பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 16, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-01-08

மாட்டுப் பொங்கல் அன்று திரும்பவும் வருகிறார். முனீஸ்!

மைடியர் பாடிகாட் முனிஸ்,

எப்படி இருக்க நைனா? இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!.

மாட்டுப் பொங்கல்னாலே நினைவுக்கு வர்றது ஜல்லிக்கட்டு. இதுக்கு சுப்ரீம் கோர்ட் தடை போட்டது பழைய நியூஸ். இந்தத் தடையை நீக்கச் சொல்லி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுல மறு ஆய்வு மனுதாக்கல் செஞ்சது. தமிழக அரசு சொன்ன காரணம்...."400 ஆண்டு காலமாக பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்கு தடை விதிப்பதால் மக்களின் மத உணர்வை அது பாதிக்கும்," னு வாதாடியிருக்காங்க.

நீதிபதிகள் சும்மா இருப்பாங்களா? இந்த மாதிரி ஜல்லிக்கட்டுக்கு சொல்ற காரணங்களை ஏத்துக்க முடியாது. மத உணர்வை பத்தி ஜல்லிக்கட்டுல ஒரு நிலை, ராமர் சேது பாலம் தொடர்பான வழக்குல மத உணர்வு பத்தி இன்னொரு நிலைங்கறது எங்களுக்கு ஆச்சரியமா இருக்குன்னு சொல்லியிருக்காங்க. சுப்ரீம்கோர்ட் காரங்களுக்கு நம்ப அரசைப்பத்தி இப்பத்தான் தெரியுது போல. ஆக ஜல்லிக்கட்டு வழக்கில் மத உணர்வு ஜல்லியெல்லாம் அடிக்காதீங்கன்னு சொல்லிட்டாங்களாம்.

நம்ம வலைப்பதிவு மக்கள் மோடின்னா டென்ஷன் ஆயிடறாங்க. அதுக்காக சொல்ல நினைக்கறதை சொல்லாம இருக்கமுடியுமா? அதான் உன்கிட்ட சொல்றேன். மோடிக்கு காங்கிரஸை விட அதிகமா தொல்லை கொடுத்தவர் கேசுபாய் படேல் தான். ஆனா மோடி ஜெயிச்சவுடனே என்ன செஞ்சார் தெரியுமா? வரது இல்லத்துக்குப் போய் ஆசிவாங்கி, தன் புதிய அரசுக்கும் ஒத்துழைப்பு தரணும்னு கேட்டுண்டார். அட என்ன ஒரு நாகரிகம்!. நம்ம கலைஞர், ஜெ இவங்களெல்லாம் இதையாவது கத்துக்கனும். அண்ணாவிற்கு பிறகு இந்த நாகரிகம் போயே போச்சு!. பாடிகார்டு முனீ, நீயாவது கொஞ்சம் இவங்களுக்கும் நாகரிகம் சொல்லிக் கொடு.

தமிழக பஸ்களை விபத்தில்லாம ஓட்டினா கலைஞர் பரிசு கொடுக்கிறார்ங்கற உத்தரவுனால இப்பல்லாம் நீ ரொம்ப பாப்புலராமே, சந்தோஷம். தினமலர்ல எல்லாம் போட்டோ வருது. அப்படீன்னா ரொம்ப பிசியாவும் இருப்ப. அதனால டிவியெல்லாம் பார்க்கறதுண்டா? இப்ப எல்லாம் தினமலர் விளம்பரம் கலைஞர் டிவியிலே ரொம்ப காட்டறாங்க. விஜயகாந்த் டிவி பார்த்தியா? முழிக்காதே; நான் சொல்றது கே.டிவியைத்தான். வாரத்தில 10 விஜயகாந்த் படம் போடறாங்க. அப்ப கே.டிவி விஜயகாந்த் டிவிதானே? அதுக்காக பிசியா இருக்கறதே நல்லதுன்றியா? கொடுத்துவெச்சவம்பா.

'ரோபோ' படத்துக்கு நல்ல தமிழ் பேர் யோசிக்கிறாங்க. நீயும் ஏதாவது சஜஸ்ட் செய்யேன். அப்பத்தான் வரிவிலக்கு கிடைக்கும். இயந்திர மனிதன் அப்படீங்கறதை 'இயந்திரா'ன்னு சுருக்கலாம். அல்லது ஷங்கர் பேர் வைக்கற ஸ்டைலுக்கு தோதா அந்நியன், இந்தியன், முதல்வன் மாதிரி 'இயந்திரன்' னு வைக்கலாம். ஆனா இது இட்லிவடை காப்பிரைட், இந்த பேரை யூஸ் செய்ய எனக்கு அவங்க துட்டு தரனும். நீதான் சாட்சி.

