பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 04, 2008

ஷங்கரின் ரோபோ படத்தில் ரஜினி !

ரோபோ' படத்தில் நடிப்பது பற்றி "ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது'' டைரக்டர் ஷங்கர் பேட்டி என்று இன்று வந்த தினத்தந்தி செய்தி சொல்லுகிறது....


கடைசி நேரத்தில் `ரோபோ' படத்தை தயாரித்து, நடிக்கும் திட்டத்தை ஷாருக்கான் கைவிட்டார். ஏற்கனவே வந்த செய்தி இது சில இட்லிவடையில் வந்து
1
2
3

தற்போது கிடைத்திருக்கும் தகவல் இங்கே:

இன்றைய டெவலப்மெண்ட்ஸ் - `ரோபோ' படத்தை ஷங்கர் தமிழில் டைரக்டு செய்ய போகிறார். அதில் அஜீத் நடிக்க போகிறார் என்றும், அர்ஜூன் நடிக்க போகிறார் என்றும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாயின. அவை அனைத்தும் வதந்திகள் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

`ரோபோ' படத்தில் `சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் தகவல் உறுதியாகி இருக்கிறது. சமீபத்தில் ரஜினிகாந்தை, டைரக்டர் ஷங்கர் இது தொடர்பாக சந்தித்து பேசினார். அப்போது, `ரோபோ' படத்தின் கதையை ரஜினிகாந்திடம், ஷங்கர் சொன்னார். கதை பிடித்திருந்ததால் ரஜினிகாந்த் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.`ரோபோ' படத்தில் நடிப்பது பற்றி ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து விஷயங்களும் பேசி முடிவெடுக்கப்பட்ட பின், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும். இது ஷங்கர் தினத்தந்தி நிருபரிடம் கூறியிருக்கிறார்!

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, ஷங்கர் டைரக்டு செய்யும் `ரோபோ' படத்தை மும்பையில் உள்ள ஒரு கார்பரேட் நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ் ரோபோ லோகோ உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் ?

8 Comments:

Unknown said...

Quote from Latest News.....

இந்த செய்தியை உறுதிப்படுத்த யாரும் முன்வரவில்லை. இயக்குநர் ஷங்கரின் செய்தித் தொடர்பாளரிடம் இதுகுறித்து கேட்டபோது முதலில் சிரித்தார். பிறகு, இப்படி ஒரு திட்டம் ஷங்கர் சாரிடம் இல்லை. அப்படி இருக்கையில் எப்படி இப்படி ஒரு செய்தி வந்தது என்று தெரியவில்லை என்றார்.

மேலும் ஆட்லேப்ஸ் நிறுவனத்தின் சென்னைக் கிளையும் கூட இந்தத் தகவல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

Sambar Vadai said...

For Camera Kannaayiram

http://www.dinamalar.com/photo_album/04jan2008/album/pothualbum_12.jpg

IdlyVadai said...

முனிஸை நினைவு படுத்தியதற்கு நன்றி :-)

Sambar Vadai said...

இது எந்த ஞாநி /னி??

--------------------------
ஞானியின் "மார்க்சியம் பெரியாரிசம்' சமயம், ஆன்மீகம், அளவையியல் சார்ந்த நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது
-------------------------------

தமிழக அரசின் சிறந்த நூல்கள் அறிவிப்பு


சென்னை : கடந்த 2006ம் ஆண்டுக்கான பரிசுக்குரிய சிறந்த நூல்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. வலம்புரி சோமநாதனின் "புத்த மகா காவியம்' மரபுக் கவிதைக்கான சிறந்த நூலாகவும், சங்கர நாராயணனின் "நீர்வலை' புதினத்திற்கான சிறந்த நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


தமிழக அரசு கடந்த 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பட்டியலை அறிவித்துள்ளது. மரபுக்கவிதைக்கான விருதை சோமநாதனின் "புத்த மகா காவியம்' என்ற நூலும், மீனாட்சியின் "உதய நகரிலிருந்து' என்ற நூல் புதுக்கவிதைக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சங்கர நாராயணனின் "நீர்வலை' புதினத்திற்கான பரிசினையும், வேணுகோபாலின் "வெண்ணிலை' சிறந்த சிறுகதை, ராமகிருஷ்ணனின் "அரவான்' நாடகம், செல்ல கணபதியின் "மணக்கும் பூக்கள்' சிறுவர் இலக்கியம், சிலம்பொலி சு.செல்லப்பனின் "சிலம்பொலியார் அணிந்துரைகள்' திறனாய்வுக்கான பிரிவுகளில் சிறந்த நூலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு வரலாறு, கல்வெட்டு,தொல்லியல் பிரிவில் நரசய்யாவின் "மதராச பட்டினம்' என்ற நூலும், ஞானியின் "மார்க்சியம் பெரியாரிசம்' சமயம், ஆன்மீகம், அளவையியல் சார்ந்த நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதழியல் தகவல் தொடர்பு, கணினியியல் ஆகிய பிரிவுகளில், லெனினின் இரு நூல்கள் தேர்வாகியுள்ளன.

பிற சிறப்பு வெளியீடுகளின் கீழ் வாண்டு மாமாவின் "பரவசமூட்டும் பறவைகள்' நூல் தேர்வாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளின் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த நூல்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், அந்த நூல்களை வெளியிட்ட பதிப்பகத்திற்கு இரண்டாயிரம் ரூபாயும் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நுண்கலைகள், வெளிநாட்டு படைப்பிலக்கியம் ஆகிய பிரிவுகளின் கீழ் வரப்பெற்ற நூல்ல்கள் விதிமுறைப்படி இல்லாததால் பரிசுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/2008jan04/general_tn14.asp

Anonymous said...

இது எந்த ஞாநி /னி??

This Jnani(ஞானி) aka Kovai ஞானி is based in Coimbatore (real name:K.Palanisamy).
He is well known as a critic,scholar and
marxist thinker.He brings out
a magazine Tamil Neyyam and
Kavya has published many books
authored/edited by him.

Anonymous said...

பிரம்மாண்ட இயக்குனரு உச்ச நடிகரை ரகசியமா சந்திச்சிருக்காரு... சந்திச்சிருக்காரு... திரும்ப மராட்டிய வீரன் படம் மாதிரி ஒரு பிரம்மாண்ட படம் சேர்ந்து பண்ணலாமுன்னு ஐடியாவும் சொல்லியிருக்காரு. ஆனா உச்ச நடிகரோ இப்போதான் சேர்ந்து பண்ணினோம். சுவாரஸ்யம் இல்லாமல் போயிடும். பிறகு பார்ப்போமுன்னு நைசா நழுவிட்டாராம்... நழுவிட்டாராம்... ஏற்கெனவே மராட்டிய வீரனுக்கு ஆன செலவையும் அந்தப் படத்தை விற்க பட்ட கஷ்டத்தையும் பி’ அண்ட் சி’ ஏரியால சில வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் கணக்கு போட்டுத்தான் நடிகர் மறுத்துட்டாராம்... இயக்குனரோட திட்டத்தை மறுத்துட்டாராம்...

கோடம்பாக்கம் கோடங்கி

Anonymous said...

எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம்... ஆங்கிலத்தில் சொல்வதைப்போல் (ரோபோட்) என்று இல்லாமல் ஏன் ரோபோ என்று சொல்கிறோம் ?

Anonymous said...

Dinamalar Today (06.01.08):

http://www.dinamalar.com/2008jan06/general_tn16.asp

Again confirms Rajini in this film ??

What's going on