பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 05, 2008

புத்தகக் கண்காட்சி 5/1/2008

எழுதும் முன். ஒரு பிரபல எழுத்தாளர் சொன்ன தகவலின் பேரில் நேற்று கூரை பற்றி எழுதியிருந்தேன். இன்று நேரில் பார்த்த போது தான் தெரிந்தது அப்படி ஒன்றும் மேசமில்லை என்று.


போனதடாவையை விட இந்த தடவை ஆறு வாசல். ஒரு ஸ்டாலிருது மற்றொரு ஸ்டாலுக்கு தாவி குதிக்கலாம். குதிக்கும் போது வால் முளைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* இன்று காலையில் மந்தமாக இருந்த கூட்டம் மத்தியம் அதிகமாக இருந்தது. அதற்கு சாட்சி இந்த படம். நல்ல பசியில் எனக்கு தயிர் சாதம் கூட கிடைக்கவில்லை. ( கடைசி தயிர் சாதம் பத்ரி சாப்பிட்டதாக கடைகாரர் சொன்னார் :-)

* பிரசன்னா பிஸியாக கல்லா பெட்டியில் இருந்தார். ஸ்டால் கொஞ்சம் சின்னதாக இருந்தால் மூச்சு திணரியது


* விகடனில் வழக்கம் போல் நல்ல கூட்டம் ஆனால் அவர்களைவிட கிழக்கு பதிப்பகத்தில் நல்ல கூட்டத்தை பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு வருடத்தில் இவர்களுக்கு போட்டி இவர்களே என்று தோன்றுகிறது. ( மதியின் கார்ட்டூன் தொகுப்பு நிஜமாகவே oxford அளவுக்கு தரம். ( RK.Laxman புத்தகங்களை போல் அழகாக இருந்தது ). மூன்று ஸ்டால்களை ஒன்றாக வளைத்து போட்டு வைத்திருந்தால் இவர்கள் ரேஞ்சே தனியாக இருந்திருக்கும். விடுதலை புலிகள் பற்றிய புத்தகம் இன்னும் வரவில்லை. வித்யா புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

* உயிர்மை ஸ்டாலில் பட்டாசு கட்டுக்களை போல் சுஜாதா புத்தகங்களை அடுக்கிவைத்திருந்தார்கள். ஒரு மாறுதலுக்கு இந்த முறை 25, 40 ரூபாய்க்கு சுஜாதா புத்தகங்கள் கிடைக்கிறது.

* காலச்சுவடு இந்த முறை கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என்று பிரித்து வைத்து அசத்தியிருந்தார்கள்.

* வெளியில் துடக்க விழாவிற்கு ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்தது. புள்டோசரை வைத்து சேற்றை வாரிக்கொண்டிருந்தார்கள்.

நாளைக்கும் அப்டேட் உண்டு. என்னை சந்திக்க விரும்புகிறவர்கள் நாளை கார் பார்க்கிங் பக்கத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீர் பக்கதில் வரவும்.

1 Comment:

sathish (bengaluru) said...

Hello,

The Date is wrong...