பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 07, 2008

புத்தகக் கண்காட்சி 7/1/2008


இவர் யார் ? மேல் விவரங்கள் கீழே...

இன்று சென்னை புத்தக கண்காட்சியில் ...

கலைஞரின் ஒரு லட்சம் பக்கங்களும் இரு நூற்றாண்டுகளும்...படைப்பரங்க திறப்பு விழா சென்னை புத்ததக கண்காட்சியில் நடைபெற்றது. கவிஞர் கனிமொழி எம்.பி அரங்கை திறந்துவைத்தார், ( நான் கொஞ்சம் லேட் அதனால் அதை பார்க்க முடியவில்லை) அரங்கில் கலைஞர் குறித்த பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் பல அரிய புகைப்படங்கள் காட்சியளித்தன. சில படங்கள் கீழே...

இன்று மாலை கவிஞர் தமிழச்சி புத்தக ஸ்டால்களில் சில புத்தகங்களை புரட்டிப்பார்த்தது இன்னொரு ஹைலைட் ( கனிமொழி வந்தால் கூடவே இவங்களும் வருவாங்க இது தெரியாத உங்களுக்கு ? )என்னை கவர்ந்த கட்டவுட். பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஒரு படம் எடுத்துக் கொள்ள ஆசை ( நீங்க என்னை கண்டு கண்டுபிடித்துவிட்டால் ? அத்தான் எடுக்கலை :-)

விகடன் புத்தக கடை. ஏதோ திட்டம் எல்லாம் வைத்திருக்காங்க தெரியுமா ?


மக்கள் டிவி ஸ்டால், உள்ளே கவிதை டிவிடி மற்றும் ஒரு டிவி வைத்திருக்கிறார்கள். அதில் எப்போதும் மக்கள் தொலைக்காட்சியே வருது அதில எப்பவும் ஜெ அறிக்கையே காண்பிக்கிறார்கள்.

வெற்றி என்று கை காண்பிப்பவர் நம்ம நக்கீரன் கோபால். இந்த கடையில் சபாரி சூட் போட்டுக்கொண்டு ஒருவர் இதே போல் மீசை வைத்துள்ளார் இவர் தம்பியா ?


வழக்கம் போல் இந்த முறையும் சட்டியில் ஓட்டு, ஆனால் இதில் பிரதானமாக தெரிவது பிரமிட் சாய்மீராவின் விளம்பரம் தான். ( படத்தில தேடாதீங்க சைடுல இருக்கு :-)தாகம் பதிப்பகத்தில் இந்த போஸ்டர் என்னை கவர்ந்தது. 24 வயது கலைஞர் 84 வயது கலைஞருடன் உரையாடும் வடிவில் எழுதப்பட்ட புத்தகம். என்ன பேசிக்கொள்வார்கள் ?
"அண்ணே ராமதாஸை நான் கவணித்துக்கொள்கிறேன், நீங்க பேசாம ரெட்ஸ்ட் எடுங்க"

6 Comments:

வால்பையன் said...

//கவிஞர் தமிழச்சி புத்தக ஸ்டால்களில் சில புத்தகங்களை புரட்டிப்பார்த்தது இன்னொரு ஹைலைட் ( கனிமொழி வந்தால் கூடவே இவங்களும் வருவாங்க இது தெரியாத உங்களுக்கு ? )//

இன்னொரு "உடன் பிறவா சகோதிரிகள்" ரெடி என்று சொல்கிறிர்களா!
ஆனாலும் ரொம்ப குசும்பு தான் இட்லிவடையாரே!

வால்பையன

Anonymous said...

>>
என்னை கவர்ந்த கட்டவுட். பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஒரு படம் எடுத்துக் கொள்ள ஆசை ( நீங்க என்னை கண்டு கண்டுபிடித்துவிட்டால் ? அத்தான் எடுக்கலை :-)
>>

ஃபோட்டோ எடுத்துட்டு அந்துமணி மாதிரி முகத்தை மட்டும் கார்டூன் வடிவில் கணினியில் வரைந்து ஒட்டியிருக்கலாமே :-) அல்லது நீங்கள் போடும் பேண்ட்/வேட்டி சர்ட் வைத்து கண்டுபிடித்துவிடுவோம் என்ற எச்சரிக்கையா ? அந்துமணி ஃபேமஸ் ஆனதற்கு அவரின் இந்த டெக்னிக்கும் காரணம். நீங்களும் அதுபோலவே உங்கள் படங்களை வெளியிடலாமே ?

Sridhar V said...

//அல்லது நீங்கள் போடும் பேண்ட்/வேட்டி சர்ட் வைத்து //

அல்லது சேலை / சுடிதார்/ துப்பட்டாவுடன் கூடிய குர்தா வைத்து கூட அடையாளம் கண்டு கொள்ளலாம்.

தினமும் புத்தக கண்காட்சி பற்றி பதிவிடுவதால் 'இட்லிவடையார்' பதிப்பகத்துடன் தொடர்புடையவர் என்று மட்டும் தெரிகிறது :-))

IdlyVadai said...

//அல்லது சேலை / சுடிதார்/ துப்பட்டாவுடன் கூடிய குர்தா வைத்து கூட அடையாளம் கண்டு கொள்ளலாம்.
//

இதுக்கு நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன் :-)

//தினமும் புத்தக கண்காட்சி பற்றி பதிவிடுவதால் 'இட்லிவடையார்' பதிப்பகத்துடன் தொடர்புடையவர் என்று மட்டும் தெரிகிறது :-))//

:-). நேற்றி கலைஞர் கண்காட்சிக்கு தான் போனேன். சனிக்கிழமை காலை தான் அடுத்த விசிட். வாருங்கள் சந்திக்கலாம் !

Anonymous said...

Idlyvadai is there in one of the photos here :-) I have found out.!

http://picasaweb.google.com/anyindian.com

Photo number would soon be announced !?

IdlyVadai said...

அனானி, ஐயா ஜாலி !