பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 31, 2008

விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை!

இந்த வார கல்கி தலையங்கம்... ( மற்ற பத்திரிக்கைகள் எழுத தயங்கும் தலையங்கம் )

‘உலகின் பயங்கரவாத அமைப்புகளிலேயே மிகப் பயங்கரமா னது எல்.டி.டி.ஈ’ - இப்படிச் ‘சான்றிதழ்’ வழங்கியிருக்கிறது அமொ¢க்க உளவுத் துறையான எ·ப்.பி.ஐ. அல்கைதா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு உந்துசக்தியாக இருந்து உதவியும் வருகிறது விடுதலைப் புலிகள் அமைப்பு என்பதையும் எ·ப்.பி.ஐ. எடுத்துக் காட்டியிருக்கிறது. ‘மனித வெடிகுண்டுகளைக் ‘கச்சிதப் படுத்தி’, பெண்களைத் தற்கொலைப் படையினராக்குவதில் முன்னணி வகித்து, தற்கொலைக்கான ‘பெல்ட்’டை உருவாக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே நான்காயிரம் பேரைக் கொன்று, இரண்டு சர்வதேச தலைவர்களையும் படுகொலை செய்திருக்கிறது எல்.டி.டி.ஈ. வேறெந்த பயங்கரவாத அமைப்பும் எட்டிப் பிடிக்காத சாதனை இது’ என்று எ·ப்.பி.ஐ.யின் இணைய தளம் அறிவிக்கிறது.

ஆனால், நம் நாட்டிலோ, தமிழர் நலன் என்ற பெயா¢ல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அனுதாபம் பெருகி, வெளிப் படையான ஆதரவாகவே மாறியிருக்கிறது. பா.ம.க. நடத்தும் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் பிரசார சி.டி.க்களும் வி.சி.டி.க் களும் பகிரங்கமாக விற்கப்படுகின்றன.

வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்ற அரசியல் தலைவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

இலங்கை அரசின் அழைப்பை ஏற்று, இந்தியப் பிரதமர் இலங்கை செல்ல முற்பட்டால், இங்குள்ள புலிகள் ஆதரவு தலைவர்கள் குடி மூழ்கிவிட்டதுபோல் அலறியடித்துக்கொண்டு கொடி பிடித்துப் போராடப் போவதாக மிரட்டு கின்றனர். அரசியல் நிர்ப்பந்தங்களைக் காரணம் சொல்லாமல், பிரதமரும் வேறு காரணம் கூறி அப்பயணத்தை ரத்து செய்கிறார்!

இன்னொரு பக்கம், தமிழகத்தில் தினமும் ஒரு விடுதலைப் புலி கைது செய்யப்படுகிறார். ஆயுதக் கிடங்குகள், குவியல்கள் என்று அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அகதிகள் முகாம்களில் தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்கள். தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் அளிக்கும் தார்மிக ஆதரவும் தமிழக முதல்வா¢ன் மௌனமும்தான் விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஊடுருவவும் நடமாடவும் துணிவைத் தருகின்றன.

போதும் போதாததற்கு, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டது (ஒப்பந்தம் அமலில் இருந்தபோதே புலிகள் அதை மதிக்கவில்லை; அதனால் இலங்கை அரசும் அதை மீற நோரிட்டது). இப்போது இலங்கையில் போர்ச் சூழலே நிலவுகிறது. கரையோரக் கடல் பரப்பில் புலிகளின் நடமாட்டத்தைத் தடுக்க, இலங்கை அரசு கண்ணி வெடிகளைப் பதித்து வைத்துள்ளதாக அறிவித்து, தமிழக மீனவர்களை எச் சா¢த்திருக்கிறது! அந்த அபாய எல்லைக்குள் பிரவேசிக்காமல் தொழில் செய்வது நம் மீனவர் களுக்குச் சாத்தியமே அல்ல.

கண்ணி வெடிகளுக்குப் பலியாகும் கொடுமையும் கொ¡¢ல்லா யுத்தமும் நாகா¢க உலகில் எந்த தேசத்திலும் நிகழக்கூடாத கொடுமைகள். எந்த மக்களுக்கும் நேரக்கூடாத கொடூரங்கள். இலங்கைத் தமிழர்களின் துயர் தீரவும் இந்தியத் தமிழர்களைச் சூழ்ந்து வரும் அபாயம் அகலவும் பிரதமர் உடனடியாகச் செயல்பட வேண்டும்.

முதலில், புலிகள் ஆதரவு பேசும் தமிழகத் தலைவர்களை அழைத்து, அவர்களது விபா£தப் போக்கை மாற்றிக்கொள்ளச் செய்ய வேண்டும். இலங்கை அரசுடன் விவாதித்து, இலங்கைத் தமிழர்களின் உ¡¢மைகளைப் பாதுகாக்கும் வகையிலான அரசியல் தீர்வுக்கு இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழகத் தலைவர்கள் இதற்குத் துணை நின்று, புலிகளை வன்முறையிலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திருப்பியாக வேண்டும். இல்லையேல், இந்திய-தமிழக மீனவர்கள் மடிவது மட்டுமல்ல; தமிழகத்திலும் அதையொட்டிய மாநிலங்களிலும் பயங்கரவாதம் பரவிப் பெருகுவது, விரைவிலேயே நாம் காணக்கூடிய கொடுமையாகிவிடும்.



பத்ரி அவர் பதிவில் இவ்வாறு எழுதியிருக்கிறார் :

முதலில் எந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் அந்தத் தடை தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது, தேசவிரோத நடவடிக்கை என்று சொல்லிச் சொல்லியே நியாயமான விவாதங்கள் நடைபெற விடாமல் செய்வதை அறிவுஜீவிகள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.


இந்த மாதிரி வழ வழ கொழ கொழ எழுத்து படிப்பதற்கு வேண்டும் என்றால் நன்றாக இருக்கலாம், ஆனால் சிந்தித்தால் எவ்வளவு அபத்தம், முட்டாள் தனம் என்று தெரியும். ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு யார் ஆதரவு குடுத்தாலும் கைது செய்ய முடியும், கைது செய்ய வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பரவாயில்லை என்றால் இதை முன் உதாரணமாக வைத்து நாளை லஷ்கர்-இ-தொய்பா, ஜெயசி-இ-முஹமது போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள், அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், தீவிரவாத அமைப்புக்கள், ஆந்திர நக்ஸலைட்டுகள் ஆதரவு தெரிவிப்பார்கள். இதனால் பெரும் ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம். மேலும் விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன், ராஜிவ் காந்தி கொலை குற்றத்தில் தேடப்பட்டு வரும் முதல் குற்றவாளி, அக்கியூஸ்ட். நளினி, முருகன் இன்னும் பலர் தூக்கு தண்டனை குற்றவாளிகள். இவர்களுக்கு ஆதாரவு தெரிவித்தால் அறிவிஜீவி என்று நினைக்கிறார்கள். ஆனால் சிந்தித்தால் இவர்களுக்கு அறிவு ஜீவித்திருப்பதே ஆச்சரியம் தான்

Read More...

இது "ஸேடிஸம்' ! துக்ளக் தலையங்கம்

இது "ஸேடிஸம்' ! துக்ளக் தலையங்கம்


தாழ்வுற்று, வறுமை மிஞ்சிக் கிடந்த தமிழர்களின் வாழ்வு இனி மலர்ந்தது!
தமிழ்ப் புத்தாண்டு மாற்றப்பட்டுவிட்டது. எல்லா அவமானங்களுக்கும் காரணமான,
சித்திரை மாத புதுவருடம் – இனி போயே போச்சு! பெருமையை அள்ளிக்கொட்டுகிற தை மாதத்தில், இனி புத்தாண்டு பிறக்கும். தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் போட்டார் உத்திரவு! மாறியது புது வருடம்!

தை மாதத்தில் அப்படி என்ன விசேஷம்? அது திருவள்ளுவர் பிறந்த மாதம்.

திருவள்ளுவர் அந்த மாதத்தில்தான் பிறந்தார் என்று ("பகுத்தறிவுவாதிகள்' ஏற்கிற வகையில்) எப்படித் தெரியும்? இப்படிக் கேட்பதே, பகுத்தறிவுக்கு விரோதம்.

சரி, தொல்காப்பியர் – கலைஞர் கையினால் உரை எழுதப்படுகிற பெருமையைப் பெற்ற தொல்காப்பியத்தை எழுதியவர் – தமிழுக்கு இலக்கணம் வகுத்தளித்த நூலை எழுதியவர், திருவள்ளுவருக்கு அறுநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே
பிறந்தாரே? அவர் பிறந்த மாதத்தில் புத்தாண்டைத் துவக்க, ஏன் கலைஞர்
ஆணையிடவில்லை? உஸ்! அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசக்கூடாது. இது "கலைஞர் ஆதரவு தமிழறிஞர்கள்' ஏற்றுக்கொண்டுள்ள விஷயம்.

தவிர, கலைஞர் தனது முடிவிற்கு ஒரு ஆதாரமாக காட்டியிருக்கிற மாதிரி, "தை
பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழி இருக்கிறதே? ஹையா! இப்ப என்ன செய்வே? இப்ப என்ன செய்வே...?

சரி. இந்த மாதிரி பழமொழிகள், மற்ற எல்லா மாதங்களைப் பற்றியும் இருக்கின்றனவே!

ஆடிப் பட்டம் தேடி விதை... புரட்டாசி சம்பா பொன் போல விளையும்... ஐப்பசியில் அடைமழை... மாசிப் பிறையை மறக்காமல் பார்... என்று எல்லா மாதங்களைப் பற்றியும் பழமொழிகள் சொல்வதால், அந்த மாதங்களில் ஒன்றை வைத்துப் புத்தாண்டை தொடங்க வேண்டியதுதானே? அட, அவ்வளவு ஏன்? இப்போதுள்ள
சித்திரை மாதத் தொடக்கத்தையே பார்த்தால் – "சித்திரை மழை, செல்வ மழை;
சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம்' என்று பழமொழிகள் இருக்கின்றனவே! அப்படியிருக்க, பழமொழிச் சான்றைப் பார்த்து புது வருடத் தொடக்கத்தை சித்திரையிலிருந்து மாற்றுவானேன்?

இன்னும் சொல்லப் போனால், இப்போது நிச்சயமாகி இருக்கிற தை மாதத்தைப் பற்றி "தை பிறந்தது, தரை வறண்டது; தை மழை தவிட்டுக்கும் ஆகாது' என்று பழமொழிகள் இருக்கின்றனவே! தவிட்டுக்கும் ஆகாத தொடக்கமா, புது வருடத்திற்குத் தேவை?

இதோடு நிறுத்துவானேன்? கையில்தான் அதிகாரம் இருக்கிறதே! மாதங்களின் பெயர்களை சும்மா விடுவானேன்! பெரியாரிலிருந்து தொடங்கி, அண்ணா உட்பட, தனது குடும்பத்து அரசியல் வாரிசுகளையும் சேர்த்து, இடையில் ஒரு சில தமிழ்மொழிப் போர்க்காரர்களையும் நுழைத்து, பெரியார் மாதம், அண்ணா மாதம்... ஸ்டாலின் மாதம், கனிமொழி மாதம்... என்று பன்னிரண்டு புதுப் பெயர்களை வைத்துவிடலாமே! கேள்வி கேட்கத்தான் யாருமில்லையே! இஷ்டத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே!

நரகாசுரன் நல்லவன்; அவன் அழிந்த தினத்தைக் கொண்டாடுவது அநியாயம்; அதனால் அவன் பிறந்தநாளைக் கண்டுபிடித்து, (அதற்கு சில அறிஞர்கள் கிடைக்க மாட்டார்களா, என்ன?) அந்த நாள்தான் விளக்கேற்றி கொண்டாடப்படுகிற தீபாவளி என்று அறிவித்துவிடலாமே?

இந்த முதல்வருக்கும், அரசுக்கும் வேண்டியது என்ன? – ஹிந்து மத நம்பிக்கைகளுடன் ஒன்றிய விஷயங்களை எள்ளி நகையாட வேண்டும்; ஹிந்து மத நம்பிக்கையுடன் ஒன்றிவிட்ட பழக்கவழக்கங்களை மதிக்காமல் நடந்துகொள்ள வேண்டும். இந்த ஒரு வகையான "ஸேடிஸம்' தவிர, இந்த புது வருட மாற்றத்திற்கு, வேறு எந்தக் காரணமும் கிடையாது.

பிரிட்டிஷார் கூட, மக்களின் நம்பிக்கைகளில், அவர்களுடைய கலாச்சாரத்தில், கை வைக்கவில்லை. முதல்வர் அதைச் செய்ய முனைந்திருக்கிறார்.

ஆனால், ஒரு மக்கள் கூட்டத்தின் கலாச்சாரத்தை ஒரு அரசு உத்திரவு மாற்றிவிடப் போவதில்லை. கலைஞரின் புத்தாண்டு, அவருடைய அரசின் பதிவுகளில் மட்டுமே செல்லுபடியாகும்; ஆட்சி மாறுகிறபோது அதுவும் கூட மாறிவிடும். அந்த மாற்றத்திற்காகக் காத்திருப்போம்.

Read More...

Uncommon 'Comman Man'

ஆர்.கே.லக்ஷ்மண் வாழ்நாள் சாதனையாளர் விருது நிகழ்ச்சி பற்றி...

இரண்டு நாட்களுக்கு முன், குரங்கு போல எல்லா சேனல்களுக்கும் தாவிக்கொண்டிருந்த போது, ஹர்பஜன் குரங்கு விவகாரம் தான் செய்தியாக இருந்தது. CNN-IBNக்கு போன போது சிறந்த 2007 அரசியல் பிரிவில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விருது வாங்கி முடித்திருந்தார். சரி என்று பார்க்க தொடங்கினால் 'வாழ் நாள் சாதனைக்கான விருது' என்று அறிவித்துவிட்டு R.K.Laxman (ராசிபுரம் கிருஷ்ணசுவாமி லக்ஷ்மண்) என்று அறிவித்தார்கள்.

பிராமில் குழந்தை அழுவதை பார்த்திருக்கிறோம், அதே போல் வீல் சேரில் லக்ஷ்மன் கண்ணீர் விட்டுக்கொண்டு சின்ன குழந்தை போல் அழுதுக்கொண்டிருந்தார். தினமும் திருவாளர் பொது ஜனம் மூலம் நம்மை சிரிக்க வைப்பவர் அழுதது மனசுக்கு என்னவோ செய்தது.

நீங்கள் கார்டூன் ரசிகர் என்றால் 'Brushing Up the Years' என்ற ஆர்.கே.லக்ஷ்மணின் கார்டூன் தொகுப்பை தைரியமாக வாங்கலாம். 1947 முதல் 2004 வரையிலான முக்கியமான அரசியல் நிகழ்வுகளை பிரதிபளிக்கும் நல்ல புத்தகம். லக்ஷ்மணின் 60 ஆண்டு கால உழைப்பு இதில் தெரியும். - முதல் தேர்தலில் ஆரம்பித்து நேருவின் ஐந்து அம்ச திட்டம், சீனா, பாகிஸ்தான் போர், இந்திராவின் எமர்ஜன்சி, ராஜிவ் காந்தி ஆட்சி, மாநில ஆட்சிகள், பாபர் மசூதி இடிப்பு என்று ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம். (Brushing Up the Years, R.K. Laxman, Penguin, p.304, Rs. 750.)

பெரும்பாலும் இந்த மாதிரி விருது வழங்கும் விழாக்களில் வரும் மூர்த்திகளும், அம்பானிகளைக் காட்டிலும் என்னை லக்ஷ்மண் கவர்கிறார். ஏன் என்று தெரியலை.

விருது வாங்கியதும், லக்ஷ்மணால் பேச முடியவில்லை, லக்ஷ்மணின் மனைவி மைக்கை வாங்கிக்கொண்டு "இவர் இப்படி தான் அதிகம் உணர்ச்சிவசப்படுவார், Please excuse" என்றார்.

