பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 27, 2007

அன்புமணி்க்கு எதிரான போராட்டம் - ராமதாஸ்

மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அன்புமணி இருப்பதால் தான் தமிழ்நாட்டில் சிலர் மருத்துவக் கல்லூரி மாணவர்களை போராடு வதற்கு தூண்டி விடுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

எனக்கு கூட இப்படி இருக்குமோ என்று தோன்றியது, அதையே இன்றூ ராமதாஸ் கூறியுள்ளார். திமுக மீது தொடர்ந்து ராமதாஸ் தாக்குவதற்கும் காரணம் யாரும் அன்புமணியை சப்போர்ட் செய்யாதது, தமிழக மக்கள் மீது இருக்கும் அபிமானம் என்று நீங்கள் நினைத்தால் நிஜமான அப்பாவி நீங்கள் தான்.


மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அன்புமணி இருப்பதால் அவரது துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கருத்து கூறுவதை நான் தவிர்த்து வந்தேன்.

எய்ம்ஸ் இயக்குனர் பிரச்சனையில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் அன்புமணிக்கு ஆதரவாக பேசவில்லை. அவரது இடத்தில் வேறொரு தமிழன் அமைச்சராக இருந்திருந்தால், நான் பாமகவினரை திரட்டி எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தியிருப்பேன்.

இப்போது தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் பிரச்சனை அரசியலாக்கப்பட்டு விட்டது. இது கிராமப்புற மக்களின் உயிர் பிரச்சனை என்பதால் இதில் நான் ஒரு மருத்துவர் என்ற முறையிலும், அரசியல் ரீதியாகவும் கருத்து சொல்ல விரும்புகிறேன்.

மருத்துவப் படிப்புக் காலம் ஐந்தரை ஆண்டிலிருந்து ஆறரை ஆண்டாக உயர்த்தப்படுவதாக மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக் கிறார்கள். மருத்துவப் படிப்புக் காலம் ஐந்தரை ஆண்டுகள் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஓராண்டு என்பது நான்கு மாதங்கள் கிராமப்புற மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்கள் தாலுகா மருத்துவ மனைகளிலும், நான்கு மாதங்கள் மாவட்ட மருத்துவமனைகளிலும் 8 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெற்று பணியாற்றுவதற்காகத்தான்.

இந்த அடிப்படையில் தான் மத்திய அரசு சட்டம் கொண்டு வர உத்தேசித்துள்ளது. எனவே படிப்புக் காலம் உயர்த்தப்படுவதாக தவறாக புரிந்து கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இந்த பிரச்சனையில் சில அரசியல் கட்சிகள் உள்ளே புகுந்து மாணவர்களை தூண்டிவிட்டு வருகிறார்கள். இதனை மாணவர்கள் உணர வேண்டும்.

கிராமப்புற மருத்துவ சேவை பல்வேறு மாநிலங்களில் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அல்லாமல், கிராமப்புறங்களில் பணி யாற்றுவதை சேவை மனப்பான்மை யுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் ஓராண்டு கிராமப்புற சேவைக்கான சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக மாணவர்களை அழைத்து பேசி அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்க சாம்பசிவராவ் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டம் வருவதற்கும் நீண்ட நாட்களாகும்.

இதில் மாணவர்களை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்தை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் போராடவில்லை.

இப்படிப்பட்ட சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உள்ளிட்ட எல்லா மாநில அமைச்சர்களும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

அப்படியிருந்தும் தமிழகத்தில் மருத்துவ மாணவர்களின் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே நான் கேட்கிறேன்.

இவர்கள் ஆட்சிக் காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட எல்லா மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் முழு அளவில் நியமிக்கப்பட்டு, மருத்துவ சேவை முழுமையாக நடைபெற்றது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா?

இங்கே மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் அரசியல் புகுந்துள்ளது. இதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன். இதுவரை அரசியலே புகாமல் இருந்த புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் சென்று மாணவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அரசியல் தலைவர்களை அரசு அனுமதித்தது ஏன்?

மாணவர்கள் அரசியலுக்கு அடிபணியாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

0 Comments: