பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 11, 2007

சன் டிவி X கலைஞர் டிவி

சன் டிவி, கலைஞர் டிவி சண்டையை பற்றி முனி கடிதத்தில் எழுதியிருந்தேன். அதை பற்றி ரிப்போட்டர் கட்டுரை...


தாத்தா கலைஞருக்கும், பேரன்களான மாறன் சகோதரர்களுக்குமான மோதல் போக்கு சமரசத்திற்கு வந்து விட்டதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கலைஞர் டி.வி.க்கும், சன் டி.வி.க்குமான மோதல் போக்கு, பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு நேயர்களைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடந்த விஷயம் இதுதான்.....தமிழக அரசு சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவை சமீபத்தில் நடத்தியது. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா தொடங்கி ப்ரியாமணி, சந்தியா உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் பலருக்கும் முதல்வர் விருது வழங்கினார். அந்த விழாவில் நமீதா, லட்சுமிராய், மாளவிகா, நிலா போன்றோரின் குத்தாட்ட நிகழ்ச்சியுடன் விவேக், வடிவேலு ஆகியோர் வழங்கிய காமெடி நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

கலர்ஃபுல்லான கலக்கல் விழாவாக நடந்த அந்த நிகழ்ச்சியை, கலைஞர் டி.வி., அரசுடன் ஓர் ஒப்பந்தம் போட்டு, படப்பதிவு செய்து கொண்டது. இதையட்டி விழாவுக்கு வந்திருந்த மீடியாக்களிடம் கலை நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்க வேண்டாமென்று அரசு அதிகாரிகள் கண்டிப்புடன் நடந்து கொண்டார்கள்.

ஆனாலும் ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்றோர் மேடையில் பேசிய விவரங்களை எல்லா டி.வி. சேனல்களும் படம் பிடித்துக் கொண்டன. இதைச் செய்திகளுக்கு இடையே அவை ஒளிபரப்பப் போவதாகக் கூறியதையடுத்து, அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்திருந்தார்கள்.

இந்தச் சூழ்நிலையில், கலை நிகழ்ச்சியுடன் கூடிய இந்த விருது விழாவை வரும் தீபாவளியன்று ஒளிபரப்ப கலைஞர் டி.வி. முடிவு செய்து, அதை விளம்பரதாரர்களிடம் தெரிவித்து விளம்பரங்களையும் சேகரித்து வந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த விருது விழாவை சன் டி.வி. கடந்த ஞாயிறன்று காலை பதினொரு மணிக்கு திடீரென ஒளிபரப்பியது. கலைஞர், ரஜினி, கமல், சூர்யா போன்றோரின் உரையுடன் கூடிய அந்த ஒளிபரப்பு தொடங்கிய அடுத்த ஐந்தாவது நிமிடம், கலைஞர் டி.வி.யில் விஜய் நடித்த ‘கில்லி’ படம் ஒளிபரப்பாகத் தொடங்கியது.

‘கில்லி’ திரைப்படத்துக்கான சேட்டிலைட் உரிமையை சன் டி.வி. தான் வாங்கியுள்ளது. மேலும், இந்தப் படத்தைத்தான் வரும் தீபாவளியன்று சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பவும் முடிவு செய்திருந்தார்களாம்.

ஆக, கலைஞர் டி.வி. ஒளிபரப்ப முடிவு செய்திருந்த விருது விழாவை திடீரென்று சன் டி.வி. ஒளிபரப்ப ஆரம்பித்ததால்தான் தீபாவளியன்று சன் டி.வி. ஒளிப்பரப்பத் திட்டமிட்டிருந்த ‘கில்லி’ திரைப்படத்தை கலைஞர் டி.வி. ஒளிபரப்பியது.

கடந்த ஞாயிறன்று ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு, அடுத்தடுத்து சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த நேயர்கள் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்த இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே அரைமணி நேரத்தில் முடிவுக்கு வந்து விட்டன. அதாவது விருது விழாவும், ‘கில்லி’ திரைப்படமும் திடீரென நிறுத்தப்பட்டு, வழக்கமான நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாக ஆரம்பித்தன.

இந்த இரு சேனல்களிலும் திடீரென ஒளிப்பரப்பப்பட்ட இந்த புத்தம் புதிய நிகழ்ச்சிகள் அதிரடியாக நிறுத்தப்பட்டது ஏன் என்று தெரியாமல் குழம்பினர் நேயர்கள்.

நடந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு உடனடியாக கலைஞர் டி.வி. நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, ‘‘மாறன் சகோதரர்கள் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்கள். கலைஞர் டி.வி.க்காக பிரத்யேக உரிமை வாங்கிய பல படங்களை கே _ டி.வி.யில் சந்தடியில்லாமல் போட்டு வந்தார்கள். இதைச் சட்டரீதியாக எதிர் கொள்ளும் பொருட்டு, ஒளிப்பரப்பானதை முறையாக ரெக்கார்ட் செய்து வழக்குப் போட திட்டமிட்டுள்ளோம்.

