பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 05, 2007

நெடுஞ்செழியன் வீட்டுக்கு சென்றீர்கள், ஏன் தா.கிருஷ்ணன் வீட்டிக்கு செல்லவில்லை ? எச்.ராஜா கேள்வி

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் வீட்டுக்கு சென்றுஅஞ்சலி செலுத்தி யதாக கூறும் முதலமைச்சர் கருணாநிதி, அவருடைய சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப் பட்டபோது அவருடைய வீட்டுக்கு அஞ்சலி செலுத்த போகாதது ஏன்? என்று பிஜேபியின் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதி தன்னுடைய உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுவதால் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ் செழியன் மறைந்த போது அவருடைய வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாக கூறியுள்ளார்.

அப்படியானால், அவருடைய சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட போது அவருடைய வீட்டுக்கு முதலமைச்சர் கருணாநிதி அஞ்சலி செலுத்த போகாதது ஏன்?

குறைந்த பட்சம் திமுக செயற்குழுவில் தா.கிருஷ்ணன் படுகொலைக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? அப்போதெல்லாம் கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே போனது?
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நீர்த்துப்போய் விட்டது. அண்டை நாடுகளுடன் சமூக உறவு தொடரவில்லை.

பாகிஸ்தானும் சீனாவும் இலங்கைக்கு உதவி செய்து அந்த நாட்டுடன் உறவை வலுப்படுத்தி வருகின்றன. இதற்கு இந்தியா இடம் கொடுத்து விட்டது. புலிகளின் பிரச்சனையில் மட்டு மன்றி திமுக ஆட்சியை கலைக்க பல்வேறு காரணங்கள் உள்ளன.

உச்சநீதிமன்றம் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய காரணம் இருப்பதாக கூறியுள்ளது. தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி மோசமான தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்.

அவருடைய மகன் விஷ்ணுபிரசாத், தன்னுடைய தந்தை மீதான தாக்குதலில் ஏதோ சதி இருப்பதாக கூறியிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தாலே வன்முறைகள் வெடிக்கின்றன. இப்போது ஜாதிச் சண்டையும் தொடர்கிறது. முதுகுளத்தூரில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டுள்ளார்.

இப்படி ஏராளமான வன்முறைகள் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் சட்டம் ஒழுங்கு நிலை தமிழ்நாட்டில் பாதிக்கப் பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தொடர்ந்து நீடித்தால் தமிழகத்துக்கு ஆபத்து உருவாகும். இவ்வாறு எச்.ராஜா பேட்டி அளித்தார்.

6 Comments:

Anonymous said...

ஹெச்.ராஜா போன்ற பாசிச நச்சு கிருமிகள் இருப்பதுதான் தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவுக்கே பேராபத்து. கருணாநிதியை கேள்வி கேக்கும் பாசிஸ்ட் ராஜா அவனது சகோதர பாசிஸ்ட் இந்தியாவின் கரும்புள்ளி மோடியின் [edited]. கேடு கெட்ட நாய்கள்(நாய்கள் மன்னிக்க)

Anonymous said...

Nedunchezhian, belonged then to the AIADMK party, and this was not a blacklisted one by the Government of India -- and did MK eulogise for the other Tamils e.g. Siri Sabaratnam, Amirthalingam, Dharmalingam, Pararajasingam, K. Padmanabha, Neelan Thiruselvam and a host of others who have given their lives over the past twenty years in this same cause!!
MK's brotherly feeling for Srilankan Tamils is rather selective!!

Anonymous said...

how come no news in idlyvadai about http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1207910

IdlyVadai said...

அனானி அந்த கூத்தை முனி கடித்ததில் எழுதியிருக்கேன். நாளைக்கு பதிவாக வரும்.

Anonymous said...

ராஜா கேட்டதென்னவோ சரியான கேள்வி தான்!! ஆனால், மகனால் கொலை செய்யப்பட்டவர் வீட்டில் துக்கம் கேட்க போகும் அளவிற்கு அவர் ரத்தத்தில் தமிழ் உணர்வு ஓடவில்லை!

Anonymous said...

இப்பத்தான் இவருக்கு தன்னோட நரம்புல தமிழ் ரத்தம் ஓடுத்தூன்னு தெரிய வந்துதாமா? ஆமா பல ரத்தம் ஓடும் பொழுது எது என்ன ரத்தம்னு கண்டுபிடிக்க ரொம்ப நாள் ஆகும்தான். அது சரி வீரப்பன், ஆட்டோ சங்கர் எல்லோரும் தமிழர்கள்தானே அப்ப இவருக்கு தமிழ் ரத்தம் ஓடாம இங்கிலீஷ் ரத்தம் ஓடிச்சாமா? ஏன் அவர்களுக்கு கவிதை எழுதவில்லை? பத்மநாபா செத்த பொழுது கவிதை எழுதவில்லை? ஒரு வேளை செலக்டிவா ஓடுதோ தமிழ் ரத்தம். மனுசன் உடம்புல எ , பி ஒ ஓ பாசிடிவ் ஓடுனா நல்லது இப்படி தமிழ் ரத்தம் எல்லாம் ஓடுனா ரொம்ப ஆபத்தாச்சுதே உடனே ஒரு உண்மையான டாக்டர் கிட்ட காண்பி ங்க டாக்டர்.