இந்த மாதிரி உணர்ச்சி இருப்பதால் தான் உணர்ச்சி பூர்வமாக கார்ட்டூன் வரைய முடிகிறதோ என்னவோ ? லக்ஷ்மணை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், 'ஐ லவ் யூட செல்லம்' என்று பிரகாஷ் ராஜ் பாணியில் சொல்ல வேண்டும்.
( இவருக்கும் மட்டும் தான் அன்று எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். )

நிகழ்ச்சியின் வீடியோ காட்சி





























Read More...

Wednesday, January 30, 2008

விடுதலைப் புலிகள், காங்கிரஸ், திருமா - மாட்டிக்கொண்டு முழிக்கும் கலைஞர்

விடுதலைப் புலிகள் பிரச்சனையில் கலைஞர் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்பது என் எண்ணம். இது தான் எங்கள் நிலை என்று அவரால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும்...

நேற்று:
கலைஞர் பேச்சு:(சட்டசபை)
திருமாவளவனாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் புலிகளை ஆதரித்து பேசுவதை சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும். இதில் வேறு வழியில்லை. பொடா சட்டம் சரியாக பயன் படுத்தப்பட்டதா? இல்லையா? என்ற பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதற்காக ஞானசேகரன் எடுத்துக் காட்டியிருப்பதற்கு ஏற்ப புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேச நான் ஆதரவு தருவதாக கருதக்கூடாது. அரசு நடத்தும் எங்களுக்கு தர்ம சங்கடங்கள் இருப்பதை சொல்ல வேண்டிய நிலையில்நான் இருக்கிறேன்.


இன்று:
தமிழக அரசு அறிக்கை:
தடை செய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும் அவற்றுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதோ, செயல்படுவதோ, துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் வெளியிடுவதோ, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதோ, அவற்றில் கலந்து கொள்வதோ சட்டப்படி குற்றமுடையதாகும். கவிதை எழுதிவிட்டு இந்த மாதிரி பேசுவது சுத்த மடத்தனம். அப்ப பொடா சட்டத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 'தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது' என்ற வாதம் என்ன ஆகும் ? நேற்று இதை சொல்லிவிட்டு இன்று அப்படி பேசினால் குற்றம் என்றால் இதற்கும் பொடாவிற்கு என்ன வித்தியாசம் ?

அத்தகைய குற்றமிழைப்போர் தனிப்பட்டவராயினும், சங்கம் அல்லது அமைப்பு ரீதியில் இயங்கு வோராயினும் அவர்கள் அரசின் இந்த மேற்கண்ட நடவடிக்கைகள் ஏதேனும் ஒன்றில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மேல் குறிப்பிட்ட சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப் படுவார்கள்.

திருமா பேச்சு:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல் படுவதாக எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அ.தி.மு.க.வும், காங்கிரசும் வெளிநடப்பு செய்தன. இந்த பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் தெளிவான விளக்கம் அளித்தார். விடுதலைப்புலிகள் பற்றி பேசுவது எங்கள் கருத்துரிமை. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். வெகுஜனஇயக்கமாக அங் கீகரிக்க வேண்டும் என்பதே எங்களது கருத்துரிமை யாகும். இதற்கு சட்டம் தண்டிக்குமானால் இதை எதிர்கொள்ள நாங்கள் தயா ராக இருக்கிறோம்.

இந்த நிலமை நாளைக்கு வைகோவால் ஜெக்கு வரலாம்

Read More...

புத்தக சந்தை/சச்சரவு

இந்தியா டுடே கட்டுரை, அதற்கு பத்ரியின் பதில்

இந்தியா டுடே கட்டுரை ஸ்கேன்
பகுதி 1
பகுதி 2

பத்ரி கருத்து

இந்தியா டுடே (தமிழ்) இதழில் தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகிறது என்று சிலர் புலம்பியிருந்தனர். எப்படியாவது இதுபோன்ற புத்தகங்களைத் தடுத்து நிறுத்துவதுதான் தமிழ்ப் பதிப்புலகை எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் என்று கட்டுரையாளர் முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.

அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். இதற்கென ஒரு வாரியத்தை நியமிக்கலாம். புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க விரும்புபவர், முதலில் அரசிடம் காட்டி சான்றிதழ் பெறவேண்டும். தரமுள்ளதா இல்லையா என்று இந்த வாரியம் தீர்மானிக்கும். இந்த லைசென்சைப் பெற்ற ஒருவர்தான் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியும்.

அல்லது மதுரை மீனாக்ஷி கோயிலில் சங்கப் பலகை ஏதாவது இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தலாம். (பத்ரி பதிவு)


இட்லிவடை கமெண்ட்: பதிப்பகங்கள் கவிதை, இலக்கியம் என்று புத்தகம் கொண்டு வந்தால் தலையில் துண்டு தான் போட்டுக்கொள்ள வேண்டும். சொத்தையான மேட்டரை பளபளப்பு அட்டையில் கொடுப்பது வியாபாரம், முடிந்தவர்கள் செய்கிறார்கள். இதில் தப்பு ரைட் என்று எதுவும் சொல்ல முடியாது. மார்கெட்டிங் அவ்வளவே.

Read More...

Tuesday, January 29, 2008

அட காங்கிரஸுக்கும் ரோஷம் வந்துட்டுது

காங்கிரஸ் இன்று முதல் முறையாக வெளிநடப்பு செய்தது. விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டசபையில் இன்று காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.


விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அமைப்புகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று காங்கிரஸ் கோரியது. நாங்கள் தயார் செய்து பேச ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று திமுக சொன்னது.

இன்று இந்தப் பிரச்சனையை காங்கிரஸ் மீண்டும் எழுப்பியது. புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரும் திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரினர்.

கருணாநிதி பதில்:


காங்கிரஸ் உறுப்பினர்களின் உணர்வுகளை நான் அறியாதவன் அல்ல. ஏறத்தாழ ஒரு வார காலமாக சென்னையிலும் மற்ற இடங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசு அனுமதிப்பதாக கருத்தில் கொண்டு அரசு மீது காங்கிரஸ் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

திருமாவளவனாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் புலிகளை ஆதரித்து பேசுவதை சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும். இதில் வேறு வழியில்லை. பொடா சட்டம் சரியாக பயன் படுத்தப்பட்டதா? இல்லையா? என்ற பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதற்காக ஞானசேகரன் எடுத்துக் காட்டியிருப்பதற்கு ஏற்ப புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேச நான் ஆதரவு தருவதாக கருதக்கூடாது. அரசு நடத்தும் எங்களுக்கு தர்ம சங்கடங்கள் இருப்பதை சொல்ல வேண்டிய நிலையில்நான் இருக்கிறேன்.

இந்த அவையில் முன்பு மதிமுக பற்றி பிரச்சனை எழுப்பப்பட்டபோது என் கருத்தைதெளிவாக கூறியிருக்கிறேன். ராஜீவ் காந்தி கொலைக்கு முன்பு, பின்பு என்று இந்த பிரச்சனையை இரு பிரிவாக பிரித்துத்தான் அணுக வேண்டும் என்று நான் முன்பே சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் அந்த கருத்தில் உறுதியாக உள்ளேன்.

திமுக தோழமைக்கட்சிகள் இதுபோன்ற செய்திகள் வராமல் பார்த்துக்கொள்வது தான் அவர்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது. என் அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இதனை நான் கூறவில்லை.

தமிழகத்திற்கு ஊனம் எதுவும் வரக்கூடாது என்ற கருத்தில்தான் இதனை நான் கூறுகிறேன். ராஜீவ்காந்தி பெரிய தலைவர். அவரது மறைவை அலட்சியப்படுத்த முடியாது. அதற்காக அவரை இழந்து வாடும் காங்கிரஸ் காரர்கள் பல் விளக்க வில்லையா என்று கேட்பதும் தவறுதான். அதேபோல முன்னாள் முதல்வர் குறித்து கூறிய கருத்துக்களும் வருந்தத்தக்கதுதான்.

தான் அவ்வாறு கூறவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். அவர் அப்படி கூறியிருந்தால் அது தவறானதுதான். ஞானசேகரன் கூறுவது போல திருமாவளவனை கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சட்டத்தில் இடம் இருந்தால் அதனை செய்ய அரசு தயாராக உள்ளது.

எனவே தக்க, திறமையான, கற்றறிந்த வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து இதுபோன்ற செயல்களை தடுக்க சட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. அதற்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். இந்த அளவில் இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்



ஆனால், இந்த பதிலில் திருப்தியில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், பொடா சட்டம் இல்லாத நிலையில் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் திருமாவளவன் மீது வேறு கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.

பொடா சட்டதை எதிர்த்தவர்களே இவர்கள் தான். வைகோ இதே போல் பேசிய போது, தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொண்டார்கள். கலைஞர் இரங்கல் கவிதை எழுதியதை பற்றி சட்டசபையில் பேசவில்லை. தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசினால் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் என்கிறார் கலைஞர் ஆனால் இரங்கல் கவிதை எழுதினால் பரவாயில்லையா ? திருமாவளவன் மட்டும் என்ன பாவம் செய்தார் ?

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அட இவர்களுக்கு கூட ரோஷம் வருகிறதே என்று திமுக தரப்பு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

Read More...

நமது வரி பணத்தில் என்ன பேசிக்கொள்கிறார்கள்.

நேற்று சட்டசபையில் நடந்த விவாதம்

பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன்: தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மொழி, பண்பாடு, கலாசாரம், உறவு முறை ஆகிய அனைத்திலும் கலாசார சீரழிவை நோக்கி இட்டுச் செல்கிறது. தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை முறையை கொண்டுவர முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சன் டி.வி., ஜெயா டி.வி., ராஜ் டி.வி., விஜய் டி.வி., முதல்-அமைச்சர் பெயரை தாங்கி வரும் கலைஞர் டி.வி. போன்ற தொலைக்காட்சிகளில் வரும் ஜோடி நம்பர் ஒன், ஜில்லுன்னு ஒரு காதல், மானாட மயிலாட போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் ஆபாசங்களும், வன்முறைகளும் நிறைந்துள்ளன.

துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி:- இதையெல்லாம் நீங்கள் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்திருக்கிறீர்கள்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- உறுப்பினர் வேல்முருகனும் படத்தில் நடித்திருக்கிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம், நாட்டியம் தான் ஆடுகிறார்கள். அதில் ஆபாசம் இல்லை. அதில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொதுமக்கள் தான் பார்த்து முடிவு செய்கிறார்கள்.

வேல்முருகன்:- அந்த நிகழ்ச்சியில் நடுவராக வரும் நடிகை நமீதா அரைகுறை உடையில் தான் வருகிறார். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட ஒரு விழாவில் நடிகை சுரேயா (ஸ்ரேயா என்பதை அவர் அப்படித்தான் உச்சரித்தார். அதனை கேட்டு அனைவரும் சிரித்தனர்.) மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வந்துள்ளார்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நடிகை ஸ்ரேயா விழாவில் வந்த விதம் குறித்து குறிப்பிட்டார். நடிகைகள் எல்லாம் இப்படித்தான் டிரஸ் போட வேண்டும் என்று சட்டம் கொண்டுவர முடியாது. அறிவுரை வேண்டுமானால் அவர்களுக்கு கூறலாம். எந்த உடை போட வேண்டும் என்று நடிகைகள் தான் முடிவு செய்கிறார்கள். அதை அரசு முடிவு செய்வதில்லை.

வேல்முருகன்:- இந்த ஆபாசங்களை எல்லாம் ஏன் தணிக்கைத்துறை கண்டிப்பதில்லை.


அமைச்சர் துரைமுருகன்:- ஆபாசத்திற்கு எந்தவித அளவுகோலும் கிடையாது. இத்தனை `இஞ்ச்' தான் இடுப்பு தெரிய வேண்டும். இத்தனை இஞ்சுக்கு பிரா போடலாம், இத்தனை இஞ்சுக்கு பாவாடை போடலாம் என்றெல்லாம் அளவு எதுவும் இல்லை. ஆபாசம் என்பது அவரவர் மனதை பொறுத்தது தான். வேல்முருகன் நடித்த படத்தையும் பார்த்தோம். அதிலும் தான் ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் நடனம் வருகிறது.(இதனை இடுப்பை ஆட்டிக் காட்டியபடி கூறினார். இதனை பார்த்த அனைவரும் சிரித்தனர்.)

ஜி.கே.மணி:- ஆபாசம் அவரவர் மனதில் தான் இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதற்காக அரைகுறை ஆடை உடுத்தி ரோட்டில் போக முடியுமா? இதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். திரைப்படங்கள், பொது இடங்களில் இதுபோல் ஆபாசமாக உடை உடுத்தி வருவது கலாசார சீரழிவை ஏற்படுத்தும். எவ்வளவு கற்பழிப்புகள் நடக்கிறது என்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் வருகிறது. இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் காரணம் என்ன? சமுதாயத்தை நல்வழிப்படுத்தத்தான் இந்த கருத்தை தெரிவிக்கிறோம்.

வேல்முருகன்:- ஆங்கில கலப்பில்லாமல் ஒரு படம் வருகிறது என்பதால் தான் அதில் நான் நடித்தேன். ஆபாசத்தை விதைப்பதற்கு அல்ல. ``கட்டிப்புடி, கட்டிப்புடிடா'', ``எப்படி, எப்படி, சமைஞ்சது எப்படி'' என்ற பாடல்களெல்லாம் எப்படி அனுமதிக்கப்பட்டது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை முறை வேண்டும். இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பண்பாடு, கலாசாரம் எல்லாம் மறைந்து போய்விடுமோ என்று தான் கூறுகிறோம்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நாகரிகத்தை காப்பாற்ற நாளை முதல் வேல்முருகன் வேட்டி-சட்டை அணிந்து வந்தால் நல்லது.

வேல்முருகன்:- இதனை நான் விளையாட்டுக்காகவோ, சிரிப்புக்காகவோ சொல்லவில்லை.

அமைச்சர் பொன்முடி:- ஆடை அணிவது நாகரிகத்தின் வெளிப்படுதல் தான். முன்பு பெண்கள் புடவை அணிந்து வந்தனர். இப்போது சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்கிறார்கள். அதற்கு வசதியான உடைகளை அணிந்து வருகிறார்கள். அதற்காக கலாசாரம் அழிந்துவிட்டது என்று கூற முடியுமா? கலாசாரத்தை காக்கத்தான் சமத்துவ பொங்கல் என்று கலாசார திருவிழாவை நடத்தும்படி முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார்.

ஏர் உழுபவன் கோவணம் கட்டிக்கொண்டு தான் உழுகிறான், அதற்காக அதை ஆபாசம் என்று கூறமுடியுமா? காலத்திற்கேற்ப மாறுவது இயற்கை. வேல்முருகன் கூறுவதை நான் முழுமையாக மறுக்கவில்லை. இதனால் கலாசாரம் சீரழிகிறது என்று மிகைப்படுத்தி கூறுவதை ஏற்க முடியாது.

வேல்முருகன்:- நான் ஒட்டுமொத்த திரைப்படங்களையும் குறை கூறவில்லை. 90 சதவீதம் இப்படித்தான் இருக்கிறது என்று தான் கூறுகிறேன். அதேபோல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பி.ரேட் (மக்கள் பார்க்கும் விகிதம்) அதிகமாக வேண்டும் என்பதற்காகவும், தனிப்பட்ட வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட ஆபாச காட்சிகளை திணிக்கிறார்கள். நம்மை கேட்க யாருக்கும் நாதியில்லை என்று சென்று கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சரிடம் கூறினால் இதற்கும் நியாயம் கிடைக்கும், வழி பிறக்கும் என்று தான் கூறுகிறேன். இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதை தடுக்க வேண்டும். ஒரு மாணவன் படம் பார்த்துவிட்டு கொலை செய்தேன் என்கிறான். எனவே இதுபோன்ற ஆபாசம், வன்முறை ஆகியவற்றை தடுத்து நிறுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேற்று நம் வரி பணத்தில் நடை பெற்ற விவாதம். படித்து அனுபவியுங்கள

Read More...

