பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 08, 2008

சிக் புக்

மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் சைக்கிள் ஸ்டாண்ட் பக்கம் இருக்கும் பொட்டிக் கடையை பார்த்தவுடன் எழுதத் தூண்டிய பதிவு இது.

யாராவது மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் உள்ள பொட்டிக் கடைக்குப்(பொட்டீக்கடை இல்லீங்க!) போயிருக்கிறீர்களா? இல்லை, ரெங்கநாதன் தெருவில் உள்ள சின்னச் சின்ன கடைகளுக்குப் போயிருக்கிறீர்களா ?

"நான் உருவாக்கும் எந்தப் பொருளும் சாமானியனுக்குக் கட்டுபடியாகும்படி இருக்க வேண்டும்," என்பார் என் அப்பா சின்னி கிருஷ்ணன். அந்தக் கனவுதான் அவரை சாஷே புரட்சியின் தந்தையாக்கியது" என்கிறார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான சி.கே.ரங்கநாதன்.

ரிக்ஷா இழுப்பவர்களால் கூட வாங்கக் கூடிய பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்து கிருஷ்ணன் மருந்து விற்பனைத் தொழிலுக்கு மாறினார். முகப் பவுடர், எப்சம் உப்பு ஆகியவற்றை சாஷேயில் போட்டு விற்றார். அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. "ஆனாலும் சாஷே புரட்சிக்கான முதல் வித்தை அவர்தான் முதலில் போட்டார்," என்கிறார் 500 கோடி அழகுசாதனப் பொருள் நிறுவன அதிபரான ரங்கநாதன்.

தன் சகோதரர் நடத்தி வந்த வெல்வெட் ஷாம்பூ பிசினஸிலிருந்து பிரிந்து ரங்கநாதன் ரூ 15,000 முதலீட்டில் ஷாம்பு கேக் செய்யும் எந்திரம் ஒன்றை வாங்கி சிக் ஷாம்பு என்ற பெயரில் ஷாம்பு விற்பனையைத் தொடங்கினார். முதல் மாதத்தில் 20,000 சாஷேக்கள் விற்ற அவருக்கு சுமாரான லாபம் கிடைத்தது. எங்கள் பயணம் ஏற்றம், இறக்கமாகத்தான் இருந்தது என்று தன் அனுபவத்தைச் சொல்லுகிறார். 1982ல் சிக் இந்தியா நிறுவனத்தைத் தொடங்கிய ரங்கநாதன் மற்ற அனைவரும் யோசிக்காத ஒரு காரியத்தைச் செய்தார். நகர்புறங்களை விட்டு கிரமங்களில் ஷாம்பூக்களை விற்கத் தொடங்கினார். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஷாம்பு பாட்டில்களை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் அடுக்கிக் கொண்டிருக்க, ரங்கநாதனோ ஒரு ரூபாய் ஷாம்பு சாஷேக்களை கிராமப்புறங்களில் சாலையோரக் கடைகள், காய்கறிக் கடைகளில் தொங்கவிடச் செய்தார்.

மேலே உள்ள சொன்னது இந்தியா டுடேயில் சில வாரங்களுக்கு முன் வந்தது கட்டுரையிலிருந்து சில பகுதிகள்

இன்று பான்பராக், சிகைக்காய் பொடி, பவுடர், இருமல் மருந்து, அழகு க்ரீம், தேங்காய் எண்ணெய், லேஸ் சிப்ஸ், ஜாம், டெமேட்டோ சாஸ், சக்தி மசாலா, ஊறுகாய், Fair & Lovely, தலை டை, ரின் சோப்பு தூள் ...என்று பலதும் இப்படிக் கிடைக்கின்றன. மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்டிக் கடையில் கிழக்கு பதிப்பக பிங்க் நிற அட்டை படங்கள் கொண்ட Prodigy புத்தகங்களும் இப்படி தொங்கவிடப் பட்டுள்ளதைப் பார்க்கலாம். காந்தி, அக்பர், வீர சிவாஜி, லிங்கன், விவேகானந்தர் என்று எல்லாம் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். இது கூட புத்தக உலகில் ஒரு புரட்சி என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் இதை வேறு ஏதாவது பொருளுடன் இலவசமாகக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. (ஒரு ஷாம்பூ பாட்டில் வாங்கினால் காந்தி இலவசம், கேர்ஃப்ரீ வாங்கினால் விவேகானந்தர் இலவசம்...)

சீரியஸாக, சில நூறு ரூபாய்க்கு பவுண்ட் புக் வாங்கினால் இரண்டு 25 ரூபாய் புத்தகம் இலவசம் என்று கூட செய்யலாம். It is bound to happen!

ரங்கநாதனை முக்கியமான முன்னுதாரணமாகக் கருதுகிறார்கள் ஐ.ஐ.எம் மாணவர்கள். அவரின் வெற்றியை பாடமாகப் படிக்கிறார்கள். இன்று ரெங்கநாதன் தெருவில் தொங்கும் புத்தகங்களும்(அதன் புரட்சியும்) நாளை பாடமாகப் படிக்க வாய்ப்பு இருக்கிறதா?

அதற்கு விடை தெரியவில்லை என்றால் பரவாயில்லை; காலம் பதில் சொல்லும். ஆனால் பாடமாகப் படிப்பவர்கள் நடத்தும் வலைப்பூவிற்குச் (bookfair08.blogspot.com) சென்று கிழக்கு, prodigy என்ற ப்ராடக்ட் பொஸிஷனிங் எப்படி வருகிறது என்பதை வீட்டுப்பாடமாகச் செய்து விடை தரவும்.


1 Comment:

Anonymous said...

idly vadai..neengaLum kizhakku pathippagathu-la irukkeengaLa enna? ore advertisement nadakkuthu..
ive visited the exhibition couple of times(purchased for 3000 Rs)..but kizhakku-la ethuvum vaangaLai..yenna ethuvum thEralai(gavanikka)..yemba..kizhakku-la yaarukkum kavithai varaatha enna? meyyaalume kizhakku ilakkiyam pathi onnum publish pannalainnu nenaikaren..
im a silent viewer of all the writers n writings since 2003(appo ellam ellarum maraththadi-la ,innum engengayO kummi adichutrunthaanga.. blog ellam kidayathu) . its my opinion... if you ve "DHILL" post my comment...

nandrigaL.