பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 27, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 27-01-08

இந்த வாரம் முனீஸ் இட்லிவடைக்கு எழுதும் கடிதம்....

வணக்கம் இட்லிவடை,

இதை கவனிச்சயா? சன் டிவி முதல்ல 8 மணிக்கு நியூஸ் போட்டது. கலைஞர் டிவி 7.30க்கு போடவும், சன் டிவியும் 7.30க்கு போட்டது. திரும்பவும் கலைஞர் டிவி 7 மணிக்கு நியூஸ்னு அறிவிக்க, இப்போ சன் டிவியும் 7 மணிக்கு நியூஸ்னு அறிவிச்சுட்டது. யார் 23 மணி நேரத்துக்கு முன்னால நாளைய செய்திகள்னு அறிவிக்கறாங்களோ அவங்களே வென்றவர்கள். :))

அப்றம் கே.டி.வில அருணாசலம் படம் ஓடிண்டிருக்க, கலைஞரில் குரு சிஷ்யன் படம். உடனே குரு சிஷ்யனை கட் செய்துட்டு கலைஞர் டிவியில அருணாசலம் ஓடியது.

நம்ம 'தல' நடிச்ச கூலிங் கிளாஸ் படத்தை, அத்தாம்பா பில்லா படம். கலைஞர் டிவி வாங்கிட அதிலிருந்து கிளிப்பிங்குகளைக்கூட சன் டிவி ஒளிபரப்பரதில்லை தெரியுமா? இது மட்டும் இல்லை, பழைய பில்லா படத்தோட பாடல்களையும், அடிக்கடி சன் டிவி ஒளிபரப்பிகிட்டிருக்கு.

இந்த அழகுல கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் ஷரத் இந்த மாதிரி பேட்டி கொடுத்திருக்கிறார்.

இரண்டு சேனல்களிலும் ஒரே நேரத்தில் ஒரே விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஏன் இந்த மோதல்? ரெண்டு சேனல்களுக்குமிடையே ஒரு பனிப்போர் நடந்துகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. உண்மையில் என்னதான் நடக்கிறது?

‘‘இது பிஸினஸ் போட்டி. இருக்கத்தான் செய்யும். எங்களைப் பொறுத்தவரை சன் டி.வி.யுடன் ஆரோக்கியமான போட்டிதான் போய்க்கிட்டிருக்கு. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேர விஷயத்தில் நாங்க ஆரம்பத்தில் போட்ட ஷெட்யூலை இன்னும் மாற்றாமல் தெளிவாகப் போய்க்கிட்டிருக்கோம். நாங்க மக்களைக் குழப்ப விரும்பலை, எங்களுக்குப் போட்டியாக நிகழ்ச்சிகளின் நேரங்களை மாற்றுவது அவர்கள்தான். முதன்முதலாக வித்தியாசமான ‘லாஜிக் இல்லா மேஜிக்’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கினோம். இப்போ அவங்களும் அதே மாதிரி ஒரு நிகழ்ச்சி பண்றாங்க. ஸோ... இந்தக் கேள்வியை அவர்களிடம்தான் கேட்கணும்.வலைப்பதிவுலகம் - வலைக்கும்மின்னு ஹரன்பிரசன்னா கட்டுரை எழுதியிருக்கிறார்; படிச்சுப் பார். அட அட எவ்வளவு நல்லா எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை நடுநிலமை கட்டுரை. இதே கட்டுரையை பெயர் குறிப்பிட்டு எழுதியிருந்தார் என்றால், இந்தக் கட்டுரை தனி நபர் தாக்குதலாக இருந்திருக்கும். நமக்கும் தொடர்ந்து நல்ல தீனி கிடைச்சிருக்கும். ஹூம், ஜஸ்ட் மிஸ்ட்.

மேற்கு வாங்காளத்துல பறவைக் காய்ச்சல் அதிகமாக ஆயுட்டுது போல, இல்லைன்னா கம்யூனிஸ்ட் முன்றாவது அணி பத்தி பேசியிருப்பாங்களா? தமிழ்நாட்டுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்தக் காய்ச்சல் வந்தது.

"பஞ்சாங்கம் பார்க்க மாட்டோம்'னு பகுத்தறிவாளர்கள் சொல்லிக்கிட்டாலும், ஜோதிடர்கள் கணிச்ச பஞ்சாங்கப்படி தானே பொங்கல் வருது. எனக்கு என்னவோ கலி முத்திடுச்சு போலத் தெரியறது.

பொங்கல்தான் புத்தாண்டா?ன்னு நம்ம பினாத்தல் 8 கேள்வி கேட்டிருக்கார்; ஒன்பதாவதா ஒரு கேள்வி இருக்கு. தசாவதாரம் ரிலீஸை இழுத்தடிச்சு தமிழ் புத்தாண்டு ரிலீஸ்னாங்க. இப்ப என்ன செய்யப் போறாங்க? தமிழ்ப் புத்தாண்டுன்னா அப்ப ரிலீஸ் இனிமே 2009 சனவரிக்கு தானா ? தாங்காது.

கொசுறு கேள்விகள்: முடிஞ்சா பதில் போடு
அப்பறம் தமிழ்நாட்டில் ரஜினியின் ஆங்கில பெயர் என்ன தெரியுமா Rajinikanth ஆனால் மற்ற இடங்களில் Rajnikanth ஏன் தெரியுமா ?

ஏன் பெண்கள் ஆண்களின் புனை பெயரில் எழுதறதில்லை?

கூச்சப்படும் பெண்கள் குண்டாகி விடுவார்களாமே ? மருத்துவ ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்திருக்கிறார்களாம் உனக்கு தெரியுமா ?

வயது வந்தவங்களுக்கு- உனக்கும்தான்- ஒரு தகவல்:

முன்பு இந்தியா டுடே உடலுறவு பத்தி ஒரு சர்வே நடத்தி ஊரே பத்திகிச்சு. இப்ப அவுட்லுக் நடத்தியிருக்கு. என்ன்னு தெரிஞ்சுக்க இங்க சொடுக்கு.


ஷங்கர் டைரக்ஷனில் ரஜினி நடிக்கும் `ரோபோ' படத்தின் பெயர் தமிழில் `இயந்திரா' என்று மாற்றம் செய்யப்படுகிறது தெரியுமா? போன வாரம் நான் சொன்ன பேர் தான். எனக்கு ஏதாவது கமிஷன் கொடுப்பாங்களா ?

20 வருஷத்துக்கு அப்பறம் ராமரை மையமாக வைத்து மீண்டும் ராமாயணம் தயாரிக்கிறார்கள் ராமானந்த் சாகரின் இளைய தலைமுறை. எண்டிடிவி குழுமம் புதிய சேனலை ஜனவரி 31ஆம் தேதி தொடங்கறாங்க அதில திங்கள் முதல் வெள்ளிவரை இரவு பத்து மணிக்கு 'புதிய ராமாயணம்' வர போகுது. இதில் ராமராக நடிக்கிற நடிகருக்கு கிரீம் வாங்க இந்தியாவில் முக்கிய நகரங்களில் தேடியிருக்காங்க ஆனா கிடைக்கலை. கடைசியா சென்னையில் தான் பொருத்தமான கிரீடம் கிடைத்திருக்கு. நல்ல பொருத்தம்!

0 Comments: