பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 02, 2007

ஸ்டாலின் திரும்பினார். பதில் சொல்ல மறுப்பு

உள்ளாட்சி தினம் நடந்தபோது அதில் கலந்துகொள்ளாமல் இந்த பயணம் மேற்கொண்டதன் முக்கியத்துவம் என்ன என்று நிருபர்கள் கேட்டபோது, தொலைக் காட்சி மைக்குகளை தள்ளிவிட்டு விருட்டென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென பாங்காக் பயணம் மேற் கொண்டது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திமுகவில் மீண்டும் வெடித்துக் கிளம்பியிருக்கும் வாரிசு அரசியலின் உச்சக்கட்ட மாகவே இந்த பயணம் மேற் கொள்ளப்பட்டதாக நெருங் கிய வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.


இதனிடையே பாங்காக் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை ஸ்டாலின் சென்னை திரும்பினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென கடந்த 29ந் தேதி பாங்காக்கிற்கு பயணம் மேற்கொண்டார்.

நவம்பர் 1ந் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட விருந்த நேரத்தில் அவர் திடீரென மேற்கொண்ட இந்த பயணம், அரசியல் வட்டாரத் தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியது.
அவரது பயணத்துக்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும், திமுக வின் வாரிசு அரசியலும், ஸ்டாலினின் சகோதரர் அழகிரியின் கை ஓங்கியிருப்பதுமே உண்மையான காரணம் என கூறப்படுகிறது.

ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே நடந்த வாரிசு அரசியல் போட்டி, தினகரன் கருத்துக்கணிப்பு வெளியிட்டபிறகு ஏற்பட்ட நிகழ்வுகளையடுத்து, முடிவுக்கு வந்துவிட்டதாக கருதிய நிலையில், அண்மைக்காலமாக கட்சியில் அழகிரியின் பிடி இருகி வருவதாகவும், ஸ்டாலினின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஸ்டாலினின் ஆதரவாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இலாகா பறிக்கப்பட்டது இதற்கு ஒரு சான்றாக கூறப்படுகிறது. மேலும் தமிழக அமைச்சரவையில் ஸ்டாலினின் ஆதரவாளர்களாக இருந்த பல அமைச்சர்கள் மெல்ல மெல்ல அழகிரியின்ஆதரவாளர்களாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் கருணாநிதியின் மகளான கனிமொழியும் தற்போது அரசியலில் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். தனியார் தொலைக்காட்சிகள் உட்பட நாளேடுகளுக்கு அவர் அளித்த பேட்டிகளும், அவரது மேடைப் பேச்சுக்களும் கருணாநிதிக்கு சரியான வாரிசாக அவர் உருவாகி வருவதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே மத்திய அமைச்சரவையில் அவர் விரைவில் அமைச்சராவார் என்பது உறுதியாகியிருக்கிறது. அப்படி அமைச்சராகும்போது அவருக்கு கேபினட் மந்திரி பதவிதான் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

கனிமொழி மத்திய அமைச்சராகி விட்டால், அரசு சம்பிரதாய முறைப்படி ஸ்டாலினை விட அவரது அந்தஸ்து உயர்ந்து விடும். எனவே கனிமொழியின் செல்வாக்கை தடுக்கும் வகையில், முதல்வர் பதவியை தனக்கு அளித்துவிட்டு, கருணாநிதி வெளியே இருந்து வழி நடத்துமாறு அவர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கருணாநிதி அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை என்று தெரிகிறது.

இதுஒருபுறமிருக்க, திமுகவின் அடுத்த வாரிசாக அழகிரியின் மகன் தயாநிதியை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அரசிலோ, கட்சியிலோ எந்த பங்கும் ஏற்காமல் அதிகார மையமாக செயல்படும் அழகிரி, தனது மகன் தயாநிதியை அரசியலில் ஈடுபடுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மதுரையில் எந்த திமுக விழா நடந்தாலும் தயாநிதியின் கட்அவுட்டுகளும், பேனர்களும் இடம்பெறுவது வாடிக்கையாகி விட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த தேவர் நூற்றாண்டு விழாவில் கருணாநிதி செல்லும் வழியெல்லாம் அழகிரி தனது மகனுடன் நிற்பது போன்ற கட்அவுட்டுகளும், பேனர்களும் வைக்கப்பட்டிருந்ததே இதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.

ஸ்டாலினின் மகன் உதயநிதி, ஏற்கனவே பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் அரசியலில் அக்கறை காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு அழகிரி தனது மகனை முன்னிலைப் படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரணங்களால் ஸ்டாலின் தனது தந்தை மீது கோபமடைந்து, திடீரென பாங்காக் பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. நவம்பர்1ந் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்த அவரே, அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தது இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

தனிப்பட்ட முறையில் தொழில் காரணங்களை உத்தேசித்து அவர் பாங்காக் சென்றதாக சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் கட்சித் தலைமையின் மீது கொண்ட கோபமே அவரை யாருக்கும் தெரிவிக்காமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாங்காக் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். பாங்காக்கிலிருந்து சென்னை வந்த ஐசி738 என்ற விமானத்தில் அடர்த்தியான சந்தன கலர் டிஷர்ட்டும், கருப்பு பேன்ட்டும் அணிந்து இறங்கினார். அவருடன் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயமும், ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ராஜாசங்கரும் வந்தனர்.

