இன்று வந்த இரண்டு நியூஸ்...
காது-1
எழும்பூரில் வாலிபரின் காதை கிழித்த சப்-இன்ஸ்பெக்டர்
எழும்பூர் ரெயில் நிலையத்தை யொட்டி மாநக ராட்சிக்கு சொந்தமான பொதுகழிப்பிடம் ஒன்று உள்ளது. அங்கு பராமரிப்பு பணி செய்து வருபவர் வெங்கடரமணய்யா (வயது 35) சம்பவத்தன்று கழிப்பிட சுவற்றில் ஏராள மான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம் பரம் இதை பார்த்தார். வெங்கட ரமணய்யாவை கூப்பிட்டு மாநகராட்சி சுவற்றில் போஸ்டர் ஒட்ட எப்படி அனுமதித்தாய் என கேட்டு முகத்தில் லத்தியால் அடித்தார், அதோடில்லாமல் அவரை ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டுசென்று அங்கு வைத்தும் அடித்து உதைத்துள்ளார். இதில் வெங்கடரமணய்யாவின் காது கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் மயங்கி விழுந்தார்.
அவரை சினிச்சைக்காக ராயபேட்டை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது காதை பரிசோதித்த டாக்டர்கள் நரம்பு பாதிக்கப்பட்டுள்ள தாகவும் இன்னும் 3 மாதங்கள் ரத்தம் கசியும் என தெரிவித்தனர். சிகிச்சை பெற்றுவந்த அவரை போலீசார் மிரட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
காது-2
ரூ.50 தராததால் நண்பரின் காதை கடித்து துப்பிய வாலிபர்
வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்தவர் அருள் (19), அதே பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (19) நண்பர்கள்.
இருவரும் ரூ.50 பந்தயம் வைத்த கோலிக்குண்டு விளையாடினார்கள். இதில் முனியாண்டி தோல்வி அடைந்தார்.
இனால் அருள், முனியாண்டியிடம் ரூ.50 தருமாறு கேட்டார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அருள் முனியாண்டி மீது பாய்ந்தார். வெறி பிடித்தவர் போல் மாறிய அவர் முனியாண்டியின் காதை கடித்து துப்பினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
எம்.கே.பி. நகர் இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Monday, December 29, 2008
காதும் காது வைத்த மாதிரி...
Posted by IdlyVadai at 12/29/2008 09:00:00 PM 6 comments
Labels: செய்தி
Friday, December 26, 2008
தமிழீழ அங்கீகார மாநாடு
இந்த மாநாட்டில் என்ன நடந்தது ? யாருக்காவது தெரியுமா ?
கூட்டமே நடக்கவில்லை என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா ?
ஏன் எந்த செய்தி ஊடகங்களிலும் அப்டேட் இல்லை ?
மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் கூட இதை பற்றி ஏன் எதுவும் பேசவில்லை ?
Posted by IdlyVadai at 12/26/2008 11:20:00 PM 11 comments
கோடி அர்ச்சனை - விடுதலை - மின்சாரம்
அரசு வங்கிதானா? - மின்சாரம் விடுதலையில் வந்த கட்டுரை...
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர்தான் மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர்.
தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம்; அதனை எந்த வகையில் கடைப்பிடித்தாலும் தண்டனைக்கு உரியது என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பிரிவு.
கணவன் இறந்தவுடன் பெண்ணை கணவன் சடலத்தோடு கொளுத்த வேண்டும் என்கிற சதி எனும் உடன்கட்டை ஏற்றுதலைப் பச்சையாக ஆதரித்தவரும் இவர். இதுவும் சட்டப்படியான குற்றமே!
குழந்தைகள் திருமணத்தையும் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ஆதரித்த ஆச்சாரியாரும் அவரே. இதுவும் தண்டனைக்குரிய குற்றமே என்று சொல்ல வேண்டியதில்லை.
இப்படிப்பட்ட ஒருவருக்கு கோடி அர்ச்சனை செய்யப் போகிறார்களாம் - செய்யட்டும் தாராளமாக! அது அவாளுக்கே உள்ள இனவுணர்வும் - பாமர மக்கள் மத்தியில் ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் ஏற்பாடாகும். அது எப்படியோ நாசமாகப் போகட்டும்.
இந்தக் காரியத்தைச் செய்ய தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி (இந்தியன் வங்கி) எப்படித் துணை போகலாம் அல்லது பயன்படுத்தப்படலாம் என்பதுதான் நம் கேள்வி.
இந்தியன் வங்கி எல்லாக் கிளைகளிலும் கோடி அர்ச்சனைக்கான நன்கொடையைக் கட்டணமின்றிச் செலுத்தலாமாம். வங்கிகளுக்கு என்று சட்ட திட்டமோ வரைமுறைகளோ கிடையாதா? பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற நிலைதானே இது.
கோடி அர்ச்சனை காணிக்கை இரசீதுகளை குறிப்பிட்ட இந்தியன் வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாமாம்.
இவையெல்லாம் எந்த விதிமுறைகளுக்குக்கீழ் வருகின்றன என்பது அவாளுக்கே வெளிச்சம்.
காஞ்சி மடம் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து இருப்பதாகவேகூட வைத்துக் கொள்வோம்;
அதற்காகக் கட்டணமின்றிப் பணம் செலுத்துவது எப்படி? அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல.
ஒரு ஸஹஸ்ர நாம நன்கொடைக் காணிக்கை ரூ.300 என்ற கணக்கின்படி கோடி அர்ச்சனை என்றால் 300 கோடி ரூபாய் கட்டணமின்றிச் செலுத்தப்படுகிறது என்றால், இதனால் வங்கிக்கு எவ்வளவு பெரிய இழப்பு?
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டாலும் அதில் பெரிய நிலை அதிகாரிகள் எல்லாம் பார்ப்பனர்களாகவே நுரை தள்ளி வழிந்து காணப்படுவதால் வங்கி என்பது அவாளின் சங்கரமடத்தின் அடுப்பங்கரை சாம்பார்ச் சட்டியாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.
காஞ்சி மடத்துக்காகக் காட்டப்படும் இந்தச் சலுகை மற்றவர்கள் விஷயத்திலும் பின்பற்றுவார்களா?
வங்கிகள் கடன் கொடுக்கும் விழாக்களில்கூட சங்கராச்சாரியார்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து அவர்கள் மூலமாகக் கடன் வழங்கும் பார்ப்பன வேலைகூட நடப்பதுண்டு. சங்கராச்சாரியாரே கடன் கொடுப்பதுபோல பாமர மக்கள் மத்தியில் ஒரு மாயை ஏற்படுத்தும் பார்ப்பனத்தனம் இது.
யாருடைய அனுக்கிரகத்தால் இந்தக் கோடி அர்ச்சனை நடைபெறுகிறதாம்? ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகிய இருவரின் பூர்ண அனுக்கிரஹத்துடன் இந்தக் கோடி அர்ச்சனை நடைபெறுகிறதாம்.
கொலைக் குற்றவாளிகளாக - ஜாமீனில் அலைந்து கொண்டி ருக்கும் இந்தப் பேர்வழிகளின் அனுக்கிரகமாம் - கோடி அர்ச்சனையாம்.
பார்ப்பனர்களின் யோக்கியதை எந்த டிகிரியில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?
இதுபோன்ற குற்றத்தை பார்ப்பனரல்லாத ஒருவர் செய்தால் இந்தப் பார்ப்பன ஏடுகள் எப்படி எப்படியெல்லாம் கொச்சைப் படுத்துவார்கள் - இழிவுபடுத்துவார்கள்!
கொலை குற்றம் மட்டுமல்ல - பெண்கள் விஷயத்தில் இந்தக் காம கோடி எப்படி எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்று சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?
இவை அத்தனையையும் உதிர்த்துவிட்டு பெரிய மனுஷன் போல - பெரிய வாளாக இவாள் திரிகின்றனர் - இந்தத் தீய சக்திகளுக்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கி துணை போகிறது என்றால் இதன் தன்மையை எடை போட்டுப் பார்க்க வேண்டாமா?
பார்ப்பான் கொலை செய்தால் அவன் சிகையை (மயிரை) மட்டும் முண்டிதம் செய்தால் போதும் என்கிற மனுதர்மம் - இன்னொரு வகையில் இங்கே ஆட்டம் போடுகிறது என்பதல்லாமல் வேறு என்ன?
பரிதாபத்துக்குரிய சூத்திர பஞ்சம மக்களே பார்ப்பனர் களைத் தெரிந்து கொள்வீர்!
Posted by IdlyVadai at 12/26/2008 10:25:00 AM 20 comments
Labels: கட்டுரை
Thursday, December 25, 2008
டாப் 10 கேள்விகள்
வழக்கம் போல் வாசகர்கள் பதில் சொல்லலாம் :-)
1. ஆடிட்டர் ராஜசேகர், கலைஞர் டிவி நிர்வாகி சரத் ரெட்டி இருவருக்கும் என்ன வித்தியாசம் ? இவர்கள் வீட்டு பாத்ரூம் வழுக்குமா ?
2. எவ்வளவு ஓபமா புத்தகங்கள் இந்த புத்தககண்காட்சியில் வரப்போகிறது ?
3. கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் கிறிஸ்துமஸ் பாட்டியுடன் வருவதில்லை ?
4. கலைஞருக்கு இப்போதெல்லாம் கனவுகள் வருவதில்லையே ஏன் ?
5. நம்மவர்களின் சத்யம் மீது வெளிநாட்டவர்க்கு நம்பிக்கை வருமா ?
6. [deleted]
7. புத்தகம் எழுத எவ்வளவு ஆகும், சமர்ப்பணம் செய்யவைக்க எவ்வளவு ஆகும்?
8. சீனாவில் காதலன் தன் காதலிக்கு முத்தம் கொடுத்த போது, காதலியின் வாய் பகுதியில் காற்றழுத்தம் குறைந்து போய், காது பகுதியில் பாதிப்பு உண்டானதாம். 8. முத்தம் கொடுத்தானா 10 ஹார்ஸ்பவர் பம்ப் வைத்து சுத்தம் செய்தானா?
9. படிப்படியாக மதுவிலக்கு என்பதில் எவ்வளவு படிகள் கடந்து செல்ல வேண்டும் ?
10. கேள்வியின் நாயகன் கேள்வி கேட்பவரா பதில் சொல்பவரா இல்லை தானே கேள்வி தானே பதில் பார்ட்டியா?
Posted by IdlyVadai at 12/25/2008 09:20:00 AM 11 comments
Labels: இட்லிவடை-பதில்கள், நகைச்சுவை
Wednesday, December 24, 2008
மதுரைக்கு அழகிரி, மொட்டை மாடிக்கு ?
நமக்கு தமிழ் நாட்டிலிருந்து அடித்து விளையாடும் புது வீரர் யார் கிடைத்துள்ளார் ! விவரங்கள் கீழே..
கிழக்கு நடத்தும் மொட்டை மாடி கூட்டத்தில் நடப்பதை பற்றி ஹரன்பிரசன்னா எழுதிவருகிறார். கூட்டத்தை விட இவர் எழுத்து சுவாரஸ்யம் :-)
ஒரு நல்ல கவிஞரை கூட இந்த மாதிரி மொட்டை மாடி கூட்டம் எப்படி மாற்ற முடியும் என்று வியக்கிறேன்.
சூஃபியிசத்தை சுவிங்கம் போல் கடித்து துப்புகிறார்.
கிருஷ்ணனுக்கு வெட்டியை கொண்டு கீதையை உபதேசிக்கிறார்.
நாளை என்ன எழுதுவாரோ ? பாரா (ஆயிலில்) வழுக்கிவிழாமல் இருப்பாரா ?
மதுரைக்கு அழகிரி, மொட்டை மாடிக்கு பிரசன்னா
இப்படிக்கு
பிரசன்னாவின் முதல் கொலைவெறி ரசிகன்
இட்லிவடை
( நேரில் சந்திக்கும் போது உங்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் )
பிரசன்னாவிற்கு வேறு கொலைவெறி ரசிகர்கள் இருந்தால் பின்னூட்டதில் தைரியமாக சொல்லலாம். அவர் கையெழுத்து போட்ட ஏதாவது ஒன்று உங்களூக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
Posted by IdlyVadai at 12/24/2008 11:20:00 PM 4 comments
Labels: நகைச்சுவை
Tuesday, December 23, 2008
தங்கபாலுவும், இளங்கோவனும்அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர நினைக்கிறார்கள்: தொல்.திருமாவளவன்
Type your summary here
தங்கபாலுவும், இளங்கோவனும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர நினைக்கிறார்கள்: தொல்.திருமாவளவன்
இன்று அவர் அளித்த பேட்டி: ”திருமங்கலம் தொகுதியில் தி.மு.க.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழு ஆதரவு அளிக்கும். தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. சத்தியமூர்த்தி பவன் தாக்குதல் திட்டமிட்ட செயல் அல்ல. அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு. இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன். ஆனால் தமிழக காங்கிரசார் இதை பெரிதுபடுத்தி விட்டனர். தங்கபாலுவும், இளங்கோவனும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர விரும்புகிறார்கள். அதற்காக எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கைகள்தான் விடுதலைச் சிறுத்தைகள் மீதான மோதல்.”
Posted by IdlyVadai at 12/23/2008 09:54:00 PM 6 comments
தமிழகத்தில் மாயாவதி ஆட்சி !
நேற்று மாயாவதி தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசியுள்ளார். (தமிழ்நாட்டில் 2011 எவ்வளாவு பேர் இது போல வர போகிறார்கள் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது.)
மேலே உள்ள படத்தில் இவர் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பாரா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது.
விடை தெரியாதவர்கள் கீழே பார்த்துக்கொள்ளலாம் :-)
நாமத்துக்கு சைடில வெள்ளையா இருக்கும். நடுவில சிகப்பா இருக்கும். இங்கே opposite :-)
Posted by IdlyVadai at 12/23/2008 03:57:00 PM 8 comments
Monday, December 22, 2008
திமுகவில் அழகிரியின் கை 30 டிகிரி உயர்ந்திருக்கிறது
நேற்று: திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ”நான் இல்லாவிட்டால்… என்ன செய்வீர்கள்” என்று ஆவேசமாக கேட்டார்
இன்று: ”எனது அன்பு தம்பியின் வேண்டுகோளை ஏற்று நான் தேர்தல் பணிக்குழு தலைவராக தொடர்வதற்கு முடிவு செய்துள்ளேன்”
நாளை: ?
Posted by IdlyVadai at 12/22/2008 03:12:00 PM 6 comments
சின்னகுத்தூசி - பெரிய கோணூசி
முரசொலி கட்டுரை மற்றும் தினமணி கட்டுரை இந்த பதிவில்...
முரசொலி கட்டுரை
‘கல்கி’ போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு வாரம் தவறாது முதல்வர் கலைஞரை கேலி செய்து, கண்டித்து, தாக்கி எழுதாவிட்டால் பொழுதுபோகாது. ஜென்மம் சாபல்யம் அடையாது.
கலைஞர் சரியில்லை; அவரது ஆட்சி சரியில்லை என்று அலுக்காமல் சலிக்காமல்
கை சளைக்காமல் எழுதுவார்கள்.
சரி; அப்படியானால் வேறு யார் ஆட்சி வந்தால்- யார் முதல்வரானால் எல்லாம் சரியாகிவிடும்? நல்லாட்சி மலர்ந்து விடும் என்று கேள்வியெழுப்பினால்
- ஜி.கே. வாசன்
- ப. சிதம்பரம்
- ஆர். நல்லக்கண்ணு
- என். வரதராஜன்
- தொல். திருமாவளவன்
- டாக்டர் ராமதாஸ்
- வைகோ
ஆகியோரது கட்சிகள் - ஆட்சிக்கு வந்தால் இவர்கள் முதல்வர் ஆனால் நல்லாட்சி மலரும் - எல்லாம் சரியாகிவிடும் - என்று ஒருபோதும் - மறந்தும்கூட எழுதிவிடமாட்டார்கள்.
ஜெயலலிதாதான் அவர்களது இஷ்ட தெய்வம்; ஜெயலலிதா முதல்வராகிவிட்டால் - 1991 - 1996 போல 2001 - 2006 போல ஒரு ‘நல்லாட்சி’(!) மலர்ந்து விடும் - எல்லாமே சரியாகிவிடும் என்றுதான் நினைப்பார்கள்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிவிட வேண்டும் என்பதற்காகவே - கலைஞர் சரியில்லை; அவரது ஆட்சி சரியில்லை என்று குறை கூறியபடியே இருப்பார்கள்; குற்றங் கண்டுபிடித்தபடியே இருப்பார்கள்!
இதோ இந்த வாரம் ஞாயிறன்று கடைகளுக்கு வந்த ‘கல்கி’யிலிருந்து ஒரு கேள்வி - பதில்:
கேள்வி :- ‘மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த பிராமணர்கள் பூணூல் அணியக் கூடாது. பொட்டு வைக்கக்கூடாது’ என கருணாநிதி கூறியிருப்பது?
இது கேள்வி.
இந்தக் கேள்விக்கு ‘கல்கி’ அளித்துள்ள பதிலைப் பாருங்கள்:-
"நமது அரசியல் சாசனத்தை மதிப்பவராகில் அவ்வாறு கூறும் உரிமையே அவருக்குக் கிடையாது!
இது ஒருபுறமிருக்க - புறச்சின்னங்கள் - அடையாளங்கள் எல்லா ஜாதியினருக்கும் உண்டு. பிராமணர்களை மட்டுமே குறி வைப்பது கருணாநிதி போன்றோரின் பொழுதுபோக்கு - அரசியல் ஆயுதம்.
புறச்சின்னங்கள் களையப்படுவதாலேயே சமத்துவ உணர்வு ஏற்படும் என்கிற அனுமானமும் அபத்தமானது" - என்று கல்கி - வியாக்யானம் செய்துள்ளது.
‘கல்கி’யின் இந்த வெண்டைக்காயால் விளக்கெண்ணையில் தோய்த்து எழுதப்பட்ட இந்த வியாக்யானம் எவ்வளவு அபத்தமானது என்பதை விளக்க - வேறு எங்கும் ஆதாரங்களைத் தேடி அலையவேண்டிய அவசியமில்லை.
கல்கியின் அபிமான மதகுரு சுயசாதித் தலைவர் - ‘கல்கி’ இன்னமும் வாரா வாரம் தவறாது ‘அருள்வாக்கு’ என்ற பெயரில் ஒரு பக்கக் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறதே; ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் உபதேசங்களை - அந்த சங்கராச்சாரியாரே - அவாள் பாஷையில் சொல்வதானால் ‘மகாப் பெரியவாள்’ - அவரது கட்டுரைகளின் தொகுப்பான - ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகத்திலேயே -
பிராமண ஜாதி பிராமண ஜாதியாகவே நீடித்து - மற்ற ஜாதியினருக்கெல்லாம் வழிகாட்டும் ஜாதியாக நீடிக்க - பிராமண ஜாதியின் ஆதிக்கத்தில் மற்ற ஜாதியினர் எல்லாம் அடங்கி - ஒடுங்கி அடிமைகளாக தொடர்ந்து அதல பாதாளத்திலே அமுந்திக்கிடக்க பிராமணன் என்ன செய்யவேண்டும் - என்ன செய்யத் தவறிவிட்டான் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.
மகாப் பெரியவாள் - வர்ணாஸ்ரம தர்மத்தின் பாதுகாவலர்; பிராமணன் பிராமணனாகவே - உயர் சாதிக்காரனாகவே நீடிக்கவேண்டும்.
100க்கு 97 சதவீதத்தினரான பார்ப்பனரல்லாத சமுதாயம் அப்படியே சூத்திரர்களாகவே நீடிக்கவேண்டும்.
பிராமண ஜாதியின் மேலாதிக்கம் பட்டொளி வீசிப் பறந்த காலமே ‘இந்து’க்களின் பொற்காலம்! என்பதை நிலைநாட்ட தமது வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்!
1. அவர் - உச்சிக்குடுமியும் பூணூலும் - பஞ்சக்கச்சமும் வேதபாராயணமும் நெற்றிச் சின்னங்களும் பிராமணனிடம் இருந்தபோது பிராமண ஆதிக்கம் மேலோங்கி நின்றது.
2. இப்போது பிராமணன் அவைகளை கைவிட்டு விட்டதால்தான், மற்ற ஜாதியினர் அவனை முன்பு போல மதிப்பதில்லை
- என்று ஆதங்கத்தோடும் - அழுத்தம் திருத்தமாகவும் ஓங்கியடித்துக் கூறியிருக்கிறார். அவரது - (தெய்வத்தின்) குரல் - முதல் பாகத்தில் 186ம் பக்கத்தில் அவர் அளித்துள்ள அருள்வாக்கை அப்படியே வரி பிறழாமல் கீழே தருகிறோம்.
‘ஜாதி என்றாலே மகா அநாகரிகமான ஏற்பாடு என்று இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டும்படியாகியிருப்பதற்கு யார் காரணம்? ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விழுவதற்கு யார் பொறுப்பாளி?’ என்று ஒரு கேள்வியை எழுப்பினேன் அல்லவா?
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். வர்ணதர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராம்மணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச ஷேமமும், லோக ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.
பிராம்மணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மானுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமத்தை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான்.
கிராப் வைத்துக் கொண்டான், ஃபுல்ஸூட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப் படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில் போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான்.
வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன் வரை ரட்சித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும் புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்துவிட்டான்.
சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி, வேத சப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோகnக்ஷமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில் இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும், மரியாதையும் காட்டி வந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன் மாதிரியாக (நஒயஅயீடந, பரனைந. அடினநட) வைத்துக் கொண்டார்கள்.
இப்போது தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தைவிட்டு, பட்டணத்துக்கு இவன் வந்து, இங்கிலீஷ்காரன் தந்த படிப்பு, அவன் கொடுக்கிற உத்தியோகம், அவனுடைய வாழ்க்கை முறை இதை எல்லாம் எடுத்துக் கொண்டு, இதனால் தானே ஏதோ ரொம்பவும் நாகரிகத்தில் உயர்ந்து விட்டதுபோல் ‘தாட் பூட்’ என்று பண்ணியதை மற்ற ஜாதியினர் பார்த்தார்கள். இதுவரை நல்லதற்கெல்லாம் இவனை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டிருந்த அவர்கள் இப்போது ஒழுங்கு தப்பிப் போவதிலும் இவனையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் பாட்டுக்குத் திருப்தியோடு செய்து வந்த தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தையும் விட்டு, நகரவாசம் (வடிறn டகைந), இங்கிலீஷ் படிப்பு, வெள்ளைக்கார அரசாங்க உத்தியோகம் இவற்றுக்கு மற்றவர்களும் ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
பிராம்மணனே புத்தியால் ஆகிற காரியங்களை ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாகச் செய்து வந்திருக்கிறான் அல்லவா? ஆதியிலெல்லாம் இவனுடைய புத்தி கொஞ்சம் கூடத் தன்னலனுக்குப் பிரயோஜனமாகாமல் சமூக nக்ஷமத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டு வந்தது. இந்தத் தியாக விசேத்தாலேயே அது பிரகாசமாக சாணை தீட்டிய கத்தி மாதிரி கூர்மையாக இருந்தது. இப்போது இவனுக்கு சமூக nக்ஷம நோக்கம் போய், தன்னலமான லௌகிக ஆசைகள் எல்லாம் வந்தபின் அந்த புத்திப் பிரகாசம் மழுங்க வேண்டியதுதான். இவனுக்கென்று ஏற்பட்ட கடமையைச் செய்யவே முன்பு இவனுக்கு புத்தி வன்மையும் பகவத் பிரசாதமாகக் கிடைத்திருந்தது. கடமையை விட்டபின், அந்த புத்திக்கூர்மை மழுங்க வேண்டியதுதான்.
ஆனாலும் - சைக்கிளில் காலால் பெடல் பண்ணுவதை நிறுத்திய பிற்பாடுகூட, ஏற்கெனவே உந்தின வேகத்தின் சேஷத்தால், கொஞ்சம் தூரம் அது பெடல் பண்ணாமலே ஓடுகிறது அல்லவா? அந்த மாதிரி, பிராம்மணன் ஆத்மிக வித்தைகளைவிட்டு லௌகிக வித்தைகளில் போய் விழுந்த பின்னும், ஏற்கெனவே தலைமுறை தலைமுறையாக இவனுடைய பூர்விகர்கள் பெடல் பண்ணியிருந்த பலம் இவனுக்குக் கொஞ்சம் மிஞ்சியிருந்தது. இவனாகப் பெடல் பண்ணா விட்டாலும் அவர்கள் சேமித்து வைத்த புத்திப் பிரகாசம் இவனுக்குள் இன்னமும் பாரம்பரியம்மாகக் கொஞ்சம் வந்தது. இந்த மூளைப் பலத்தினால்தான் இங்கிலீஸ்காரனின் படிப்பு முறையில் ஆச்சரியப்படும்படியாகத் தேர்ச்சி பெற்றான். அவர்களுடைய உத்தியோகம், சட்டம், தொழில் முறைகள் ஆகியவற்றை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டு இவற்றில் அவர்களுக்கே தெரியாத தந்திரங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற அளவுக்குச் சதுரனாகிவிட்டான் - என்பது மகாப் பெரியவாளின் அருள்வாக்கு "ஹிந்து சமூகம் பாழானதிற்கு பிராம்மணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்" - என்கிறார் அவர். ஆனால் - அவரது சீடகோடியான ‘கல்கி’யோ - பிராமணன் அதைக் கைவிடவேண்டும், இதைக் கைவிடவேண்டும் என்று கருணாநிதி சொல்வது அபத்தம் என்று புலம்புகிறது!
பிராமணன் பிராமணனாக இருக்கத் தகுதியான உச்சிக்குடுமி - பூணூல் - பஞ்சக் கச்சம் ஆகியவற்றை அவன் கைவிட்டதுதான் பிராமண ஜாதி மதிப்பிழந்து போனதற்குக் காரணம் என்று மகாப் பெரியவாள் சொன்னால் அது தெய்வத்தின் குரல்.
சமத்துவம் ஏற்பட - பிராமணர்கள் பூணூல் அணியக்கூடாது; நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது என்று தலைவர் கலைஞர் ஏன் கருதுகிறார்?
மகாப் பெரியவாளின் தெய்வத்தின் குரலை ஊன்றிப் படித்து உண்மையைத் தெரிந்து கொண்டதால்தான் கூறுகிறார்.
ஜாதிகள் நீடிக்கவேண்டும்; பிராமணன் உயர்ஜாதிக்காரனாகவே ஆதிக்கம் செலுத்தவேண்டும். சமத்துவ சமூகம் - ஜாதி பேதமற்ற சமுதாயம் அமையாமல் தடுக்க அவன் பூணூல் அணியவேண்டும் - உச்சிக்குடுமி வைத்துக் கொள்ளவேண்டும் - நெற்றிப் பொட்டு இட்டுக் கொள்ளவேண்டும் - என்று - சமத்துவத்துக்கு எதிராக மகாப் பெரியவாள் குரல் கொடுத்தால் அது அருள்வாக்கு தெய்வத்தின் குரல்.
பிராமண ஜாதி என்று ஒன்று இருக்கும் வரையில் - அவன் பூணூல் அணிவதை நிறுத்தாத வரையில் - பொட்டு வைத்துக் கொள்வதைக் கைவிடாத வரையில் சமத்துவம் ஏற்பட இவையெல்லாம் தடையாகவே இருக்கும் என்று கலைஞர் சொன்னால் அது அபத்தம்!
அருள்வாக்கு என்பதற்கும் அபத்தம் என்பதற்கும் அவாளின் அகராதியில் அர்த்தமே வேறுதான்!
- சின்னகுத்தூசி
( நன்றி: முரசொலி )
தினமணி கட்டுரை
அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.
பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!
இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் "அரசு அப்பல்லோவையே' தோற்றுவிக்கலாம்!
ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்' பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!
அலைவரிசைக் கற்றையினை "முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு'
இதென்ன கோயில் பிரசாதமா?
அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?
கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!
"முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது' முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?
ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?
அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!
பாரதீய ஜனதா அருண்சௌரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்சௌரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!
அருண்சௌரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?
பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?
இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.
இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!
வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். " என்ன விலை? என்று கேட்டேன். "கட்டு அஞ்சு ரூபாய்' என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. "ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க' என்றாள்.
"முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை' என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி' "முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்' என்றேன்.
"அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?
பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. "இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்." அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்' என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.
"அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?
"வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற;
"முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை' என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், "உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?' என்று கேட்டேன்.
"இருபத்தைஞ்சு ரூபாய்' என்றாள்.
"அவள் ஐந்து ரூபாய்' என்கிறாள். நீ "இருபத்தைந்து ரூபாய்' என்கிறாயே என்றேன்.
""அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.
இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!
இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, "பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் "உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.
சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியா விட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?
இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், "இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!
தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?
தாழ்த்தப்பட்ட மக்களில் தூய்மையே வடிவான கக்கன் போன்ற பெருமக்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்னொரு கக்கனைத் தேர்வு செய்யக் கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!
தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்யப் பதவியும் ஒரு தடை என்றவுடன், அதையும் கூடத் தூக்கி எறிந்து விட்டார் அம்பேத்கர்.
இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி, சாதி இசைத் தட்டைப் புரட்டிப் போட்டார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காதென்றால், கடைசியாகச் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் கருணாநிதியிடம் தொட்டில் தொட்டு இருந்து வரும் பழக்கம்!
ஏதோ தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்னே இந்த வகுப்பு மந்திரிகளை பாராட்டியவர்களெல்லாம், இப்போது ஏன் பொறுக்க முடியாதவர்களாகி விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையும் விளங்கும், தன்னுடைய சாதிச் சிந்தனையில் உள்ள கேடுபாடுகளும் தெரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம் செய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதானே!
பார்ப்பனர்கள் குற்ற நடத்தையில் ஈடுபட்டால், குறைவான தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று மனுநீதி சொன்னது!
கடந்த காலங்களில் அதற்கெதிராக ஒரு கொதிப்பு ஏற்பட்டது. " ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?' என்ற கேள்வி எழுந்தது!
தவறு செய்கின்றவன் தன் கட்சியினனால், அவனைக் காப்பாற்ற அவனுடைய முழுச் சாதியையும் இழுத்துக் கொள்வார் கருணாநிதி.
தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்லை? எந்தச் சாதிக்குச் சங்கமில்லை?
எவன் தப்புச் செய்தாலும், அவனைத் தண்டிப்பது ஒட்டு மொத்த சாதியைத் தண்டிப்பதாகும் என்பது போல் கருணாநிதி பம்மாத்துச் செய்வது அவருடைய அழுகிய சிந்தனையின் விளைவே!
பழைய மனுநீதியை மனு எழுதினார்; புதிய மனுநீதியைக் கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கிறார்!
( நன்றி: தினமணி )
இந்த தினமணி கட்டுரை முரசொலி கண்ணில் படவில்லை என்று நினைக்கிறேன். கேள்வி பதிலுக்கே சின்னகுத்தூசி என்றால், கட்டுரைக்கு பெரிய கோணூசி எழுதியிருப்பார்
Posted by IdlyVadai at 12/22/2008 01:02:00 PM 4 comments
Saturday, December 20, 2008
கடைத்தேங்காயை எடுத்து ....
'கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது' என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் - சத்யம் - மேடாஸ் டீல்
இது என்ன கூத்து என்று கேட்பவர்களுக்கு முன் கதை சுருக்கம் :சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ், இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமாகும். (Satyam)சத்யம் நிறுவனத்துக்கு - ராமலிங்க ராஜூ நிறுவனத் தலைவர்.
(Matyas) மேடாஸ் பிராபர்டீஸ் - (Satyam என்ற சொல்லை திருப்பி போட்டால் (Matyas) ) தனது மகன்களின் ரியல் எஸ்டேட் நிறுவனம்.
ராஜு குடும்பத்துக்கு 8.5 சதவீத பங்குகள் உள்ளன. மீதம் அனைத்தும் முதலீட்டாளர்களின் பணமே. அந்தப் பணத்தில் 1.6 பில்லியன்(8000 கோடி) டாலரை எடுத்து தனது மகன்களின் இரு நிறுவனங்களில் முதலீடு செய்ய போவதாக அறிவித்தது.
மேடாஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் பங்குகளை 1.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், அதன் துணை நிறுவனமான மேடாஸ் இன்ப்ரா நிறுவனத்தின் பங்குகளை 300 மில்லியன் டாலருக்கும் கையகப்படுத்தப் போவதாக ராஜூ அறிவித்தார்.இதற்கு பெரும் கண்டனம் கிளம்பியுள்ளது. இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், விப்ரோ போன்ற ஐ.டி. துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்த நிலையில், சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனப் பங்கின் விலை 30.22 சதவீதம் (ரூ.68.45) சரிவடைந்து. நியூயார்க் பங்குச் சந்தையிலும் இந்நிறுவனப் பங்கின் விலை, கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு பெரும் சரிவை சந்தித்தது. இதையடுத்து அந்த முதலீட்டை நிறுத்தி வைப்பதாக சத்யம் அறிவித்துள்ளது.
“சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (ஐ.டி) பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஐ.டி. நிறுவனத்தை வாங்குவதற்கு பதிலாக, ரியல் எஸ்டேட் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை வாங்குவது ஆக்கப்பூர்வமானது. இதனால், இதர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். நிறுவனம், தகவல் தொழில்நுட்ப மற்றும் பீ.பி.ஓ. சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபடும்” - பீ.ராமலிங்கராஜு கூறுகிறார்.
அதிக வருவாயை ஈட்டி தருவதில் ஐ.டி. துறை பொன் முட்டையிடும் வாத்தாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உள்ளது. ஆனால் இத்துறைக்கு வாய்ப்பு குறைந்துள்ளது என்று அதன் நிறுவனரே கூறி இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
சத்யம் நிறுவனத்திடம் தற்போது பணமாக 5,500 கோடி இருக்கிறது. இது வரை இவர்கள் முதலீட்டாளர்களுக்கு ஸ்பெஷல் டிவிடண்ட் எதுவும் கொடுத்ததில்லை. இந்த கூத்துக்கு பிறகு முதலீட்டார்களை குளிர்விக்க ஸ்பெஷல் டிவிடண்ட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்பார்க்கபடுகிறது.
இந்த பதிவில் சத்யம் என்ற சொல் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை குறிப்பது. வேறு எந்த அர்த்தமும் அதற்கு இல்லை.
Posted by IdlyVadai at 12/20/2008 10:07:00 AM 8 comments
Labels: வர்த்தகம்
Friday, December 19, 2008
டாப் 10 டாய்லட் குறிப்புகள்
டாப் 10 டாய்லட் குறிப்புகள்
1. அமர்வதற்கு முன் தயவுசெய்து மூடியைத் திறந்துவிடவும். திறந்தவுடன் எட்டி பார்க்காதீர்கள்
2. ஆண்களே - கழிப்பானுக்கு அருகில் செல்லவும்.. நீங்கள் நினைக்கும் அளவுக்கெல்லாம் அவ்வளவு நீளம் இல்லை
3. பெண்களே - முடிவு வரை அமர்ந்தே இருங்கள். இடையில் சீரியல் பார்க்க ஓடாதீகள்.
4. காகிதத்தை இரண்டு பக்கம் பயன்படுத்தவும். இன்னும் நதிநீர் பிரச்சினை தீரவில்லை!
5. நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து இருக்காலாம். பத்து நிமிஷத்துக்கு பிறகு் உள்ளே ஒருவர் வந்து கவிதை படிப்பார் பரவாயில்லையா ?
6. வெள்ள அபாயம் இருக்கிறது. வெள்ளம் வந்துவிட்டால் சீட்டுக்கு அடியில் Life vestடை தேடாதீர்கள். ஏதாவது ஒரு அமைச்சர் வெள்ள நிவாரணத்துடன் வரும் வரை காத்திருக்கவும்.
7. மற்ற சப்தங்களை அமுக்க, பாடுவதும் விசிலடிப்பதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
8. தங்கள் மேலான சுகந்தங்களை அறவே அகற்றிட முழு ஃப்ளஷ் செய்யவும். மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் வந்தாலும் ஃப்ளஷ் செய்யலாம். ( கழிவறை சுத்தம் செய்பவருக்கு ஆயுள் காப்பீடு இல்லை )
9. டாய்லட் பிரஷ் கொண்டு தயவு செய்து பல் தேய்க்காதீர்கள்.
10. குறிபார்த்து அடிக்க தெரிந்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பவர் கட் பிரச்சனை இன்னும் தீரவில்லை.
(நன்றி: இட்லிவடை என்று போடாமல், இதை பிரிண்ட் செய்து உங்கள் வீட்டு டாய்லட்டில் தாராளமாக ஓட்டலாம், எனக்கு ஆட்சேபனை இல்லை )
தொடர்புடைய பதிவு: அடிக்கடி கேட்கப்படாத கேள்விகள்
Posted by IdlyVadai at 12/19/2008 03:01:00 PM 9 comments
Labels: நகைச்சுவை
Thursday, December 18, 2008
டாப் 10 கேள்விகள்
இட்லிவடை பதில்களுக்கு கேள்விகள் வராததால் பத்து கேள்விகளை நானே கேட்டுள்ளேன். உங்களுக்கு தெரிந்த பதில்களை பின்னூட்டதில் சொல்லலாம்.
1. தலைப்பாகட்டு பிரியாணி என்றால் என்ன ? அதை எப்படி செய்வது ?
2. ‘டெல்லி சிப்ஸ்’ என்ற உருளை கிழங்கு சிப்ஸ் எப்படி செய்வது ? ( தி.நகர் ராமசாமி தெருவில் இருக்கும் Mansuk's கடையில் கிடைக்கிறது )
3. புயலுக்கு ரீட்டா, காத்ரினா என்று பெண்ணின் பெயரை வைத்திருக்கிறார்களே ஏன் ?
4. கோலிவூட்டில் இறுதிச் சுற்று இந்திய அழகி பார்வதிக்கு ஏற்ற சிவபெருமான் யார் ?
5. ரயிலில் மூன்றடுக்கு படுக்கை வசதியை கொண்டு வந்த லாலு, டாய்லெட்டில் இரண்டு அடுக்கு வசதியை கொண்டு வருவாரா ?
6. ஸ்பெக்டரத்தில் எத்தனை நிறங்கள்? எப்போதெல்லாம் நிறங்கள் மாறும்? ”முடிந்து போன விஷயம் ?” என்றால் என்ன ?
7. பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருப்பதென்றால் வீடு எங்கே இருக்கவேண்டும்?
8. எந்திரன் ரிலீஸுக்கு முன் தினம் யார் யாரைச் சந்திப்பார்கள்? 1. கலாநிதி மாறன் - ரஜினிகாந்த், 2 தயாநிதி மாறன் - ரஜினி, 3. மாறன்ஸ்+கலைஞர் - ரஜினி+ஷங்கர் 4. பெப்ஸி உமா - கருணாஸ்
9. பொங்கலுக்கு சர்க்கரைப்பொங்கல் பொருள் இலவசம். அதே போல பக்ரீத்துக்கு ஆடு இலவசம் என்று அறிவிப்பு வருமா ?
10. மொட்டை மாடிக்கு சோ தானே பொருத்தம், அவர் ஏன் இன்னும் அழைக்கப்படவில்லை?
Posted by IdlyVadai at 12/18/2008 03:25:00 PM 13 comments
Labels: நகைச்சுவை
லாலுவிற்கு தெரிந்த, தெரியாத (3)டயர்
லாலுவிற்கு தெரிந்த, தெரியாத டயர் எது விவரம் கீழே...
லாப நோக்கில் ரயில்களில் பக்கவாட்டில் உள்ள இரண்டடுக்கு படுக்கை வசதி மூன்றடுக்காக மாற்றப்பட்டுள்ளது. இதனால் உடலை வளைத்து, நெளித்து, ஊர்ந்து, தவழ்ந்து சென்று தான் நடுபடுக்கையில் தூங்க முடியும்.
ஆண் அழகன் போட்டியில் உலக அளவில் வெள்ளி வென்ற மீர் முகமது, லாலுவைப் பார்த்ததும் இன்னும் பூரித்த்த காட்சி( ஐந்து லட்சம் பரிசு தொகை கொடுத்திருக்கிறார் லாலு)
லாலு வுக்கு தெரிந்த டயர், தெரியாத டயர் எது என்று இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்
Posted by IdlyVadai at 12/18/2008 12:44:00 PM 1 comments
Labels: செய்தி
நோ கமெண்ட்ஸ் !
செய்தி: ரஜினிகாந்தின் `எந்திரன்' படத்தை சன் டி.வி. நிறுவனம் தயாரிக்கிறது
அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று அறிவிப்பு
Posted by IdlyVadai at 12/18/2008 11:35:00 AM 3 comments
Wednesday, December 17, 2008
இலவசமாக சர்க்கரைப் பொங்கல்! 70 கோடியில் அல்வா!!
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் சர்க்கரை பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசம் எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவு - இது செய்தி.
சரி என்ன என்ன பொருட்கள் எல்லாம் இலவசம் என்ற பட்டியல் கீழே...
பச்சரிசி 500 கிராம்,
வெல்லம் 500 கிராம்,
பாசி பருப்பு 100 கிராம்,
முந்திரி, திராட்சை, ஏலக்காய் 20 கிராம்
இதை வைத்துக்கொண்டு சக்கரைப் பொங்கள் செய்ய முடியுமா என்று சமையல் குறிப்பு எழுதும் மாமிஸ் அல்லது வீட்டில் சமையல் செய்யும் ஆண்களோ பின்னூட்டதில் சொல்லலாம்.
70 கோடி அல்வா என்ற வாசகத்தை பார்த்து இது ஏதோ ஸ்பெக்டரம் ஊழல் என்று நினைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த விளக்கம் : அரிசி, வெல்லம், பாசி பருப்பு, முந்திரி,திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றின் இன்றைய மதிப்பு ரூ.40 ஆகும். தமிழ்நாட்டில் 1 கோடியே 99 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அனைத்து கார்டு களுக்கும் சர்க்கரைப் பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித் துள்ளது. எனவே இதற்கு சுமார் ரூ.70 கோடி செலவு ஆகும்.
Posted by IdlyVadai at 12/17/2008 03:32:00 PM 13 comments
Labels: செய்தி
Tuesday, December 16, 2008
சினிமா கலைஞர் - அரசியல் கலைஞர் பேட்டி
சினிமா கலைஞர் - அரசியல் கலைஞர் பேட்டி.
கமல் தினத்தந்திக்கு அளித்த பேட்டி
கேள்வி:- தமிழ் ரசிகர்கள் பற்றி உங்களின் உண்மையான கருத்து?
கமல்:- தொடர்ந்து நான் செய்யும் புது முயற்சிகளை எல்லாம் வெற்றி பெறச் செய்பவர்கள். இவர்களுக்கும் எனக்கும் நடுவில் நிறைய மொழி பெயர்ப்பாளர்கள் கூட்டம் போடாமல், ஒதுங்கி நின்றால், தமிழ் ரசிகனின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் கருவிகளில் ஒன்றாய், நானும் இருப்பேன்.
கேள்வி:- தமிழ் சினிமாவின் தொழில் நுட்பத் தரம் உயர்ந்த அளவு படத்தின் `தரம்' உயரவில்லை என்பது குறித்து உங்கள் கருத்து?
கமல்:- தரத்தை உயர்த்துவது, உருவாக்கும் கலைஞர்கள் கையில் உள்ளது. பங்குச் சந்தை வியாபாரம், பண்டம் மாற்று வியாபாரம், தோல் வியாபாரம் போன்ற தொழில்களுக்கு விதிக்கப்படும் விதிமுறைகளுக்குள் அடங்காத தொழில் வடிவம் எமது தொழில். ராமாயணத்தை தமிழில் எவ்வாறு மொழி பெயர்க்க வேண்டுமென்றோ, யார் மொழி பெயர்க்க வேண்டும் என்றோ, மக்களோ, வியாபாரிகளோ முடிவு செய்யவில்லை. தரம் உணர்ந்த மன்னனும் கவிச்சக்கரவர்த்தி கம்பனும் முடிவு செய்தனர்.
மக்கள் விரும்புகிறார்கள் என்ற போர்வையில், விவரம் முழுவதுமாகத் தெரியாத வியாபாரிகள் மட்டுமே விதிக்கும் விதிமுறைகளுக்கு அடங்கி தமிழ் சினிமா நடக்கும்வரை, தரம் உயர வாய்ப்பே இல்லை.
சுருக்கமான பதில் - தரம் உயரவே இல்லை!
கேள்வி:- விமர்சனங்களுக்கு மதிப்புக் கொடுப்பது உண்டா?
கமல்:- தெருவில் நடந்து போகும்போது, யார் யார் பேச்சுக்கெல்லாம் செவி மடுப்பது என்று எல்லோருக்கும் ஒரு நிர்ணயம் இருப்பது போல்தான் இதுவும்.
தெருவில் வழி கேட்பவருக்கோ, மணி கேட்பவருக்கோ பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். "பள்ளம், பார்த்துச் செல்லுங்கள்'' என்பவருக்கு செவி சாய்ப்பது தற்காப்பு.
தன் நிலையே உணராமல் குடித்துவிட்டு போதையில் பினாத்துபவனிடமோ, பெண் குலத்தார் அங்க பாகங்களை கிண்டலடிக்கும் மட்டரகமான ஆட்களையோ, நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். ரொம்பச் சேட்டை கூடிப்போனால் பதிலடியும் கொடுப்போம் அல்லவா? அது மாதிரித்தான் விமர்சனங்களும். நியாயம், தரம் ஆகியவை மட்டுமே என்னை விமர்சனங்களை மதிக்கச் செய்யும்.
கேள்வி:- திரையில் பரிசோதனை முயற்சிகளுக்கான சூழல், இன்னும் இங்கே வரவில்லை என்று நினைக்கிறீர்களா?
கமல்:- கண்டிப்பாக வரவில்லை. அதனால்தான் நான் செய்யும் வர்த்தக யுக்திகளைக்கூட, பரிசோதனை முயற்சி என்கின்றனர் சில குதிரை வீரர்கள்! குண்டுச் சட்டிக்குள் சவாரி பழகும் அவர்களின் கூற்றை எப்படி ஏற்பது?
கேள்வி:- நீங்கள் நடித்த பழைய மசாலாப் படங்களை இப்போது பார்க்கும்போது, குற்ற உணர்ச்சி ஏற்படுமா?
கமல்:- நான் சிறு வயதில் செய்த பிழைகளை திருத்திக்கொண்டு விட்டதால் குற்ற உணர்வு இல்லை. வளர்ந்த உணர்வுதான்.
கேள்வி:- "ஆஸ்கார்'' பரிசு பெற வேண்டும் என்ற ஆசை, இப்போது போய் விட்டதா?
கமல்:- இன்னும் வரவே இல்லை. `ஆஸ்கார்' வாங்கினால், விருந்தாளியாக - விதேசியாக வாங்கக்கூடாது. அமெரிக்கர்களுடன் அமெரிக்கப் படத்தில் நடித்து அவர்களின் கவுரவ முத்திரையைப் பெறவேண்டும். அந்த ஆசை அமெரிக்கப் படத்தில் நடித்த பிறகுதான் வரும்.
கேள்வி:- சினிமா என்பது, மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உண்டா?
கமல்:- அந்தக் கருத்திலும் உடன்பாடு உண்டு. அது மட்டுமே என் கருத்தல்ல.
கேள்வி:- உங்களுக்குப் பிடித்த சினிமா - ரசிகர்களுக்குப் பிடித்த சினிமா... எப்படி சமநிலை செய்து கொள்கிறீர்கள்?
கமல்:- எனக்குப் பிடித்த சினிமாவை அவர்களுக்கும் பிடித்த சினிமாவாக்கிக் காட்டுவதற்காகத்தானே எனக்கு இத்தனை சம்பளம்.
இதில் சமநிலை என்று ஒன்றில்லை. சாமர்த்தியம்தான். சில சமயம் ரசிகர்கள் என்னைவிட சாமர்த்தியசாலிகள் என்றும் நிரூபித்துள்ளனர்.
"டூயட்'' தேவையா?
கேள்வி:- நமது படங்களில் இன்னும் `டூயட்' பாடி ஆடிக்கொண்டிருக்க வேண்டுமா?
கமல்:- கண்டிப்பாய் ஆடத் தேவையில்லை. நவீன வீதி நாடகங்களுக்கு உள்ள தெளிவு கூட சினிமாவுக்கு இன்னும் வரவில்லை. சினிமா இன்றும் பழையபாணித் தெருக்கூத்தின் பாதிப்பிலிருந்தே விடுபடவில்லை. தமிழ் சினிமாவில் எனக்கும் பங்கு உண்டு என்று உணர்ந்தே இதைச் சொல்கிறேன்.
கேள்வி:- சினிமாவுக்காக எல்லாவற்றையும் கொடுத்திருக்கும் உங்களுக்கு சினிமா கொடுத்திருக்கும் பெரிய விஷயம் என்ன?
கமல்:- என்னை வசதியாய் வாழ விட்டிருக்கிறதே...
கேள்வி:- `எல்லா திறமைகளும் இருந்தும், இன்னும் குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருக்கிறோமே' என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கிறதா?
கமல்:- இது எல்லா கலைஞர்களுக்கும் வரும் ஆதங்கம். வரவேண்டிய ஆதங்கமும்கூட. எல்லா திறமைகளும் இருக்கிறதா என்பதை சுயபரிசோதனை செய்யும் வேளையில், அவ்வைக் கிழவி வந்து, நான் கற்றதின் அளவை குமட்டில் குத்தி ஞாபகப்படுத்துகிறாளே!
கேள்வி:- சிவாஜியின் வாரிசாக உங்களை சொல்கிறார்கள். உங்களின் வாரிசாக இன்றைய நடிகர்களில் யாரை சொல்வீர்கள்?
கமல்:- என் நினைவறிய சிவாஜி அவர்கள் என்னை வாரிசாக அறிவிக்கவில்லை. அப்படி ஆக நான்தான் பேராசைப்பட்டேன். மக்கள் ஆசீர்வதித்தார்கள், அவரும் பெருந்தன்மையாக மவுனம் காத்தார்.
அவர் வழிதான் எனதும். யார் அந்த அந்தஸ்துக்கு ஆசைப் படுகிறார்களோ, அவர்களே அதற்குத் தகுதி உடையவர்களாக ஆகட்டும். நானும் ரசிகர்களில் ஒருவனாய் இருந்து ரசிப்பேன்.
கேள்வி:- நல்ல படங்கள் தருவதற்கு பொருளாதாரம் ஒரு தடை என்று நினைக்கிறீர்களா?
கமல்:- இல்லவே இல்லை. அறிவும் அதற்கான ஆதாரமும் இல்லாது போனால்தான் தடை.
கேள்வி:- உங்கள் மனதில் உயரத்தில் வைத்திருக்கும் தமிழ்ப்படம்?
கமல்:- பாரதி, பெரியார், அண்ணா போன்றோரின் புகைப்படங்களே என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழின் படங்கள்.''
கேள்வி:- முதன் முதலாக கதாநாயகனாக நடித்தபோது இருந்த கமலுக்கும், "மர்மயோகி'' கமலுக்கும் என்ன ஒற்றுமை, வேற்றுமை?
கமல்:- ஒற்றுமை பெயர். வேற்றுமை தாடியின் அடர்த்தியும், நீளமும். மற்றபடி முதல் படம் முதல் இன்று வரை கல்லாததை கற்றுத் தொடரும் அதே "மாணவன்''தான் இந்த "மர்மயோகி''யும்.
கேள்வி:- தசாவதாரத்தை மர்மயோகி தாண்டுமா? மர்மயோகியின் கதை மர்மம் பற்றி ஒரு வரியாவது சொல்ல முடியுமா?
கமல்:- தசாவதாரத்தை வசூலிலும், தரத்திலும் தாண்ட வேண்டியது மர்மயோகியின் முதல் கடமை. மற்றவை வெள்ளித் திரையில்தான்.
கேள்வி:- சமீபகாலமாக தமிழறிஞர்கள், இலக்கியவாதிகளிடம் நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
கமல்:- சமீப காலமாக அல்ல. இது என் தகப்பனாரின் சகவாசத்தாலும், "அவ்வை'' சண்முகம் அண்ணாச்சியின் அறிவுறுத்தலாலும், திரு. அனந்துவின் வழிகாட்டலாலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. தற்போது அதற்கு விளம்பரம் கிடைத்திருக்கிறது.
கேள்வி:- `சினிமாக்காரர் கமல்ஹாசன்' பற்றி இலக்கியவாதி கமலின் கருத்து?
கமல்:- சினிமாக்காரன் கமல்ஹாசன் சூழலின் கைதி. தப்பிக்க உதவுவது இலக்கியவாதியால்தான் முடியும்.
கேள்வி:- இலக்கியம் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றம், தாக்கம்?
கமல்:- நல்லதும் கெட்டதும் ஒன்றாகக் கலந்தாலும் தண்ணீரில் எண்ணைபோல் பகுத்தறிவோருக்குத் தெளிவாகத் தெரியும் என்பதை உணர்த்தியது. ஆழ்ந்த சித்தாந்தங்களும், அரசியல் பிரகடனங்களும் ஏன் ஆன்மிகச் சிந்தனைகளும்கூட என்னை மதமற்றவனாக மாற்றி விட்டது. மதத்தோடு சேர்ந்து மற்ற மூட மாயைகளும் தொலைந்தன.
கேள்வி:- ஒரு படம் முடிந்து, அடுத்த படம் ஆரம்பிக்கும் இந்த இடைவெளியில் என்ன செய்வீர்கள்? எந்த மாதிரி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
கமல்:- மேற்சொன்ன பதிலே என் தொழில் இடைவேளைகளில் இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்த்தியிருக்கும். ஆனால் முதலிடம், என் சிறிய குடும்பத்திற்கு, பின் அறிவார்ந்த என் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும்.
கேள்வி:- இந்தி சினிமாவைப் பொறுத்தவரை `சட்டி சுட்டதடா' என்ற உணர்வுதான் உங்களுக்கா?
கமல்:- அறிவுத் துணியால் கலைச்சோறு வடிக்கும் சமையல் கலைஞன் நான். சட்டி சுட்டாலும் கை விடாது.
கேள்வி:- பரமக்குடியில் `பூர்வீக வீடு' புதுப்பிக்கப்படுகிறதாமே?
கமல்:- பரமக்குடியில் எங்களுக்கென்று இன்று பூர்வீக வீடு ஒன்றும் இல்லை. நான் புதுப்பித்தது, அந்த ஊரில் உள்ள ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை மட்டுமே.
கேள்வி:- இன்றைய நடிகர்களிடம் உங்களைக் கவர்ந்த குணங்கள்?
கமல்:- என்னிடம் இல்லாத பல நல்ல குணங்கள் சில நடிகர்களிடம் உள்ளது என்னை வெகுவாகக் கவர்ந்தது. யார், என்ன, என்று சொல்லி என் தம்பிகளுக்குள் மனத்தாங்கல் ஏற்படுத்த விரும்பவில்லை.
கேள்ளி:- எந்த நடிகையுடன் ஜோடி சேரும் ஆசை நிஜமாகவில்லை?
கமல்:- டி.ஆர்.ராஜகுமாரி, பத்மினி, இப்படி பட்டியல் நீளும். உயிரோடு உள்ளவர்களுடன் ஜோடி சேராவிட்டாலும், கூட நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்றபடி என் நிரந்தர ஜோடி சினிமா மட்டுமே.
கேள்வி:- நடிகருக்கு `முகம்'தான் பிரதானம் என்ற நிலை இன்றைய சினிமாவிலும் நீடிக்கிறதா?
கமல்:- கண்டிப்பாக இல்லை. அதற்கு உதாரணம் வேண்டுமா? தசாவதாரம். 2 முகம் தவிர மக்களைக் கவர்ந்த பல முகங்களும் எனது சாயல் இல்லாதவை. உணர்வுதான் முக்கியம்.
கேள்வி:- கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உங்களுடன் நடிக்க விரும்பிய தகவலை, "வரலாற்றுச் சுவடுகள்'' மூலம்தான் தெரிந்து கொண்டீர்களா?
கமல்:- ராஜ்குமார் அண்ணாவின் பெருந்தன்மையால் அவர் வாயாலேயே அதைக்கேட்டு மகிழும் வாய்ப்பைப் பெற் றேன். அவரை வைத்து தேவர் மகனை கன்னடத்தில்
எடுக்கக்கூட ஆசைப்பட்டேன். அவர் உடல்நலம் குன்றியதால் கனவு பலிக்கவில்லை. இன்று வரலாற்றுச் சுவடுகள் மூலம் இனிய நினைவுகள் திரும்பின.
கேள்வி:- தமிழ் சினிமா, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலான `அனைவருக்குமான சினிமா'வாக இருப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லையா?
கமல்:- எல்லா தமிழ் சினிமாவையும் அம்புலிமாமா ஆக்குவதில் உடன்பாடு இல்லைதான். அதே நேரத்தில் எல்லா தமிழ் சினிமாவையும் ஆன்மிகக் குட்டையிலோ,
அரசியல் குட்டையிலோ தோய்த்து எடுப்பதும் உடன்பாடு இல்லை. பழைய சென்சார் போர்டு தலைவர், காலம் சென்ற திரு. கோல்டி ஆனந்த் அவர்கள், வயது வந்தவருக்கான ஆபாச சினிமாக்களை டிரிபிள் எக்ஸ் முத்திரையுடன் வெளியிட்டால் ஆரோக்கியம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் சேரும்படி சட்டை தைக்க முடியாது.
கேள்வி:- `மருதநாயகத்தை' நாங்கள் காணும் வாய்ப்பு எப்போது?
கமல்:- முடித்த உடன் உங்களுக்குக் காட்டாமல் வேறு யாருக்குக் காட்டுவேன்!''
இன்று கலைஞர் அளித்த பேட்டி ( சிரிக்காமல் படிக்கவும் )
கேள்வி: மு.க.ஸ்டாலினுக்கு பதவி உயர்வு எப்போது?
பதில்: பொதுக்குழு கூடட்டும்.
கே: நெல்லை மாநாட்டில் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் என்று சொல்லி இருந்தீர்களே?
ப: அதில் தேதி குறிப்பிட்டு இருந்தேனா.
கே: திருமங்கலம் தொகுதி இப்போது அவசியம் தானா, ஏன் இந்த அவசரம் என்று கேட்டு இருந்தீர்களே?
ப: மாநில அரசை கலந்து கொள்ளாமல், புயல், மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தேர்தலை வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்காமல் இது தொடர்பாக கருத்து சொல்லக்கூட வாய்ப்பு தரவில்லையே என்று தான் குறிப்பிட்டிருந்தேன்.
கே: இடைத்தேர்தலை சந்திப்பதற்கு தயக்கமா?
ப: (சிரிப்பு)
கே: திருமங்கலம் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என்று பத்திரிகைகள் குறிப்பிட்டு இருக்கின்றனவே?
ப: பத்திரிகைகள் அவர் அவர் நோக்கப்படி கருத்துக்களை எழுதலாம், வெளியிடலாம். இதை ஒரு முன்னோட்டமாக கருதி தான் திமுக தோழமைக்கட்சிகளின் செயல் வீரர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கே: உங்கள் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக ஆகியவை வெளியேறிய நிலையில் உங்களின் பலம் குறைந்து இருக்கிறதே. வெற்றி கிடைக்குமா?
ப: ரிசல்ட்டுக்கு பிறகு தெரியும்.
கே: பாமகவின் நிலை என்ன? பாமகவின் ஆதரவை கேட்டு இருக்கிறீர்களா?
ப: ஆம். நான் டாக்டர் ராமதாசிடம் பேசியிருக்கிறேன்.
கே: திருமங்கலம் இடைத்தேர்தல் திருப்புமுனை ஏற்படுத்தும் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?
ப: எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அவர் அவர் நம்பிக்கை குறித்து பேசுவதை நான் மறுக்கவோ, குறுக்கிடவோ விரும்பவில்லை.
கே: மந்திரி சபை மாற்றம் எப்போது வரும்?
ப: வரும் போது வரும்.
கே: இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே. மீண்டும் மத்திய அரசிடம் இது குறித்து வலியுறுத்துவீர்களா?
ப: இன்று இரவு டி.ஆர்.பாலு, பிரணாப் முகர்ஜியை சந்தித்து இது குறித்து வலியுறுத்த இருக்கிறார்.
கே: திட்டமிட்டப்படி பொங்கல் அன்று அரசு கேபிள் தொடங்கப்படுமா?
ப: இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதற்குள் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டால் திட்டமிட்டப்படி அரசு கேபிள் தொடங்கப்படும்.
கே: மதிமுக தொகுதியை (திருமங்கலம்) அதிமுக பறித்துக் கொண்டதாக நீங்கள் எழுதி இருந்தீர்கள். அதேபோல பெருந்துறை தொகுதியை திமுக பறித்துக் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருக்கிறதே?
ப: வரலாறு தெரியாமல் உ.ரா.வரதராஜன் கூறியிருக்கிறார். இடைத்தேர்தல் மட்டுமல்ல, பொதுத் தேர்தலிலும் திமுக பெருந்தன்மையுடன் நடந்துக் கொண்டுள்ளது என்பது தான் வரலாறு. ஆனால், அந்த வரலாற்றையே மாற்ற முயற்சித்திருக்கிறார்கள் பெருந்துறை தொகுதியில் சோஷலிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து திமுக வெற்றி பெற செய்தது. சில மாதங்களில் அவர் இறந்த பிறகு அதே கட்சி வேட்பாளரை திமுக ஆதரித்தது.
திருமங்கலம் தொகுதியில் நடைபெற்றது போல நாங்கள் பறிக்கவில்லை. கூட்டணி மாறிய பிறகு தான் பெருந்துறை தொகுதியில் திமுக போட்டியிட்டது. இது தான் நடந்த வரலாறு
Posted by IdlyVadai at 12/16/2008 04:38:00 PM 6 comments
திருமங்கலம் காமெடிகள்
திருமங்கலத்தில் இடைத் தேர்தல் வர போகும் நாடாளு மன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்க போகிறது என்று பல தலைவர்கள் நம்புகிறார்கள்.
அதிமுக பக்கம் கம்யூனிஸ்ட், திமுக பக்கம் (மீண்டும்) பாமக என்ற அரசியல் கணக்கு என்ன என்று பார்க்க எல்லோருக்கும் ஆவல் தான்.
நிச்சயம் கலைஞர் பயந்து போயிருக்கிறார் என்பது அவர் அறிக்கையிலிருந்து தெரிகிறது.
சில காமெடி பேச்சுக்கள்:
பெரியவர் காமெடி
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி என்ன சொல்லுகிறார். ஒரு பெரிய காவியத்தையே அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.
கடந்த அக்டோபர் திங்கள் 26-ந் தேதியன்று முன்னாள் முதல்-அமைச்சர் அம்மையார் ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டார்; காரசாரமாக என்னையும், கழக அரசையும் கண்டித்து!
அந்த அறிக்கையில் சாராம்சம் வருமாறு:- இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகு; வைகோ, கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்களை மட்டும் கைது செய்தால் போதாது; அவர்களைப் போலவே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் நான் ஒரு அறிக்கை வெளியிட்ட பிறகு திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப்போலவே இதே குற்றத்தை முதல்-அமைச்சர் கருணாநிதியும் செய்துள்ளார்- அதாவது ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் என்ற இரு தலைவர்கள் இறந்த போது அவர்களுக்காக இரங்கற்பா எழுதியுள்ளார். அதனால் அவரது ஆட்சியைக் கலைப்பதோடு, அவரையும் மத்திய அரசு கைது செய்ய வேண்டுமென்று கோருகிறேன்''
இந்த அறிக்கை வெளிவந்து 50 நாட்கள் கூட முழுமையாக ஆகவில்லை. அம்மையாரின் கோரிக்கைப்படி கைது செய்யப்பட்டவர்களும் சில நாட்கள் சிறையில் இருந்து வெளிவந்துவிட்டார்கள். ஆனால் ஒன்று; வைகோவை ``பொடா'' சட்டத்தின்படி கைது செய்து ஓராண்டு காலம் சிறையில் பூட்டிப்போட்டதற்கு எந்தத் திருமங்கலம் நிகழ்ச்சியும் பேச்சும் காரணம் என்று சொல்லப்பட்டதோ; அந்தத் திருமங்கலத்தில் இப்போது இடைத்தேர்தல்!
இடைத்தேர்தலுக்கு காரணம், அந்தத் தொகுதியில் வென்று ம.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் வீற்றிருந்த வீர இளவரசன் திடீரென இளம்வயதில் மறைந்துவிட்டார் என்பதால்! அவரும் கூட வைகோவுடன் ``பொடா'' சட்டப்படி சிறைப்பட்டு தண்டனையை முழுமையாக அனுபவித்தவர்தான்!
அவர் மறைந்தார் எனக் கேள்வியுற்று நானும் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தேன்- அது ஏடுகளில் வெளிவந்தது- அதை எப்படி வெளியிடலாம்; தமிழ்ச்செல்வனுக்கும், பால சிங்கத்துக்கும் இரங்கல் வெளியிட்டதே தவறு என்கிற போது- அவர்களின் மீது பற்றும் பாசமும் கொண்ட வீர இளவரசனுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக; ``மத்திய அரசு, இந்தக் கருணாநிதியை கைது செய்து அவன் அரசையும் கலைக்க வேண்டும்'' என்று அம்மையார் கோரிக்கை அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக ஆத்திரப்படக்கூடிய- அல்லது குமுறக்கூடிய- உணர்வுள்ளவர்கள் ம.தி.மு.க. கூடாரத்தில்தான் யார் இருக்கிறார்கள்?
யசோதர காவியம் என்று சமண சமயக் கதையொன்று உண்டு. அதில் ``அமிர்தமிதி'' என்ற ஒரு ராணி- அவளை மணந்தவன், அந்த நாட்டு மன்னன் ``யசோதரன்'' என்பவன்- சுந்தரரூபன்- சுகுமாரன்-
ராணியின் மனமறிந்து மகிழ்ச்சி அளிக்கும் மன்னன்தான் அந்த யசோதரன். அத்தகைய செங்கோலேந்தியின் சிற்றின்பக் கூடாரத்தை அலங்கரிக்கக் கூடிய பாக்கியம் அந்தச் சிங்கார ராணி அமிர்தமிதிக்குக் கிடைத்திருந்தது. மன்னவனின் மஞ்சத்து மயில் என்றால் சாதாரணமா? தாதிகள் உண்டு; தயவு கேட்டு நிற்கப் பல சேவகர் உண்டு! தங்கம் கலந்த உணவை உண்டு- அங்கம் பூரிப்பு கொண்டு- காதல் மிஞ்சுவதே சேடி காவலனைக் கூப்பிட்டு வாடி! என்று அழைத்த கணமே அவர்கள் ஓடி, ஆடிப்பாடி அரசனை அழைத்து வருவர்.
