சில செய்திகள்..
பிஜேபி ஆட்சியை கவிழ்த்ததால் மக்களிடையே மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியை எதிர்த்து அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரசுடன் சேர்ந்து மாற்று அரசு அமைப்பது சரியாக இருக்காது, டெல்லியில் முகாமிட்டுள்ள கவுடாவை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காங்கிரசின் கதவுகளை தட்டக் கூடாது என்று குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.முதலமைச்சராக பதவியேற்க அழைக்கப்படும் நபருக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பது திருப்தியளிப்பதாக கவர்னர் கருதும் போது, அவர் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதற்கு கவர்னருக்கு அரசியல் சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சில எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றால் மட்டுமே முதலமைச்சர் பதவி வகிப்பவர் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கோரலாம்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் விதித்த நிபந்தனைகளை ஏற்று பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பிஜேபியை அக்கட்சி வலியுறுத்தியது அரசியல் சட்டத்திற்கு எதிரானது
- முன்னாள் நீதிபதியாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கவர்னராகவும் இருந்த ரமாஜாய்ஸ்
"நீங்கள் அடிக்கடி பல்டி அடித்து எங்களை சித்ரவதை செய்கிறீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கிறீர்கள். இப்படி செய்வதற்கு பதில் எங்களை எல்லாம் விதான் சவுதா (சட்டசபை) உச்சிக்கு அழைத்து சென்று அங்கு இருந்து எங்களைத் தள்ளி கொன்று விடுங்கள்'' - ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள். எந்த நேரத்திலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, November 20, 2007
கர்நாடகாவில் இன்று
Posted by IdlyVadai at 11/20/2007 05:38:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
எடயுரப்ப மந்திரம் பிள்ளிசூன்யம் என்று மரத்தடி ஜோசியர் அளவுக்கு இறங்கிவிட்டார் என்ன கொடுமை எங்களுக்கு இப்படி ஒரு முதல்வர் தேவையா இவர் போனதே நல்லது நல்லது இருந்தால் இவர் கொடுமை தாங்க முடியாமல் போயிருக்கும் நன்றி கௌட
Post a Comment