பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 03, 2007

விஜயகாந்த்+சரத்குமார்+கார்த்திக் - புதிய கூட்டணி ?

தமிழக அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கான புதிய கூட்டணியை உருவாக்கும் ஏற்பாடுகளை இப்போதே தொடங்கியுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. தலைமையில் அமையும் இரு அணிகளை தவிர்த்து இன்னொரு கூட்டணியும் ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகின்றன. சிறிய கட்சிகள் இந்த மூன்றாவது அணியில் சேரலாம் என எதிர் பார்க் கப்படுகிறது. சரத்குமா ரும் கார்த்திக்கும் சந்தித்து பேசி புதிய கூட்டணிக்கு அடித்தளமிட்டுள்ளனர்.


( இந்த கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கலாம் ? )சரத்குமார் அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக கார்த்திக் பொறுப்பு வகிக்கிறார்.

இருவரும் மதுரையில் நடந்த முத்துராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவில் பங் கேற்றனர். பிறகு தனியாக சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பு முக்கியத்து வம் வாய்ந்ததாக கருதப்படு கிறது. சந்திப்பு சந்தோஷமாக இருந்ததாகவும் இருவரும் இணைந்து செயல்பட முடிவு எடுத்து இருப்பதாகவும் கார்த்திக் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் கூறினார். எனவே இவர்கள் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட் டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தை சேர்க்கவும் முயற்சி நடக் கிறது. இவர் கடந்த சட்ட மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதி யில் மட்டுமே ஜெயித் தார். ஆனால் எல்லா தொகுதி களிலும் நிறைய ஓட் டுக்களை பிரித்து பெரிய கட்சிகளுக்கு சவாலாக இருந்தார்.

வரும் தேர்தலில் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்புவதாக கூறப்படுகிறது. மூவரும் ஒரே அணிக்கு வரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அக் கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

5 Comments:

ஹரன்பிரசன்னா said...

சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் நடித்த விடுதலை படம் மாதிரி ப்ளாப் ஆகப்போகிறது.

Anonymous said...

ஜெயமாலினி,அனுராதா,குள்ளமணி
தலைமையில் ஒரு வலுவான கூட்டனி
உருவாகுவதாக தகவல் வருகிறதே?

உண்மையா இட்லியாரே?

Anonymous said...

கூத்துக்காட்டிகள் முன்னேற்ற கழகம்.

Hariharan # 03985177737685368452 said...

இந்த நடிகர்கள் கூட்டணி ஜெயித்து வரும் ஆட்சியின் சட்டமன்றம் உதயம்-சத்யம்-அபிராமி காம்ப்ளக்ஸ்களில் ஏதாவது ஒன்றா?

பேக்வர்டு பிளாக் கட்சித்தலைவர் கார்த்திக் தமிழகத்தில் சிவாஜி கணேசனின் அரசியல் வாரிசுன்னு பேச்சு இருக்கே!

விஜய்காந்த் தனது /கட்சியின் எதிர்காலத்தை டைட்டானிக் மாதிரி மூழ்கடிப்பாரா?

தமிழ்நாட்டில் பொதுமக்கள் எண்ணிக்கையைவிட "கோடம்பாக்கம் வகையறாக்கள்-எதிர்கால முதலமைச்சர்கள்" எண்ணிக்கை அதிகமா இருக்கு :-(

வெங்க்கி said...

கார்த்திக் எப்பவும் மப்புலேயே திரியுற ஆளு. அவரு என்ன பேசராருன்னு அவருக்கே விளங்காது.. சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி ன்ற கணக்கா இருக்கு...

சரத்தும் கேப்டனும் இந்த ஆளோடயா கூட்டு வச்சிக்குவாங்க ?