சிட்னி, கிட்னி இரண்டும் பிரச்சனைதான்

சிட்னி லேட்டஸ்ட்
Bhajji fined 50 per cent match fee, no ban
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 4 டெஸ்ட் தொடர் போட்டியில், சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியுல் 'குரங்கு' என்று சொன்னதாக ஹர்பஜன்சிங் மீது இனவெறி குற்றம் சாட்டப்பட்டது. ( சொல்லியிருப்பார் என்பது என் எண்ணம் ). இந்திய கிரிக்கெட்டில் சில்லரை நிறைய புரளுவதால் பி.சி.சி.ஐ சொன்னதை ஐ.சி.சி கேட்டுக் கொண்டது. இன்று நடந்த விசாரனையில் சச்சின், மற்றும் பாண்டிங் எழுதிய கடித்ததில் அவரின் குற்றச்சாட்டை 3.3(இனவெறி) யிலிருந்து 2.8(கெட்ட வார்த்தை) க்கு மாற்றும் படி கடிதம் எழுதியுள்ளார்கள்.அவர்களும் மாற்றிவிட்டார்கள். இதனால் ஹர்பஜன் 50% ஃபைன் கட்ட வேண்டியிருக்கும். தொடர்ந்து விளையாடலாம். மீடியாவிற்கு தான் கொஞ்சம் ஏமாற்றம். அடுத்த சச்சரவு வரை காத்திருக்க வேண்டும்.

கிட்னி லேட்டஸ்ட்
பத்து மணிக்கு அப்பறம் டிவியில் காமெடி கிளிப்பிங்ஸில் - சின்ன பையன் பெரியவர்களிடம் வம்பு செய்வான், அவனை துரத்திய பெரியவரை காருக்குள் கோழி அமுக்குவது போல் அமுக்கி கிட்னியை திருடுவார்கள். கடந்த சில நாட்களாக கிட்னி பற்றிய செய்தியை பார்த்தால் காமெடி இல்லை நிஜம் என்று தோணுகிறது. தமிழ்நாட்டில் புரோக்கர்கள் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் பகுதிகளைச் சேர்ந்த ஏழை தொழிலாளர்களை ஏமாற்றி டெல்லிக்கு அழைத்து சென்று கிட்னியை திருடி உள்ளனர். இந்த மாதிரி திருட்டில் ஈடுபடும் பாவிக்கு நல்ல சாவே வராது..

Read More...

Monday, January 28, 2008

ஞானக் குழந்தை - லீனா மணிமேகலை

"பாமரன் நீங்கள் கோழை" - என்று போனவாரம் லீனாமணிமேகலை குமுததில் பாமரன் எழுதியதை படித்துவிட்டு கிழித்திருந்தார். இந்த வாரம் பாமரனுக்கு ஞானம் வந்துட்டுது...

அந்த ரகசியத்தைச் சொல்லியே தீர வேண்டிய வேளை வந்து விட்டது. இனியும் மறைப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. மிகச் சரியாகச் சொன்னால் இருபது வருடங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு நிகழ்ச்சிக்காக நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பெரியவர்கள் அரட்டையில் ஈடுபட்டிருக்க, நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

எதேச்சையாக பக்கத்து அறையைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. வயது ஏழோ அல்லது எட்டோகூட நிரம்பாத சிறுமி ஒருத்தி தலையணை சைஸ் புத்தகம் ஒன்றை சீரியஸாக புரட்டிக் கொண்டிருந்தாள். பெரியவர்களிடம் இருந்து நைசாக நழுவி சிறுமியின் அறைக்குள் நுழைந்தேன்.

‘பாப்பா........ஸ்கூல்ல இவ்ளோ பெரிய்ய்ய்ய்ய புத்தகமெல்லாம் படிக்கச் சொல்றாங்களா?’ என்றேன்.

‘அங்கிள் இது ஸ்கூல் புக் இல்ல........கார்ல் மார்க்ஸ் எழுதிய டாஸ் கேப்பிடல்........’ என்றாள் சட்டென்று. அட........இந்த வயதிலேயே இவ்வளவு ஞானமா? என்று அதிர்ந்து போனேன் நான்.

அப்போதுதான் அந்தச் சிறுமியின் டேபிளைக் கவனித்தேன். மேசை முழுக்க ஏதேதோ இங்கிலீஷ்........மலையாளம்........என்று ஏகப்பட்ட புத்தகங்கள். அதில் தாடி வைத்த ஒருவரின் படத்துடன் உள்ள புத்தகத்தை எடுத்து........

‘இது யாரு பாப்பா, திருவள்ளுவரா?’ என்று கேட்க........

‘ஷட்டப்........இது பிடல் காஸ்ட்ரோ’ என்று பதில் வந்து விழுந்தது. இதென்னடாது வம்பாப் போச்சு என்று எண்ணியபடியே அந்தச் சிறுமி அறையில் மாட்டியிருந்த படங்களை நோட்டமிட்டேன். அதிலும் ஒரு தாடிக்காரர். இந்தமுறை கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக........

‘இவர் யாருன்னு தெரியலியேம்மா.......’ என்றேன்.

‘அவர்தான் கியூபாவின்

வெற்றிக்குக் காரணமான சே குவேரா. இதோ இந்தப் புத்தகம் அவர் எழுதிய பொலிவியன் டைரி....’ .என்று ஏதேதோ பேசிக்கொண்டே போனது அச்சிறுமி. உண்மையிலேயே ஆடிப் போய்விட்டேன். சிறு வயதிலேயே பார்வதி தேவியிடம் பால் குடித்து ஞானம் பெற்ற திருஞானசம்பந்தரைப் போல இச்சிறுமியும் நிச்சயம் ஒரு ஞானக் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று அப்போதே புலப்பட்டு விட்டது.

பால் கணக்கு எழுத மட்டுமே டைரியைப் பயன்படுத்தி வந்த எனக்கு சே குவேரா எழுதிய பொலிவியன் டைரி பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்தது அந்தச் சிறுமிதான்.

ஊர் திரும்பியவுடன் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்த மனைவியிடம் நமக்குப் பையன் பொறந்தா

சே குவேரான்னுதான் பேர் வைக்கணும். பொண்ணு பொறந்தா........மதுரையில் சந்தித்த அந்த ஞானக் குழந்தையின் பெயர்தான்........ என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.

விதியின் விளையாட்டால் 1989_ல் பையன் பிறந்து தொலைக்க சே குவேரா என்று பெயரிட்டோம். எல்லாம் அந்த ஞானக் குழந்தை இருபது வருடம் முன்பு புகட்டிய அறிவுதான்.

அவ்வளவு ஏன்........?

எழுதப்படிக்கக் கூட தெரியாத தற்குறியான என்னை........

என் காதைப் பிடித்துத் திருகி........

கையைப் பிடித்து இழுத்து........

ஸ்லேட்டின் மேலே வைத்து........

‘ம்ம்ம்........ அங்கிள் நான் சொல்றதை அப்படியே எழுதுங்க’ என்று........

பெ........

ரி........

யா........

ர்........

என்று எழுத வைத்துப் பழக்கியதும் எட்டு வயது கூட நிரம்பாத அந்தச் சிறுமிதான்.

ச்சே........உணர்ச்சி வசப்பட்டு எதையெதையோ எழுதிய நான், அந்த ஞானக் குழந்தையின் பெயரை எழுதாமல் விட்டுவிட்டேன். பெயர் எழுதாவிட்டால் அந்த ஞானக் குழந்தை கோபித்தாலும் கோபித்துக் கொள்ளும்........

சரி சொல்லிவிடுகிறேன். வேறு வழியில்லை.

அந்த ஞானக் குழந்தையின் பெயர்தான்:

லீனா மணிமேகலை..

Read More...

Sunday, January 27, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 27-01-08

இந்த வாரம் முனீஸ் இட்லிவடைக்கு எழுதும் கடிதம்....

வணக்கம் இட்லிவடை,

இதை கவனிச்சயா? சன் டிவி முதல்ல 8 மணிக்கு நியூஸ் போட்டது. கலைஞர் டிவி 7.30க்கு போடவும், சன் டிவியும் 7.30க்கு போட்டது. திரும்பவும் கலைஞர் டிவி 7 மணிக்கு நியூஸ்னு அறிவிக்க, இப்போ சன் டிவியும் 7 மணிக்கு நியூஸ்னு அறிவிச்சுட்டது. யார் 23 மணி நேரத்துக்கு முன்னால நாளைய செய்திகள்னு அறிவிக்கறாங்களோ அவங்களே வென்றவர்கள். :))

அப்றம் கே.டி.வில அருணாசலம் படம் ஓடிண்டிருக்க, கலைஞரில் குரு சிஷ்யன் படம். உடனே குரு சிஷ்யனை கட் செய்துட்டு கலைஞர் டிவியில அருணாசலம் ஓடியது.

நம்ம 'தல' நடிச்ச கூலிங் கிளாஸ் படத்தை, அத்தாம்பா பில்லா படம். கலைஞர் டிவி வாங்கிட அதிலிருந்து கிளிப்பிங்குகளைக்கூட சன் டிவி ஒளிபரப்பரதில்லை தெரியுமா? இது மட்டும் இல்லை, பழைய பில்லா படத்தோட பாடல்களையும், அடிக்கடி சன் டிவி ஒளிபரப்பிகிட்டிருக்கு.

இந்த அழகுல கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் ஷரத் இந்த மாதிரி பேட்டி கொடுத்திருக்கிறார்.

இரண்டு சேனல்களிலும் ஒரே நேரத்தில் ஒரே விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஏன் இந்த மோதல்? ரெண்டு சேனல்களுக்குமிடையே ஒரு பனிப்போர் நடந்துகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. உண்மையில் என்னதான் நடக்கிறது?

‘‘இது பிஸினஸ் போட்டி. இருக்கத்தான் செய்யும். எங்களைப் பொறுத்தவரை சன் டி.வி.யுடன் ஆரோக்கியமான போட்டிதான் போய்க்கிட்டிருக்கு. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேர விஷயத்தில் நாங்க ஆரம்பத்தில் போட்ட ஷெட்யூலை இன்னும் மாற்றாமல் தெளிவாகப் போய்க்கிட்டிருக்கோம். நாங்க மக்களைக் குழப்ப விரும்பலை, எங்களுக்குப் போட்டியாக நிகழ்ச்சிகளின் நேரங்களை மாற்றுவது அவர்கள்தான். முதன்முதலாக வித்தியாசமான ‘லாஜிக் இல்லா மேஜிக்’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கினோம். இப்போ அவங்களும் அதே மாதிரி ஒரு நிகழ்ச்சி பண்றாங்க. ஸோ... இந்தக் கேள்வியை அவர்களிடம்தான் கேட்கணும்.



வலைப்பதிவுலகம் - வலைக்கும்மின்னு ஹரன்பிரசன்னா கட்டுரை எழுதியிருக்கிறார்; படிச்சுப் பார். அட அட எவ்வளவு நல்லா எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை நடுநிலமை கட்டுரை. இதே கட்டுரையை பெயர் குறிப்பிட்டு எழுதியிருந்தார் என்றால், இந்தக் கட்டுரை தனி நபர் தாக்குதலாக இருந்திருக்கும். நமக்கும் தொடர்ந்து நல்ல தீனி கிடைச்சிருக்கும். ஹூம், ஜஸ்ட் மிஸ்ட்.

மேற்கு வாங்காளத்துல பறவைக் காய்ச்சல் அதிகமாக ஆயுட்டுது போல, இல்லைன்னா கம்யூனிஸ்ட் முன்றாவது அணி பத்தி பேசியிருப்பாங்களா? தமிழ்நாட்டுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்தக் காய்ச்சல் வந்தது.

"பஞ்சாங்கம் பார்க்க மாட்டோம்'னு பகுத்தறிவாளர்கள் சொல்லிக்கிட்டாலும், ஜோதிடர்கள் கணிச்ச பஞ்சாங்கப்படி தானே பொங்கல் வருது. எனக்கு என்னவோ கலி முத்திடுச்சு போலத் தெரியறது.

பொங்கல்தான் புத்தாண்டா?ன்னு நம்ம பினாத்தல் 8 கேள்வி கேட்டிருக்கார்; ஒன்பதாவதா ஒரு கேள்வி இருக்கு. தசாவதாரம் ரிலீஸை இழுத்தடிச்சு தமிழ் புத்தாண்டு ரிலீஸ்னாங்க. இப்ப என்ன செய்யப் போறாங்க? தமிழ்ப் புத்தாண்டுன்னா அப்ப ரிலீஸ் இனிமே 2009 சனவரிக்கு தானா ? தாங்காது.

கொசுறு கேள்விகள்: முடிஞ்சா பதில் போடு
அப்பறம் தமிழ்நாட்டில் ரஜினியின் ஆங்கில பெயர் என்ன தெரியுமா Rajinikanth ஆனால் மற்ற இடங்களில் Rajnikanth ஏன் தெரியுமா ?

ஏன் பெண்கள் ஆண்களின் புனை பெயரில் எழுதறதில்லை?

கூச்சப்படும் பெண்கள் குண்டாகி விடுவார்களாமே ? மருத்துவ ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்திருக்கிறார்களாம் உனக்கு தெரியுமா ?

வயது வந்தவங்களுக்கு- உனக்கும்தான்- ஒரு தகவல்:

முன்பு இந்தியா டுடே உடலுறவு பத்தி ஒரு சர்வே நடத்தி ஊரே பத்திகிச்சு. இப்ப அவுட்லுக் நடத்தியிருக்கு. என்ன்னு தெரிஞ்சுக்க இங்க சொடுக்கு.


ஷங்கர் டைரக்ஷனில் ரஜினி நடிக்கும் `ரோபோ' படத்தின் பெயர் தமிழில் `இயந்திரா' என்று மாற்றம் செய்யப்படுகிறது தெரியுமா? போன வாரம் நான் சொன்ன பேர் தான். எனக்கு ஏதாவது கமிஷன் கொடுப்பாங்களா ?

20 வருஷத்துக்கு அப்பறம் ராமரை மையமாக வைத்து மீண்டும் ராமாயணம் தயாரிக்கிறார்கள் ராமானந்த் சாகரின் இளைய தலைமுறை. எண்டிடிவி குழுமம் புதிய சேனலை ஜனவரி 31ஆம் தேதி தொடங்கறாங்க அதில திங்கள் முதல் வெள்ளிவரை இரவு பத்து மணிக்கு 'புதிய ராமாயணம்' வர போகுது. இதில் ராமராக நடிக்கிற நடிகருக்கு கிரீம் வாங்க இந்தியாவில் முக்கிய நகரங்களில் தேடியிருக்காங்க ஆனா கிடைக்கலை. கடைசியா சென்னையில் தான் பொருத்தமான கிரீடம் கிடைத்திருக்கு. நல்ல பொருத்தம்!

Read More...

Friday, January 25, 2008

ஞானசேகரனுக்கு நன்றி

காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் நேற்று சட்டசபையில் இவ்வாறு பேசியுள்ளார்:

அரிசி விலை ரூ.2 என்றாலும் ஒரு இட்லி ரூ.5-க்கு விற்கப்படுகிறது. ஓட்டல்களில் ரூ.34 வரை தோசை விற்கிறது. இதுபோன்ற விலை உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.


கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ஞானசேகரனுக்கு நன்றி :-)

Read More...

Thursday, January 24, 2008

தாத்தாவுடன் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "ரோபோ' படத்தில் அவருக்கு ஜோடி யாக முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையு மான ஐஸ்வர்யா பச்சன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா பச்சன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் இல்லமான ஜனக் இல்லத்தில் இதற் கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் ஐஸ்வர்யா ராய் கையெழுத்திட்டுள்ளார்.

இப்படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. "சிவாஜி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவின் சம்பளம் ரூ.30 லட்சம்.

Read More...