இப்படியான சூழ்நிலையில், தமிழக அரசு விருது வழங்கிய விழாவை சுமார் 20 லட்ச ரூபாய் பணம் கட்டி, அதை பிரத்யேகமாக ஒளிப்பரப்பும் உரிமையை அரசிடமிருந்து வாங்கி இருந்தோம். இதை தீபாவளியன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப முடிவு செய்திருந்த விஷயம் தெரிந்தும், அவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளான ரஜினி, கமல் மற்றும் கலைஞர் உரையை சன் டி.வி. திடீரென ஒளிபரப்பியது கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்து போனோம்.

அதன் பிறகுதான் மேலிடத்தில் பேசி, அவர்கள் தீபாவளியன்று ஒளிபரப்ப முடிவு செய்திருந்த படமான ‘கில்லி’யை ஒளிபரப்பினோம். எங்களின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத சன் நிர்வாகம், நேரடியாக கலைஞர் அல்லது சரத் போன்றவர்களைத் தொடர்பு கொள்ளத் தயங்கி, யார் யாரையோ மீடியேட்டர்களாகப் பயன்படுத்தி ‘கில்லி’யை நிறுத்தச் சொல்லிக் கெஞ்சினார்கள். அதே சமயம், அவர்களிடமிருந்த விருது விழா நிகழ்ச்சியை அரைமணி நேரம் முழுமையாக ஒளிபரப்பி முடித்துவிட்டார்கள்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு ஆரம்பத்தில் கடுப்பான தலைவர் கலைஞர், இந்த விவகாரத்தை கோர்ட் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், நாமும் தவறு செய்ய வேண்டாம் என்றும் ‘கில்லி’யை நிறுத்திவிடுங்கள் எனவும் கூறியதையடுத்தே, ‘கில்லி’யை மாற்றி, திட்டமிட்டப்படி ‘பைரவி’ படத்தை ஒளிபரப்பினோம்.

தொடர்ந்து இப்படி எங்களைச் சீண்டுவதன் மூலம் எங்கள் தலைவர் கலைஞரின் அபிமானிகள் சன் டி.வி. மீது தாக்குதல் நடத்த வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நடப்பதன் மூலம் மாறன் சகோதரர்கள் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்களாம்!’’ என்று விலாவாரியாக விவரித்தார்கள்.

இதையடுத்து சன் டி.வி. நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது, ‘‘ஆரம்பித்ததிலிருந்தே சன் டி.வி.யை அழிக்கவேண்டும் என்று மட்டுமே கலைஞர் டி.வி.யினர் நினைக்கிறார்கள். ஆரம்பத்தில் எங்களால் பிரபலமான காம்ப்பியர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் போன்றவர்களை மட்டும் வலைவீசிப் பிடித்துச் சென்ற கலைஞர் டி.வி. நிர்வாகம், சமீபத்தில் சன் டி.வி.யின் முக்கிய நிர்வாகியான சக்சேனாவைத் தன் நிர்வாகத்திற்கு வரும்படி வற்புறுத்தி இருக்கிறது. இதில் கடுப்பான கலாநிதி மாறன், கலைஞர் டி.வி. தீபாவளியன்று வருமானம் பார்க்க வைத்திருந்த விருது நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகளை ஒளிபரப்பி ‘ஷாக்’ கொடுத்துவிட்டார்.

அந்த விழாவில் நடந்த கலை நிகழ்ச்சிகள்தான் கலைஞர் டி.வி.க்கான பிரத்யேக நிகழ்ச்சியே தவிர, அரசு சார்பில் நடந்த விழா நிகழ்ச்சிகளை, நாங்கள் ஒளிபரப்பியது ஒன்றும் சட்ட விரோதமான காரியமல்ல. தொழில் ரீதியான போட்டியைச் சமாளிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம்!’’ என்கிறது சன் டி.வி. நிர்வாகம்.

ஆக, இந்த சேனல் யுத்தம் நேயர்களுக்குக் கொண்டாட்டத்தைக் கொடுக்குமா? அல்லது குழப்பத்தைக் கொடுக்குமா என்று போகப் போகத்தான் தெரியும்.

4 Comments:

R.Subramanian@R.S.Mani said...

Superb; Once upon a time gOVT. FUNCTIONS ARE THE SOLE RIGHT OF sUN TV ONLY; NOW ONLY IT IS REALISED THAT GOVT. FUNTIONS ARE ELIGIBLE FOR ALL TVS, sUPERBDA;-SUPPAMANI

Unknown said...

நாய அடிப்பானேன் ....பீய சொமப்பானேன்....

சன் டிவி க்கு இது தேவையா..

King Viswa said...

Viswa Nathan.D
Chennai, Tamil Nadu, India.

Dear idly Vadai,

Very Nice posting. However, i happen to read a blog posting which is quite contradictory to all the other media reports.

The blog is: www.tamilkutty.blogspot.com

Thanks & Regards,

Viswa Nathan.D

IdlyVadai said...

viswa,

அந்த செய்தியை போடும் முன் கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நண்பரிடம் கேட்டுவிட்டு போட்டேன்.