சிவாஜி 175 விழா சென்னைல போன வாரம் நடந்தது, டிவியில காமிச்சாங்க, ஸ்ரேயா சின்ன ஃபிராக்(பாவாடைன்னு கூட சொல்லலாம்) உடைல நிறைய காலும், கொஞ்சம் தொடையும் தெரியும்படி வந்துட்டார். இது தப்பா? 'வந்த வேலையை'ப் பார்க்கறதை விட்டுவிட்டு அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கையோட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்திங்கறவர் காவல் நிலையத்துல புகார் கொடுத்திருக்கார். இது நியாயமா? இனிமே நிகழ்ச்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே இந்த சென்சார் அதிகாரிகள் வந்து ஓ.கே சொல்லனும் போல. போலீஸ் என்ன சொல்றாங்னா நிர்வாணமாக வராத பட்சத்தில் எந்த விதமான உடை அணியறதுங்கறது அவங்கவங்க சொந்த விருப்பமாம். தமிழ்நாட்டுக்கு ஒரு குஷ்புவே போதும்னு நினைச்சாங்களோ என்னவோ, நடிகை ஸ்ரேயா தான் அணிஞ்சு வந்த படுபகிரங்க உடைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கார். (அப்ப இனிமே அப்படி பாக்கவே முடியாதா?) இது தொடர்பா முதல்வர் கருணாநிதிக்கும் இந்து மக்கள் கட்சிக்கும் காவல்துறைக்கும் மன்னிப்புக் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கார். ஃபோட்டோ பக்கத்துல இருக்கு; பார்த்துவிட்டு சரியா தப்பான்னு நீயே சொல்லு பிரதர். :(அடுத்து புக்ஃபேர்ல நடந்த கிழக்கு பதிப்பக புத்தக வெளியீட்டோட நிகழ்ச்சில எடுத்த இந்த ஃபோட்டோவையும் பாரு.. இதுல பத்ரி மேடைக்கு எப்படி வந்திருக்கார்? நல்ல வேளை இதுக்கு யாரும் கேஸ் போடலை :-) ( படம் உதவி எனி இந்தியன். நானும் ஒரு இந்தியன் என்பதால் படத்தை எடுத்து போட்டேன், தப்புன்னா சொல்லுங்க எடுத்துடறேன் )

பத்ரிக்கு அந்தப் பக்கத்துல யார் தெரியுமா நம்ம நல்லி குப்புசாமி செட்டியார் தான். முன்னாடி இவரைப்பத்தி பத்ரி இப்படி எழுதினார்; இதையும் கொஞ்சம் படிச்சுவை...

"எந்தவிதக் கவலைகளுமின்றி பேசுபவர்கள் நடராஜனும் நல்லி செட்டியாரும். அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைப் பேசலாம். ஆஃப்டர் ஆல் கேட்பவர்களுக்குத்தான், ஒரு கீரைவடை, ஒரு ஜாங்கிரி, ரவா கிச்சடி, தேங்காய் சட்னி, நல்ல காபி, ஓர் ஐஸ்கிரீம் நல்லி செட்டியார் தயவில் கிடைத்துள்ளதே. நடராஜன் அவருக்கு நண்பர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். இலக்கியம் செழிக்கட்டும்."


இந்த பதிவுல பத்ரி எழுதியது இந்த மேட்டர்

இந்த கமெண்டை நான் படிக்கலை, நீயும் படிக்காதே. ஏதோ இப்ப ரெண்டுபேரையும் ஒரே மேடைல பாக்கவும் பழசெல்லாம் நியாபகம் வந்தது, உன்கிட்ட சொன்னேன். அவ்ளோதான். வேற இதுல உள்குத்து எதுவும் இல்லை சரியா!

அடுத்த வாரம் திரும்பவும் சந்திக்கலாம்.

இப்படிக்கு வழக்கம் போல்
இட்லிவடை.

