments:

Anonymous said...

நான் அவ்வாறு நினைக்கவில்லை. இந்த அணி 50 overs நிலைத்து நின்று ஆடுவார்கள் என்று கூட தோன்றவில்லை. Dravid, Ganguly அல்லது lakshman யாராவது ஒருவர் அணியில் இருந்து இருக்க வேண்டும். இந்த அணியில் அனைவரும் Hitters மட்டுமே. மற்றொரு விஷயம் இளைஞர்களை அணியில் திணிப்பது தவறு. அவர்கள் தங்களுக்கான இடத்தை பிடித்தல் வேண்டும். உதாரணமாக ஆஸ்திரேலியா அணியில் அறிமுகம் ஆகும் ஒரு வீரரின் avereage age 26. நாம் அணியில் ஒருவரை திணிப்பது ஒரு இளம் வீரருக்கு எவ்வித நன்மையும் பயக்காது. Read this article :It was in the Irani Trophy in 1996-97 where he picked up 11 wickets, including VVS Laxman and Navjot Singh Sidhu, that he stormed into national reckoning. "It was a mistake," Ganesh quipped in light-hearted manner. "If I had not picked those wickets I would not have been picked so early for India and I would have played longer in the highest arena"...இது இந்திய அணிக்காக விளையாடிய Ganesh retire ஆகும் சமயத்தில் கூறியது.

IdlyVadai said...

அருண் நீங்கள் சொல்லுவது சரி. ஆனால் சச்சின் கிரிக்கெட்டுக்கு வந்த போது அவர் வயசு என்ன ?

Anonymous said...

Sachin is one such exception...that too he had to fight for his place in team...he stayed in the team beacause he scored lots of runs and not that he was young...Raina and other players despite getting many oppurtunities had taken least out of it...they have improve there skills and should be knocking for a place. One more thing is you should have some players who could consolidate the innings in case of early wickets...but there is no such players in the team

Anonymous said...

Dropping a player who was awarded man of the series in the last ODI series, can happen only with the indian selction team.how can one drop ganguly who has a wonderful record last year (he is the higest run getter last year), without any proper justification.

Anonymous said...

We try to copy Australians and we claim we are the next World Champions. We should see what AUS is doing and we should follow them Hayden, Gilchrist and many others are past 30. Youth for youth sake is wrong. They should score and then only they should be considered for selection. Compare the last 12-months performance in ODIs of Dravid, Ganguly with "youth" like Raina, Sehwag, even Dhoni. Like someone said, Ganguly may not be the fastest runner between wickets, but what about the youth who is going to replace him - he doesn't even run because he is OUT for less than 10. So where is the running between wickets? Dropping of Ganguly and Dravid is a horrendous mistake.

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, இது பத்தின என் பதிவு!

http://elavasam.blogspot.com/2008/01/blog-post_20.html

enRenRum-anbudan.BALA said...

IV,
Only one comment from me !

Your LOGIC is illogical ;-)

PL. read:
http://balaji_ammu.blogspot.com/2008/01/414.html

http://balaji_ammu.blogspot.com/2008/01/416-2.html

enRenRum-anbudan.BALA said...

Arun and the 2 anony friends are talking absolute sense, I think !

I only hope IV understands what they say and switch sides :)))

IdlyVadai said...

எ.அ.பாலா,

//Arun and the 2 anony friends are talking absolute sense, I think !//

IV usually talks non-sense and others talk sense. This is a known fact :-)

//I only hope IV understands what they say and switch sides :)))//

I am not Dr.Ramadoss to switch sides. sorry :-)

ஹரன்பிரசன்னா said...

சீனியர் வீரர்களைத் தூக்கும்போது இருக்கவே இருக்கிறது புதிய ஆடுகளத்தில் இளைஞர்களுக்குப் பயிற்சி ஜல்லி. இதை ஏன் டெஸ்ட்டுக்கும் பயன்படுத்தவில்லை எனத் தெரியவில்லை.

50 ஓவர்கள் நிற்காமல் ஒருவர் பின் ஒருவராக பெவிலியனில் பேசிக்கொள்ளும்போது டிராவிட்டும் கங்கூலியும் தேவைப்படுவார்கள். யார் கண்டது, கங்கூலியையும் டிராவிட்டையும் சேர்கக்ச் சொல்லி வெங்கசர்க்கார் உருவ பொம்மையைக் கொளுத்தினாலும் கொளுத்துவார்கள் இந்தியர்கள்.

பொதுவாகவே இட்லி வடை, சச்சினையும் டிராவிட்டையும் கங்கூலியையும் தூக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற கருத்து இருக்கிறது உங்களுக்கு. டோனி, யுவராஜ் சிங்கின் விளாசலை டெஸ்ட்டில் பார்த்தோமே. இதேதான் ஒண்டேயிலும் தொடரப்போகிறது.

IdlyVadai said...

பிரசன்னா வயதானவர்களை பற்றி சொன்னால் வயதானவர்களுக்கு கோபம் வரும் இது இயற்கையே :-)