ஆனைமேல் அம்பாரியா? அணி தேர்ச்சவாரியா? பூனைரோமத்தால் மிதியடியா? புலிப்பாலா! புரவிக் கொம்பா? எது கேட்பினும் தருவர்- அதற்கெனவே எடுபிடிகள் ஏராளமாக உளர். இந்தச் செல்வாக்கின் மத்தியிலே செல்ல நடைபோடும் சேயிழையாள் அந்த அமிர்தமதி!''
``அழகி அமிர்தமதியும், அரசன் யசோதரனும் ஒருநாள் அந்தப்புரத்தில் இன்பக்கேளிக்கையில் ஈடுபட்டனர். கட்டிற்காவியம் எழுதி முடித்தனர்- கண் அயர்ந்தனர். அரசன் தூங்கும் சமயம், ராணி கண் விழித்தாள். ஆமாம்! மலர் விழித்துக் கொண்டது; வண்டோ தூங்கிக் கொண்டிருந்தது. விழிந்த சமயம் அந்த இரவில் ஒரு பாடல், ராணியின் காதில் ஒலித்தது! அந்தப்பாடல் வந்த பக்கம் கருத்தை செலுத்தினாள். அந்தப்பாடல் இசைத்தவனைக் கட்டித் தழுவ வேண்டும் என்று துடித்தாள்''
``மறுநாள் தன் தோழி குணவதியை அனுப்பினாள். அர்த்த ராத்திரியிலே பாடியவன் யாரென்று அறிந்துவர தோழியும் போய் அவனைக் கண்டாள். இசையை எழுப்பியவன் ஒரு யானைப்பாகன். அவன் எப்படிப்பட்ட அழகுடையவன் தெரியுமா? தோழி வாயிலாக யசோதரக் காவியக் கவிஞர் கூறுகிறார். அது இது!
``நரம்புகள் வசித்த மெய்யன், நடையினிற் கழுதணிந்தோன், திரங்கிய விரலன், கையன், சிறுமுகன், சினவன், சீறிற்குரங்கினை யனையன், கூனன், குழிந்து புக்கழிந்த கண்ணன்!''
``இன்னும் பலவாறாக அவனது விவகாரங்களை வர்ணித்து அவன் மீது ஆசை வைப்பது தகாது என்று ராணியிடம் தோழி கூறுகிறாள். அமிர்தமதியோ `அவன் எப்படியிருந்தாலும் கவலையில்லை. அவனை அணைத்து மகிழத்தான் வேண்டும்' என்று துடிக்கிறாள். `கனியிருப்பக் காய் பறிக்கலாமா அம்மா? சகல அழகும் பொருந்திய அரசர் பெருந்தகையின் மனைவியாகிய நீங்கள், கேவலம் குரங்கைப் போன்ற - ஒரு சாக்கடை மனிதனைக் கொஞ்சிக் குலவ விரும்பலாமா தாயே!'' என்றெல்லாம் குணவதி தடுத்தாள்.
ஆனால் அரசியோ, அவன் எப்படியிருந்தால் எனக்கென்ன; அவன் அணைப்பிலேதான் சுகம் இருப்பதாக நான் உணர்கிறேன் என்று கூறியதோடு, அந்தப் பாடல் கற்ற யானைப்பாகனையும் வலிய வரவழைத்து, வாரி அணைத்து மகிழ்ந்தாள். நாளொரு மேனியாக, அந்த நாய்க்காதல் வளர ஆரம்பித்தது. ஒருநாள் அரசனே அவர்களது.... காதல் களியாட்டத்தைத் தூர நின்று பார்த்து விட்டான்.
அப்போது என்ன நடந்தது தெரியுமா? அரசன் எந்தக் காட்சியை கண்டான் தெரியுமா? வழக்கமாக யானைப்பாகன் அட்டபங்கன் என்னும் பெயருடைய அந்த அவலட்சணம், அமிர்தமதியின் அழகுக் கருங்கூந்தலைக் கையால் இழுத்து எறிந்து, அவளைக் கீழே தள்ளி, இரு கால்களாலும் நையப்புடைத்து `ஏன் காலம் தாழ்த்தி வந்தாய்?' என்று கனல் கிளம்பக் கேட்கிறான்''.
``கட்டளையிட்டால், யோசனை என்ற தூரம் ஓடிக் காரியமாற்றிடும் பணியாளர்களின் தலைவி- மண்டலாதிபதியின் மனைவி- ஓர் அழுகிய உடல் படைத்த யானைப்பாகன், தன்னைத் திட்டி உதைத்து அடிப்பதிலே சுகம் காண்கிறாள்''
``அவள் மலர்ப்பாதங்களை அர்ச்சிக்க ஆயிரம் பேர் காத்திருப்பர்- அவள் அந்த பாகனின் கால்களைக் கண்ணில் ஒத்திக் கொண்டு காலந்தாழ்மைக்கு மன்னிப்புக் கோருகிறாள்''
இதுதான், யசோதர காவியத்தின் சுவையான (?) சுருக்கம்.
இதைப்படிக்கும்போதும், படித்த கதையை நினைத்து, நெற்றி சுருக்கி சிந்திக்கும் போதும்; ``அமிர்தமதி'' போல சில கட்சித்தலைவர்கள் நமக்கு காட்சியளிக்கிறார்கள் அல்லவா!
யானைகளில் வீரர்கள் அமர்ந்து காவல்புரியும் அரண்மனை- அந்தப்புரம்- அங்கே அரசனின் அரவணைப்பு- இவற்றைவிட; யானைப்பாகன் ஒருவன்; அதிலும் அழுகிப்போன மேனி- அதிலும் தாமதமாக ஏன் வந்தாய் என்று அவளைக் காலால் உதைத்து உதைத்து தண்டனை கொடுத்துவிட்டு; அதன்பிறகு அவளுடன் சல்லாபிக்கிறான்; அதைத்தான் அமிர்தமிதி அடங்காத வேட்கையுடன் விரும்புகிறாள்- இப்படி சில ஜென்மங்கள்- சில அரசியல்வாதிகள்- என்று முணுமுணுக்கத் தோன்றுகிறதல்லவா?
அடித்தால் என்ன; உதைத்தால் என்ன; அமிர்தமதிக்கு அந்த யானைப்பாகனைத்தான் பிடிக்கிறதென்றால்- யார்தான் குறுக்கே நிற்க முடியும்?
பெரியவர் காமெடி - 2
திருமங்கலம் தேர்தல் ஏன் இந்த அவசரம் ? எம்.ஜி.ஆர். வழியில் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்றால் திருமங்கலத்தில் ம.தி.மு.க. வேட்பாளரையே நிறுத்தி இருக்கவேண்டும் என்று கலைஞர் சொல்லுகிறார். அறிக்கை கீழே...
மதுரை-திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீர இளவரசன் கடந்த நவம்பர் 8-ம் நாள் காலமாகிவிட்டார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நான் செய்தி வெளியிட்டிருந்தேன். ம.தி.மு.க.வை சேர்ந்த அவர் மறைந்து இத்துடன் 2 மாதம் கூட முடியவில்லை.
எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால் - காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.
அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அ.தி.மு.க. காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது- அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார். தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.
அதுதான் இடைத்தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி- அதற்கேற்பவே; காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இறந்துபோன இடத்தில்; இடைத்தேர்தலில் அந்த இடத்தை காங்கிரஸ் வேட்பாளருக்கே வழங்கி; அவரது தேர்தல் வெற்றிக்காகவும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற ம.தி.மு.க. வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் ம.தி.மு.க. நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அ.தி.மு.க. தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.
மழை, வெள்ளம், புயல் எல்லாம் வந்து; மக்கள் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான பாதுகாப்புப் பணிகளை, நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதே; ``திடீரென்று 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் என்றால்; ஓர் அரசின் நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடி- எனவே வசதிப்படுமா?'' என்றெல்லாம் கூடக் கலந்து பேச வாய்ப்பின்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறதே; அத்துடன் சேர்த்து இந்த திருமங்கலம் இடைத்தேர்தலை வைத்துக் கொண்டால் என்ன; என்று கேட்பதற்கும் முடியாமல்- பாராளுமன்ற தொகுதிகள்; புதிதாக அமைக்கப்பட்டும் - பிரிக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டிருப்பதால்- அப்படி பாராளுமன்ற தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலை சேர்த்தால் வீண் குழப்பங்கள் நிர்வாகத் துறையில் ஏற்படும் என்பதை நாம் உணராமல் இல்லை. அதற்காக இப்படி ``விடியக் கல்யாணம்; பிடிடா பாக்கை!'' என்று கிராமத்துப் பழமொழியை நினைவூட்டுகிற அளவுக்கு, இவ்வளவு அவசரமாக இந்தத் தேர்தல் வரவேண்டியதின் அவசியம்தான் என்னவோ?.
தி.மு.க.வைப் பொறுத்தவரையில்; தேர்தல் ஆணையத்தின் வாயிலாகப் பெற்றுள்ள ஆணையின்படி; கழகத்தின் 13-வது பொதுத் தேர்தல் - கிளைகள் முதல் தலைமைக்கழகம் வரையில்; வருகிற டிசம்பர் 27-க்குள் நடந்தாக வேண்டும் - அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க இயலாது - இவ்வாறு ஏற்கனவே ஆணையத்துக்கு உறுதி கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வருகின்ற தமிழர் திருநாள் பொங்கல்; ஜனவரி 14-ந் தேதி வாக்கில் வருகிறது; அதற்கு முன்கூட்டியும் - பின்னரும் சில நாட்கள் மக்கள் அந்தப் பொங்கல் ஏற்பாடுகளில் ஈடுபட வேண்டியிருக்கும். அப்போதுதான் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவடையும் நேரமாக இருக்கும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு; பட்ஜெட் படிக்கப்பட்டு, அதில் சலுகைகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்கப்பட்டால்; அது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாகி விடக்கூடும் என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்கான பணிகளும், அதற்கு முன்னர் அவையில் படிக்க வேண்டிய ஆளுநர் உரையும் சட்டமன்றத்தில் நிறைவு பெற்றிட வேண்டியுள்ளது.
இந்த நெருக்கடிகள் நிறைந்த நிலையிலே திருமங்கலம் இடைத்தேர்தல் இவ்வளவு விரைவிலா என்ற கேள்வியும், ஏன் அவசரம் என்பதற்கான காரணமும் புரியாமல் இல்லை. உடன்பிறப்பே, பார்த்தாயா; ஓர் இடைத்தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சியும் - அப்படி அறிவித்ததை எதிர்பார்த்து இருந்ததுபோல் எதிர்க்கட்சியும் - இருப்பதற்கு நம்ப முடியாத ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்.
எல்லோரிடமும் ஏக்கம்
பாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜெயித்துவிட்டால்; அந்த உற்சாகம் - நம்பிக்கை பாராளுமன்றத் தேர்தலிலும் தம்மை வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டு; கணக்கை கணக்காகச் செய்து முடித்துவிட்டுக் களிப்பிலாழ்ந்திருக்கிறார் போலும்.
உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கிறதா?, தமிழகத்தில் மொழிப்போர் நடந்துமுடிந்த பிறகு; பாளைச் சிறையில் நானும் மற்றும் பல சிறைகளில் கழக உடன்பிறப்புகள் ஆயிரக்கணக்கினரும் சிறையை விட்டு வெளிவராத சமயத்தில்; தர்மபுரியில் ஓர் இடைத்தேர்தல் - அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டது. அடடே, அவ்வளவு பெரிய மொழிப்போருக்குப் பிறகும்; இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற முடியவில்லையே என்று எல்லோரிடமும் ஓர் ஏக்கம் பிறந்தது.
ஆனால், காங்கிரஸ் நண்பர்களோ அந்த தர்மபுரி இடைத்தேர்தலின் வெற்றி; 1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அச்சாரம் என்றும், அறிகுறி என்றும் நம்பினார்கள்.
ஆனால், தர்மபுரி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி அளிக்காத மக்கள்; அதைத் தொடர்ந்து 1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் - தி.மு.க.வைத்தான் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு வெற்றியை வழங்கினார்கள்; என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக்காட்டத் தவறவில்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது!.
மறவாமலும்- மன திடத்துடனும் - பாகு மொழி - பசப்பு மொழி - பேசிப் பாராட்டிய கட்சிகள்கூட; ``எஸ்மா'', ``டெஸ்மா'' சட்டங்களை நீட்டியவர்களை உற்றுநோக்கி ``உஜார் உஜார்!'' என்று உரத்த குரல் எழுப்பியதை விடுத்து; இப்போது உமிழ்ந்த வாய்க்கே சர்க்கரை என உரைத்துக் கொண்டு; நம்மைப் பின்னிருந்து குத்திக் கிழித்திட முன்வருகிறார்கள் என்றால்; அத்தகையோர்க்கு; நன்றிக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தொலைவு? நட்புக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? என்று நெஞ்சு கொதித்திடக் கேட்கத்தான் தோன்றும் உனக்கு!.
நம் நெஞ்சில் நெருப்பு மூட்டிடுவோர் உனக்கு உருவாக்கியுள்ள ஆத்திரம் - அதன் விளைவைக் காணத்தான் நான் அச்சம் கொண்டு; அன்பு உடன்பிறப்பே, அண்ணா தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முக்கணைகளையும் பயன்படுத்திப் பலன் காண, பகைமுகாம் நோக்கிப் பணியாற்றிடக் கிளம்புக! என அழைக்கிறேன்.
ஜெ காமெடி
கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் வன்முறை, அராஜகப் போக்கு மற்றும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் கலந்து பேசி அவரது பரிபூரண ஒப்புதலுடன் 9.1.2009 அன்று நடைபெற இருக்கும் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்தேன்.
என்னுடைய அறிவிப்பைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் தோல்வி பயத்தில் தொடர் வண்டியில் உள்ள அனைத்து பெட்டிகளும் கழன்று ஒரேயொரு பெட்டி மட்டும் எப்பொழுது கழன்று கொள்ளலாம் என்ற ஊசலாட்டத்தில் இருக்கின்ற சூழ்நிலையில் 14.12.2008 அன்று யார்தான் குறுக்கே நிற்க முடியும்? என்ற தலைப்பில் யசோதர காவியக் கதையைச் சொல்லி புலம்ப ஆரம்பித்து விட்டார். விரக்தியின் விளிம்பில் இருக்கும் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி.
கருணாநிதியால் குறிப்பிடப்படும் யசோதர காவியத்தில் வரும் யானைப் பாகனின் குணங்கள் அனைத்தும் கருணாநிதிக்கு உள்ளன என்பதை அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதியின் கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியும் கருணாநிதியின் குணங்களை அறிந்து கழன்று கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தனக்கு பொருந்தக் கூடிய யானைப் பாகனின் குணங்களை சுட்டிக்காட்டியது போதாது என்று நேற்று திருமங்கலம் தேர்தலும், திடீர் அறிவிப்பும் என்ற தலைப்பில் மீண்டும் ஒரு புலம்பல் புராணத்தைப் பாடியிருக்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியின் இந்த அறிக்கை என்னை குற்றம் சாட்டுவதாக, என்னை குறை கூறுவதாக உள்ளது.
திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிப்பு திடீரென்று வெளியிடப்பட்டதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் உள்ளவர் கருணாநிதி. அப்படி இருக்கும் போது என்னை கேட்டுக் கொண்டா இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கும்? கருணாநிதி மத்தியில் உள்ள தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த இடைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னை ஏன் குறை சொல்கிறார் என்று புரியவில்லை.
அடுத்தபடியாக நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அந்த உற்சாகம், நம்பிக்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று நான் கணக்குப் போடுவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் என்று அறிவித்துவிட்டால் அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றுதான் அனைத்துக் கட்சிகளும் நினைக்கும். அந்த வகையில் அதிமுக இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறது. இதில் என்ன குற்றத்தை கருணாநிதி கண்டார் என்று எனக்கு புரியவில்லை.
ஒருவேளை மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன் திமுகவின் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக காங்கிரசார் தீட்டிய சதித்திட்டமாக இருக்கும் என்று கருணாநிதி சந்தேகப்படு கிறாரா? என்று தெரியவில்லை.
கருணாநிதியின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அவர் தேர்தலைக் கண்டு பயப்படுகிறார், அச்சப்படுகிறார் என்பது தெளிவாகிறது. அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புலம்பல் பேச்சு.
காங்கிரஸ் காமெடி
திருமங்கலம் இடைத்தேர்தல் குறித்து கட்சியின் முன்னணி தலைவர்கள், அனைத்து நிலையில் உள்ள தலைவர்களை அழைத்துப் பேசி கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பண்பாடு உண்டு. கூட்டணி கட்சி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வரவேற்போம். அத்தகைய நல்ல பண்பாடு, நாகரீகத்துடன் திகழ்வோம். - தங்கபாலு
ராமதாஸ் காமெடி
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்கப்படும் - ராமதாஸ்
விஜயகாந்த் செய்யும் காமெடி
அதிமுக தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது போல திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் தேமுதிகவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் - விஜயகாந்த்
பா.ஜ.க செய்யும் காமெடி
தேர்தல் சீர்திருத்தக்குழு புதிய தொகுதி வரைவு பட்டியலை தயாரித்து ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இல்லாத தொகுதிகள் அனைத்தும் காலாவதியாகி விட்டது. இந்த நிலையில் காலாவதியான திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது விந்தையாக இருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் திருமங்கலம் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுவதில்லை - இல.கணேசன்
சூப்பர் காமெடி - வேற யாரு ?