17 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

பத்ரி மேலே கேஸ் போட்டா விளம்பரம் கிடைக்கும்னா நான் ரெடி :-)

//மத உணர்வை பத்தி ஜல்லிக்கட்டுல ஒரு நிலை, ராமர் சேது பாலம் தொடர்பான வழக்குல மத உணர்வு பத்தி இன்னொரு நிலைங்கறது எங்களுக்கு ஆச்சரியமா இருக்குன்னு சொல்லியிருக்காங்க. // - இதே குற்றச்சாட்டை நீதிமன்றம் மேலேயும் வைக்கமுடியுமே..

Anonymous said...

சபாஷ். பத்ரியின் இந்த அரைக்கால்சட்டை உடைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

இந்த உடையை அவர் தனது வீட்டிலோ, பொழுதுபோக்குமிடங்களிலோ அணிவதற்கு அவரது உரிமை. ஆனால் பொது இடங்களில் அணிந்துவருவது நன்றாக இல்லை. 'என் இஷ்டம்' என அவர் சொல்லலாம். ஆனால் அவர் நிகழ்ச்சிகளிலோ / அவரது அலுவலகத்திற்கு கூப்பிடும் மற்றவர்க்கு இது மரியாதைக் குறைவாக இருக்கலாம். ஆனால் பத்ரி மாறுவார் என தோணவில்லை. பத்ரியின் தொழில்முறை செயல்பாடுகள் ('அவர் ஒரு நல்ல பிசினஸ்மேன் ' - யாரோ) எப்படியிருப்பினும் இப்படி உடை அணிவதில் உடன்பாடு இல்லை.

இப்படி படத்தைப் போட்டு இதைப் பற்றி எழுதிய இட்லிவடைக்கு நன்றி.

IdlyVadai said...

அனானி சும்மா ஜாலிக்கு எழுதின பதிவு. யாரையும் டென்ஷன் ஆக்காதீங்க

இலவசக்கொத்தனார் said...

இந்த முறை பத்ரியா? அதெப்படி ஐயா 2005 பதிவு எல்லாம் ஞாபகத்தில் வெச்சுக்கிட்டு மேற்கோள் காட்டறீங்க? என் வோட்டு ஷ்ரேயா காலுக்குத்தான்! :)

Anonymous said...

//இதே குற்றச்சாட்டை நீதிமன்றம் மேலேயும் வைக்கமுடியுமே.//

பினாத்தலார் கொஞ்சம் குறைச்சு பினாத்துங்க. ராமர்சேதுல மத்த பல பாதிக்கும் காரணங்களோட மத உணர்வும் சேர்ந்தது. இரண்டுபக்கமுமே மனிதர்கள் சம்பந்தப்பட்டது. திட்டத்தை கொஞ்சம் மாற்றி யோசிக்கறதால ஒரு பக்க மத உணர்வு பாதிக்கப்படாது; மத்த பக்கத்துக்கு மனிதர்களும் பாதிக்கப்படப் போறதில்லை. மாற்றமாட்டோம்னு மறுக்கறது வீம்பு. ஜல்லிக்கட்டுல மத உணர்வுக்காக அப்பாவி விலங்குகளை வலிந்து சித்ரவதை. அதுக்கு யாருக்கும் உரிமை இல்லை.

இட்லிவடை, கலாசார ஸ்கேல் எல்லாம் பெண்கள்ல ஆரம்பிச்சு அங்கயே முடிஞ்சுடும். கவலைப்படாதீங்க, பத்ரிகளுக்கு ஒரு பிரச்சினையும் வராது. யாராவது பெண்கள் எதிர்த்து கேஸ் போட்டா, "நீ ஏன் அதைப் பாக்கற? பொம்பளையா நீ?"ன்னு எதிர்கேள்வி கேட்டுடலாம். அப்புறம் யார் கேப்பாங்க? எவ்விதத்துலயும் தட்டி வைக்கவேண்டியது பெண்களை மட்டும்தான் .

ஹரன்பிரசன்னா said...

உண்மையில் பத்ரி அப்படி வந்தது எனக்கும் அதிர்ச்சிதான். அவரது சுதந்திரம், அவரது இஷ்டம் என்பதையெல்லாம் தாண்டி கொஞ்சம் இடறியது, மேடையில் அவ்ரை அப்படிப் பார்த்தபோது. மேடைக்கென இருக்கும் சில முறைகளை அவர் பின்பற்றுவது அவருக்கு நல்லது. அவருக்குப் பெருமை சேர்க்கும். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் சுதந்திரத்தைப் பற்றி நினைப்பதை விட, எது பிரச்சினையில்லாதது என அவர் யோசிக்கலாம்.

cheena (சீனா) said...

