பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 13, 2007

இட்லி சாப்பிட்டார் வைகோ

நேற்று கைதான வைகோ + தொண்டர்கள் இட்லி சாப்பிட்டனர் !

தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ் ஈழவிடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேரணி தலைவர் பழ.நெடு மாறன் தலைமையில் நடந்தது.

இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். போலீ சின் தடையை மீறி நடந்த பேரணியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். ஏராளமான ம.தி.மு.க.வினரும் விடுதலைசிறுத்தை கட்சியினரும், இந்திய தேசிய லீக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

சட்ட விரோதமாக நடந்து கொண்ட வழக்கில் வைகோ, பழ.நெடுமாறன், மல்லை சத்யா, மாவட்ட தலைவர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், வக்கீல் ராதாகிருஷ்ணன், சைதை மதியழகன், விடுதலைசிறுத்தைகள் கட்சி திருமாறன், இந்திய தேசிய லீக் தலைவர் பசீர்அகமது உள்பட 262 பேர் கைது செயப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும், எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியத்தில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இரவு உணவாக இட்லி வழங்கப்பட்டது. வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொண்டர்களுடன் தொண்டராக நின்று இட்லி பொட்டலத்தை வாங்கி சாப்பிட்டனர். இது அவருடன் கைதான ம.தி.மு.க. தொண்டர்களை நெகிழ வைத்தது.

10 Comments:

வால்பையன் said...

விஷயம் வைகோ கைதானதா அல்லது இட்லி சாப்பிட்டதா?

IdlyVadai said...

கைதான வைகோ இட்லி சாப்பிட்டது தான்.

வால்பையன் said...

எனக்கு தெரிந்து கைதானவர்களுக்கு பிரியாணி தானே ஸ்பெசல்

IdlyVadai said...

வைகோ என்ன ஆளும் கட்சியா பிரியாணி கொடுக்க :-)

Hariharan # 03985177737685368452 said...

இட்லி சாப்பிடும் போது வை.கோ கருப்பு நிறக் காலணி அணிந்திருந்தார்.

இட்லியை சாப்பிட்ட நெடுமாறன் இருமுறை இருமினார் ஒரு குவளை நீர் அருந்தினார் -எனும் அரிய நுண்ணிய தகவல்களை மக்களுக்கு அறியத் தராமல் தணிக்கை செய்த இட்லிவடையைக் கண்டனம் செய்கிறேன்.

வால்பையன் said...

//எனும் அரிய நுண்ணிய தகவல்களை மக்களுக்கு அறியத் தராமல் தணிக்கை செய்த இட்லிவடையைக் கண்டனம் செய்கிறேன்.//

என்ன கொடுமை சார் இது.

Unknown said...

தின்ன அயிட்டம் இட்லி இல்லையா.. ? அதான் இட்லிவடைக்கு..ரொம்ப முக்கியமா போச்சுது இந்த செய்தி.. கூட சட்னி..சாம்பார்..எல்லாம் குடுத்தாங்களா ? இல்ல வெறும் இட்லி யா மொக்கினாரா வைகோ..?? தின்னும்போது..தொண்டர்கள் அவர் வாய பார்த்து..நெகிழ்ந்து போனார்களா ??

யோவ்..ஏன்யா..இந்த மாதிரி..மொக்க நியூஸ் போடுறீங்க..வைகோ இட்லி தின்னா என்ன..ஆய் போனா என்ன ?? வேலைய பாருமையா..

Anonymous said...

வைகோ தொண்டர்களுடன் இட்லி சாப்பிட்டது தான் செய்தி. வைகோ வாழ்க. பாராட்டுகள் இட்லியாரே.

cheena (சீனா) said...

வைகோ இட்லி சாப்பிட்டது செய்திதான். அது அவர் கைதானதை மறைத்து முன்னுக்கு வந்து விட்டது. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

Anonymous said...

ஆமா..ஊரு உலகத்துலே யாருமே இட்லி சாப்பிடலே பாருங்க...இவரு மட்டும்தான் புதுசா சாப்பிடுராறு. இதெல்லாம் ஒரு செய்தின்னு போடுறானுங்க பாரு. சரியான மொக்க நியூஸ்ப்பா. ஆமா.. விக்கல் வராம சாப்பிட்டு முடிச்சார் இல்லையா?அது முக்கியம்.