பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 10, 2008

புத்தகக் கண்காட்சி 9/1/2008 - வைகோ ஸ்பெஷல்

இன்று புத்தகக் கண்காட்சிக்கு திரு.வைகோ மாலை நாலரை மணி வாக்கில் வருவதாக காலையில் எனக்கு ஒருவர் Chat'ல் சொன்னார்.
ஐந்து மணிக்கு போனால் அங்கு யாரையும் காணோம். விசாரித்து பார்த்ததில் யாருக்கும் தெரியலை. சரி புறப்படலாம் என்று கிளம்பும்போது, 6:30 மணி இருக்கும், வைகோ வந்தார். இந்த முறை படங்களை நேரடியாக பிளாக் செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் சில காரணங்களால் முடியவில்லை.

அவர் பின்னால் ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருந்ததால் அவருடன் ஒன்றும் பேசவும் முடியலை :-)

சில பிரத்தியோக வீடியோ மட்டும் இந்த பதிவில் ( விடியோ தரம் சுமார், ஆடியோ மோசம், மன்னிக்கவும் )


காட்சி 1


காட்சி 2


காட்சி 3


காட்சி 4


2 Comments:

Anonymous said...

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் ஆன்மிக, கலாசார, சமூக மாநாடு


சென்னை: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சென்னை மாவட்டம் சார்பில் ஆன்மிக, கலாசார, சமூக மாநாடு வரும் 13ம் தேதி நடக்கிறது.

எழும்பூர் தர்மபிரகாஷ் அரங்கில் காலை 5 மணிக்கு வேத பாராயணத்துடன் பிராமணர் சங்க விழா துவங்குகிறது. மகளிரணி செயலர் ரமா குருமூர்த்தி குத்துவிளக்கேற்றுகிறார். மாஸ்டர் ரிஷி பரத்வாஜின் கடவுள் வாழ்த்து, வேதிக் ரவி குழுவினரின் வேத கோஷம் மற்றும் மாவட்ட தலைவர் சீனிவாசன் வரவேற்புரையுடன் விழா துவங்குகிறது.

முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுந்தரேசய்யர், சாரங்கபாணி, பாலசுப்ரமணியன், ஜெயராமன், சீனிவாசன், நீலகண்ட அய்யர், தியாகராஜன் உள்ளிட்டோரை ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பாராட்டி கவுரவிக்கிறார். கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் வாழ்த்துரை வழங்குகிறார். தொடர்ந்து, ராம்ஜியின் இசை மழலைகள் வழங்கும் பக்திப் பாடல்கள், இளைஞரணியினரின் நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.

மாலை நிகழ்ச்சிகளில் மகளிரணி செயலர் சுந்தரி ரங்கநாதன் தலைமையிலான மகளிர் பங்கு பெறும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. கோபாலபுரம் நேஷனல் பப்ளிக் ஸ்கூல், திருவான்மியூர் சங்கர வித்யாஸ்ரம பள்ளி மாணவர்களின் பஜனைப் பாடல்கள் மாலை 3 மணிக்கு நடக்கிறது. நடிகர் டில்லி கணேஷ் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடக்கிறது.

மாநாட்டு மலர் வெளியீட்டுக்குப் பின்னர் பல்துறை வித்தகர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். டாக்டர் கல்யாணராமன், வேளுக்குடி கிருஷ்ணன், கிருஷ்ணா சுவீட்ஸ் முரளி, பாலவித்யா மந்திர் எஸ்.எஸ்.நாதன் ஆகியோரை எம்.ஓ.பி., வைணவ கல்லுõரி முதல்வர் நிர்மலா பிரசாத் கவுரவிக்கிறார். இந்தியன் வெஜிடேரியன் காங்கிரஸ் தலைவர் தாராசந்த் துகார், மாநில ஆலோசகர் பிரமிட் நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். மாவட்ட பொதுச்செயலர் வெங்கடராமன் நன்றி தெரிவிக்கிறார். விழாவில், இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடக்கிறது.

http://www.dinamalar.com/2008jan10/general_tn5.asp

Anonymous said...