பத்ரி பொது மேடைகள்ளே இந்த மாதிரி உடைகளைத் தவிர்த்திருக்கலாம்.
ம்ம்ம்ம்

தறுதலை said...

மதம் மதம்ங்றேளே அது யாரோட மதம். சேது கால்வாய் திட்டத்த எதிர்த்து கச்ச கட்டுன மத உணர்வாளர்கள் ஏன் ஏறு தழுவல்ல மத உணர்வு இருக்கு/இல்லைனு ஆதரித்து/எதிர்த்து சொல்லல.

கருணானிதிக்கு வயசான காலுத்துல அரசு பதவில ஒட்டிகிட்டு இந்த விழாவுல கலந்துக்குறெதெல்லாம் தேவையா? இந்த ஆள் முதல்வரானுக்கு அப்புறம் குமரி முனை வரை போயிருக்காறா? இல்ல போகத்தான் முடியுமா?

கூந்தல் இருக்குறவ கொண்டையும் போட்டுக்கலாம். அவுத்தும் வுட்டுக்கலாம். அது அவளோட (அவாளோட இல்ல) விருப்பம். இத எதிர்த்து ஒரு மதவாதி கத்தும்ப்போது குஷ்புக்கு கைகொடுத்த மற்றவர்கள் என்ன கிழித்துக்கொண்டு இருக்கிறார்கள்?

இனிமேல் பத்ரி தமிழர் உடையான வேட்டி கட்டிக்கொண்டுதான் மேடை ஏற வேண்டும்.பொங்கலோ பொங்கல்!
........................
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Boston Bala said...

பத்ரியின் உடை, சென்னை வெயிலுக்கு ஏற்ற உடை.

அவர் என்ன பேசினார் என்று சொல்லாமல், வெறுமனே ஆடையைப் பற்றி மட்டுமே அளவளாவுகிறோம்

IdlyVadai said...

//பத்ரியின் உடை, சென்னை வெயிலுக்கு ஏற்ற உடை.//

நீங்க சொல்லுவது ஸ்ரேயாவுக்கும் தானே ? :-)//அவர் என்ன பேசினார் என்று சொல்லாமல், வெறுமனே ஆடையைப் பற்றி மட்டுமே அளவளாவுகிறோம்//

எனக்கும் என்ன பேசினார் என்று தெரியாது. ஆனால் முன்பு என்ன சொன்னார் என்பது மட்டும் தான் நினைவில் இருந்தது அதனால் அதை போட்டேன் :-)

Anonymous said...

சென்னை வெயில்,அளவளாவுதல் - கேள்வியும் பதிலும் கலைஞர் ஸ்டைல் இல்லையே?!!!

Anonymous said...

இனிமேல் பத்ரி தமிழர் உடையான வேட்டி கட்டிக்கொண்டுதான் மேடை ஏற வேண்டும்.

------------------------------
நிச்சயமாக. முதலில் வேட்டியைக் கட்டிக் கொள்ளவும். மேடையில்
ஏறியவுடன் பெர்முடா தெரியும்படி வேட்டியை மடித்துக் கட்டிக் கொள்ளவும்.

ஷ்ரியா ஏதோ நினைவில் படத்தில் வருகிற மாதிரி வந்துவிட்டார் போலிருக்கிறது.ஒரு வேளை உடைகளேயே சம்பளமாக ஏ.வி.எம் கொடுத்து விட்டதோ? :)

enRenRum-anbudan.BALA said...

IV,

இந்த ராமமூர்த்தி மாதிரி லூசுங்க அடிக்கிற கூத்துனாலே, இனிமே "தலைவியை" கவர்ச்சியான உடைகளில் பார்க்க முடியாது என்பதை நினைக்கும்போது தாங்க முடியல ;-)

ஷ்ரேயா படம் காட்டினதற்கு நன்றி :)

நீங்க "பாலா ஒரு ஜொள்ளர்"னு பதிவு கிதிவு போட்டுடாதீங்க :)))))

எ.அ.பாலா

Anonymous said...