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜய டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். தனது தந்தையை ஆதரித்து நடிகர் சிம்பு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
எது எப்படியோ திருமங்கலம் சிலருக்கு மங்களம் பாட போகிறது
Posted by IdlyVadai at 12/16/2008 03:40:00 PM 3 comments
Saturday, December 13, 2008
’உருப்படாத’ T-20
நண்பர்களே உருப்படாதது நாராயணன் ’தமிழ்10 விக்கி ஒரு ஆரம்பம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். பொருளாதர நெருக்கடியின் தாக்கத்தில் நிறைய பேர் வேலை இல்லாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் இந்த மாதிரி டாப்-10 ( இட்லிவடைக்கு போட்டியாக ) ஆரம்பித்துள்ளார் என்பது என் எண்ணம்.
விவரம் இங்கே : இது வேற மாதிரியான T-20
உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். எது எப்படியோ, முடிவு இட்லிவடையில் வரும் :-)
Posted by IdlyVadai at 12/13/2008 08:24:00 PM 3 comments
Labels: அறிவிப்பு
ஸ்பெக்ட்ரம் ஊழல் - போபர்ஸை மிஞ்சுமா ?
ஸ்பெக்ட்ரம் ஊழல் - போபர்ஸை மிஞ்சுமா ? தமிழோவியம் கட்டுரை, நண்பர் வழியாக...
எலியும் பூனையுமாக இருந்த மாறன் குடும்பமும் கருணாநிதி குடும்பமும் காலத்தின் கட்டாயத்தாலும் அரசியல் சூழ்நிலைகளினாலும் ஒருவழியாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். குடும்பப் பிரச்சனையாக வீட்டோடு இருக்க் வேண்டியதை கண்ணீர் ததும்பும் கட்டுரைகள் எழுதியும், கனல் கக்கும் கவிதைகள் புனைந்தும் குடும்பத் தகராறை பொதுமேடைக்கு எடுத்து வந்தார் கருணாநிதி. சரமாரியான குற்றச்சாட்டுகளை கருணாநிதி எழுப்பினாலும் கலாநிதி மாறன் எழுப்பிய பரபரப்பான கேள்விகளுக்கு இன்று வரை கருணாநிதியிடம் இருந்து பதிலே இல்லை. சண்டைக் காலத்தில் என்ன நடக்கிறது என்று சொன்ன கருணாநிதி, சமாதானத்துக்கான காரணத்தையும் வெளிப்படையாகச் சொல்லக் கடமைப்பட்டவர் ஆனாலும் அவர் சொல்ல மாட்டார் என்பது நிச்சயம்.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையின் கதி என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 'அது முடிந்து போன விஷயம்' என்று பதில் கூறி மக்களை அதிர வைத்திருக்கிறார் தமிழக முதல்வர். கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ஊழல் இந்த டெண்டர் விவகாரத்தில் நடந்துள்ளதாக நம்பப்படும் இந்த விஷயம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதால் எப்படி ஒரு முடிவுக்கு வரமுடியும்?
இந்தியாவை அதிர வைத்த போபர்ஸ், டான்ஸி உள்ளிட்ட பல ஊழல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்திய ஊழல் சரித்திரத்தில் முதலிடம் பெற்ற பெருமை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு உண்டு. தயாநிதி மாறன் தொலைதொடர்பு மந்திரியாக இருந்த போது அவரால் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று அவருக்கு அடுத்து அமைச்சரான ராசா தெரிவித்தார். சில நாட்களில் ராசா செய்த குளறுபடிகளால் தொலைத் தொடர்புத் துறைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தயாநிதி மாறன் மட்டுமல்லாமல் மத்திய எதிர்கட்சி எம்.பி.க்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள் - மேலும் இந்த விவகாரம் குறித்து டெல்லி மீடியாக்களும் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளன. தயாநிதி மாறனோ அல்லது ராசாவோ - நடந்த குளறுபடிகளுக்கு அவர்களது கட்சித் தலைவர் என்ற முறையில் கருணாநிதியே பொறுப்பாவார். அப்படி இருக்க தங்களது சொந்த குடும்பச் சண்டை தற்காலிகமாக ஓய்ந்ததால் ஸ்பெக்ட்ரம் விவகாரமே முடிவுக்கு வந்து விட்டது என்று கருணாநிதி அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்?
ஏற்கனவே நாட்டின் நிதிநிலைமை பாதுகாப்பு தீவிரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மத்திய அரசின் நிலை பாட்டால் மக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள். டெல்லியிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது தங்களது பலத்தாலோ அல்லது மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையாலோ அல்ல - எதிர்கட்சிகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால்தான். இதை உணர்ந்து தி.மு.க தலைவரது கட்டளைகளையும் மீறி மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் முறையான விசாரணை நடத்த முன் வரவேண்டும். போபர்ஸ் விவகாரம் தான் ராஜீவ் அரசை பதவியிழக்க வைத்தது - இத உணர்ந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வைத்தால் நாட்டுக்கு நல்லது.
( நன்றி: தமிழோவியம் )
Posted by IdlyVadai at 12/13/2008 08:21:00 PM 6 comments
கலைஞர் செயலாளர் சண்முகநாதன் விலகல் ?
தமிழக முதலமைச்சர் கருணாநிதி யின் நிழலாக செயல்பட்டவரும், அவருடைய நீண்ட நாள் உதவியாளருமான சண்முகநாதன் முதலமைச்சரின் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி விட்டதாகவும், ராஜிநாமா முடிவை திரும்ப பெற மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Posted by IdlyVadai at 12/13/2008 04:58:00 PM 2 comments
Friday, December 12, 2008
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து
59 வயது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இட்லிவடையின் பிறந்த நாள் வாழ்த்துகள் :-)
( தகவல் உதவி : நாணயம் விகடன் )
Posted by IdlyVadai at 12/12/2008 05:48:00 PM 13 comments
இருளர்கள் ஓர் அதிசயம் --ஹரன் பிரசன்னா
இருளர்கள் ஓர் அறிமுகம், க. குணசேகரன், 75 ரூபாய், கிழக்கு பதிப்பகம்.
இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தை முதலில் பார்த்தபோதே அதன் மீதான ஓர் ஈர்ப்பு தோன்றியது. புத்தகத்தின் மிக நல்ல அட்டையும், இருளர்கள் என்னும் பழங்குடிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வமும் இவற்றிற்குக் காரணம்.
முதல் அத்தியாத்தைப் படித்தபோது, நூலாசிரியரின் ரசனையை எண்ணி வியந்தேன். அவர் விவரிக்கும் சம்பவங்கள் காட்டு வாழ்க்கை மீதான போதையைத் தந்தன. வாழ்க்கையில் இது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும் சில சமயங்களில் மனம் கொள்ளும் ஒருவித ஆசையை இப்புத்தகத்தின் முதல் அத்தியாத்தில் மீண்டும் கண்டேன். என் சுவாசக்காற்றே திரைப்ப்டடத்தில் வரும் 'திறக்காத காட்டுக்குள்ளே' பாடலும் காடு நாவலும், ஜெயமோகனின் சில கட்டுரைகளில் இத்தகைய ஒருவித கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே கிறக்கத்தை இந்நூலின் முதல் கட்டுரையில் என்னால் காணமுடிந்தது. இரண்டாம் அத்தியாயம் அப்படியே மேலெழுந்து, ரசனையை முற்றிலும் உதறி, சிறந்த ஆய்வுப் புத்தகமாக மாறியது. உண்மையில் ஓர் அதிசயத் தருணமாக முதலிரண்டு கட்டுரைகளுக்குள் இருந்த வேற்றுமையை உணர்ந்தேன். கிட்டத்தட்ட இதை ஒத்த உத்தியொன்றை மு.க. புத்தகத்திலும், நான் வித்யா புத்தகத்திலும் பார்த்திருக்கிறேன். என்னளவில் அவை தோல்வியான முயற்சிகள். ஆனால் இப்புத்தகம் மிக இயல்பாக இந்த மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.
முதல் அத்தியாயத்தில் கோபால் ராவ் என்பவர் இருளரைப் பற்றிச் சொல்கிறார். இரண்டாவது கட்டுரையில் குணசேகரன் தன் பார்வையைத் தொடர்கிறார். அங்கே தொடரும் தகவல் மழை இப்புத்தகம் முழுக்க எல்லாக் கட்டுரைகளிலும் கொட்டி வழிகிறது. இவ்வளவு தகவல் மழைகளை எப்படி ஆசிரியர் திரட்டினார் என்பதே பெரும் ஆச்சரியம். தகவல் மழைகள் என்றால், வெறும் அடுக்குதல் அல்ல. ஆராய்ச்சியுடன் கூடிய தகவல்கள். ஆராய்ச்சிக்கான தகவல்களும் அதற்கான நிரூபணங்களும் சங்க காலத்திலிருக்கும் பாடல்களிலிருந்து, இருளர்களின் வாழ்வில் சமீப, கடந்த காலங்களில் சந்தித்த அரசியல், சமூகப் பிரச்சினைகள் வரை நீண்டு விரிகின்றன.
பழங்குடிகளாக வாழ்ந்த மக்கள் கடற்கோள்களாலும் இயற்கைச் சீற்றங்களாலும் பல்வேறு இனக்குழுக்களாக இடம்பெயர்கிறார்கள். அங்கிருந்து கிளைக்கிறது இருளர் என்னும் இனக்குழு. அது பின்னர் சாதியாக நிலைபெறுகிறது. இருளர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு நாடோடியின் வாழ்க்கையையாகவே வாழ்கிறார்கள். காடுகளில் தேன் எடுப்பது, பாம்பு பிடிப்பது, மூலிகைகள் சேகரிப்பது என அவர்களது வாழ்க்கை தொடர்கிறது.
சங்ககால மக்கள் தங்கள் குலச்சின்னங்களாக மரத்தையும் பறவையையும் வரித்துக்கொள்வதை ஆசிரியர் விளக்கியிருப்பது சுவையானது. கீரனார், மருதனார் என எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கி, அதற்கான காரணமாக ஆசிரியர் முன்வைப்பது, அக்கால மக்களின் மனதைத் துல்லியமாகப் படம் பிடிக்கிறது. 'அவர்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை அளிப்பது போலிருந்தது.' இருளர்களின் பெயருக்கான காரணங்கள் பல. இருளான பகுதிகளில் வாழ்பவர்கள், இருளைப் போன்ற கருமையானவர்கள், இருள மரத்தின் சந்ததிகளாகத் தங்களைக் கருதுபவர்கள் எனப் பல காரணங்கள். அவர்கள் பேசும் மொழி இருள என்னும் மொழியைப் பேசியிருக்கிறார்கள். இருள என்னும் மொழி தமிழ் மொழியின் ஒரு கிளை. இருளர்கள் ஐவகை நிலங்களில் வாழ்ந்த தமிழர்கள். தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் வழங்கும் நிலங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருவித தனி மொழி புழக்கத்தில் உள்ளது. இன்று இருளர்கள் கன்னடம் பேசினாலும், மலையாளம் பேசினாலும், துளு பேசினாலும், அவர்கள் தமிழர்களே.
இருளர்கள் எந்நிலையிலும் தங்கள் மரபைக் கைவிடாத தீவிர இந்துக்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் வழிபாடு குலதெய்வ வழிபாடு சார்ந்தது. கன்னித் தெய்வத்தை அவர்கள் நம்புகிறார்கள். எல்லாத் திருவிழாக்களிலும், சடங்குகளிலும் கன்னித் தெய்வமே முதலிடம் பெறுகிறது. எல்லா இருளர்களின் வாழ்விலும் கன்னித் தெய்வமும், அவர்களின் மரபான திருவிழாவும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இருளர்கள் கொண்டாடும் திருவிழா பல்வேறு படிகளைக் கொண்டது. அத்தனையையும் மிக விரிவாக, பொறுமையாக, படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியிருக்கிறார் குணசேகரன். ஆய்வு செய்து, அவர்கள் அத்திருவிழாவின் ஒவ்வொரு நிலையிலும் பாடும் பாடல்களைத் தொகுத்திருக்கிறார். இன்று மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வழிபடும் இடங்களை வைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் ஆசிரியர். தாங்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் கோயிலையும், கடவுளையும் அழைத்துக்கொண்டவர்கள் இருளர்கள்.
வழிபாட்டில் முதல் இறைவணக்கம் பாடும் பண்பாட்டைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் குணசேகரன். பாணர்களின் (பாணரின் மனைவி பெயர் பாணிச்சி என்கிறார் ஆசிரியர். இப்படி போகிற போக்கில் அவர் சொல்லிச் செல்லும் விஷயங்களின் பட்டியலிடவே முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளவும் முடியாது. அத்தனை அதிகம்) பாடல்களையும், பழங்குடிகளின் பாடல்களையும் தொடர்ந்து இன்றுவரை காப்பாற்றிக்கொண்டு வந்தவகள் இருளர்களே. இதனால் இருளர்களின் வாழ்க்கையில் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. (கம்பியில் கட்டிய சலங்கையால் இசையை எழுப்பி, ஒருவரின் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு ஆடுவதை ஆசிரியர் விவரிக்கும்போது, பின்னொலியில் இளையராஜாவின் முள்ளும் மலரும் ஹம்மிங்கான 'எலலே' (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்) ஒலிக்கிறது.)
இருளர்கள் திருமணத்திற்காக மேற்கொள்ளும் பெண் பார்க்கும் படலம் மிகவும் சுவையானது. (இதன் நம்பகத்தன்மை குறித்துத் தெரியாது. ஆசிரியர் சொல்வதை அப்படியே நம்புகிறேன். அவ்வளவே.) பெண் பார்க்க வரும் இருளர் அதைப் பற்றிப் பேசுவதில்லையாம். வரும்போது கையில் இரண்டு கம்பிகளைக் கொண்டு வருகிறார்கள். மற்ற எல்லா விஷயங்களையும் நீட்டி முழக்கிப் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். இப்படியே இரண்டாவது முறையும் செய்கிறார்கள். அப்போது பெண் வீட்டார்கள் 'சென்றமுறையும் இப்படிச் செய்தீர்கள், என்ன விஷயம்' என்று கேட்க திருமண விஷயம் தொடங்குகிறது. துளை உள்ள பானை ஒன்றை சீதனமாகத் தருகிறார்கள். இதுவே இருள ஆணுக்குப் பின்னர் எலி பிடிக்கப் பயன்படுகிறது. எலி என்பதைச் சிறந்த உணவாகச் சொல்கிறார்கள் இருளர்கள்.
இருளர்களின் இன்றைய முக்கிய வேலை பாம்பு பிடிப்பது. பாம்பு பிடிப்பதன் முகமாகவே இன்றைய இருளர்கள் அறியப்படுகிறார்கள். பாம்பின் வகையை அதன் மணத்தை வைத்தே கண்டறியும் திறமை பெற்றவர்கள் என்கிறார் ஆசிரியர். (எந்தப் பாம்பு என்ன மணம் என்கிற விவரணையும் உண்டு!) எந்தப் புற்றில் பாம்பிருந்தாலும் Y வடிவ முனை கொண்ட கழியை வைத்துப் பிடிக்கிறார்கள். கையாலும் பிடிக்கிறார்கள். காடுகள் குறைந்து வீடுகள் அதிகரிக்கும் சூழலில் இருளரின் தேவையைப் புரிந்துகொள்ளமுடியும். எந்த விதப் பாம்புக் கடிக்கும் மூலிகை மருந்து உண்டு என்கிறார்கள். மூலிகைகளின் பட்டியலையும், பாம்புக்கடிக்கான மருத்துவத்தின் பட்டியலையும் மிக விரிவாகக் கொடுத்து அசர வைக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு தாவரத்தின் தாவரவியல் பெயரையும் கொடுப்பது இன்னும் பாராட்டப்படவேண்டியது.
இருளர்களின் உரிமைப் போராட்டங்கள் பற்றியும் குணசேகரன் எழுதியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருளர்கள் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டதையும் அதற்கான போராட்டத்தையும் ஓர் இருளரே விவரிக்கிறார். இன்றைய இருளர் வாழ்வின் முக்கியப் பிரச்சினையான சான்றிதழ் வாங்குவதைப் பற்றிச் சொல்லும் ஆசிரியர், இதன் காரணமாகவே பெரும்பாலான இருளர்கள் பாம்பு, அணில் பிடிக்கும் இருளர்களாகவே தங்கிவிடுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.
