பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 28, 2007

அப்படியா ?

அ.தி.மு.க.,வின் நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில் வெளியான கேள்வி - பதில்

தினமலர் கடந்த சில மாதங்களாகவே கழகத்தை சீண்டிப் பார்ப்பது மற்றும் பாதகமான செய்திகளை வெளியிடுகிறது. இதுநாள் வரை தினமலர் மற்றும் தினமணி இதழின் ஆசிரியர்கள் குறித்து, வைத்தியநாதய்யர் என்றும் கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்றும் "அவாள்' என்றும் குறிப்பிட்டு விமர்சனம் செய்து வந்த கருணாநிதி, இப்போது எந்த விமர்சனமும் செய்யாததில் இருந்தும், இந்த பத்திரிகையாளர்கள், நிர்வாகிகள், சந்திப்பு நடந்திருக்கிறது. தினமலர் பதிப்பாளருடன் நேரடி சந்திப்பு. தினமணி நிர்வாகத்துடன் கருணாநிதி குடும்ப ஏஜெண்டுகள் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக அந்தப் பத்திரிகையிலிருந்தே தகவல். இதன் மூலம் என்ன ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அ.இ.அ.தி.மு.க.,வை விமர்சனம் செய், தே.மு.தி.க.,வை ஆதரி - தி.மு.க.,வை விமர்சனம் செய்யாதே! ஸ்டாலின், கனிமொழி போன்றோர் செய்திகளை அதிகம் போடு என்பது தான். கழகத்தவர்கள் தயக்கமில்லாமல் இவ்வகை காரணங்களுக்காகவே தினமலர் - தினமணி இதழ்களை வாங்கிப் படிப்பதையும், விளம்பரம் கொடுப்பதையும் தவிர்க்கலாம்.

1 Comment:

Anonymous said...

இ.வடை சாமி,
எங்க பூத் ஏஜன்ட் சாமி,திவாகர் சாமி,பாலா சாமி,செந்தில் பிள்ளை சாமி, கொண்டையெடுப்பு சாமி,குறியருப்பு சாமின்னு எல்லா பகுத்தறிவு சாமிகளும் இப்பல்லாம் படிப்பது தினமலர் தானுங்க.பகுத்தறிவெல்லாம் மாலை போட்டாச்சுங்க,அதான் வுட்டுப் போகாம எல்லாரையும்
சாமி போட்டதுங்க!!
பொன்.பாண்டியன்