ஸ்ரேயா அரை குறை ஆடையில் வந்தால் தமிழ் மானம் பண்பாடு கெடுகிறதாமா? நடிகைகள் அவுத்துப் போட்டு விட்டு ஆடும் குத்தாட்டத்தை ஒண்றுக்குக் கூடப் போகாமல் 5 மணி நேரம் ஜொள்ளு விட்டு ரசிக்கும் கருணாநிதிக்கு யார் தண்டனை தருவது? அவர் மீது யார் கேஸ் போடுவது? கிராமத்தில் ரெக்கார்டு டான்ஸ் ஆடும் பொழுது கொஞ்சம் ஆபாசமாகப் போனால் போலீஸ் வந்து அங்கிருக்கும் நாலு பெருசுகளையும் தள்ளிக் கொண்டு போகும். இந்தப் பெருசை யார் தள்ளிக் கொண்டு போவது? யார் கேஸ் போடுவது? ஆபாசத்தை மேடை போட்டு ஒரு முதல்வரே ரசிக்கும் கொடுமை இந்த பண்பாடு கலாச்சாரத்தில் ஊறிய தமிழ் நாட்டில் தானே நடக்கிறது? முதலில் ஆபாசத்தை வளர்க்கும் கருணாநிதி மீது கேஸ் போட்டு விட்டு ஷ்ரேயா மீது கேஸ் போடட்டும் இவர்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் பொது நிகழ்ச்சியில் வரும் பொழுது ஆபாசமாக வரக்கூடாது என்று ஜீ வி அறிவுரை சொல்வதுதான். நமீதா படத்தை வாரம் தோறும் உரித்துப் போடும் மஞ்சள் பத்திரிகையான விகடன் கண்ணியத்தைப் பற்றி பேசுகிறது

Anonymous said...

// நிச்சயமாக. முதலில் வேட்டியைக் கட்டிக் கொள்ளவும். மேடையில்
ஏறியவுடன் பெர்முடா தெரியும்படி வேட்டியை மடித்துக் கட்டிக் கொள்ளவும்.//

அடடே, பத்ரியை தமிழர் என்ற நிலையிலிருந்து திராவிடர்-ங்கற நிலைக்கு உசத்தும் நல்ல ஐடியாவா இருக்கே?. :-)

Anonymous said...

//ஆனா மோடி ஜெயிச்சவுடனே என்ன செஞ்சார் தெரியுமா? வரது இல்லத்துக்குப் போய் ஆசிவாங்கி, தன் புதிய அரசுக்கும் ஒத்துழைப்பு தரணும்னு கேட்டுண்டார். அட என்ன ஒரு நாகரிகம்!. நம்ம கலைஞர், ஜெ இவங்களெல்லாம் இதையாவது கத்துக்கனும். அண்ணாவிற்கு பிறகு இந்த நாகரிகம் போயே போச்சு!. பாடிகார்டு முனீ, நீயாவது கொஞ்சம் இவங்களுக்கும் நாகரிகம் சொல்லிக் கொடு.//

இட்லிவடை அய்யா, வெறுப்புஏத்துரதுக்கும் நாகரீகத்துக்கும் வித்தியாசம் தெரியாத சரியான அரை வேக்காடு இட்டலி அய்யா நீர்.

மோதல முனியாண்ட எனக்கு நல்ல அறிவைக் கொடுன்னு வேண்டிகோமைய்யா !!

- பாடிகார்டு முனீ கோயில் புசாரி.

Anonymous said...