மிக எளிமையான தமிழ், ஆழமான பார்வை, தொடர்ச்சியான தகவல்கள் என அசர வைக்கும் ஆசிரியரின் முதல் நூல் இது என்னும்போது அந்த ஆச்சரியம் இன்னும் பன்மடங்கு அதிகரித்தது. இத்தனை முயற்சியும் உழைப்பும் காண்பித்த ஆசிரியர் இன்னும் சில விஷயங்களில் கவனம் கொண்டிருக்கலாம்.
ஒரே விஷயத்தைப் பலமுறை மீண்டும் மீண்டும் சொல்வதன்மூலம் ஏற்படும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். ஐவகை நிலங்கள் பற்றியும், இருளர்களின் மொழி பற்றியும் இது போன்ற இன்னும் நிறைய தகவல்களும் நிறைய முறை வருகின்றன. ஆரிய படையெடுப்பு என்கிற ஒரு கருத்தாக்கம் இன்று பல ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை ஒரு விவாதித்திற்குரிய விஷயமாகக்கூட ஆசிரியர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆரியப்படையெடுத்து நிகழ்ந்தது என்கிற முடிவின் அடிப்படையில் இருளர்களை தஸ்யூக்களாகவே அணுகிறார். அதேபோல், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருளர்களின் பெருமையைச் சொல்வதாக எண்ணிக்கொண்டு, இன்றைய மக்களின் நாகரிகத்தைப் பற்றிய கிண்டல்கள், ஒருவகையில் ஆசிரியரின் சமூக அக்கறையைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ள முடிந்தாலும், செயற்கைத்தனமாக ஒலிக்கிறது. இந்த செயற்கைத்தனமான எழுத்துகள், இந்நூலில் ஆசிரியர் எட்டியுள்ள உயரத்திற்குச் சற்றும் பொருந்தாதவை. சில இடங்களில் இந்த சமூக அக்கறை எல்லை மீறி ஒருவித அலுப்பைத் தருகிறது. ஆய்வுகள் ஊகங்களின் அடிப்படையிலும் நடக்கின்றன என்றாலும், இந்த ஊகம் ஓரோர் இடங்களில் அதிகமாகவிடுகிறது. ஓர் உதாரணம், இருளர்கள் தலைப்பாகை கட்டுவதைப் பற்றியது. இதை இன்றைய உலகின் மக்கள் அணியும் தலைக்கவசங்களோடு ஒப்பிடுவது கொஞ்சம் அதிகபட்ச கற்பனை, ஊகம். இருளர்களின் திருமணம் பற்றிய சிறந்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர், இருளர்களின் மறுமணம் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கலாம். (நிறைய தகவல்களை விடாமல் படித்ததில், இதை நான் பார்க்கத் தவறியிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். நன்றி.) நிறைய நூல்களையும், குறிப்புகளையும் படித்து நூலாய்வு செய்திருக்கும் ஆசிரியரின் கள ஆய்வு குறித்த விவரங்கள் இல்லை. கள ஆய்வும் செய்திருந்தால் இந்நூலில் இருளர்களின் இன்னொரு பரிமாணமும் கைக்கூடியிருக்கலாம்.
'சோளகர் தொட்டி' நாவலில் இருளர்கள் வாழ்வின் இன்னொரு பக்கத்தை உணரமுடியும். காட்டில் வாழ்வதால் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் நம்மைப் பதறவைப்பவை. சரியான கல்வி அறிவும், பொருளாதார சமூக முன்னேற்றமும் மட்டுமே இவர்களை முன்னேற்ற முடியும். இன்றைய இருளர்கள் தங்கள் சந்ததிகளாவது படித்து முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் உள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது முக்கியமானது. இது நிகழ அவர்களின் இஷ்டமான கன்னித் தெய்வம் அருளட்டும்.
தமிழக அரசின் சிறந்த புத்தகத்திற்கான விருதைப் பெறும் தகுதியுடைய இப்புத்தகத்தைப் போன்ற இன்னும் பல புத்தகங்களை, ஆய்வு நூல்களை குணசேகரன் எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.
ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/767/Irullargal%20:%20Orr%20Arimugam
Posted by IdlyVadai at 12/12/2008 08:48:00 AM 2 comments
Labels: புத்தகவிமர்சனம்
Thursday, December 11, 2008
சி.பி.ஐ என்ற ....
அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு: முலாயம்சிங் மீதான வழக்கை வாபஸ் பெறும் மத்திய அரசு; சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு
சமாஜ்வாடி கட்சி தலை வரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் அள வுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சதுர்வேதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு சாதகமாக தீர்ப்பு கூறியது.
அப்போது முலாயம் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வந்தது. எனவே இந்தபிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்ட காங்கிரஸ் சி.பி.ஐ.யை முலாயம் சிங்குக்கு எதிராக திருப்பி விட்டது.
சி.பி.ஐ.யில் முலாயம்சிங் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் முலாயம்சிங் காங்கிரசுக்கு ஆதரவாளராக மாறினார். இதனால் இப்போது மத்திய அரசு இந்த வழக்கில் முலாயம்சிங்குக்கு ஆதரவாக செயல்பட தொடங்கி உள்ளது.
முலாயம்சிங்குக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாக சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், "முலாயம்சிங் தொடர்பான இந்த வழக்கு விஷயமாக மத்திய அரசின் சட்ட ஆலோசனை யை கேட்டோம். அவர்கள் நாங்கள் தாக்கல் செய்த வழக்கு தேவையற்றது என்று கூறியுள்ளனர். எனவே அந்த வழக்கை வாபஸ் பெற்று கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இதனால் முலாயம்சிங் மீதான சி.பி.ஐ. வழக்கு வாபஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CBI's Motto Mission Vision
Motto:
Industry, Impartiality and Integrity
Mission:
To uphold the Constitution of India and law of the land through in-depth investigation and successful prosecution of offences; to provide leadership and direction to police forces and to act as the nodal agency for enhancing inter-state and international cooperation in law enforcement.
Vision:
Based on its motto, mission and the need to develop professionalism, transparency, adaptability to change and use of science and technology in its working, the CBI will focus on
1. Combating corruption in public life, curb economic and violent crimes through meticulous investigation and prosecution.
2. Evolve effective systems and procedures for successful investigation and prosecution of cases in various law courts.
3. Help fight cyber and high technology crime.
4. Create a healthy work environment that encourages team-building, free communication and mutual trust.
5. Support state police organizations and law enforcement agencies in national and international cooperation particularly relating to enquiries and investigation of cases.
6. Play a lead role in the war against national and transnational organized crime.
7. Uphold Human Rights, protect the environment, arts, antiques and heritage of our civilization.
8. Develop a scientific temper, humanism and the spirit of inquiry and reform.
9. Strive for excellence and professionalism in all spheres of functioning so that the organization rises to high levels of endeavor and achievement.
( நன்றி: http://www.cbi.gov.in/mottomissionvision/mottomissionvision.php )
Posted by IdlyVadai at 12/11/2008 10:14:00 PM 4 comments
Labels: செய்தி
செய்திகள்
கடந்த சில நாட்களாக செய்திகளை ஃபாலோ செய்ய முடியவில்லை. இன்று தான் செய்திகளை பார்க்க முடிந்தது.
கண்ணில் பட்ட செய்திகள் இவை
1. பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் போலீஸ் காவல் 24-ந்தேதி வரை நீடிப்பு ( எதற்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இந்த சடங்கு என்று தெரியவில்லை )
2. தேனாம்பேட்டையில் இலங்கை ராணுவ தளபதி கொடும்பாவி எரிப்பு ( கோமாளிகள் என்ன செய்வார்கள் )
3. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தாம்பரத்தில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு ( எங்க தெரு குழாயில் தண்ணீ வரவில்லை ஒரு ஆர்ப்பாட்டத்துகு ஏற்பாடு செய்யுங்கள் )
4. தீவிரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்பை பலப்படுத்த சட்டம்: பாராளுமன்றத்தில் ப.சிதம்பரம் ( அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும் )
5. வெள்ளப்பாதிப்பு கருணாநிதிக்கு ஜனாதிபதி கடிதம். ( பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபத்தை தெரியப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் )
6. வங்கக் கடலில் மெலிந்த காற்றழுத்த தாழ்வு நிலை; தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் ( அடுத்த ஜனாதிபதி கடிதம் ரெடி )
7. பவுன்விலை ரூ.9440 ஆக உயர்வு; தங்கம் விலை ரூ.200 அதிகரிப்பு ( அட இதுவும் தினமும் வரும் செய்திதாங்க )
Posted by IdlyVadai at 12/11/2008 08:40:00 PM 6 comments
Labels: செய்திகள்
Tuesday, December 09, 2008
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு
Posted by IdlyVadai at 12/09/2008 09:07:00 AM 12 comments
Thursday, December 04, 2008
தேசம், பட்டது போதும் - துக்ளக் தலையங்கம்
தேசம், பட்டது போதும் - மும்பை தாக்குதல் பற்றி துக்ளக் தலையங்கம்
தீவிரவாதத்தை முறியடிப்பதில் தன்னுடைய அரசுக்கு இருக்கிற மன உறுதியைப் பிரதமர் தெரிவித்துவிட்டார். தீவிரவாதிகளின், ஒவ்வொரு படுபாதகத்திற்குப் பிறகும், செய்ய வேண்டிய சடங்கு அத்துடன் முடிந்தது. தீவிரவாதிகளினால் பலமுறை தாக்கப்பட்டுள்ள பெருமையைக் கொண்ட நமது நாட்டில், அரசு கற்றுக்கொண்ட ஒரே பாடம், "தாக்குதல் நடந்து, பல சடலங்கள் விழுந்த பிறகு – தீவிரவாதத்தை ஒடுக்குகிற உறுதியைத் தெரிவித்து, பிரதமர் பேசிவிட வேண்டும்' என்பதுதான். "அரசியல் வித்தியாசங்களை மறந்து, எல்லோரும் ஒரே குரலில் பேசி, இந்தக் கொடூரத்தை எதிர்க்க வேண்டும்' என்ற மந்திரமும் ஓதப்பட்டாகிவிட்டது.
பம்பாயில், ஓபராய் ட்ரைடன்ட், தாஜ் என்ற இரண்டு ஹோட்டல்களிலும், நாரிமன் ஹவுஸ் என்ற இடத்திலும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் 195 பேரைப் பலி
வாங்கிவிட்டது. இதில் அயல்நாட்டினரும் உண்டு. பாதுகாப்பு அதிகாரிகள், விசேஷ படையினர் போன்றவர்களும் உயிர் இழந்திருக்கிறார்கள். பெரும் நாசம்.
இந்த முறை, தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தங்களுடைய தாக்குதலை நடத்தியுள்ளதால் – இனி துறைமுகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, மேலும் ஒரு சம்பிரதாய நடவடிக்கை. இம்முறை தண்ணீர் மார்க்கமாக வந்தால், அடுத்த முறையும் அப்படித்தான் வருவார்கள் என்ற உத்திரவாதம் இருப்பது போல ஒரு அசட்டு எண்ணம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களில்தான் தாக்குதல் நடத்துவோம் – என்று தீவிரவாதிகள் சத்தியம் செய்து கொடுத்திருப்பது போல, அந்த மாதிரி முக்கியமான தினங்களில், பத்திரிகைகள் வியந்து பாராட்டுகிற அளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.
ஒரு ரயில்வே ஸ்டேஷனிலோ, மார்க்கெட்டிலோ, குண்டுவெடிப்பு என்றால், பல
ரயில்வே ஸ்டேஷன்களில் சில தினங்கள் கெடுபிடி, சில சந்தைகளுக்குப் பந்தோபஸ்து என்ற சடங்கு நடைபெறும். மற்ற இடங்களுக்கு தீவிரவாதிகள் போகமாட்டார்கள் என்ற ஒரு பித்துக்குளித்தனமான நம்பிக்கை. இந்தப் பாதுகாப்பு லட்சணத்தைப் பற்றி எங்கு போய் முட்டிக்கொள்வது?
பார்லிமென்டிலிருந்து பஸ்ஸ்டாண்ட் வரை, கோவிலிலிருந்து ஹோட்டல்கள் வரை, எல்லா இடங்களும் தீவிரவாதிகளுக்கு இலக்காகக் கூடியவையே என்ற தகவலை, என்றாவது ஒரு முறையாவது நமது உளவுத்துறையினர் கூறியிருக்கின்றனரா? அவர்களுடைய இலக்கு – இந்தியா; இதில் ஹோட்டல் என்ன, துறைமுகம் என்ன... எல்லாமே அடக்கம்தான். ஒரு மிகப்பெரிய கோவிலில் நாசமோ, அல்லது ஒரு பள்ளியில் சிறுவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு கொலை வெறியாட்டமோ
– தீவிரவாதிகள் நடத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது...?
நமது ஆட்சியாளர்களின் முனைப்போ, கதிகலங்க வைக்கிறது. "பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற, பாகிஸ்தானிலிருந்து வந்த, பாகிஸ்தானியர்கள் செய்த வேலை இது' – என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, அதே மூச்சில் "பாகிஸ்தான் உளவுத்துறை (கொடுமைக்குப் புகழ்பெற்ற ஐ.எஸ்.ஐ.) தலைவரை அழைத்திருக்கிறோம்' என்று அரசு கூறுகிறது! எதற்காக அவர் இங்கு வர வேண்டும்? நாம் காட்டுகிற ஆதாரங்கள் பைசா பெறாது என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கவா? அல்லது நமது அரசின் வசம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு போகவா? அதுவும் இல்லையென்றால் "ஆஹா! பாகிஸ்தானை இந்தியா குற்றம் கூறியும், அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர் இங்கு வருகிறார் என்றால் – அந்நாட்டின் பெருந்தன்மைதான் என்னே!' என்று மற்ற நாட்டினர் வியப்பதற்காகவா? எதற்கு வர வேண்டும் அந்த ஆசாமி இந்த நெருக்கடியான கட்டத்தில்? நல்லவேளை – பாகிஸ்தானிலேயே "இந்தியா கூப்பிட்டால் போய்விடுவதா?' என்று முறைக்கவே, அந்நாட்டின் உளவுத்துறை தலைவர் இங்கு வருகிற யோசனை கைவிடப்பட்டிருக்கிறது. அசடு வழிவதற்கு ஒரு எல்லை கிடையாது என்று தீர்மானித்துக்கொண்ட நமது அரசின் அணுகுமுறைகள்,
இந்த மாதிரி தப்பித்தால்தான் உண்டு.
பாகிஸ்தான்தான் காரணம் – ஆனால், அந்நாட்டிற்கு ரயில் விடுவோம், பஸ் விடுவோம், பேச்சு வார்த்தை நடத்துவோம். என்னதான் நடக்கிறது? பாகிஸ்தான்
அரசிடம் பயிற்சி பெறுபவர்கள்தான் இந்தத் தீவிரவாத வேலைகளைச் செய்பவர்கள் என்று நமது அரசு நம்புகிறதா? அல்லது பாகிஸ்தான் அரசினரால் கட்டுப்படுத்த முடியாத குழுக்கள் பாகிஸ்தானிலிருந்து இயங்கி, இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுவதாக இந்திய அரசு நினைக்கிறதா? அதுவும் இல்லையென்றால், எதற்குப் பாகிஸ்தான் பற்றிய பேச்சு? உண்மையாகவே அந்நாட்டிலிருந்துதான் இந்தத் தீ இங்கே பரவுகிறது என்றால் – அங்கே பயிற்சி முகாம்களை அழிக்க, நமது நாடு முனைய வேண்டாமா?
நமக்காகத்தான் தெரியாது என்றால், இஸ்ரேலைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டாமா? இஸ்ரேல் என்றால் உடனே ஓட்டு பயம் வந்துவிடும். இஸ்ரேல் வழி என்றால் இஸ்லாமிய விரோதம் என்றாகி, ஓட்டுப் போய்விடுமே என்ற நடுக்கம். அதனால் இப்போது கூட, பம்பாய் நிகழ்ச்சிகளுக்குப் பின், இஸ்ரேல் தனது நிபுணர்களை அனுப்பி உதவி செய்வதாகக் கூறியபோது, அந்த உதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டது இந்திய அரசு! நமக்கேன் உதவி? நமக்கிருக்கிற அனுபவம் சாதாரணமானதா? தீவிரவாதிகளின் எத்தனை தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம்! எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாகிவிட்டது! இன்னும் எத்தனை பலி வேண்டுமானாலும் கொடுக்க நம்மால் முடியும் என்பதை அறியாத இஸ்ரேல், நமக்கு உதவுகிறதாம்!
சரி, இஸ்ரேல்தான் வேண்டாம் என்றால் அமெரிக்க உதவி கூட வேண்டாம். அந்நாடு தனது நிபுணர்களை அனுப்புவதாகக் கூறியும், இந்திய அரசு மறுத்து, அந்த மாதிரி உதவியை ஏற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, என்ன அமெரிக்கா! ...ஃபூ! ஒரு தாக்குதல் நடந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது? நாம் அப்படியா? எதையும் தாங்கும் இந்தியா – என்று நிரூபிக்கிற வகையில், எத்தனை தீவிரவாதத் தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம்!