அவர் வை கோவாகவே இருந்து விட்டுப் போகட்டும் ஏன் மன்மோகனாகக் கூட இருக்கட்டுமே, இப்படியா ஐயா மேலே விழுந்து அப்பி ஃபோட்டோ எடுப்பீர்கள். அவர் நாளுக்கொன்று பேசித் திரியும் அரசியல்வாதி. அவர் புத்தகம் வாங்க வருகிறார். அது அவரது சொந்த வேலை. அப்படியிருக்கும் பொழுது அவரைக் கண்டு கொள்ளாமல் விடுவதுதான் டீசன்சி. இப்படியாக் காணாததைக் கண்டவன் போல் மேலே விழுந்து ஃபோட்டோ பிடிப்பீர்கள்? இப்படி தனி நபர் துதி பாடி பாடித்தான் இந்தியா கேவலமாக இருக்கிறது. இப்படி ஒரு அரசியல்வாதி சினிமாக்காரர்கள் பின்னாடிப் போய் படம் பிடித்து அலைவதைப் பார்க்கவும் கேட்க்கவும் அசிங்கமாக இருக்கிறது. உங்களைப் போன்ற விவரமானவர்களே இப்படிச் செய்தால் ஏன் பாமரன் சினிமாக்காரன் பின்னால் ஓட மாட்டான். நீங்கள் நியூஸ் கவரேஜ் செய்வதானால் இன்று இன்ன இன்ன அரசியல் பிரமுகர்கள் வந்து இன்ன இன்ன புக்ஸ் வாங்கினார்கள் என்று ஒரு வரி செய்தி போடலாம். அதை விட்டு விட்டு அவருக்குப் பின்னால் கோஷ்டியாய் போவதும் படம் பிடிப்பதும் அவரிடம் அசிங்கமாக வழிவதும் (நீங்கள் இல்லை அங்கு நிற்பவர்கள்) பார்க்கவே கண்றாவியாக இருக்கிறது. அவருக்கு என்ன கோடி கோடியாய் அரசியலில் சொத்து சம்பாதித்து வைத்திருக்கிறார். பத்து தலைமுறைக்குத் தாங்கும், உங்களுக்கும் எனக்கும் அதில் என்ன இருக்கிறது? அதே புத்தகக் கடைக்கு ஒரு பெரிய உலகப் புகழ் பெற்ற பேராசிரியர் போய் வந்திருந்தால் ஒருவருக்கும் தெரிந்திருக்காது, கண்டு கொண்டிருக்க மாட்டீர்கள் ஆனால் ஊரை ஏமாற்றும் அரசியல்வாதி வந்தாலும் சினிமாக்காரன் போனாலும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஃபோட்டோ எடுத்துப் போடுகிறீர்கள். சும்மாவா எம் ஜி யாரும், ஜெயலலிதாவும் கருணாநிதியும் விஜயகாந்தும் தமிழ் நாட்டில் தொடர்ந்து ஓட்டு வாங்க முடிகிறது. கஷ்டம்.

திருந்துங்கப்பா. அரசியல்வாதியோ சினிமாக்காரரோ அவர் பாட்டுக்கு வந்து புத்தகம் வாங்கி விட்டுப் போகட்டும். தொந்திரவு செய்யாமல் விடுங்கள். அவர்கள் வாங்கும் புத்தகத்தைப் படிப்பார்களா என்பது யாருக்கும் தெரியாது. இப்படித்தான் ரஜினிகாந்து கருணாநிதியின் காலில் விழுந்து அவர் எழுதிய புத்தகத்தை (குப்பைகளை) எல்லாம் வாங்கிக் கொண்டு போனார்., படித்தாரா படிக்கத் தெரியுமா என்பதெல்லாம் அந்த பாபாவுக்குத்தான் வெளிச்சம். சந்திரபாபு ஜெயகாந்தனிடம் பந்தாவாக புத்தகம் வாங்கிக் கொண்டு போய் படிக்கத் தெரியாமல் வைத்திருந்த கதைதான். அதே போல இந்த கோபால்சாமி மாதிரியான ஃபிராடுகள் ஊரை ஏமாற்ற தன்னை ஒரு பெரிய அறிவாளி என்று காண்பித்துக் கொள்ள இது போல புத்தகக் கடைகளுக்கு வருகிறார்கள் அதற்கு உங்களைப் போன்ற ஆட்கள் விளம்பரம் கொடுக்கிறீர்கள். அடுத்து கனிமொழி வீட்டு நாய்க் குட்டி வரும் அதையும் விளக்கமாக சினிமா எடுத்துப் போடுங்கள்