உயிரினங்கள்' மனிதனின் பொழுது போக்கு சாதனங்களா?
.........................................
சீசர் காலத்தில் ரோமாபுரியில் பிரமாண்ட அரங்குகள் இருந்தன. ஆயிரக்கணக்காணோர் திரண்டு, ஆரவாரத்துடன் துவங்கி உணர்ச்சி விழிம்பிற்கே நகர்ந்து செல்லும் அந்த அரங்கு பொழுது போக்கிற்காக உயிரினங்களை மோதவிட்டு வேடிக்கை காட்டும்,
அந்த பொழுதுபோக்கு மைதானத்தில் மோதவிட்டு ரசிப்பதற்காக அடிமைச் சந்தைகளில் உடல் வாகு உள்ள மனிதர்களை விலைக்கு வாங்கி வருவார்கள். போட்டி களத்தில் இறக்கி விட வேண்டும். யாரேனும் ஒருவர் சாகும் வரை பொழுதுபோக்கு முடிவடையாது. பின்னர் வெற்றி பெறுபவர் சிங்கம், பு போன்ற கொடும் மிருகங்களோடு மோத வேண்டும். மனிதன், மிருகம் இடையேயான மோதலை ஆக்ரோஷப் படுத்துவதற்காக அம்மிருகங்கள் ஆழ் பசி கொள்ளும் நிலைக்கு தனிமைப்படுத்தப்படும். பின்னர் அவை கூண்டை விட்டு வெளியேற்றப்பட்டு களத்தில் நிற்கும் அந்த அப்பாவி அடிமை மீது ஏவி விடப்படும். உயிரை காக்க அடிமையும், உணவாக்கிக் கொள்ள மிருகமும் மோதும் உச்சகட்ட காட்சிகள் பார்வையாளனை உணர்ச்சியின் விளிம்பிற்கு உந்தித் தள்ளும், அந்த ரசனையின் எச்சங்கள் தாம் இன்று, அதுபோன்ற நடிப்பு காட்சிகளை திரைப்படம் படித்து ரசிக்கின்றன.
ஈராயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நாகரீகத்தோடு வாழ்ந்ததாக பெருமை பேசப்படும் ரோமபுரியின், இந்த ரத்த வெறி கமுக்கமாக மறந்து போகிறது. அடிமை முறைகள் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறப்பித்த ஆணைகளால் மட்டுமே முற்றிலும் ஒழிந்து போயின. அடிமைச் சந்தைகள் வெறிச் சோடின. இருந்தாலும் மோதல் காட்சிகளை கண்டு கழித்த இழிந்த மனங்கள் மனிதனுக்குப் பதிலாக மிருகங்களையும், பறவைகளையும் அதற்கென பயிற்றுவித்து பயன்படுத்தி வருகின்றன. மிருகங்களின் உயிர் வதையும், உடல் வயும் மனிதனின் போதை ஏறிய புத்திக்கும் பொல்லாங்கு நிறைந்த மனதுக்கும் புரிவதில்லை. இன்னும், ஸ்பெயின் நாட்டில், கூர்மையான கொம்புகள் கொண்ட காளை மாடுகள் களத்தில் விடப்பட்டு மிரள வைக்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான மனித எண்ணிக்கையை கண்டு, உயிருக்கு பயந்து ஓடும் காளைகளை அடக்கும் (?) முயற்சிகளில் பெறுபவர்களுக்கு நிரப்பமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த நூற்றாண்டு ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, விலங்கினம், பறவை உள்ளிட உயிரினங்கள் மீது அக்கறை கொண்ட புளூ கிராஸ் போன்ற அமைப்புகள் தோன்றின. பொழுதுபோக்கு தளங்களிலும், திரைப்படங்களிலும், பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதிலும் உயிரினங்களை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பும், பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு நாடுகள், விலங்குளை, விவசாயத்திற்காகவும், பால் பொருட்களுக்காகவும், இறைச்சிகாகவும் பயன்படுத்தி கொண்டாலும் அவற்றின் மீது செலுத்தப்படும சித்திரவதைகளுக்கு தடை விதிக்த்திருக்கின்றன. வேட்டையாடுவது, அதிக சுமை ஏற்றுவது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. நம் நாட்டில் ஆயிரக்கணக்காயோர் கண்ணுக்கு முன்னே காளைகள் பூட்டிய வாகனங்களில் அதிக சுமைகளை ஏற்றி விடுகின்றனர். அவற்றை இழுத்துச் செல்ல காளைகள் அல்லல்படும் போது ஊசி முனை கொண்ட தார்குச்கிகள் அவற்றின் தோல்களை துளைத்து சதைகளில் தைக்கிறது. சாட்டைகள் பின்னி எடுக்கின்றன. அம்மா' என்ற வார்த்தையை தவிர வேறு எதையும் பேசத் தெரியாத மாடுகளை பணத்துக்காக சித்தரவதை செய்கிறபோது, வெறிநாயாக நடந்து கொள்கிறான் மனிதன். சாலையில் சலனமின்றி கடந்து செல்லும் யாரது மனங்களையும் தொடுவதில்லை மாடுகளின் அழுகுரல்.
