பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 07, 2007

சின்னபாப்பா பெரியபாப்பா !

இன்று வந்த இரு செய்திகள்.

தமிழகம் தள்ளாடி விடக் கூடாது என்பதற்காக தள்ளாத வயதிலும் பாடுபடும் கருணாநிதியை சிலர் ஓய்வு எடுக்கச் சொல்வது என்ன நியாயம் - ஸ்டாலின்

கட்சியில் இளைஞர்களுக்கு, மூத்தவர்கள் வழிவிட வேண்டும் - கலைஞர்


இந்த இரண்டு பேச்சுக்களிலும் உள்ள முரன்பாட்டை, தோழர்கள் தலைமைக்கு தமிழில் புரியும்படி எடுத்து சொல்லுவார்கள் என்று நம்புகிறேன்.


முழு பேச்சு விவரம் கீழே..


ஸ்டாலின் பேச்சு:
இளைஞர் அணிக்கு ஒரு வரலாறு உண்டு. இது முதன்முதலில் சென்னையில் துவங்கப்பட்டது. நான் அழைத்ததால் எம்.ஜி.ஆர்., "மேக்கப்'புடன் வந்து பேசிவிட்டு சென்றார். அன்று நடந்த கூட்டத்தில் என்னை அமைப்பாளராக நியமிக்க மறைந்த அமைச்சர் தங்கப்பாண்டியன் கூறினார். "எனது மகனை நியமிக்க மாட்டேன்; நியமித்தால் அரசியல் சாயம் பூசுவார்கள்' என, கருணாநிதி அப்போதே மறுத்தார். அதனால், குழு தான் அமைக்கப்பட்டது; அதில் நானும் ஒருவன். தி.மு.க.,வில் எத்தனையோ அணிகள் இருந்தும் முதலிடத்தை இளைஞர் அணி தான் பெற்றுள்ளது. 84 வயதிலும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 24 மணி நேரத்தில் 20 மணிநேரம் பாடுபடும் தலைவர் இவரைத் தவிர உலகில் வேறு யாருமில்லை. கருணாநிதி எப்போது ஓய்வு எடுப்பார் என சிலர் துடித்துக் கொண்டுள்ளனர். தமிழகம் ஓய்வெடுத்துவிடக் கூடாது என நினைத்து ஓய்வுக்கே ஓய்வு தரக் கூடியவர் தான் கருணாநிதி. தமிழகம் தள்ளாடி விடக் கூடாதே என்பதற்காகத்தான் தள்ளாத வயதிலும் தனது பயணத்தை தொடர்கிறார். அவரை ஓய்வு பெறச்சொல்வது என்ன நியாயம்.

கலைஞர் அறிக்கையின் கடைசி பகுதி
நெல்லை மாநாடு தொடங்கும் வரையில் நிறைய எழுதப் போகிறேன் - இது முதல் கடிதம்தான் - இளைஞர்களே கூடி மாநாடு நடத்தினால்தான் எனக்கு மகிழ்ச்சி! ஏற்புடையதுமாகும்! மூத்தோர் ஆதரவாளர்களாக விளங்கட்டும். மாநாடு தொடக்கத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரிகைகளில் கண்டேன் - இளைஞர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு மாறாக; அகவை முதிர்ந்த அமைச்சர்களே அந்தப் புகைப்படத்தை அடைத்துக் கொண்டு நிற்கின்ற காட்சி; சிறிது ஏமாற்றத்தை எனக்குத் தராமல் இல்லை!

இளைஞர்கள்; மூத்தோர்களாக ஆகாமல் இருக்க முடியாது - ஆக வேண்டும் - அதே சமயம்; இளைஞர்களுக்கு வழி விடாமல் அந்த மூத்தோர் அடைத்துக் கொள்ளவும் கூடாது. அவரவர்க்குரிய பணிகளை - அவரவர்கள் பகிர்ந்து கொண்டு ஆற்றிட வேண்டும்;

3 Comments:

Anonymous said...

// மாநாடு தொடக்கத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரிகைகளில் கண்டேன் - இளைஞர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு மாறாக; அகவை முதிர்ந்த அமைச்சர்களே அந்தப் புகைப்படத்தை அடைத்துக் கொண்டு நிற்கின்ற காட்சி; //


புகைப்படத்தை மட்டுமா அடைத்துக்கொண்டார்கள்?

தமிழ் ரத்தம் அழைக்கிறது -"எல்லா இளைஞர்களும் வாங்க. எங்க அப்பா, தாத்தா, தாத்தத்தா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன், மற்றும் உடன்பிறப்புகள் வாழ வைக்க வாங்க. புகைப்படத்துல வந்து நில்லுங்க."

எதுக்கும் நான் ஓய்வு எடுக்கிறேன்.

Unknown said...

ரெண்டு பாப்பாக்களும்...சூப்பர் ....

முக்கியமா அந்த கலைஞர் பாப்பா மஞ்ச துண்டோட...

பீச்சுல முறுக்கு விக்கிற ரேஞ்சுக்கு தி மு க போயிட்டது...

Unknown said...

inda paithyakkarathanamana pechu evvalvu nalaikkuththan poikkondeirukkum endru theriyavillai.ellam "ramarukke" theriyum.

thiruvenkatathan