அதனால்தான், சென்ற மாதம் பிரதமருடன் அமெரிக்கா சென்ற நமது அரசின் பாதுகாப்பு ஆலோசகர், "தீவிரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசினேன். அதில் பல நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை. நம் நாட்டிற்கு அந்த மாதிரி கடுமையான நடவடிக்கைகள் சரிப்பட்டு வராது' என்று அலட்சியமாகக் கூறிவிட்டார்.
ஏன்? ஏன் நமக்குச் சரிப்பட்டு வராது? அமெரிக்கா ஜனநாயக நாடு இல்லையா?
அங்கு மனித உரிமைக்காரர்களின் அழிச்சாட்டியம் இல்லையா? நீதிமன்றங்கள் இல்லையா? அங்கு எடுக்கப்பட்டு வருகிற கடுமையான நடவடிக்கைகள் நமக்கு ஏன் சரிப்படாது? என்ன நடவடிக்கைகள் அவை? தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் "அய்யய்யோ! இது ஆனாலும் கடுமையான அணுகுமுறை' என்று ஒன்று உண்டா? எவ்வளவு கடுமை முடியுமோ, அவ்வளவு கடுமையைக் காட்ட வேண்டிய விஷயம் அல்லவா இது? இன்னமும் எவ்வளவு இடங்கள் தாக்கப்பட்டால் கடுமையைக் காட்டலாம்? இன்னும் எவ்வளவு பேர் செத்தால் கடுமையைக் காட்டலாம்?
இவ்வளவு கடுமை கூடாது என்று கூறுகிற இவர் என்ன – தேசியப் பாதுகாப்பு ஆலோசகரா அல்லது தேசிய சால்ஜாப்பு ஆலோசகரா? அவரைச் சொல்லியும் பயனில்லை. அவர் வேலை பார்க்கிற இடம் அப்படி. இந்த அரசுதான் "கடுமையான சட்டங்களே தேவை இல்லை. இருக்கிற சட்டம் போதுமானது' என்று சொல்லி, "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற தத்துவம் பேசுகிறதே! இருக்கிற சட்டம் போதும்; இருக்கிற பாதுகாப்பு போதும்; இருக்கிற உள்ளூர் பயிற்சி போதும்; இருக்கிறது எல்லாமே போதும். கொடுத்த பலிதான் போதாது; அது இன்னும் கொடுக்கப்படும். எது போதுமோ, போதாதோ – இந்த மாதிரி ஒரு முனைப்பில்லாத அரசு, ஆண்டது போதும்; போதும்; போதும்!
சரி, அரசுதான் இந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்றால் – போலீஸ், உளவுத்துறை செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? "படபடவென்று மானாவாரியாகச் சுட்டுக்கொண்டே போலீஸார் முன்னேற முயன்றனர். இப்படிச் செய்யவே கூடாது' என்று ஒரு நிபுணர் கூறியிருக்கிறார்; இது சரியான கருத்துதானா என்பது நமக்குத் தெரியவில்லை; இது முறையாக பரிசீலிக்கப்படும் என்று நம்புவோம்.
"இப்போது பம்பாயில் தீவிரவாதிகளே இல்லை. எல்லோரையும் ஒழித்தாகிவிட்டது' என்று மஹாராஷ்டிரப் போலீஸ் கூறிவிட்டது. எப்படி இவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியும்? வந்தவர்களில், இன்னமும் எத்தனை பேர் பம்பாயில் உலாவுகிறார்களோ! அல்லது வேறு எங்கு போயிருக்கிறார்களோ! அடுத்து என்ன திட்டமோ? போலீஸாரின் இந்த மெத்தனம் கண்டனத்திற்குரியது.
போலீஸாரும், விசேஷப் பாதுகாப்புப் படையினரும், எங்கே நுழைகிறார்கள், எந்த இலக்கைக் குறிவைக்கிறார்கள் – என்பதெல்லாம் டெலிவிஷன் சேனல்களில் நேர்முக ஒளிபரப்பாக வந்துகொண்டிருந்தது. இது போதாதென்று படையினரின் பேட்டிகள் வேறு! இவை எல்லாம், தீவிரவாதிகளுக்கு உதவக்கூடியவை அல்லவா? அவர்கள் டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றாலும் வெளியே இருந்தவர்கள் அவர்களுக்குத் தகவல் அளித்துக்கொண்டு
இருந்திருக்கலாம். தீவிரவாதிகள் செல்ஃபோன்களைப்
பயன்படுத்திக்கொண்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றனவே! டெலிவிஷன்காரர்களைக் கிட்டே நெருங்கவிட்டிருக்கக்கூடாது.
"மத்தியப் பாதுகாப்புப் படையினர் வந்து சேர்வதில் பெரும் தாமதம் நிகழ்ந்திருக்கிறது. இது பெரிய பலவீனம் ஆகிவிட்டது' என்று விவரமறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். கவனத்திற்கும், எதிர்காலத் திருத்தத்திற்கும் உரிய விஷயம் இது.
மத்திய புலனாய்வுத்துறை, "மஹாராஷ்டிரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்' என்று எச்சரித்தும்; "தாஜ் ஹோட்டலே கூட தாக்கப்படலாம்' என்று எச்சரித்தும்
– மாநிலப் போலீஸ் ஒரு சில நாட்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, பின்னர் அதையும் வாபஸ் வாங்கியிருக்கிறது.
எவ்வளவு பெரிய அக்கறையின்மையை இது காட்டுகிறது என்று நினைத்துப் பார்த்தால், அதிர்ச்சிதான் உண்டாகிறது. மஹாராஷ்டிரத்தின் விசேஷ "தீவிரவாத எதிர்ப்புப் போலீஸார்' ஏன் அலட்சியமாக இருந்துவிட்டனர்?
இக்கேள்விக்கு விடைகாண பெரிய தேடுதல் அவசியம் இல்லை. பம்பாயில் தீவிரவாதிகள் அட்டூழியம் நடப்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக,
அம்மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்புப் போலீஸின் தலைவர் (இப்போது துரதிருஷ்டவசமாக உயிரிழந்து விட்டவர்) "எங்களுடைய நேரமும், முனைப்பும்
90 சதவிகிதம், மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில்தான் செலவிடப்படுகிறது' என்று பெருமைப்பட்டுக்கொண்டார். அவ்வளவு முனைப்பை, அந்த விவகாரத்தில் காட்டியபோது, மத்திய புலனாய்வுத் துறையிடமிருந்து வந்த தகவல்களை ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுக்க ஏது நேரம்!
"ஆள் பலம் போதவில்லை' என்கிறார்கள். போலீஸுக்குப் போதிய அளவு ஆள் பலம் சேர்க்க வேண்டாம் என்று யார் தடுத்தது? ஆளும் இல்லை; ஆயுதமும் இல்லை;
பயிற்சியும் இல்லை! அதனால் என்ன நடக்கிறது? பல போலீஸ் அதிகாரிகள், உயிரிழக்கிறார்கள்.
அவர்களுடைய தைரியம் மெச்சத்தக்கது. ஆனால், போலீஸ் உயிரிழப்பா, நாட்டிற்கு வேண்டியது? பாதுகாப்பு வீரர் சாவா, தேசத்தின் தேவை? பகையாளி உயிரை அல்லவா எடுக்க வேண்டும்! ஜெனரல் பேட்டன் என்கிற அமெரிக்க தளபதி, இரண்டாம் உலக யுத்தத்தின்போது, தன் கீழ் பணிபுரிந்த ராணுவ வீரர்களைப் பார்த்து, "தேசத்திற்காக உயிரை விடுவது அல்ல உங்கள் வேலை! உயிரை விடுவதற்காக நீங்கள் ராணுவத்தில் சேரவில்லை! உயிரை எடுக்க வேண்டும். பகையாளிகளின் உயிர்களை எடுப்பதுதான் உங்கள் கடமையே தவிர, உங்கள் உயிரை விட்டுவிடுவது அல்ல. கொல்லுங்கள்! கொல்லப்படாதீர்கள்!' என்று அறிவுரை கூறினார்.
அப்படியல்லவா இருக்க வேண்டும் – போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மனோநிலை! "உயிரை விட்டார்கள்! ஆஹா! தியாகம்' என்று பத்திரிகைகள் பாராட்ட, அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்ட, மக்கள் கொண்டாட, போலீஸ் உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாவது விமரிசையாக நடந்து வருகிறது. அதுவும் உயர் அதிகாரிகளே, உயிர் துறக்க நேரிடுகிறபோது, அவர்களின் கீழ் பணியாற்றுகிறவர்களின் மன உறுதி தளராதா? ஏன் இந்த நிலை?
"பயிற்சி போதாது; அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், இந்த மாதிரி நிலையைச் சந்திக்கப் போதுமானவை அல்ல' – என்று நிபுணர்கள்
கூறியிருக்கிறார்கள். இப்படிக் கூறியுள்ளவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், "இவர்கள் என்ன சொல்வது? கைவசம் இருப்பது தீபாவளித் துப்பாக்கியே ஆனாலும், உயிரைத் துச்சமாக மதிக்கிற வீரர்களாக்கும், எங்கள் ராணுவத்தினரும் போலீஸாரும்!' என்று தேசபக்தி சொட்டச் சொட்டப் பேசி விடுவது சுலபம். உயிரிழக்கப் போவது மேடைப் பேச்சாளர்கள் அல்லவே!
சில நேரங்களில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிரிழப்புத் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்; ஆனால் அதுவே அவர்களுடைய கடமை ஆகிவிடக் கூடாது. "உயிரை விடுவதே எங்கள் லட்சியம்' என்றா பாதுகாப்பு வீரர்கள் செயல்பட முடியும்? ஜெனரல் பேட்டன் கூறிய மாதிரி, உயிர்களை எடுக்க வேண்டும்; பகைவர்களைக் கொல்ல வேண்டும்; இயன்றால் உயிருடன் அவர்களைப் பிடித்து, உண்மைகளைக் கறக்க வேண்டும். அதற்கு வேண்டிய பயிற்சிகளையும்,
ஆயுதங்களையும், நவீன உபகரணங்களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பது அரசு, அவர்களுக்குச் செய்கிற துரோகம்.
"அயல் நாட்டு உதவியா? தேவையே இல்லை! அதுவும் அமெரிக்காவா! ஐயோ! ஏகாதிபத்திய நாடு! அதனிடம் உதவி பெறுவதா? அவர்கள் பயிற்சி முறையை நாம் பின்பற்றுவதா? கேவலம்! நமது சத்ரபதி சிவாஜி காட்டாத வீரமா? திப்பு சுல்தான் காட்டாத மனோதிடமா?' என்றெல்லாம் பேசுவது, டெலிவிஷன் உரையாடல்களுக்கும், பத்திரிகைகளின் கட்டுரைகளுக்கும் சரிப்பட்டு வரலாம்; ஆனால், வேலைக்கு ஆகாது.
அமெரிக்காவும், இஸ்ரேலும்தான், இன்று தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவை. அந்நாடுகளிலும் பயங்கரவாத நிகழ்ச்சிகள் நடந்துள்ளன; இன்னமும் நடக்கலாம். ஆனால், அவர்கள் வசம் உள்ள உபகரணங்கள்; அவர்கள் பெற்றுள்ள பயிற்சி; வெவ்வேறு வகை தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவர்கள் வகுத்துள்ள வழிமுறைகள் – எல்லாமே விசேஷமானவை. அவற்றை நாம் பெற வேண்டும். அந்த இரு நாடுகளுடன் இவ்விஷயத்தில் முழுமையாக ஒத்துழைத்து, அவர்கள் உதவியை நாம் பெற வேண்டும்.
"பொடாவை மீண்டும் கொண்டு வந்தால் பா.ஜ.க.விடம் பணிந்தது போல் ஆகிவிடும்; அதைவிட தீவிரவாதிகளிடம் பணிந்து போவதே மேல்' என்ற மதச்சார்பின்மை வைராக்கியத்தைக் கைவிட மத்திய காங்கிரஸ் அரசு தயாரில்லை என்றால்
– மதச்சார்புத் தீட்டு படிந்துவிட்ட "பொடா'விற்குப் பதிலாக "கொடா, மொடா, தொடா' என்று ஏதாவது ஒரு புதிய பெயரில் பொடா சட்டத்தையே கொண்டு வர வேண்டும். அல்லது இருக்கிற சட்டங்களையே இன்னமும் பலமடங்கு கடுமையாக்க வேண்டும்.
தேவைப்படுகிற இடங்களில் திடீர் சோதனையிடும் உரிமை; சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து சிறைப்படுத்துகிற அதிகாரம்; தன்வசமுள்ள தகவலைத் தர மறுக்கிறவர் பத்திரிகையாளரானாலும் சரி, வக்கீல் ஆனாலும் சரி – அவரைக் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்துகிற ஷரத்துக்கள்; தீவிரவாதிகளுக்கு தங்க இடம் அளித்தவர்கள் நிரபராதிகளாக இருந்தால், அதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டுமென்ற கட்டாயம்; போலீஸிடம் அளிக்கிற ஒப்புதல் வாக்குமூலம்
நீதிமன்றத்தில் ஏற்கப்படும் என்கிற பிரிவு; ஜாமீனில் வெளியே வருவதற்கே, கைதானவர் தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்கிற அவசியம்; தீவிரவாதிகளை ஆதரித்துப் பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் தண்டிக்கத் தேவையான ஷரத்துக்கள்; தீவிரவாதச் செயலுக்கு என்ன தண்டனையோ, அதே அளவு கடுமையான தண்டனையை, தீவிரவாதச் செயலுக்கு உதவியவர்களுக்கும்
நிர்ணயிக்கிற ஷரத்துக்கள்... போன்ற பல அம்சங்களை, இருக்கும் சட்டத்திலேயே புகுத்தலாம்; அல்லது புதிய சட்டம் கொண்டு வரலாம்.
இம்மாதிரிச் செய்வது, "தீவிரவாதத்தைப் பொறுத்த வரையில், அரசு தயை
– தாட்சண்யம்; ஓட்டு – பிரச்சாரம்; மனித உரிமை – மண்ணாங்கட்டி... என்பது போன்ற சுமைகளை உதறித் தள்ளிவிட்டது' என்ற தகவல், தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டாக வேண்டும். இதனால் தீவிரவாதிகள் ஓய்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும், உதவி செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு, தீவிரவாதிகளின் திட்டங்கள் தடங்கல்களை சந்திக்கும்; தகவல்கள் அரசுக்குக் கிட்டுவதற்கான வாய்ப்புகளும் கூடும்.
இது தவிர, பங்களாதேஷ் அகதிகள் வருவதும், தடுக்கப்பட வேண்டும்;
வந்துவிட்டவர்களும், ஓட்டுரிமை அற்றவர்களாக்கப்பட வேண்டும்; தொடர்ந்த கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடனான எல்லைகள் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு உதவக்கூடிய
இந்தியா – பாகிஸ்தான் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும்.
உள்துறை அமைச்சர் ராஜினாமா, திருப்பதியில் தலைமுடியைக் காணிக்கையாக செலுத்துகிற மாதிரிதான். போனது மீண்டும் வளர்கிற மாதிரி, பழைய முனைப்பின்மை மீண்டும் வளரும். பாவம் செய்துள்ளோம் என்பதை உணர்கிறோம் என்பதற்கான அடையாளமாக அது ஆகுமே தவிர, பாவத்தை அது முழுமையாகக் கழுவிவிடாது. அதற்கு நம்மிடம் திருந்திய நடத்தை தேவை. அதை மத்திய அரசு காட்ட வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படாது; தீவிரவாதச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப்படும்; "கடுமையான சட்டம் தேவை என்று பேசுவதே கண்டனத்திற்குரிய அதீதமான, நிதானமற்ற நடவடிக்கையாகிவிடும்' என்று உளறுவது; தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்ற நிலையில் சட்டத்தை வைத்திருப்பது; அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறிக்கொண்டு, போலீஸாரின் கைகளைக் கட்டிப் போடுவது; என்கௌன்டர் நடந்தால் உடனே போலீஸ்துறை மீது பாய்வது... போன்ற பெட்டைத்தனங்கள் நிற்க வேண்டும்.
நடப்பது யுத்தம். யுத்த தர்மம் இதற்குச் செல்லுபடியாகும். எதிரியை வீழ்த்த வேண்டும். அதுதான் இலக்கு. அதுதான் முனைப்பு. "அந்த முனைப்பின் காரணமாகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், வேறு வழியில்லை என்று அவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டியதுதான்' என்ற நினைப்பு தோன்ற வேண்டும். தேசம், பட்டது போதும்.
( நன்றி: துக்ளக் )
Posted by IdlyVadai at 12/04/2008 02:58:00 PM 44 comments
Labels: கட்டுரை, பத்திரிக்கை