இன்றும், ஆப்கானிஸ்தான், அமீரகம் போன்ற நாடுகளில் சிறுவர்கள் ஒட்டகங்களில் கட்டிவிடப் பட்டு வேடிக்கை காட்டப்படுகிறது. இதற்காக, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய வறுமை நாடுகளில் சிறுவர்கள் திருடப்படுகிறார்கள். இதில் பரிதாபத்திற்குரியவர்கள் சிறுவர்கள். இதனை தடுக்க அரபுநாடுகளும், ஐ.நா சபையும் தலையிட வேண்டும். முன்னர் நம் தமிழக கிராமங்களில் சேவல் சண்டைகள் பிரபல்யம். மிக அழகாக கொண்டை பூத்த சேவல்கள், வண்ண இறகுகள் கொண்டு நிற்கும் இடத்தை அழகுபடுத்தும். போட்டி துவங்கிய சற்று நேரத்தில் ஒன்றை ஒன்று கொத்தி அலங்கோலப்படுத்திக் கொள்ளும். தோற்கும் சேவல், உரிமையாளனால் வெறிகொண்டு கொல்லப்படும். சண்டையிடாமல் போனாலோ, தோற்றுப்போனாலோ, எஜமான் சோறு போடமாட்டான் என்பதை மட்டும் சேவல்கள் புரிந்து வைத்திருக்கும். இன்று அந்த அநாகரீகச் சண்டைகள் பெரும்பாலும் ஒழிந்து விட்டன. இன்னும் படிப்பறிவு போய்ச் சேராத வரட்டு கிராமங்களில்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன. சேவல் சண்டை, விலங்கு சண்டைகளை கௌரவ காட்சிகளாக பழைய திரைப்படங்களில் வந்ததுண்டு. குறிப்பாக, தோற்கும் மிருகங்கள் அப்பாவியாக நிற்கும் போது, ஒரு மனித மிருகம் காட்சி மேடையில் இருந்து காளை மாட்டை சுட்டுக் கொள்ளும் காட்சியும் இடம்பெறும்.
நவீன திரைப்படங்களில் நாகரீகம் கருதி இத்தகைய முகம் சுளிக்கும் காட்சிகள் தவிர்க்கப்படுகின்றன.
மோதல் காட்சிகளில் சுகம் காணும் கூட்டம் இன்னும் இருப்பதற்கு காரணம் அவர்களிடம் போதிய நாகரீகம் போய் சேராமைதான். படித்தவர்கள் கூட கலாச்சாரம் என்றும், மண்ணின் பண்பாடு என்றும் பெருமை கொள்கிறார்கள்.
வட நாட்டில் இன்னும் இந்த மோதல் மோகம் தீரவில்லை. அசாமில் நடக்கும் பிஹு' திருவிழாவில் குருவிகளை சண்டையிட வைத்து ரசித்துகிறார்கள். இதனால் கால்நடைகளை பிடித்த தீய சக்திகள் விலகும் என்று கர்நாடக மக்கள் நம்புகின்றனராம். கால்நடைகளை பிடித்து தீய சக்திகள்' அவற்றை சித்திரவதை படுத்தும் மனித சக்தி தான் என்பது அந்த விலங்குளுக்கு தெரிந்திருக்கலாம். மனிதனுக்கு தெரிவதில்லை. கழுதைகள் கூட களம் இறக்கப்படுகின்றன.
சங்ககாலத்தில், புகளை வேட்டையாடி அவற்றின் பற்களை கோர்த்து, தன் காதக்கு தலைவன் பரிசாக அனுப்பி வைப்பானாம். அந்த புபல் சங்கியை அவன், தன் தலைவனின் பெருமை விளங்க கழுத்தில் கட்டிக் கொள்வாளாம். இதுவே பிற்காலத்தில் பெண்கள் தா கட்டும் வழக்கமானது என்று சிலர் விளக்கமாக கூறுவார்கள். இவ்வாறு மனிதனுக்கும் மிருகத்திற்குமான உறவு நெடுங்காலத் தொடர்பு.
உலகில் உள்ள அனைத்து படைப்புகளையும் மனிதனுக்கு வசப்படுத்தி தந்துள்ளேன் என்கிறான் இறைவன். ஏற்கெனவே தன்னிடம் வசமாக்கி தரப்பட்ட ஒரு பொருளை அல்லது உயிரை, இதோ வசப்படுத்தி விட்டேன் என்று கூறுவது எவ்வளவு பைத்தியக் காரத்தனம். உணவுக்காக அன்றி விலங்கினங்களை வேட்டையாடக் கூடாது, சேவலைத் திட்டாதிர்கள். ஒரு பிராணியை மற்றொரு பிராணியின் கண் எதிரே உணவுக்காக கூட அறுக்காதிர்கள் என்றும் இறைத்தூத்ர் முஹம்மது நபி (ஸல்) தடை செய்தார்கள். பிராணிகளையோ, பறவைகளையோ இறைச்சிகாக பயிடும்போது வதைக்கக் கூடாது. அவற்றின் வாயில் நீர் விட்டு, வறட்சியை போக்கிக் கொள்ள வேண்டும். அடித்து கொல்லக் கூடாது.
