பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 14, 2007

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !

குழந்தைகள் தினத்திற்கு அடுத்த தினம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடங்குகிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கூடவே கூடாது என்று ஒத்த காலில் நின்ற இடது சாரி கட்சிகள் சோனியா, ராகுல் காந்தி அதை தொடர்ந்து பிரதமரின் சீன விஜயத்திற்கு பிறகு தங்கள் நிலைகளை மாற்றி சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்த மத்திய அரசுக்கு ஒப்புதல் தெரிவித்து உண்மையான இடது சாரிகள் என்று மீண்டும் நிருபித்துள்ளார்கள்.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் வெடித்து கிளம்பியுள்ள வன்முறை சம்பவம் தொடர்பாக அக்கட்சிகள் சமரசம் செய்து கொண்டது என்று பிஜேபி குற்றம் சாட்டியுள்ளது. இருக்கலாம் யார் கண்டது.

எது எப்படியோ இடது சாரிகள் சாரி கட்டிக்கொண்டு நாளை பாராளுமன்றம் வரலாம்.

நந்திகிராம் பிரச்சனையை எழுப்பி, மேற்கு வங்க மாநில அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு பிஜேபியும், அதன் தோழமை கட்சிகளும் வலியுறுத்தும் உடனே காங்கிரஸ், மற்றும் இடது சாரிகள் மோடியை இழுப்பார்கள். மூன்றாம் அணியும் நாமும் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.

நாடாளுமன்றத்தின் பெரும்பகுதி நாட்கள் அமளியிலேயே கழிவது புதுசா என்ன ?

சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திட்டுவார், கத்துவார் ஒத்திவைப்பார், ராஜிநாமா செய்ய போகிறேன் என்பார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவார். நாடாளுமன்றத்தினால் எவ்வளவு செலவு வீண் என்று CNN-IBN, NDTV போன்ற டிவி சேனல்கள் சொல்லும். Times-Now நாடாளுமன்றத்தில் யார் தூங்குகிறார்கள் என்று படம் பிடித்து போடும்.

டிசம்பர் 6ஆம் தேதி என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

அப்பறம் சொல்ல மறந்துட்டேனே மகளிர் இட ஒதுக்கீட்டுப் மசோதா சோதாவாக முடியும்.


எப்படியோ நம் MPகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !

1 Comment:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<=எப்படியோ நம் MPகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !
=>
இதுதாங்க பஞ்ச்