பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 06, 2007

கருணாநிதி இரங்கல் தெரிவித்தது தேசவிரோத குற்றம் - உச்சநீதி மன்றத்தில் ஜெ வழக்கு

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ் செல்வனின் மறைவுக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்தது தேசவிரோத குற்றமாகும். இதனை எதிர்த்து அதிமுக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.


ஜெ அறிக்கை:
கருணாநிதிக்கு எப்போதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு பிரிக்க முடியாத, அசைக்க முடியாத பிணைப்பு இருந்து வருவதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

அதை நிரூபிக்கும் வகையில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ் செல்வன் மறைவுக்கு, இந்திய அரசமைப்பு சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்து கொண்ட முதலமைச்சர் கருணாநிதி, தமிழக அரசின் செய்தி துறை மூலமாக அதிகாரப்பூர்வமாக கவிதை வடிவில் இரங்கல் வெளியிட்டிருந்தார்.

இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து மத்திய அரசு உடனடியாக கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி யிருந்தேன்.
அதற்கு கருணாநிதி எனது உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது என்று கூறியிருந்தார். தான் செய்த தேச விரோத செயலுக்கு தமிழன் பெயரை கருணாநிதி இழுக்கிறார்.

எனது உடலிலும் தமிழ் ரத்தம்தான் ஓடுகிறது. ஆனால் கருணாநிதிக்கு ஓடுகிறமாதிரி தேசத்துரோக ரத்தம் எனக்கு ஓடவில்லை. நான் மைசூரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில்தான் பிறந்தேன். எனது தாய்மொழி தமிழ்தான். இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என்று ஏற்றுகொள்ளும் போது, இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மைசூரில் பிறந்த என்னையும் தமிழர் என ஏற்று கொள்ள வேண்டும்.

ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளின் இயக்கத்தை வரிந்து கட்டி கொண்டு ஆதரிக்கிற கருணாநிதியின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழை பெருமைப்படுத்திய என்னை பார்த்து, வரலாறு தெரியாத நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் சொல்லுகின்றன.

(அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 1972 ஆம் ஆண்டு கங்கா கவுரி என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பிற்காக மைசூர் சென்ற போது நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்கிறார்).
நான் கர்நாடகத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சுத்த தமிழச்சி.
இலங்கை தமிழர்கள் மீது எனக்கும், எப்போதும் பரிவும், பாசமும் உண்டு. அவர்கள் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும், எல்லோருடைய விருப்பமுமாகும்.


ஆனால் கருணாநிதி கடந்த 2 ஆண்டு காலமாக இலங்கை தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்து கொண்டிருந்த போது வருத்தம் தெரிவிக்காமல், தமிழ் செல்வன் மறைவுக்கு மட்டும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். நான் இலங்கை தமிழர்களை ஆதரிக்கிறேன். கருணாநிதியோ, பயங்கரவாத புலிகளை ஆதரிக்கிறார். இதுதான் வித்தியாசம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருப்பது பற்றி கருணாநிதி குறிப்பிடுகிறார். வைகோ அரசியல் சாசனப்படி பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டு முதலமைச்சராகவோ, முக்கிய அரசாங்க பொறுப்பையோ வகிக்கவில்லை என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

முதலமைச்சராக உள்ளவர் அறிக்கை வெளியிட்டிருப்பதுதான் தேசத்துரோக குற்றமாகும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் செல்வன் மட்டும்தான் தமிழரா? இவரது அமைச்சரவையில் இருந்த பச்சை தமிழன் தா.கிருட்டிணன் வெட்டி கொல்லப்பட்ட போது கருணாநிதி இரங்கல் தெரிவிக்கவில்லையே? ஒருமுறை ஊழலுக்காகவும், 2வது முறை தேச விரோத செயல்களுக் காகவும் கலைக்கப்பட்டது திமுக அரசு.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் ஒருவர் முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க முடியாது. இதன் தீவிரத்தை உணராமல் மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பதால் இவ்விஷயம் குறித்து உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர அதிமுகவுக்கு வேறுவழியில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Comments: