பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 02, 2008

சினிமாவில் புகைபிடித்தல் பற்றி விஜயகாந்த்

எந்த கதாநாயகனும் புகை பிடித்தபடி போஸ் கொடுப்பதை விரும்பவில்லை. ஒரு படத்தின் இயக்குனர் விருப்பப்படி செயல்படுவதை ஓர் அமைச்சர் கட்டாயத்தின் பேரில் மாற்றுவது சரியல்ல. - விஜயகாந்த்


கே: வரும் தேர்தலில் கூட் டணி அமைப்பீர்களா?

ப: எனது கட்சியை ஆரம் பித்த நாளில் இருந்து இதற்கு பதில் சொல்லி வருகிறேன். நான் தனித்து தான் போட்டி யிடுவேன். மக்கள் பலமே என் பலம். தனித்து தான் போட்டியிடுவோம் என்று ஏற்கனவே விட்ட சவாலில் இருந்து பின்வாங்க மாட்டோம். மக்களும் கடவுளும் தான் எங்கள் கூட்டணி.

கே: மூன்றாவது அணி அமைக்க உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறதே?

ப: நானும் காங்கிரசும் கூட்டு சேர்ந்தால் வலுவாக இருக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வை விட்டு விட்டு காங்கிரஸ் போய் விடுமோ என்று கலைஞரை இந்த கணிப்பு கவலைப்பட வைத்துள்ளது. என்னைப் பொருத்த வரை தே.மு.தி.க. எப்போதும் தனியாகத்தான் இருக்கும். மக்களுக்கு பழைய அரசியல்வாதிகளை பிடிக்க வில்லை. அவர்கள் மீது விரக்தி அடைந்துள்ளனர். எனவே அவர்களுடன் ஒருபோதும் கூட்டு வைக்க மாட்டேன்.

கே: சமீபகாலமாக ஜெய லலிதா பற்றி நீங்கள் கருத்து சொல்ல வில்லையே.

ப: அவரைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர் திடீரென்று என்னை `குடி காரன்' என்று சொன்ன தற்கு பதில் சொன்னேன். மற்றபடி எதிர் கட்சியில் இருக்கும் அவரை அவ்வப் போது விமர்சனம் செய்வது தேவை இல்லை என்று நினைக் கிறேன்.

கே: மத்திய மந்திரி அன்பு மணி சினிமாவில் புகைப் பிடிக்கும் காட்சி இருக்க கூடாது என்று சொல்வது சரியா?

ப: எந்த கதாநாயகனும் புகை பிடித்தபடி போஸ் கொடுப்பதை விரும்பவில்லை. ஒரு படத்தின் இயக்குனர் விருப்பப்படி செயல்படுவதை ஓர் அமைச்சர் கட்டாயத்தின் பேரில் மாற்றுவது சரியல்ல.

( இயக்குனர் 1000 ரூபாய் தான் சம்பளம் என்றால், இயக்குனர் விருப்பப்படி செயலபடுவாரா ? சமுக பொறுப்புணர்வு இல்லாதவர்கள் அரசியல் பக்கம் வர கூடாது )

கே: உங்கள் கட்சியினர் அதிருப்தி அடைந்து வெளி யேறுகிறார்களே?

ப: அவர்களாக வருகிறார்கள். அவர்களாகவே போகிறார்கள். நான் யாரையும் அழைக்கவுமில்லை, அனுப்பவும் விரும்பவில்லை. எனது ஆரம்பகால ரசிகர் மன்றங்களை நம்பித்தான் கட்சி ஆரம்பித்தேன்.
( மாலைமலர் )

0 Comments: