பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 06, 2008

அம்பயர்கள் அபார வெற்றி

ஆஸ்திரேலியா அம்பயர்கள் அபார வெற்றி என்று தான் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை சொல்லனும். 5 நாள், 1 நாள், T-20 போட்டிகளை பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று நடந்தது 420-கிரிக்கேட்


சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடை‌யேயான 2வது டெஸ்ட் போட்டியின் ‌5வது நாளில் இந்தியா 2வது இன்னிங்சில் வெற்றி இலக்கு 333 ரன் என்ற நிலையில் களம் இறங்கியது. 7 விக்கெட்களுக்கு 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா வெற்றி பெற 3 விக்கெட்கள் மட்டுமே இருந்ததால் ஆட்டம் பரபரப்பானது. அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததாலல்210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பு கூறிய அம்பயர்கள் ஸ்டீவ் பக்னர் (வெஸ்ட் இண்டீஸ்) மற்றும் மார்க் பென்ஸன் (இங்கிலாந்து) ஆகியோர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்க இந்திய கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது.

இன்று திராவிட் மற்றும் கங்குலியை படுமோசமாக அவுட் கொடுத்து நம் வயத்தெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள். படுமோசமான அம்பயர் தீர்ப்புகளே இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்பது என் கருத்து.

எப்போதும் சாந்தமாக இருக்கும் கும்பளே பேட்டியின் போது டென்ஷனாக இப்படி சொன்னார்
"only one team was playing with the spirit of the game" இது ஆறு சிக்ஸருக்கு சமம்!

7 Comments:

Anonymous said...

BECAUSE OF THIS ONLY THEY CAN CONTINOUSLY WIN NOT ONLY 17 MATCHES BUT WILL WIN ALL THE TEST MATCHES THEY WILL PLAY.

EVEN THE STREET BOYS CRICKET IS HAVING SOME ETHICS/MORAL THOUGH THE UMPIRES AR NORMALY FROM THE BATTING SIDE.

Anonymous said...

13 பேர் சேர்ந்து..இந்திய அணியினரை கவுத்து விட்டார்கள் என்று தான் தோணுகிறது.. போதாக்குறைக்கு ஹர்பஜன் மீது இனத்துவேஷம் குற்றச்சாட்டு. தெரிந்தே பாம்பு புற்றுக்குள் கை விட்டால் இது தான் பலன்...ACB (ஆஸ்திரேலியன் கிரிக்கெட் போர்டு) Umpire களுக்கு payment பண்ணுவதால்...அவர்களுக்கு சாதகமாக முடிவுகளை எடுத்தனர்...

ஆஸ்திரேலியா இந்த மாதிரி விஷயங்களுக்கு பேர் போனது தானே...

எங்கே போனார்கள் நம் அரசியல் வாதிகள்...ஆஸ்திரேலிய hi கமிஷன் முன்னால் போய் மறியல் செய்ய வேண்டியது தானே...

Anonymous said...

Jaffer, the wonderful opening batsman == 4, 15 in I Test and 3 and ZERO in Sydney test.

YUVRAJ, the Koteeswarar, ZERO in 11 balls, FIVE in 10 balls First Test. In Sydney Test, 12 of 24 balls, and ZERO of 2 balls. Just to accomodate this "Greatest batsman on earth, Dravid was forced to open the innings.

DHONI, the mightiest batsman in the Universe, ZERO of 2 balls, 11 of 32 balls in First Test; 2 of 11 balls, 35 in Sydney Test.

The STRONGEST batting Lineup in The World batted for 71.5 overs for 196 runs and then for 74 overs to score 161 (ha ha) in First Test, and batted for 70.5 overs in Sydney 2nd innings.

These GODS and semi-Gods can not bat for even 4 hours to save the Sydney test.

Give another oru Kodi (crore) rupees for Yuvraj, Dhoni !!

Re Harbhajan, have you anytime heard Sardarjis mouthing obscene ghaliyaan - Sardars are very very notorious for dragging your sister / mother in their ghaliyans. Don't tell me that Harbhajan is a SAINT!

நவீன பாரதி(15170314148190159683) said...

நடுவர்களின் மோசமான முடிவுகளை விட, 16 தொடர் வெற்றிகளை சாதிக்க வேண்டும் என்பதற்க்காக Ponting-m Clarke-ம் பொய் சொன்னது மன்னிக்க முடியாதது:(

vinney said...

ICC Awards For 2008


Best Australian Player of the Year : Steve Buckner and Mark Benson

Best Actor of the year : Micaehl Clark

Best Umpire of the year : Ricky Pointing

Honest Player of the year : Andrew Symonds

Honest Team of the Year : Australia

Anonymous said...

Yesterday the ICC Match Referree has banned Harbhajan for 3 tests for racial comment of "monkey" against Symonds. I agree nobody should make racial comments but only the affected party should have complained. In this case, the affected party is Monkey & only the monkey should have complained against Harbhajan for having humiliated it by comparing it with a dishonest soul like Symonds. Poor Monkey.

Anonymous said...

Team India (c) Benson (b) Bucknor

Refreed by : பக்கி பாண்டிங்