விமான நிலையத்தில் அவரை உதவி கமிஷனர் குப்புசாமி, இன்ஸ்பெக்டர் முகிலன், சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் வரவேற்றனர். செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, பாங்காக் பயணம் பற்றி கேட்டபோது, இது தனிப்பட்ட முறையிலான பயணம் என்று வேண்டா வெறுப்பாக பதில் அளித்தார்.

உள்ளாட்சி தினம் நடந்தபோது அதில் கலந்துகொள்ளாமல் இந்த பயணம் மேற்கொண்டதன் முக்கியத்துவம் என்ன என்று நிருபர்கள் கேட்டபோது, தொலைக் காட்சி மைக்குகளை தள்ளிவிட்டு விருட்டென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அவரை தனியார் தொலைக்காட்சி கேமராமேன் படமெடுக்க முயன்றபோது, காவல்துறையினர் தலையிட்டு அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினார்கள். உடனே வெளியே தயாராக இருந்த வாகனத்தில் ஏறி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
( மாலல சுடர், இந்தியன் எக்ஸ்பிரஸ் )

7 Comments:

Anonymous said...

Sabhaash. Sariyaana poatti. Hope MK lives to see the disintegration of his beloved private limited company called DMK. Howsoever MK tries to distance him, "Dayanidhi" is out to destroy him - either in the form of a grand-nephew or a grand-son. That will be the ultimate natural justice.

Anonymous said...

ஜெ. ஒரு கேஸ் போடலாம், இந்தமாதிரி ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சர், மத்திய-மாநில அரசுக்குத்தெரியாம இப்படி ஒரு மேஞ்சுட்டு வருவதை எதிர்த்து. யாருக்கு தெரியும் இந்தாளு இந்தியாவிற்கு எதிரா என்ன பண்ணுறாரோ...

Sambar Vadai said...

சன் டிவியும் தினகரன், தமிழ் முரசு இதை எப்படி கையாள்கிறது என பார்க்கவேண்டும். மாறன் சகோதரர்கள் இதில் என்ன நிலை எடுக்கப் போகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். மதுரைக்காரருடன் சமரசம் ஆகியிருந்தால் நிச்சயம் அவர்கள் ஸ்டாலின் பக்கம் சாய தயங்குவர் (சண்டைக் காரன் V சாட்சிக்காரன்). மேலும் கட்சி, தொண்டர்பலம் (தென் தமிழகத்தில்) தற்போதைய பல அமைச்சர்கள் என பலரும் மதுரைக்காரர் பக்கம் சாயும் நிலமைவந்தால், மாறன்களும் அவர் பக்கமே சாயலாம். கருணாநிதி இல்லாவிட்டால் நிச்சயம் ஸ்டாலினால் பலவித எதிர்த்தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஆனால் அழகிரிக்கு இது கொஞ்சம் சாத்தியமே.

இதற்கு மாற்றாக விஜய்காந்தும், சரத்தும், ராமதாசும் இன்ன பிறரும் பலம் பெறுவதற்குள்ளாகவாவது கலைஞர் ஸ்டாலினுக்கு முடிசூட்டவேண்டும். கலைஞர் இல்லாத சமயத்தில் ஸ்டாலினால் நிச்சயம் முதல்வராக முடியாது. அந்த சிச்சுவேஷனுக்குக்த்தான் அதிமுகவும், தேமுதிகவும், ராமதாசும்,வைகோவும்,சரத்தும் காத்திருக்கிறார்கள்.

இத்தனை வருட ஸ்டாலினிடம் பேட்டிகாணாத ஆங்கில (டெல்லி) டிவி சானல்கள் மாறனுக்கும் கனிமொழிக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் ? (ஆங்கிலம் மட்டுமே காரணம் அல்ல). ஸ்டாலினின் நெட்வொர்கிங் சக்தி குறைவு.

பார்க்கலாம் என்ன அடுத்தது என

Anonymous said...

சில வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது.

Anonymous said...

இந்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி விவகாரத்தை திசை திருப்பத்தான் இந்த நாடகம். தேவர் விழா முக்கியத்துவத்தை குறைக்கத்தான் இந்த ஏற்பாடு.

Anonymous said...

தமிழக அரசியலில் மிக சுவாரஸ்யமான திருப்பங்களை பார்க்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

வழக்கம் போல என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது. ஒண்ணுமே புரியல அரசியல்லே தமிழக அரசியல்லே!