யோகா - ஐயோகா


This version of the posture requires strength in the neck shoulders, and back. requiring years of practice to achieve. It should not be attempted without supervision
இந்த யோகாசனத்தை சுலபமாக செய்ய வழி கீழே...


தேவை இரண்டு பெக் விஸ்கி :-)

Read More...

Wednesday, January 23, 2008

9.17 - 9.19

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அதையொட்டி இன்று காலை 9.17 மணியளவில் கோட்டைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வந்தார். நேராக சட்டமன்ற வளாகத்திற்குள் சென்ற ஜெயலலிதா அங்குள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு 9.19 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுவரை இவ்வளவு வேகமாக யாரும் கையெழுத்து போட்டதாக தெரியலை. இதை கின்னஸுக்கு அனுப்பலாம் என்று ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார் பேசிக்கொண்டதாக தெரிகிறது.

இன்றைய பூ விலை: ஒரு முழம் பத்து ரூபாய். ஜெக்கு ஓட்டு போட்டவர்கள் வாங்கி காதில் வைத்துக் கொள்ளலாம்.

Read More...

Tuesday, January 22, 2008

தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை: பசு மாடு காய்ச்சல் தான் !

பசு மாடு அறிக்கை நேற்று ஜெ; இன்று கலைஞர்!


ஜெ அறிக்கை

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 15க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிப்பின்றி, பட்டினியால் இறந்துவிட்டதாக வந்துள்ள செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. பசு மாட்டிற்கு தீவனம் கொடுக்கக் கூட வக்கில்லாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை பறைசாற்றும் திருக்கோயில்களின் நிர்வாகத்தை முறையாக பராமரிப்பது; மேற் பார்வையிடுவது, அறக்கட்டளை களை திறனுடன் நிர்வகிப்பது, திருக்கோயில் சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது, நிதி வசதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி வசதியில்லாத திருக்கோயில்களுக்கு நிதி வழங்குதல் ஆகியவை இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் தலையாய கடமையாகும்.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்ற கருணாநிதி தற்போது தன் முத்திரையை இந்து சமய அறநிலையத்துறையிலும் பதித்து இருக்கிறார். ராமேஸ்வரத் திலுள்ள ராமநாதசுவாமி திருக்கோயி லுக்கு தானமாக வழங்கப்பட்ட 55 பசுக்களில் 15 பசுக்கள் இறந்துவிட்டதாகவும், மேலும் சில பசுக்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்தியாவிலேயே புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் கோயிலுக்கு பசு மாடுகளை தானமாக வழங்குவது வழக்கம். இப்படி தானமாக வழங்கப்படும் பசுமாடுகளை பராமரிக்க கோயிலிலேயே "பசுப்பட்டி' உள்ளது.

மேற்படி பசுப்பட்டி சுகாதார மற்ற நிலையில் இருப்பதாலும், சரியான முறையில் பராமரிக்கப் படாததாலும், குறைந்தபட்ச தீனி கூட வழங்காததாலும் பசுக்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. இறந்த பசுமாடுகளை பரிசோதித்த மருத்துவர், மாடுகளை எந்தவிதமான நோயும் தாக்கவில்லை என்றும், சத்துக்குறைவு மற்றும் தீவனப்பற்றாக்குறை காரணமாகவே பசுக்கள் இறந்து போயுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். வாயில்லா ஜீவன்களை பட்டினியால் சாகடிப்பது என்பது மிகப்பெரிய பாவச் செயல். பசுக்களின் பராமரிப்பு செலவிற்காக நாள் ஒன்றுக்கு 900 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதுவும் முழுமையாக அவைகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை என்றும் தெரிய வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, பக்தர்கள் பசுக்களை தானமாக கொடுக்கிறார்களே தவிர, அவற்றை பராமரிப்பதற்கான செலவுகளை கொடுப்பதில்லை என்று கூறி, மேற்படி பசுக்களின் இறப்பை அவர் நியாயப்படுத்துகிறாரே தவிர, பசுக்களின் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறவுமில்லை; அதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் இத்தகைய பேச்சும், போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே தமிழகத்தின் நலனை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிக்கத் தெரியாத, விலைவாசியை கட்டுப்படுத்த இயலாத, குப்பையை கூட அள்ள முடியாத, வாயில்லா உயிரினங்களை பராமரிக்க வக்கில்லாத, தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கச் செய்த, கையாலாகாத கருணாநிதி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில், மத்திய அரசு அவரது அரசை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்



கலைஞர் அறிக்கை
அறநிலையத்துறை அமைச்சர் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். ராமேஸ்வரம் கோயிலில் இறந்தவை பெரிய பசுமாடுகள் அல்ல. சிறிய கன்று குட்டிகள் தான் இறந்துள்ளன.

இதுபோன்ற கன்றுக்குட்டிகளை வைத்து வளர்க்க முடியாமல் சிலர் கோயிலுக்கு நேர்ந்து விட்டுவிடுவதால், தாய்பால் இல்லாத நிலையில் அந்த கன்றுகள் இறந்துபோக நேரிடுகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் கோயிலுக்கு விடப்படும் மாடுகளையும், கன்றுகளையும் அடிக்கடி ஏலம் விட்டு அவற்றை கூட்டம் கூட்டாக லாரியில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டது என்பதற்காக சிலர் நீதிமன்றத்திலேயே முறையிட்டு, அதற்கு 2001ஆம் ஆண்டிலும் 2004 ஆம் ஆண்டிலும் சென்னை உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்து திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் மாடுகளை ஏலத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று கூறியது.

அந்த ஆணையையும் அப்போதைய ஜெயலலிதா ஆட்சி முறைப்படி செயல்படுத்தாததை குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. தற்போது ஆலயங்களில் விடப்படுகின்ற மாடுகளையும், கன்றுகளையும் பாதுகாக்க விரிவான ஏற்பாடுகளை இந்த அரசு செய்து வருகிறது.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திருச்சந்தூரில் கோயில் மாடுகள் மட்டுமல்ல; எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரண உதவிகளை பெற்றிடச் சென்ற 50க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியானதே, அப்போது ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்யவில்லை.

அதுமாத்திரமல்ல இவரும், இவருடைய உடன் பிறவா சகோதரியும் கும்பகோணம் மகாமகத்திற்கு சென்றுஇவர் குளிக்க அவர் நீரை ஊற்ற அவர் குளிக்க இவர் நீரை ஊற்றஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்ட கண்கொள்ளா காட்சியை காணத் துடித்த மக்கள் நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள்.

அவர்களுக்காக ஆட்சியை கலைத்திருந்தால் அந்த முன் உதாரணத்தை தற்போது பின்பற்றியிருக்கலாம். அப்போது மனித உயிர்களை துச்சமாக மதித்தவர், இன்றைக்கு மாடுகளின் உயிர்களை மதித்து அறிக்கை விட்டிருப்பது வாயில்லா பிராணிகளிடம் அவர் காட்டும் வாஞ்சையை விளக்குகிறது; வாழ்க அவரது வாஞ்சை.

Read More...

டோனி பேட்டி

கங்குலி நீக்கப்பட்டிருப்பதால் இந்திய வீரர்கள் மத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை - டோனி

* கங்குலி நீக்கத்தால் வீரர்கள் மத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கங்குலி நீக்கப்பட்ட விவகாரம் பத்திரிகையாளர்கள் மத்தியிலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய அவர், இந்திய வீரர்கள் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்பிலேயே முழு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

* வீரர்கள் மத்தியில் தகவல் பரிமாற்றம் தடையில்லாமல் இருக்க வேண்டும் என்று கேப்டன் கும்ப்ளே கூறியிருப்பதாகவும், அணியிலிருந்து யாராவது நீக்கப்பட்டால் அதனை அவரிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கும்ப்ளே கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

* இந்திய அணி ஓரணியாக இருப்பதாகவும், வீரர்கள் முழு ஈடுபாட்டோடு தயாராகி வருவதாகவும் அவர் கூறினினார்

Read More...

அந்தோனி முத்து



பெயர் அந்தோனி முத்து. ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, கிணற்றில் தவறி விழந்ததால் கழுத்துக்கு கீழே எந்த உணர்வும் இல்லை. கைகள் மட்டும் உணர்வுடன் செயல்படும். கைகளும் மூளையும் போதும் என்கிறார் தான் உழைப்பதற்கு.

அனுபவித்தால் தான் வலி தெரியும் என்பார்கள் அந்தோனி தன்னை பற்றி இவ்வாறு சொல்கிறார்....


Yeah..! I got a Special boon from God.
Physically Challenged.
Percentage of Disability was 90 %(According to the doctor's certificate.)
Paralysed below my chest.]
Oh...
Thanks to God for giving me 2 hands & an Independent Brain to work.
Residing at Chennai/Tamilnadu/India in the mercy of my Elder sister.
Below my chest there is no sense at all.
I do not have the sense to pass Urine & Toilet.
Someone have to press my Stomach to pass Urine.
My Sister, have to dig out Toilet Manually.
She is a living God for me.

I got this disability at the age of 11. (In an accident)
My reading habit increased my knowledge.
Devoloped a great interest in Electronics at the age of 15 & got 2 Diplomas in Radios & Audios respectively. (studied through correspondence)
At the age of 20 the love for music from my boyhood flowered.
Got an Electronic Musical Keyboard from a friend, & practiced with my own.
Got basic lessons from Rev.Fr. Rajareegam and continued to study B.A degree (Indian music) through open university in Chennai University.

தனது வாழ்க்கையை நம்பிக்கையுடனும், தெம்புடனும் எதிர்கொண்டிருக்கும் அந்தோணிக்கு தற்போது மிகவும் அவசியமானவை, ஒரு நல்ல மெத்தையும், ஒரு மடிக்கணினியும், ஒரு சக்கர நாற்காலியும். நாம் கூட்டாகச் செய்யும் பொருளுதவி மூலம், இம்மூன்றையும் அவருக்கு வாங்கித் தர முடியுமானால், அவருக்கு அது பெரிய உதவியாக அமையும்.

இவரை குழந்தை போல் இவர் அக்கா தான் கவனித்துக் கொள்கிறாள். அவருக்கு என் வந்தனங்கள்.
உதவ வேண்டும் என்று நினைத்தால் எ.அ.பாலா பதிவுக்கு செல்லவும். நன்றி.

Read More...

Monday, January 21, 2008

திருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிருந்து எடுத்தால் ? - நாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி

இந்த வார விகடனில் வந்த திரு.நாஞ்சில் நாடனின் சிறப்புப் பேட்டி.... ( நன்றி: விகடன் )

ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், உள்ளே விவசாயக் கலாசாரத்தில் ஊறிப் போயிருக்கும் ஒரு கிராமத்து மனிதர்!

ஆறு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவர் நாஞ்சில்நாடன். மாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண் சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள். நகரங்களுக்கு குடிபெயரும் படித்த கிராமத்து இளைஞர்களின் தவிப்பை இவர் அளவுக்கு இயல்பாக பதிவு செய்வதர்கள் யாரும் இல்லை. இவரது 'தலைகீழ் விகிதங்கள்' நாவலே தங்கர்பச்சானின் 'சொல்ல மறந்த கதை' சினிமாவாக வந்தது. இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா, குடி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த நாஞ்சில் நாடனுடனான மிக நீண்ட சந்திப்பின் ஒரு பகுதி இங்கே....



''பொங்கல், தமிழர்கள் பண்டிகை. ஆனால், நாம இப்போ தீபாவளியைக் கொண்டாடுவது மாதிரி பொங்கலில் ஆர்வம் காட்டுவதில்லையே?''

''பொங்கலை தமிழர்களுக்கான பண்டிகை எனச் சொல்வதுடன் எனக்கு முரண்பாடு இருக்கு. பொங்கல், விவசாயிகள் பண்டிகை. தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். விவசாயத்தையும் இயற்கையையும் மதிக்காத ஒரு சமூகம் எப்படி அவர்கள் பண்டிகையை மட்டும் கொண்டாட முடியும்? தமிழ்நாடு தவிர, எனக்கு தெரிந்து வங்காளம், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் வேறு பெயரில், வேறு வடிவத்தில் இந்தப் பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கலை தமிழ்நாட்டுக்கு மட்டுமான ஒரு பண்டிகையாக எடுத்துக்கொள்ள முடியாது. திராவிட அரசியலுக்குப் பிறகுதான், தைப் பொங்கலுக்கு தமிழர்கள் பண்டிகை என்ற சாயம் ஏற்றப்பட்டது. சரி, தமிழர்கள் பண்டிகை என்றே வைத்துக்கொள்வோம்; எல்லாத் தமிழர்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா என்ன? தமிழினத்தில் 25 சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களைப் பொறுத்தவரை பொங்கல் என்பது டி.வி. நிகழ்ச்சிகளும் புதிய சினிமாக்களும் மட்டும்தானே.

பேஷன் என்ற பெயரில் நம் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கு. நம் நிலத்துல வெளைகிற தானியங்களைக் கொண்டே செய்கிற பண்டிகைப் பலகாரங்கள் பல இருக்கு. அரிசி, தேங்காய், சர்க்கரை மூன்றும் இருந்தா சர்க்கரைக் கொழுக்கட்டை; சர்க்கரைக்குப் பதிலா உப்பு சேர்த்தா உப்பு கொழுக்கட்டை. இதுல எதையும் வெளியே இருந்து வெலைக்கு வாங்கலை. இப்படி நூற்றுக் கணக்கானப் பலகாரம் செய்து சாப்பிட்டுருக்காங்க நம்ம தாத்தாவும் பாட்டியும். அறுபது வருஷத்துக்கு முந்தி நாஞ்சில் நாட்டுக்காரன் ஜிலேபி, அல்வா, லட்டுன்னு எதையாவது கண்டிருப்பானா. ஆனால், இன்னைக்கு எந்த ஊரு ஸ்வீட் ஸ்டாலாக இருந்தாலும் அங்கே குறைந்தது 25 வகையான ஸ்வீட்களைப் பார்க்கலாம். அதில ஒன்னு கூட தமிழ்நாட்டு பலகாராம் கிடையாது. எல்லாமே வடநாட்டில் இருந்து இறக்குமதி ஆனவை. கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் சில கடைகள்ல அதிரசம் பார்க்கலாம். இப்போது அதுவும் கிடையாது. நம்ம நாட்டுப் பலகாரங்கள் மறக்கடிக்கப்பட்டு, இந்த ஸ்வீட்கள் எல்லாம் ஏன் நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது? கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது? இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது? இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான மாற்றங்கள் இல்லை.''

''சுதந்திரத்துக்குப் பிறகு, கடந்த அறுபது வருஷத்துல எமர்ஜென்ஸி உட்பட எவ்வளவோ பெரிய அரசியல் மாற்றங்களை தமிழ்நாடு சந்திச்சிருக்கு. ஆனால், இதற்கான எதிர்வினை, பதிவுகள்ங்கிறது நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு. நவீன இலக்கியப் படைப்பாளிகளில் பலர் அரசியல், சமூக பிரச்னைகளைப் பற்றி கருத்து சொல்வது மிகக் குறைவு. ஏன் படைப்பாளிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புறாங்க.?''


''உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் 'கமிட்' பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்?