நரம்பு தொகுதிகளை கொண்ட கழுத்து பகுதியை மட்டும் அறுக்க வேண்டும், அறுக்கும் கத்தியை தாமதிக்காமல் இருக்க, மிகக் கூர்மையாக வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் முஸ்ம்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்கள். ஆடு, மாடுகளை வரிசையில் நிற்க வைத்து தலைவெட்டி துண்டாக்கும் இறைப்ப எல்லாம் நபியவர்களால் முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது. விவசாயத்திற்கும், சுமை தூக்கவும், வாகனமாகவும், விலங்குகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும் அவற்றின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மனிதன் கடமைபட்டுள்ளான் என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.
கோழிகடைகளிலும், கிடாய் வெட்டும் மையங்களிலும் விலங்குகளின் பார்வையில் உணவுக்காக கொல்லப்படுகின்றன. அவற்றை தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஞ்சு விரட்டும் மாடுகளுக்கு, சாராயம் ஊற்றி வெறி ஊட்டப் படுகின்றன. மேலும் பல கொடுமைகள் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை கண்காணிக்க அரசு அதிகரிகளை நியமித்திருக்கிறது. அதிகாரிகள் கண்காணிப்பை விட்டுவிட்டு, வேடிக்கை பார்த்து நிற்கக் கூடாது, என்பதால் இத்தகைய வேடிக்கை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு குரல் கொடுப்பவர்களை கொண்டே கண்காணிப்பு குழு அமைக்கப்படவேண்டும்.
முன்னொரு காலத்தில், தேசிய பெருமைக்காக மனிதர்களை சண்டையிட வைத்தார்கள் என்றால், பின்னர் தற்பெருமைக்காக மனிதன் சண்டையிடத் தொடங்கினான் பாக்சிங் (இர்ஷ்ண்ய்ஞ்) என்ற பெயரில் மாறி மாறி தலையில் அடித்துக் கொள்ளும் போட்டி, இது அந்த அடிமை வம்சத்தின் நீட்யில் வந்தது. குறிப்பாக பாக்சிங் களத்தில் கருப்பினத்தவர்களே இறக்கிவிடப்படுவார்கள். இனப்பெருமை போற்றும் காரணத்திற்கு வெள்ளையர்களும் பாக்சிங்கில் குதித்தனர். ஆனால் இந்த பாக்சிங் போட்டியில் உலகப் புகழ் ஈட்டிய முகமததான் இன்று, அந்த போட்டிக்கு எதிராக களம் இறங்கியிருக்கிறார். குத்துச் சண்டை போட்டியில், தலையில் பலத்த அடிகள் வாங்கிய காரணத்தால் இன்று அவர் பார்கின்ஸஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதனை செயல் முடக்கம் செய்யும் இநத் பார்கின்ஸஸ் நோய் கண்டவர், உயிருடன் இருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். ஒன்றுக்கும் தகுதியற்றவனாக மனிதனை மாற்றிவிடும் இந்த பார்கின்ஸஸ்.
இன்று அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கும் போட்டி, ஜ்ஜ்ச் ரெஸ்ங். அமெரிக்காவில் மட்டும் நடந்து வந்த இந்தப் போட்டிச் சண்டை, காட்சி ஊடகங்கள் வழியே உலக மக்கள் பார்வைக்கும் விரிந்தது. இன்று சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை ரெஸ்ங் ரசிகர்கள். இந்த ரசனைகளின் ஊட்டத்தால், சும்மா போகிறவனிடம் எல்லாம் சண்டையிழுக்கும் குணம் குடியேறிவிடும் என்று மனோ நல ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இருந்தாலும் நம் நாட்டில் இதன் காட்சிக்கான தணிக்கைகள் கொண்டு வரப்படவில்லை.
இப்படியாக, மனிதன்-மனிதன்; மனிதன்-மிருகம், மிருகம்-மிருகம் என்று கோட்டிகள் பார்க்க போட்டிகள் நடக்கத்தான் செய்கின்றன.
நன்கு படித்து, பாவனையுடன் நடந்து கொள்ளும் இளைஞர்கள் இதுபோன்ற வேடிக்கை களத்திற்கு செல்வதை தவிர்க்கிறார்கள். எனவே நளினம் போதிக்கும் கல்வி முறையே, மனிதனை அற்ப சந்தோஷத்திற்காக உயிரினங்களோடு விளையாடும் மனப்பாதையில் இருந்து தடம் மாற்றும்.