ஒரு நாள்ல ஒவ்வொரு டிராபிக்கிலயும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு? என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வளவு தூசி? இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா? வரும்; ஆனால், அதை எழுத்துல வெளிப்படுத்தப் பயப்படுகிறான். ஓவியன், சிற்பி, இசைக் கலைஞன் எல்லோரையும்விட கூடுதல் சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ளவன் எழுத்தாளன். தேனியில இருந்து ஆண்டிப்பட்டி வழியா மதுரைக்கு வர்ற வழியில இருந்த ஒரு மலையைக் காணோம். கிரானைட்டா எக்ஸ்போர்ட் ஆயிடுச்சு. அந்நியச் செலாவணி, தேசிய வருமானம்னு வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொந்தமான நிரந்தரமான ஒரு இயற்கைச் செல்வத்தை இல்லாம ஆக்குவதற்கான உரிமையை உனக்கு யார் தந்தான்னு அவர்களை எழுத்தாளன் கேட்க வேண்டாமா? முப்பது வருஷத்துக்கு முன்னாடி திருவனந்தபுரம் கோவளம் பீச்சுக்குப் போனா, எல்லாப் பகுதிக்கும் என்னால போயிட்டு வரமுடியும். அதன் அழகை ரசிக்கலாம்; உட்கார்ந்து இளைப்பாறலாம். ஒரு சாதாரண குடிமகனா என் இந்த உரிமை, இப்போது பறிக்கப்பட்டு பத்து சதமானம் மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. என் பாக்கெட்டுல பத்தாயிரம் ரூபாயும் ஸ்டார் ஹோட்டல்ல அறையும் போட்டிருந்தா தான் இப்போ அந்தக் கடலை நான் ரசிக்க முடியும். நான் ஒன்னும் அந்த இடத்தை வெட்டி வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடப் போவதில்லையே. ஒரு அரை மணி நேரம் அந்த இடத்தைப் பார்ப்பதற்கான உரிமை சாதரண குடிமகனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு பொதுச்சொத்தை செல்வந்தர்கள் கூறுபோட்டிருக்கிறார்கள். என் நாட்டின் இயற்கையில் எனக்குப் பங்கு இல்லையான்னு ஒரு எழுத்தாளன் கொதிச்சு எழுந்திருக்க வேண்டாமா? நான் எழுத்தாளனை நேரடி அரசியல்ல ஈடுபடுன்னு சொல்லலை. இந்த சமூகத்துக்கு நீ கடமைப்பட்டவனா, இல்லையான்னுதான் கேட்கிறேன். இப்படி உங்களையும் உங்க சமூகத்தையும் பாதிக்கிற, உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கண்டுக்காம எப்படி எழுத முடியும்? படைப்புகளின் அர்த்தம் என்ன? சமூக ரீதியாகவும் மத ரிதியாகவும் வர்க்க ரீதியாகவும் எந்த வகையில் அநியாயம் நடந்தாலும் அதைச் சொல்றதுதானே படைப்பு. வங்காளம், மகாராஸ்டிரா, கேரளா மாநில எழுத்தாளர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கான்னு கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன்.

இன்னொரு பக்கம், எதுக்கு அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவங்களைப் பகைச்சிக்கனும்? நாளைக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கும்ங்கிற ஒரு எதிர்பார்ப்பு இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகி இருக்கு. எனக்கோ, என் முந்தின தலைமுறை எழுத்தாளர்களுக்கோ இல்லாத எதிர்பார்ப்பு இது. முப்பது வருஷத்துக்கு முன்னாடி... முப்படைகளுக்கான ஒரு நிகிழ்ச்சி. அதில், அல்லா ரக்கா தபேலா, பிஸ்மில்லாகான் ஷெனாய் கச்சேரி. பிஸ்மில்லாகான் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது, முன்றாவது தளங்களில் இருந்து சலசலப்பு. பிஸ்மில்லா கான், ''சுப்ரகோம்'' ('அமைதியாக இருங்கள்) என்று இரண்டு முறைக் கேட்டுக்கொள்கிறார். சலசலப்புக் குறையவில்லை. மூன்றாவது முறை, ஷெனாயைத் தூக்கி பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்து போய்விட்டார். அல்லா ரக்கா, தபேலாவை மூடுகிறார். இந்திய அரசின் மூப்படை தளபதிகளும், மகாராஸ்டிரா கவர்னரும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற ஒரு அரங்கத்தில் அவர்களை நிராகரித்துவிட்டு செல்கிற ஒரு கர்வம் அந்தக் கலைஞர்களுக்கு இருந்தது. ''நீ யாரா இருந்தல் எனக்கென்ன; என்கிட்ட இருப்பது சரஸ்வதி; வித்தை, அதுக்கு முன்னால நீ பணிந்துதான் ஆகணும்'' என்கிறார் பிஸ்மில்லாகான். அமெரிக்காவுக்கு வந்து செட்டிலாகிருங்கன்னு கூப்பிடுறாங்க அவரை. அங்கே விஸ்வநாதர் ஆலயமும், கங்கா நதியும் இருக்கான்னு கேட்கிறார். நம் மரபிலும் கலைஞர்களுக்கு இந்த செம்மாந்த நிலை இருந்திருக்கிறது. கிழிந்த துணியை உடுத்திக்கொன்டு, அரசனுக்கு முன்னாடி, 'வளநாடும் உனதோ, மன்னவனும் நியோ; உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்'' என்கிறான் கம்பன். அரசன் நினைச்சா 'லக்கலக்க'ன்னு கம்பன் தலையை சீவி இருக்க முடியுமே. அரசன் செய்யலை; சதாரண கிழிஞ்ச துணி உடுத்தியக் கம்பனைக் கண்டு அவன் பயந்திருக்கிறான். இப்போதுள்ள கவிஞர்கள், ''நீ எழுதுவதுதான் தமிழ். உன் முன்னாடி பேனா எடுக்கவே எனக்குக் கூசுது'' என்கிறார்கள். இப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறவன் எப்படி கலைஞன்ங்கிற கர்வத்தோட அநியாயத்தை எதிர்க்க முடியும்? பிஸ்மில்லாகானுக்கும் அல்லா ரக்காவுக்கும் கம்பனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இருந்த கர்வம் இல்லைன்னா இலக்கியத்துல எதுவுமே செய்ய முடியாது.

சரி, அவ்வளவு கர்வமா இருக்கும்படியா தமிழ் சமூகம் எழுத்தாளனை வெச்சிருக்கா? தமிழ் எழுத்தாளனின் பயத்துக்கு நியாயம் இருக்குங்கிறதை மறுக்க முடியாது. இந்த சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு?

சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலகமகாக் கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமாமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. 'நீங்கள் மொசார்ட்டும் காப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்' என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா? ஒரு கொத்து வேலை, தச்சு வேலை செய்கிறவனுக்குக் கிடைக்கிற கூலிகூட, ஒரு சிறுகதைக்குப் செலவழித்த உழைப்புக்காக எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்கான எவ்வளவு நேரத்தை செலவழித்து அந்தக் கதையை அவன் எழுதியிருப்பான். மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பான்.

ஒரு எழுத்தாளன் எதிர்மறையான கருத்தைச் சொன்னா, அவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கு. ஒரு டிவி எஸ் 50ல வந்துகூட அவனை இடிச்சு கொன்னுட முடியும். அந்த அளவுக்கு பலமில்லாத தனி ஆள் அவன். வெளியில உள்ள ஆபத்துகளைவிட இலக்கியத்துக்குள்ளேயே இருக்கும் ஆபத்து இன்னும் மோசம். பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் பொதுவுடமை தத்துவத்துக்கும் ஆதரவா எழுதுவது சுலபம். முற்போக்கானவனா உங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். ஆனால், இவற்றை விமர்சனம் பண்ணி எழுதுவது சிரமம். மீறி எழுதினா பயங்கரமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த எதிர்ப்புகளை தன்னால சந்திக்க முடியுமா என்ற அச்சம் எழுத்தாளனுக்கு இருக்கு. 'பின்தொடரும் நிழலின் குரல்' எழுதியதுக்காக ஒரு பகுதியினரால் இன்றும் ஜெயமோகன் காழ்ப்புடன் பார்க்கப்படுகிறார். ஏன் ஒரு படைப்பாளி, ஒரு அரசியல் கட்சியை விமர்சித்து எழுதக்கூடாது? இதனாலதான் யாரையும் காயப்படுத்தாம, புண்படுத்தாம, நிரந்தரமான ஒரு வேலை, குடும்பம்னு சர்வ நிச்சயங்களோட வாழ்ந்துட்டு போயிருவோம்னு படைப்பாளி நினைக்கிறான். அச்சமும் கவலையும் உள்ள எழுத்து தன் ஜீவனையும் ஆற்றலையும் இழந்துவிடுகிறது. எழுத்தாளன், தான் சரின்னு நினைப்பதை சொல்ல முதல்ல இந்த சமூகம் அவனை மதிக்கனும்.''

''ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சின்னு நவீன இலக்கியவாதிகள் அரசியலுக்கு வருகிறாங்களே?''

''படைப்பாளிகள் அரசியலுக்கு வர்றது நல்லதுதான். நடைமுறை அரசியல்வாதிகளைவிட நடைமுறை சமூகப் பிரச்னையை இவங்க அதிகம் உணர்ந்திருப்பாங்கதான. ஆனால், படைப்பாளியா எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வோடு இருந்தாங்களோ, அப்படியே அரசியல்லயும் இருக்காங்களா என்பதுதான் முக்கியம். இருந்தாதான் அவர்கள் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கு. இப்போதான் இவங்க எல்லோரும் வந்திருக்காங்க. எனவே, பொறுத்திருந்து பார்த்துதான் இவங்களை மதிப்பீடு செய்யமுடியும்.''

''சினிமாவில் சிகரெட் காட்சிகளைத் தடைசெய்யணும்'னு அன்புமணி ராமதாஸ் சொல்லி வருகிறார். விஜய், 'என் படங்களில் இனிமே சிகரெட் காட்சிகள் இடம்பெறாது'ன்னு சொல்கிறார். இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா?''

''சினிமாவில் சிகரெட் குடிக்கலாமா, கூடாதா என்பதை கதையும் காட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். புகை பிடிப்பது தவறு, அதைத் தடுக்கனும்னா, சினிமாவில சிகரெட் காட்சிகளை இல்லாமல் செய்து, சிகரெட் பாக்கெட்டுல சின்னதா 'சிகரெட் உடல்நலத்துக்கு தீங்கானது'ன்னு குறிப்பிட்டா மட்டும் போதுமா? புகையிலைப் பயிர்செய்வதில் சில கட்டுப்பாடுகள்கொண்டு வரணும். சிகரெட் கம்பெனிகளின் லைசன்ஸைக் கேன்சல் செய்யனும். ஆனா, அதைச் செய்யமாட்டாங்க. ஏன்னா, அதன் மூலம் வரும் வருமானத்தை இழக்க இவங்கத் தயாரா இல்லை. அரசு மதுபானக் கடைகளால் மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. அதை வாங்கி பாக்கெட்டுல போட்டுட்டு, 'குடி குடியைக் கெடுக்கும்'னு யாருக்கு இவங்க போதிக்கிறாங்க. கள், நம்ம ஊர் சரக்கு; உணவும் மருந்தும் சேர்ந்த இயற்கையான போதைப் பொருள். ஆனா, அதைத் தவறுன்னு தடை பண்ணியிருக்காங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மாநிலங்கள்லயும் கள் இறக்கலாம், குடிக்கலாம். அந்த மாநிலங்கள்ல சரியா இருக்கிற ஒரு விஷயம் நம்ம மாநிலத்துல மட்டும் எப்படி தப்பா போச்சி? கள் இறக்க அனுமதிச்சா ஏழாயிரம் கோடி வருமானம் பாதியாக ஆயிரும். கள் இறக்கினா ஒரு சமூகமே வாழும். 150 ரூபாய்க்குக் குடிக்கிறவன், 50 ரூபாயில் திருப்தியா குடிச்சிட்டு மிச்ச 100 ரூபாயை வீட்டுல கொண்டு போய் கொடுப்பான். அந்த 100 ரூபாயை அவனிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கத்தான் கள்ளைத் தடை செய்து, ஐ.எம்.எப் சரக்குகளை அரசாங்கமே விற்குது.

சரி, 7500 கோடி வருமானம் தருகிறவங்கன்னு குடிமகன்களை இந்த அரசாங்கம் மரியாதையா நடத்துதான்னா அதுவும் இல்லை. 3 ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் போது கிடைக்கிற மரியாதை டாஸ்மாக் பார்களில் கிடைப்பதில்லை. டீ கடையில், போன உடனே 'வாங்க'ங்கிறான்; டேபிளைத் துடைக்கிறான்; தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறான்; லைட், ஸ்ட்ராங், சுகர் கம்மி, சூடு குறைவான்னு நாம சொல்றதுக்கு தக்கபடி போட்டு தர்றாங்க. ஆனா அரசாங்கம் நடத்துற டாஸ்மாக் பார்ல... உலகத்துல உள்ள மொத்த சாக்கடை ஈக்களும் அங்கதான் இருக்கு. டேபிளைத் துடைப்பதேயில்ல; குடிச்சி போட்ட பாட்டில் அங்கேயே கிடக்கும். எலி, பெருச்சாளி, குப்பைக்கு குறைவே கிடையாது. கொசுக் கடி இருக்க முடியாது. பாட்டில், சைடு டிஸ் சேர்த்து இவன் கொடுக்கிற 90 ரூபாய்க்கு அரசாங்கம் தருகிற பரிசு இவ்வளவு துன்பங்களும். வேற எந்தத் தொழில்லயாவது வாடிக்கையாளனை இவ்வளவு கேவலமா நடத்த முடியுமா? 3 ரூபாய் மதிப்புள்ள சைடு டிஸை 10 ரூபாய்க்கு விற்கிறான்; 7 பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்பு 1 ரூபாய். தண்ணீர் இலவசம் கிடையாது. 'குடி குடியைக் கெடுக்கும்'னு பிரச்சாரம் செய்கிற அரசாங்கமேதான் இந்த கொள்ளைகளை கண்டுக்காம அனுமதிக்குது. கொத்து வேலைக்காரன், பஸ் கண்டக்டர், சாதாரணக் கூலித் தொழிலாளி போன்றவங்கதான் இங்க குடிக்க வர்றாங்க. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசுகிற சோசலிஷ அரசாங்கம் தன் குடிமக்களையே பன்றியைவிடக் கேவலமா நடத்துகிறதை டாஸ்மாக் பார்ல பார்க்கலாம்.

எப்படி இத்தனைக் கொடுமைகளையும் குடிமகன்கள் பொறுத்துகிறாங்க? குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும்? குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு.

குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி? குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், 'குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு'ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்னிஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் 10 வயசுக்கு மேல் 40 வயசுக்குள் ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார்? அரசாங்கம்தானே. இந்த முரண்பாடு உண்மையிலேயே எனக்குப் புரியமாட்டேங்குது.''


''ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால், நீங்க வருவீங்களா?''


''சினிமாவுக்கு எழுதுகிற எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க; என் மீது மரியாதை வெச்சிருக்காங்க. நானும் அவங்க மேல மரியாதை வெச்சிருக்கேன். எனக்குத் தெரிந்து பிரமாதமான எழுத்தாளனாக வந்திருக்கக்கூடிய அனேகம் பேர் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களாக சினிமாவில் இருக்காங்க. பல இயக்குநர்கள், அவர்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்னு என்னைச் சொல்றாங்க; சந்தோஷம். ஆனால், அப்படிச் சொல்கிற பெரும்பாலான சினிமாக்காரங்க, தொடர்ந்து என் படைப்புகளில் இருந்து திருடுறாங்க என்பதுதான் வருத்தத்துக்குறிய விஷயம். ஊர்ல சொல்வாங்க... பிள்ளையில்லாதவன் சொத்துன்னு. நம்மூர் சினிமாக்காரங்களுக்கு தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் பிள்ளையில்லாதவன் சொத்து மாதிரி. வேண்டியதை, வேணும்கிற போது எடுத்துக்கிறாங்க. அந்தப் படைப்புக்கு சொந்தக்காரனிடம் அனுமதி பெறவேண்டும்; உரிய அங்கீகாரம் கொடுக்கனும்; அதற்கான விலையைக் கொடுக்கனும்னு எதுவுமே கிடையாது. கி.ராஜநாராயணனுக்குப் பிறகு தமிழ் சினிமாக்காரங்களால அதிகம் கொள்ளையடிக்கப்பட்ட எழுத்தாளர் நானாகத்தான் இருப்பேன். என் படைப்புகளில் வேண்டியதை அவங்க எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு காட்சியை எடுத்துக்கொண்டால்கூட அதற்கான அங்கீகராத்தையும் ஊதியத்தையும் எனக்குத் தரணும் என்றுதான் நான் கேட்கிறேன். ஒரு காட்சியில் தலையைக் காட்டிக்கிட்டுப் போறவனுக்கு கூட சம்பளம் கொடுத்தாகனும். ஒரு பாட்டு காசுகொடுக்காம வாங்க முடியுமா? ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட்டு இல்லாமல் வேற என்ன? கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி.

என் 'தலைகீழ் விகிதங்கள்' நாவல்தான் 'சொல்ல மறந்த கதை' சினிமாவாக வந்தது. 'அக்ரிமெண்ட்' போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, 'இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது' என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார்? எனக்கு நியாயமாகச் சேரவேண்டிய அங்கீகாரத்தை எப்படி ஒரு சக படைப்பாளியே மறுக்கலாம். இது எவ்வளவு நாணயக் குறைவானக் காரியம். எத்தனைக் கோடி செலவழித்துப் படம் எடுக்குறாங்க. எழுத்தாளனுக்கு உரிய பணத்தையும் அங்கீகாரமும் ஏன் கொடுக்க மாட்டேங்கிறீங்க?

என் சிறுகதைத் தொகுப்பு புதிதாக வந்தால், குறைந்தது 100 காப்பியாவது உதவி இயக்குநர்கள் வாங்குவாங்க. வாசிக்கிறப்ப கிடைக்கிற இலக்கிய அனுபவத்துக்காக அவங்க வாங்கலை. பழையது எல்லாவற்றையும் திருடியாச்சு, புதிசா என்ன திருடலாம் எனப் பார்க்குறாங்க. இதிலிருந்து எந்தக் காட்சியைச் சுடலாம், எந்த ஐடியாவை எடுத்துக் கொள்ளலாம் என்ற மோசடி உத்தியோடுதான் படிக்கிறாங்க. இந்த அடிப்படை நேர்மை, நாணயம் இல்லாத ஒருவர் எப்படி கலைஞனாக இருக்க முடியும்? எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும்? சினிமாக்காரங்ககூட பேசிக்கொன்டிருக்கவே பயமாக இருக்கு. நாம பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பு எடுத்துக்கிறாங்க. அடுத்த சினிமாவில் அது காட்சியா வந்துவிடும். ஒருத்தன் எனக்குப் போன் பண்ணுகிறான்... ''நான் இன்னார் இயக்குநரின் இன்னார் அஸிட்டென்ட் பேசுகிறேன். வெள்ளாளச் சமூகத்தில் தாலி அறுத்தா என்ன சடங்கு செய்வாங்க?'. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ''எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு''ம்னு கேட்க முடியுமா? ''சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்''னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா? அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும்? எந்தக் கலையை நிறுவிற முடியும்? அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்... ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்யா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா? நீ செய்கிற அதே செயலைத்தானே அவனும் செய்கிறான்.

நான் தொழில்துறையில் இருந்தவன். ஏழு முதல் எட்டு சதவிகிதம் லாபம்தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இவங்க வட்டி மட்டுமே 15 சதவிகிதம் கொடுக்கிறாங்க. என்றால் எவ்வளவு லாபம் எதிர்பார்க்கிறாங்கன்னு கணக்கிடுங்க.''

''ஆரம்பத்துல இருந்தே நாஞ்சில் வட்டார மொழி எழுத்தாளரா அடையாளம் காணப்படுறீங்க. வட்டார மொழிகளில் எழுதுவதை தமிழின் தனித்தன்மை சிதைத்துவிடும் என்கிறார்களே தமிழறிஞர்கள்?''

''அறிஞர்ங்கிறவன் யாரு? எழுதப்பட்டவைகளைத் தொகுத்து தன் அறிவைப் பெருக்கிக் கொண்டவன். ஆனால், கலைஞன் தன் அனுபவத்தின் மூலமாக வாழ்வில் இருந்து பெறுகிறவன். எனவே, அறிஞன் மாதிரி கலைஞனால் வாழ்வைப் பார்க்க முடியாது. அறிஞர்களின் முக்கியத்துவத்தை நான் மறுக்கலை. இப்படி மொழியை தண்ணீரிலும் அமிலத்திலும் போட்டுக் கழுவி, அவிச்சி சுத்தம் பண்ணி, பொதுத்தமிழ்ல எழுதனும்னு சொல்கிற அறிஞர்களுக்கு ஒரு அரசியல் இருக்கு. தமிழை செம்மொழி ஆக்க தோள் கொடுக்கிறவங்க நாங்கதான்னு மார்தட்டிக்கிறாங்க இவங்க. ஆனால், உண்மை நிலவரம் என்ன? தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களும் அறியாத ஆயிரக்கணக்கான சொற்கள் நம் வட்டார மொழிகள்ல இன்னும் இருக்கு. இந்தச் சொற்களைப் பாதுகாத்து, பதிவு பண்றது வட்டார மொழி எழுத்துகள்தான். மொழிங்கிறது ஒரு வாழ்க்கை. தஞ்சை, செம்புலம், நாஞ்சில்னு ஒவ்வொரு புலத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை அந்த வட்டார மொழியிலதான் சொல்லமுடியும். எங்கள் ஊர்ல 'இளநீர்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. 'கருக்கு'ன்னுதான் சொல்லுவோம். பனைமர மட்டை ஓரங்களில் கருப்பா ஒரு பகுதி இருக்கும். அதை வச்சி எதையும் வெட்டலாம். அதையும் கருக்குன்னுதான் சொல்லுவோம். மேலும், கருக்கு அருவான்னே ஒரு அருவா இருக்கு. எங்கே, எந்த இடத்துல சொல்றேங்கிறதை வச்சி வாசகர்கள் அதை புரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் ஏன் நான் உன்னுடைய வசதிக்காக, சௌகரியத்துக்காக என்னுடைய சொல்லை மாத்திக்கனும். மொழியை சுத்தம் பண்ணி எழுதினா, அதனுடைய உயிர்த் தன்மை செத்துப் போயிடும். அதன்பிறகு, மறைமலையடிகளும் மு.வ.வும் எழுதின தமிழைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு படைப்பாளியும், காலத்தால் அழிந்துவிடச் சாத்தியமுள்ள ஆயிரக்கணக்கான சொற்களைப் புடிச்சி வைச்சிருக்கான். இப்படி, படைப்பாளிதான் தமிழை செம்மொழி ஆக்குகிறான்; அறிஞர்களோ, பேராசிரியர்களோ ஆக்கலை. அறிஞர்கள், சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் மட்டுமே திரும்பத், திரும்ப ஆராய்ச்சிப் பண்ணி தமிழை செம்மொழி ஆக்கமுடியாது. சமகால இலக்கியத்துல என்ன நடக்குன்னு பார்க்கனும்.''


''இது அவசர யுகம். பரபரப்பா இருந்தால்தான் சம்பாதித்து வாழ முடியும்கிற நிலை. இதில் ஒருவர் ஏன் இலக்கியம் படிக்கனும்?''


''புத்தகம் படித்தும் இசை கேட்டும் ரிலாக்ஸாகப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகம் 40 வயசுல சைக்கியாட்ரிஸ்ட் அல்லது ஆன்மிகவாதிகள்கிட்டேதான் போகனும். எதிர்காலத்துல இந்தியாவில் சைக்கியாட்ரிஸ்டுக்கு அமோகமான பிஸினஸ் இருக்கு.''

Read More...

கனிமொழிக்கு கண்டனம்

திருநெல்வேலியில் கோயில் ஒன்றுக்கு சென்று சிற்பங்களை பார்வையிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முதலமைச்சர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி கிருஷ்ணா புரத்திலுள்ள ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில் சிற்பங்களை ஜனவரி 19ம் தேதியன்று திமுக எம்.பி. கனிமொழி பார்த்தார். ஆனால் அரை மணி நேரத்திற்கு மேலாக கோவில் சிற்பங் களை பார்வையிட்டவர் பெருமாளை தரிசிக்கவில்லை. கோயில் அர்ச்சகர் சாமிக்கு தீபம் ஏற்ற முயன்ற போது வேண்டாம் என்று கூறி அவமதித்துள்ளார்.

இந்த செயல் தெய்வபக்தி உள்ளவர்களின் உள்ளங்களை புண்படுத்தியுள்ளது.

கனிமொழியுடன் டி.பி.எம். மைதீன்கான் போன்ற முஸ்லிம்களும் நுழைந்திருக்கிறார்கள். இது இந்துக்களையும், கோயில் விதிகளையும் அவமதிக்கும் செயலாகும். இதற்கு நேர்மாறாக கோவை பேரூர் கோயிலுக்கு சென்று துரைமுருகன், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் சாமி கும்பிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்துக்கள் கோயிலுக்கு சென்றால் சாமியைப் பார்க்கிறார்கள். ஆனால் கனிமொழி கலையை ரசிக்கிறாராம். நமது முன்னோர்கள் கலைகளை தெய்வீகத்திற்கு அர்ப்பணித்தார்கள். இதில் தெய்வீகம், கலைகள் என்று பிரித்து பார்ப்பது அறிவீனம். ஆனால் இந்த விஷயத்தில் துரைமுருகனும், பழனிச்சாமியும் பாராட்டுக் குரியவர்கள்.

மசூதி, சர்ச்சுகளுக்கு செல்லும் போது தலையில் குல்லா, முக்காடு போட்டும், முழங்காலிட்டும் வழிபட்டு, அந்த மதத்தினரின் உணர்வுகளை மரியாதையோடும், கௌரவத்தோடும் ஏற்றுக் கொள்ளும் இந்த போலி நாத்திகவாதிகள் இந்து உணர்வுகளை மட்டும் அவமதிப்பது ஏன்?

இந்துக் கோயில்கள் ஒன்றும் அருங்காட்சியகம் அல்ல. பக்தி உணர்வுகளை வெளிப்படுத்தும் பக்தர் களுக்கு மட்டுமே உரியது. கனி மொழியை கோயிலுக்கு வர வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை. அப்படி இருக்கும் போது முதலமைச்சரின் மகள் என்பதால் ஆணவத்தோடும், நாகரீகம் தெரியாமலும் இந்து உணர்வுகளை புண்படுத்திய கனிமொழி மன்னிப்பு கேட்க வேண்டும்.

Read More...

டிராவிட், கங்குலி நீக்கம் சரியா, தவறா ?

நேற்று மத்தியானம் டிவியில் 'Breaking News' என்று கங்குலி, டிராவிட் நீக்கம் பற்றி எல்லா சேனல்களும் தங்கள் பங்கிற்கு கொளுத்தி போட்டது. வெங்சர்க்கர் பாரபட்சமான முறையில் தேர்வை நடத்தியுள்ளார் என்று கோபத்தில் திட்டினார்கள். சித்து NDTVல் நல்லா காமெடி செய்தார்.

எனக்கு என்னவோ இது டோனி எடுத்த முடிவு போல தெரிகிறது. ஆனால் துணிச்சலான முடிவு என்பேன்.

* ஆஸ்திரேலியா போன்ற வேகமான பிட்சில் நம் ஜூனியர் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க இது நல்ல சந்தர்ப்பம். ஜூனியர் வீரர்களை விளையாட தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அடுத்த உலக கோப்பைக்கு இப்பவே தயார் செய்ய வேண்டும்.

* சீனியர் வீரர்கள் ஒரு நாள் போட்டிக்கும், 20-20க்கும் லாயக்கு இல்லை. இங்கே சுறுசுறுப்பு அவசியம். running between the wickets and rotating strike ரொம்ப அவசியம்.

* மகேந்திர சிங் டோனி புதிய கேப்டன் டிரஸிங் ரூமில் சீனியர் பிளேயர் இருந்தால் அவருக்கு 'ஒரு மாதிரி' இருக்கும் அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் நம்புகிறேன். சச்சினுக்கு கூட நாளை இந்த நிலை வரலாம்.

இந்த அதிரடி முடிவினால் டிராவிட், கங்குலி நான்காவது டெஸ்ட் போட்டியில் அடிப்பார்களா, அடி படுவார்களா ?

Read More...

பாமரன் நீங்கள் கோழை - லீனாமணிமேகலை

குமுதம் 9.1.08 இதழில் பாரமரன் எழுதிய பகுதியை, லீனாமணிமேகலை 'படித்துவிட்டு கிழிப்பதும்' இந்த பதிவில்...

குமுதம் 9.1.08 பாமரனின் படித்ததும் கிழித்ததும் ...
நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்.

வடலூரில் இருக்கும் வள்ளலாரின் வாழ்விடத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள் தந்தை பெரியாரை. நடக்கவே சிரமப்பட்டு, தட்டுத் தடுமாறி ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடி வருகிறார் பெரியார். அம்மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கியபடி ஊரன் அடிகளும் மற்றவர்களும் உடன் வருகிறார்கள். ஒரு பிரதான அறையைக் கண்டவுடன் உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று விடுகிறார் பெரியார். அழைத்துப் போனவர்கள் ஏன் அய்யா நின்று விட்டீர்கள்? உள்ளே வாருங்கள் என்று கூற........அந்த அறையின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த அறிவிப்பினைக் காட்டுகிறார் பெரியார். அதில்: கொலை புலை தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம் என்றிருக்கிறது.

பெரியாரோ சுத்த அசைவம்.

“பரவாயில்லை அய்யா........உங்கள் மீது எமக்கு நிரம்ப மரியாதை உண்டு........நீங்கள் வாருங்கள்........’’ என்கிறார்கள் அழைத்தவர்கள்.

“உண்மைதான்........அதைப் போலவே நீங்கள் வைத்திருக்கும் அடிப்படைக் கொள்கைகளையும் நான் மதித்தால் அல்லவா நீங்கள் எனது கருத்துக்கள் மீதும் மரியாதை வைப்பீர்கள்? மற்றவர்கள் உங்களிடம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ........அப்படி நீங்களும் மற்றவர்களிடம் நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம்........வாங்கய்யா மற்ற பகுதிகளைப் பார்ப்போம்........’’ என்று திரும்பி நடக்கிறார் தந்தை பெரியார்.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எழுதிப் பழகினாலும் அந்தப் பாமரப் பெரியாரின் பண்புகள் எங்கே........?

கல்லூரிக்குப் போனாலும்

கவுன் போட்டுக் கொண்டுதான் போவேன்........

பள்ளிக்கூடத்துக்குப் போனாலும்

பர்முடாஸ் போட்டுக் கொண்டுதான் போவேன்........

என்று அடம்பிடிக்கிற தமிழகத்தின் ஒரு சில இலக்கிய மேதாவிகள் எங்கே?.



23.1.08 கோழை நீங்கள் ! - லீனாமணிமேகலையின் எதிர்ப்பு
அன்புள்ள திரு.பாமரன் அவர்களுக்கு
வணக்கம் 9.1.2008 தேதியிட்ட குமுதத்தில் 'உங்கள் பக்கங்களில்' இறுதியாக பெரியாரின் வடலூர் சம்பவத்தைப் படித்தையும், கல்லூரி-பள்ளிக்குச் செல்லும்போது கவுனையும் பெர்மூடாஸயும் போட்டுக்கொள்ள விரும்பும் இலக்கிய மேதாவிகளை 'கிழித்தை'யும் கவனித்தேன்.

பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக குறிப்பிட்டுக்கூட விவாதிக்க முடியாத கோழையாகிய நீங்கள், பல தளங்களிலும் சமுக விஷயங்களை அலசுவது, விமர்சிப்பதுமாய் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் பார்வைக்கு:

"ஒரு நாட்டிற்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக்காட்டுவதற்கும் ஆதாரமாயிருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும் உடைகளில் ஆண்-பெண் வித்தியாசம் இருக்க கூடாது. பெண்கள் ஜிப்பா போட வேண்டும், கிராப் வைத்துக்கொள்ள வேண்டும் அப்படி செய்பவர்களுக்கு 500 ரூபாய் பணம் கூட பரிசாகத் தருகிறேன்..."

(பெரியார் வாழ்க்கை நெறி, ரூ-10 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியீடு)

நீங்கள் இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க முயற்சிக்க வேண்டும். சே.குமேராவை டி-சர்ட்டில் அணிந்துகொள்வது, பெரியார் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இணைய தளத்தில் கூட்டம் சேர்த்து, விஷக்கிருமிகளைவிட மோசமான விவாதங்களைச் செய்வதையெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் உருப்படியாக அருகில் உள்ள நூலகம் தேடி உறுப்பினராகலாம். படிக்க இயலவில்லையென்றால் கற்றறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிந்து கொள்ளலாம். பெரியாரும், சே குரேராவும் 'பிராண்ட்' இல்லை. வாழ்க்கை நெறி; தத்துவம்
நன்றி
அக்கறையுள்ள
லீனாமணிமேகலை

( குமுதத்திலிருந்து தட்டச்சு செய்ததால் அச்சு பிழைகள் இருக்கலாம், குமுதத்தில் சே குவேரா டி.சர்ட்டில் பாமரன், ஸ்கேன் செய்யாததால் இங்கு போட முடியவில்லை, மன்னிக்கவும் )




பத்து ரூபாய் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கு இந்த பகுதி:

ஆன்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும்.ஜிப்பா போட வேண்டும்.உடைகளில் ஆண்--பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது.ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்க வேண்டும்.ஆண்களைப்போலவே தாங்களும் ஆகவேண்டுமே என்றில்லாமல் வீண் அலங்காரம் செய்து கொண்டு திரிவது பெண் சமுதாயத்தின் கீழ்ப் போக்குக்குத்தான் பயன்படும்.

நம்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை,நகை,துணி, அலங்கார வேசங்கள்தான் என்பதை 'அவர்கள்' உணரவேண்டும்.

பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்ளுவது அநாகரிகமும்--தேவையற்ற தொல்லையுமாகும்.ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக்கொள்ள வேண்டும்

நூல்: "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி, விலை ரூ-10"

Read More...

Sunday, January 20, 2008

ரீமிக்ஸ் பற்றி எஸ்.பி.பி, புலமைபித்தன், ஏ.ஆர்.ரஹ்மான்

சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன் - ரிமிக்ஸ் கலாட்டா பதிவை தொடர்ந்து எஸ்.பி.பி, புலமைபித்தன், ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து...



எஸ்.பி.பி பேட்டி ( ஆனந்த விகடன் 18.1.08)
"அதென்ன, அப்படி ஒரு கோபம் உங்களுக்கு ரீமிக்ஸ் மேலே?"

''கோபம் இருக்காதா? என்னிக் குமே ஒரிஜினாலிட்டிக்குக் கிடைக்கிற மரியாதையே தனி! பழைய பாடல்கள் எல்லாமே பொக்கிஷங்கள்! அதைக் கட்டிக்காக்காவிட்டாலும் பரவாயில்லை. அதோட ஜீவனைக் கெடுக்காம இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, இன்னிக்குப் போயிட்டு இருக்குற ரீமிக்ஸ் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமா நம்ம பொக்கிஷங்களைச் செல்லரிச்சுக் கிட்டு இருக்குன்னு தோணுது! இதை இதோடு நிறுத்திக்கிட்டா நல்லாருக்கும். நான் நம்ம மியூஸிக் டைரக் டர்ஸைக் குற்றம் சொல்ல மாட்டேன். படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவங்ககிட்டே, 'அந்தப் பழைய பாட்டோட ரீமிக்ஸ் வேணும்!'னு கேட்டு வாங்குற டைரக்டர்கள், புரொடியூஸர்கள்மேலதான் குற்றம் சொல்றேன். இந்த ஐடியாவில் புதுமை இருக்குன்னாலும், போகிற பாதை தப்பானது. தயவுசெஞ்சு இந்தத் தப்பை நாம நிறுத்திக்கலாம்!''

''இப்ப இருக்கிறவங்க எம்.எஸ்.வி. போட்ட எச்சிலைத்தான் சாப்பிடுறாங்கன்னு மேடையில உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டீங்களே?''

''ரஹ்மானுக்கு நன்றி சொல்லணும். எம்.எஸ்.வி. பத்தி நான் பேசினதை அழகா ஆமோதிச்சிருந்தார். இங்கே நான் எல்லோர் மேலயும் கோபத்துல இருக்கிறதா ஒரு பிம்பத்தை உருவாக்கிடுவாங்களோனு பேசிய பிறகு பயந்துட்டேன். ஆனாலும், இப்பவும் சொல்றேன்... அவர் போட்ட மிச்சத்தைதான் நாம எல்லோரும் சாப்பிடுறோம். அது என் கருத்து. அதுக்காக ராஜாவோ, ரஹ்மானோ சாதாரணம்னு சொல்ல வரலை. எல்லோரும் இங்கே திறமைசாலிகள்தான். தெலுங்குல கேட்டிருந்தா கண்டசாலாவோட மிச்சத்தை சாப்பிட்டோம்னு சொல்லுவேன். திரை இசையிலே ஒரு சகாப்தத்தை, நமக்கு முன்பே பிறந்து எம்.எஸ்.வி. சாதிச்சுட்டார். அப்போ நாம அவர் போட்ட மிச்சத்தை தானே சாப்பிட்டா கணும். அவர்கிட்டே கேட்டால், கே.வி. மகாதேவனைக் கொண்டாடுவார். யாரும் சுயம்புவா உருவாக முடியாது. நம்மை பாதிச்சவங்களை நாம கொண் டாட மறக்கக் கூடாது. அதனால தான் அப்படிப் பேசினேன். நான் பேசினதுல தப்பில்லைன்னுதான் இப்பவும் நினைக்கிறேன்!''




ஏ.ஆர்.ரஹ்மான் ( குமுதன் 9.1.08 )
ரீ_மிக்ஸ் பாடல்கள் பத்தி என்ன நினைக்கிறீங்க?

‘‘ரீமிக்ஸ் செய்வதில் தப்பில்லை. அது ஒரு டிரெண்ட், இந்த பாட்டுகள் மக்கள் விரும்புகிற வரைதான். அப்புறம் ஆட்டோமெட்டிக்கா அதுவே காணாம போயிடும். நல்ல ரீ_மிக்ஸும் இருக்கு. மோசமான ரீ_மிக்ஸும் இருக்கு. பழைய பாடலின் தன்மை கெடாமல் பண்றது வேற. கெடுத்து குட்டிச்சுவராக்குறது என்பது வேற’’ (சிரிக்கிறார்).

சமீபத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் ஒரு மேடையில் பேசும் போது, ‘இப்போதுள்ள மியூசிக் டைரக்டர்கள் எம்.எஸ்.வி. சாப்பிட்டு விட்டு போட்ட மிச்சத்தைத்தான் சாப்பிடுகிறார்கள்’ என்று கொஞ்சம் காட்டமாக சொல்லி இருந்தார். அது பற்றி?

‘‘அவர் சொன்னதை ஒரு பாராட்டா ஏன் எடுக்கக்கூடாது? அவர் நல்லவிதமாகத்தான் சொல்லியிருப்பார். எம்.எஸ்.வி. ஒரு முன்னோடி. அவர் வழியைப் பின்பற்றுங்கன்னு கூட சொல்லி இருக்கலாம். அதுதான் உண்மை. கொஞ்சம் உணர்ச்சி வேகத்தில் எச்சில், கிச்சில்னு சொல்லியிருக்கலாம். நிச்சயமாக தவறா பேசியிருக்கமாட்டார் என்பதுதான் என்னோட அபிப்ராயம்.’’.


புலமைப்பித்தன் பேட்டி ( குமுதம் 23.1.08 )
அன்று பாடலை அழகுபடுத்தின இளையராஜாவின் வாரிசு யுவன்சங்கர்தானே இப்போது இசையமைத்துள்ளார் ?
"ரகுமான் செய்தாலும் தப்புதான் யுவன் செய்தாலும் தப்புத்தான். இவங்க மோசமான பாட்டைத் தர்றது இல்லாம, ஏற்கெனவே உள்ள அற்புதமான பாடல்களையெல்லாம் அசிங்கபடுத்த ஆரம்பித்துவிட்டார்கள். 'பொன்மகள் வந்தாள்...' பாடலை எம்.எஸ்.வி எவ்வளவு பிரமாதமா செய்திருப்பார் அது இப்போது காட்டுக் கூச்சல், ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது. ஒரிஜினலாக இசையமைத்த மாமேதைகளை இவர்கள் இழுவுபடுத்துகிறார்கள்."

( புலமைப்பித்தன் போனில் லேட்டஸ்ட் பில்லா பாடலான 'மை நேம் இஸ் பில்லா' பாடல் தான் காலர் ட்யூனாக ஒலிக்கிறது !)

மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்க ? சைடுல ஓட்டு போடுங்க

Read More...

Saturday, January 19, 2008

இந்தியா அபார வெற்றி !


72 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

Read More...

Friday, January 18, 2008

புத்தகக் கண்காட்சி 17/1/2008

இந்த முறை புத்தகக் கண்காட்சியில் டிக்கெட் கவுண்டர் பின் புறம் இருந்த படங்களை பார்த்தீகளா ? பார்க்காதவர்கள் கீழே பார்க்கலாம்...






Read More...

திணறல் ஆஸ்திரேலியாவா ? இந்தியாவா ?

இன்றைய ஒரு மாலை பேப்பரில் இந்த இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வந்திருக்கு

பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா திணறல்
பெர்த் டெஸ்ட்: இந்தியா திணறல்

இட்லிவடை வாக்கெடுப்பில் இந்த மாதிரி முடிவு வந்திருக்கு



இதுவரை இந்த மாதிரி க்லோசாக வந்ததில்லை.

Read More...

18ஆம் தேதி செய்திகள்

போன மாசம் 18ஆம் தேதி வந்த செய்தியும், இந்த மாதம் 18ஆம் தேதி(இன்று) வந்த செய்தியும்.


டிசம்பர் 18

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழகத்தில் ஊடுறுவி விடாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை படையினர் அவர்களது கடல் பகுதியிலும், நமது படையினர் நமது எல்லைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இரு நாட்டுப் படைகளும் கூட்டு ரோந்தில் ஈடுபடும்.


- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்

ஜனவரி 18
வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான வரதராஜபெருமாள் உள்ளிட்டோரைக் கொல்லும் திட்டத்துடன் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உளவாளியான தம்பித்துரை பரமேஸ்வரன் என்பவர் உள்பட 8 இலங்கைத் தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

- செய்தி


எர்ணாகுளத்தில் பிடிபட்ட தமிழக தீவிரவாதிகளுக்கு விடுதலைப்புலிகளுடன் நேரடி தொடர்பு இருப்பது ஒரிசா போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

-செய்தி

Read More...

Thursday, January 17, 2008

பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா?

பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா? என்ற தலைப்பில் இன்று வந்த தினமணி செய்தி ? யாராவது இதை பற்றி சொல்லுங்கப்பா !

31-வது சென்னை புத்தகக் கண்காட்சிக்காக நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்திருக்கும் பதிப்பகங்களில் ஒன்று தமிழ்மண் பதிப்பகம். இப்பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனைச் சந்தித்தோம்.

அவர் கூறியதாவது:

""இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் கட்டமைப்பு பாராட்டும்படி உள்ளது. நிறைய இட வசதி, பார்வையாளர்கள் எளிதில் புத்தகங்களைப் பார்வையிட வசதி ஆகியவற்றைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் பதிப்பாளர்களுக்கு இடம் ஒதுக்கிய முறையில் சிறிய குறை உள்ளது. இங்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு அரங்கம் அமைக்க இடம் கொடுக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களே ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை எடுத்து தங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனால் சிறுபதிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பதிப்பாளர் சங்கத் தலைமையிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு இவ்வாறு இடம் ஒதுக்கப்படுகிறதோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.

சிறுபதிப்பாளர்கள் ரூ.17 ஆயிரத்துக்கும் மேலாக அரங்கத்துக்கு வாடகை கொடுத்து புத்தக விற்பனைக்கு வந்திருக்கும்போது, இப்படி வலுத்த பதிப்பகங்கள் பெரிய அளவுக்குப் புத்தகக் கண்காட்சியை ஆக்கிரமித்துக் கொள்வதால் ஒரு நாளைக்கு ரூ.5000-க்குக் கூட சிறுபதிப்பகங்களுக்கு விற்பனையாகாமல் போய்விடுகிறது. இதனால் சிறுபதிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள்.

வரும்காலத்தில் இம்மாதிரி நிலை ஏற்படாமல் ஒரு பதிப்பகத்துக்கு ஓர் அரங்கம் மட்டுமே ஒதுக்கிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்'' என்றார்.

Read More...

உலகம் முழுக்க பாப்புலர் ஆகும் இட்லி !

உலகம் முழுக்க இட்லி பாபுலர் ஆகிறது என்கிறார்கள். தகவலுக்கு...


( தகவல்: தட்ஸ் தமிழ் )

Read More...

Wednesday, January 16, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-01-08

மாட்டுப் பொங்கல் அன்று திரும்பவும் வருகிறார். முனீஸ்!

மைடியர் பாடிகாட் முனிஸ்,

எப்படி இருக்க நைனா? இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!.

மாட்டுப் பொங்கல்னாலே நினைவுக்கு வர்றது ஜல்லிக்கட்டு. இதுக்கு சுப்ரீம் கோர்ட் தடை போட்டது பழைய நியூஸ். இந்தத் தடையை நீக்கச் சொல்லி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுல மறு ஆய்வு மனுதாக்கல் செஞ்சது. தமிழக அரசு சொன்ன காரணம்...."400 ஆண்டு காலமாக பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்கு தடை விதிப்பதால் மக்களின் மத உணர்வை அது பாதிக்கும்," னு வாதாடியிருக்காங்க.

நீதிபதிகள் சும்மா இருப்பாங்களா? இந்த மாதிரி ஜல்லிக்கட்டுக்கு சொல்ற காரணங்களை ஏத்துக்க முடியாது. மத உணர்வை பத்தி ஜல்லிக்கட்டுல ஒரு நிலை, ராமர் சேது பாலம் தொடர்பான வழக்குல மத உணர்வு பத்தி இன்னொரு நிலைங்கறது எங்களுக்கு ஆச்சரியமா இருக்குன்னு சொல்லியிருக்காங்க. சுப்ரீம்கோர்ட் காரங்களுக்கு நம்ப அரசைப்பத்தி இப்பத்தான் தெரியுது போல. ஆக ஜல்லிக்கட்டு வழக்கில் மத உணர்வு ஜல்லியெல்லாம் அடிக்காதீங்கன்னு சொல்லிட்டாங்களாம்.

நம்ம வலைப்பதிவு மக்கள் மோடின்னா டென்ஷன் ஆயிடறாங்க. அதுக்காக சொல்ல நினைக்கறதை சொல்லாம இருக்கமுடியுமா? அதான் உன்கிட்ட சொல்றேன். மோடிக்கு காங்கிரஸை விட அதிகமா தொல்லை கொடுத்தவர் கேசுபாய் படேல் தான். ஆனா மோடி ஜெயிச்சவுடனே என்ன செஞ்சார் தெரியுமா? வரது இல்லத்துக்குப் போய் ஆசிவாங்கி, தன் புதிய அரசுக்கும் ஒத்துழைப்பு தரணும்னு கேட்டுண்டார். அட என்ன ஒரு நாகரிகம்!. நம்ம கலைஞர், ஜெ இவங்களெல்லாம் இதையாவது கத்துக்கனும். அண்ணாவிற்கு பிறகு இந்த நாகரிகம் போயே போச்சு!. பாடிகார்டு முனீ, நீயாவது கொஞ்சம் இவங்களுக்கும் நாகரிகம் சொல்லிக் கொடு.

தமிழக பஸ்களை விபத்தில்லாம ஓட்டினா கலைஞர் பரிசு கொடுக்கிறார்ங்கற உத்தரவுனால இப்பல்லாம் நீ ரொம்ப பாப்புலராமே, சந்தோஷம். தினமலர்ல எல்லாம் போட்டோ வருது. அப்படீன்னா ரொம்ப பிசியாவும் இருப்ப. அதனால டிவியெல்லாம் பார்க்கறதுண்டா? இப்ப எல்லாம் தினமலர் விளம்பரம் கலைஞர் டிவியிலே ரொம்ப காட்டறாங்க. விஜயகாந்த் டிவி பார்த்தியா? முழிக்காதே; நான் சொல்றது கே.டிவியைத்தான். வாரத்தில 10 விஜயகாந்த் படம் போடறாங்க. அப்ப கே.டிவி விஜயகாந்த் டிவிதானே? அதுக்காக பிசியா இருக்கறதே நல்லதுன்றியா? கொடுத்துவெச்சவம்பா.

'ரோபோ' படத்துக்கு நல்ல தமிழ் பேர் யோசிக்கிறாங்க. நீயும் ஏதாவது சஜஸ்ட் செய்யேன். அப்பத்தான் வரிவிலக்கு கிடைக்கும். இயந்திர மனிதன் அப்படீங்கறதை 'இயந்திரா'ன்னு சுருக்கலாம். அல்லது ஷங்கர் பேர் வைக்கற ஸ்டைலுக்கு தோதா அந்நியன், இந்தியன், முதல்வன் மாதிரி 'இயந்திரன்' னு வைக்கலாம். ஆனா இது இட்லிவடை காப்பிரைட், இந்த பேரை யூஸ் செய்ய எனக்கு அவங்க துட்டு தரனும். நீதான் சாட்சி.

சிவாஜி 175 விழா சென்னைல போன வாரம் நடந்தது, டிவியில காமிச்சாங்க, ஸ்ரேயா சின்ன ஃபிராக்(பாவாடைன்னு கூட சொல்லலாம்) உடைல நிறைய காலும், கொஞ்சம் தொடையும் தெரியும்படி வந்துட்டார். இது தப்பா? 'வந்த வேலையை'ப் பார்க்கறதை விட்டுவிட்டு அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கையோட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்திங்கறவர் காவல் நிலையத்துல புகார் கொடுத்திருக்கார். இது நியாயமா? இனிமே நிகழ்ச்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே இந்த சென்சார் அதிகாரிகள் வந்து ஓ.கே சொல்லனும் போல. போலீஸ் என்ன சொல்றாங்னா நிர்வாணமாக வராத பட்சத்தில் எந்த விதமான உடை அணியறதுங்கறது அவங்கவங்க சொந்த விருப்பமாம். தமிழ்நாட்டுக்கு ஒரு குஷ்புவே போதும்னு நினைச்சாங்களோ என்னவோ, நடிகை ஸ்ரேயா தான் அணிஞ்சு வந்த படுபகிரங்க உடைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கார். (அப்ப இனிமே அப்படி பாக்கவே முடியாதா?) இது தொடர்பா முதல்வர் கருணாநிதிக்கும் இந்து மக்கள் கட்சிக்கும் காவல்துறைக்கும் மன்னிப்புக் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கார். ஃபோட்டோ பக்கத்துல இருக்கு; பார்த்துவிட்டு சரியா தப்பான்னு நீயே சொல்லு பிரதர். :(



அடுத்து புக்ஃபேர்ல நடந்த கிழக்கு பதிப்பக புத்தக வெளியீட்டோட நிகழ்ச்சில எடுத்த இந்த ஃபோட்டோவையும் பாரு.. இதுல பத்ரி மேடைக்கு எப்படி வந்திருக்கார்? நல்ல வேளை இதுக்கு யாரும் கேஸ் போடலை :-) ( படம் உதவி எனி இந்தியன். நானும் ஒரு இந்தியன் என்பதால் படத்தை எடுத்து போட்டேன், தப்புன்னா சொல்லுங்க எடுத்துடறேன் )

பத்ரிக்கு அந்தப் பக்கத்துல யார் தெரியுமா நம்ம நல்லி குப்புசாமி செட்டியார் தான். முன்னாடி இவரைப்பத்தி பத்ரி இப்படி எழுதினார்; இதையும் கொஞ்சம் படிச்சுவை...

"எந்தவிதக் கவலைகளுமின்றி பேசுபவர்கள் நடராஜனும் நல்லி செட்டியாரும். அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைப் பேசலாம். ஆஃப்டர் ஆல் கேட்பவர்களுக்குத்தான், ஒரு கீரைவடை, ஒரு ஜாங்கிரி, ரவா கிச்சடி, தேங்காய் சட்னி, நல்ல காபி, ஓர் ஐஸ்கிரீம் நல்லி செட்டியார் தயவில் கிடைத்துள்ளதே. நடராஜன் அவருக்கு நண்பர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். இலக்கியம் செழிக்கட்டும்."


இந்த பதிவுல பத்ரி எழுதியது இந்த மேட்டர்

இந்த கமெண்டை நான் படிக்கலை, நீயும் படிக்காதே. ஏதோ இப்ப ரெண்டுபேரையும் ஒரே மேடைல பாக்கவும் பழசெல்லாம் நியாபகம் வந்தது, உன்கிட்ட சொன்னேன். அவ்ளோதான். வேற இதுல உள்குத்து எதுவும் இல்லை சரியா!

அடுத்த வாரம் திரும்பவும் சந்திக்கலாம்.

இப்படிக்கு வழக்கம் போல்
இட்லிவடை.

Read More...

Tuesday, January 15, 2008

38வது துக்ளக் ஆண்டு விழா கூட்டம்

துக்ளக் 38ஆம் ஆண்டுவிழா கூட்டதிற்குச் சென்ற போது மணி மாலை 2:45 அப்போதே கூட்டம் தேனாம்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிவரை இருந்தது. வாசகர் கூட்டத்தை விட போலீஸ் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.



எல்லோரிடமிருந்த தண்ணீர் பாட்டில் போன்ற சமாசாரங்களை எல்லாம் சாலைக்குப் பக்கதிலேயே போட்டுவிட்டுப் போங்கள் என்று போலீஸ் அன்பாகக் கேட்டுக்கொண்டது. உள்ளே போனவுடன் ஏர்போர்டில் செக் செய்வது போல் சோதனை செய்தார்கள். கைக்குட்டையைக் கூட உதறச் சொன்னார்கள். செல்ஃபோனை off செய்யச் சொல்லிவிட்டு அவர்களுக்கு முன் மீண்டும் ஆன் செய்து காண்பிக்கச் சொன்னார்கள். இந்த மாதிரி 6 இடங்களில் சோதனை செய்தபின் அரங்கத்தினுள் அனுமதித்தார்கள். உள்ளே சென்ற போது மணி 3:30. போனால் பல இடங்களில் கர்சீப் போட்டு சீட் பிடித்திருந்தார்கள்.

போனதடவையை விட இந்த முறை மீடியாக்காரர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். பலர் அதிமுகவுடன் பாஜக கூட்டு உண்டு என்று பேசிக்கொண்டார்கள். வந்தவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள். :)

சோ வழக்கம்போல் 'க்கும்' என்று கனைத்துவிட்டு மைக்முன் வந்து எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லிவிட்டு மோடி இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார்; ஐந்து நிமிடம் தாமதமாக ஆரம்பிக்க உங்கள் அனுமதி வேண்டும் என்றார். வாசகர்கள் எல்லோரும் சரி என்று சொன்னார்கள்.

மோடி ஐந்து நிமிடத்தில் வந்தார். கார் காமராஜர் அரங்கம் மேடைக்கே வந்தது. ஸ்கிரீன் பின்னால் இருந்ததால் இது தெரிந்தது.

மோடி வந்த உடன் "பாரத் மாதா கீ ஜே!!" என்று கோஷம் போட்டார்கள்.

கூட்டம் ஆரம்பித்ததும் இந்தக் கூட்டதுக்கு இலவசமாக பப்ளிசிட்டி கொடுத்த அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி தெரிவித்தார். "மோடியே திரும்ப போ" என்று நிறைய போஸ்டர்கள் பார்த்தேன். அவர் திரும்பி போக தான் போகிறார். இதுக்கு ஏன் போஸ்டர் ஒட்டானும்?. "இல்லை குஜராத் போல் தமிழகம் முன்னேறி விட்டதா அவர் இங்கேயே தங்க ? " என்று தன் அக்மார்க் நகைச்சுவையுடன் ஆரம்பித்தார்.

மோடியை நான் அக்டோபர் மாதத்திலேயே அழைத்தேன். ஏதோ முதல்வர் ஆன பிற்பாடு தான் நான் கூப்பிட்டதாக நினைக்க வேண்டாம் என்றார்.

இந்த முறை துக்ளக் ஸ்டாஃப் எல்லோரையும் கிண்டல் ரொம்ப இல்லாமல் அறிமுகம் செய்தார். வாசகர்கள் கேள்விக்கு பதில் சொன்னார். 'கவிஞர்' கனிமொழி, மன்மோகன் சிங்கின் அதிகாரம், ஜெ வீட்டில் பொங்கல் விருந்து, ராமதாஸின் கழுத்தறுப்பு, தேவகவுடா-குமாரசாமி அரசியல் விளையாட்டு, நெல்லை மாநாடு, விஜயகாந்த் என்று பல விஷயங்களைத் தொட்டார்.

பின்பும் பொதுவாகக் கொஞ்சம் பேசிவிட்டு கடைசியில் "Now I invite the 'Merchant of Death' என்று சொல்லிவிட்டு Merchant of Death for Corruption, Merchant of Death for Terrorism,.... என்று ஒரு பத்தை அடுக்கினார்.

பிறகு மோடி பேச ஆரம்பித்தார். "நான் சோவின் ரசிகன்" என்றார். நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன். தமிழக பாஜகவிற்கு “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை என்றார்.

தான் குஜராத்தில் என்ன சாதனைகள் செய்தார் என்று அழகாகப் பேசினார். அவரின் பேச்சு சோவின் பேச்சை விட நன்றாக இருந்தது.

"குஜராத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய, 'ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது. குஜராத்தில் வருவது ஆர்காடு மின்சாரம் இல்லை, அது 24 மணி நேரம் வரும் மின்சாரம்.

தேர்தல் வரும்போது எந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும்? எப்படி ஓட்டு சேகரிக்க வேண்டும்? என்பதை மறந்துவிட வேண்டும். எப்பொழுதுமே மக்களுக்கு தேவையான தொண்டுகளை செய்ய வேண்டும். அதன்மூலம், மக்கள் இதயங்களில் இடம்பிடிக்க வேண்டும். சமுதாயத்திற்கு என்ன பயன்பாடு என்பது குறித்து சிந்தித்து பொதுத்தொண்டு ஆற்றினால் தேர்தல் பற்றி கவலைப்பட தேவையில்லை தேர்தலில் வெற்றி தானாக தேடி வரும்.

700 நாட்களில் 1400 கீமீ தூரம் குழாய் போட்டிருக்கேன். அதில் கலைஞர் குடும்பத்துடன் காரில் போகலாம்; அவ்வளவு அகலம் என்றார்.

குஜராத் மாநிலத்தில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்துவதால் லஞ்சத்தை ஒழித்திருக்கிறோம். அனைத்து துறைகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதாலும், எனது அறையில் இருந்து கொண்டே அனைத்தையும் கண்காணிக்க முடிவதாலும் எங்கும் லஞ்ச, லாவண்யத்திற்கு இடமே இல்லை. மகாராஷ்டிரா-குஜராத் எல்லையில் வாகனப் பரிசோதனை செய்யுமிடம் (செக்-போஸ்ட்) உள்ளது. எங்களது எல்லையில் உள்ள செக்-போஸ்டை 24 மணி நேரமும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பதால், மகாராஷ்டிரா மாநில செக்-போஸ்ட் வருமானம் 200 கம்மியாக கிடைக்கிறது," என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

"பெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 49 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஜூலை மாதம் 13, 14, 15 தேதிகளில் நல்ல வெயில் இருக்கும். மற்றவர்கள் சுவிஸுக்கு போகும் போது, நான் குக்கிரமத்துக்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். விரைவில் 3% லிருந்து 0% ஆகும்," என்றார்.

2010க்குள் எல்லா கிரமத்துக்கும் அகல பட்டை வரும் என்றும் சொன்னார்.

மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.

சிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

மீடியா இவ்வளவு நல்லது சொல்லியிருக்கேன் ஆனால் இதை சொல்லும் போது தான் அவர்கள் எழுத ஆரம்பிக்கிறார்கள் அவர்கள் தேவை இது தான்," என்று மீடியாவை ஒரு பிடி பிடித்தார்.

என்னைப் பொருத்தவரை அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை. தீவிரவாதிகளை ஒழிப்பது மதசார்பின்மை என்றார். "if opposition to terrorism would be regarded as communalism. “If I have to pay the price, I am ready”. என்று அதிரவைத்தார்.

தேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என்ன என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இவர்களை என்ன என்று சொல்லுவது என்று மீடியா நண்பர்களைப் பார்த்து கேட்டார்.

என் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது. ஆனால் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் அன்று அகமதாபாத்தில் நடந்த கூட்டதில் சர்தார் வல்லபாய் பட்டேல் என்ற வார்த்தையை காங்கிரஸ் காரர்கள் 20 முறை சொல்லியிருப்பார்கள் ஆனால் மோடி என்ற வார்த்தையை 200 முறை சொன்னார்கள். அப்போது என்னிடம் 250 ஜோடி உடைகள் இருப்பதாகக் என்று குற்றம் சாட்டினார்கள். என்னிடம் 205 உடைகள் இருந்தன. (அவர்களுக்கு பூஜ்யத்தை எங்கே போடுவதென்று தெரியவில்லை.) நான் மக்களிடம் முறையிட்டேன், அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன்," என்றார்.

குஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 6 லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. அதற்கு 2000 மகப்பேறு மருத்துவர்கள் கூட கிடையாது என்பது கசப்பான உண்மை. குஜராத் மருத்துவர்களிடம் நான் ஒரு MOU போட்டேன். கிராமத்தில் மகப்பேறு மருத்துவம் பார்த்தால் டாக்டருக்கு 2000 ரூபாய். பேஷண்டுக்கு 200+200 கன்வேயன்ஸ் அலவன்ஸ், டெயிலி அலவன்ஸ் 200 என்று கொடுக்கிறேன். அதனால் சிசு மரணம் கணிசமான அளவு குறைந்துள்ளது. தற்போது குஜராத்தில் 800+ மகப்பேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற தகவலையும் சொன்னார்.

எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும். கவர்மெண்டுக்கும் கவர்னஸுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்றார். குஜராத்தில் நடப்பது “minimum Government - maximum Governance”

அமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.

குஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.

எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.

வளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கும் விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும்.

சுதந்திரம் வருவதற்கு முன் நிறைய பேர் அதற்கு போராடினார்கள், ஆனால் காந்தி அந்த போராட்டத்தை ஒரு மாஸ் இயக்கமாக தோற்றுவித்தார். இந்தியாவிற்கு அது போல ஒரு Development Movement தேவை என்றார்.

மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் செய்ததை சொல்கிறேன் ஆனால் மற்ற அரசியல் தலைவர்கள் தாங்கள் செய்யப் போவதை சொல்கிறார்கள். (ஆனால் செய்வதில்லை) என்று தன் பேச்சை முடித்தார்.

கூட்டம் முடிந்தவுடன் எல்லோரும் தங்கள் நியூஸ் பேப்பர், புத்தகங்கள் கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். போலீஸுக்கு கொஞ்சம் பதட்டம் போய் ரிலாக்ஸ்டாக இருந்தார்கள்.

மோடி இந்திய நாட்டின் பிரதமராக வந்தால் நாம் போன ஜன்மத்தில் செய்த புண்ணியம் என்பது என் கருத்து.

நல்ல கவரேஜ் கொடுக்கிறார் டோண்டு படிக்க இங்கே போகவும்

Read More...