பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 14, 2007

நாமம் போடுபவர்கள் படிக்க வேண்டிய பதிவு

இந்த ஆண்டு தீபாவளி மலர்கள் எல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்துவிட்டேன். தினமணி விமர்சனத்தை பாபா போட்டிருக்கிறார். அதே போல் தினமலரிலும் தீபாவளி விமர்சனம் போட்டிருந்தார்கள். இந்த இரண்டிலும் தினகரன் தீபாவளி மலர் பற்றிய விமர்சனம் மிஸ்ஸிங்.

பெரிய சைஸ் ஆனந்த விகடன் மாதிரி இருந்து விகடன் தீபாவளி மலர்.
கல்கி அதைவிட மோசம். மற்ற தீபாவளி மலர்கள் எல்லாம் ரொம்ப சுமார்.

இந்த ஆண்டின் சிறந்த தீபாவளி மலர் - தினகரன் தீபாவளி மலர் தான். ( 40 ரூபாய்க்கு இலவசம் வேற )

அதில் நாமம் பற்றிய கட்டுரை மிக அருமை. அதை கீழே தந்திருக்கேன். முக்கியமான பகுதிகளை மட்டும் தட்டச்சு செய்து, போட்டிருக்கேன் அதனால் பிழைகள் இருக்க வாய்ப்பு இருக்கு. படங்களை ஸ்கேன் செய்து போட்டிருக்கேன்.அந்த நாமம் ஒரு கிராமத்தையே வாழவைத்துக் கொண்டிருக்கிறது. நாமக்கட்டிகளை தயாரித்து, நாட்டுக்கே நாமம் போடும் அந்த கிராமம் ஜாடாரி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரிலிருந்து 10கிமி தொலைவில் கடலைக் காடுகளுக்கு நடுவில் அமைதியாக இருக்கிறது.

மொத்தம் 150 குடும்பங்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் காயும் நாமக்கட்டிகள் பளீரென்று நம்மை வரவேற்கின்றன.

ஜடேரிக்கு பக்கத்து கிராமமான தென்பூண்டிப் பட்டில் கிடைக்கிறது வெண்பாறை மண். இதைத் திருமண் என்று அழைக்கின்றனர். சுமார் 20 முதல் 30 அடி ஆழத்தில் வெண்பாறைப் படிமங்களாக இந்த மண் பதுங்கியிருக்கிறது. அந்தப் பாறையை உடைத்து, மாட்டு வண்டிகள் மூலம் கொண்டு வந்து சேர்க்கின்றனர். வெயிலில் நன்கு காயவைக்கப்பட்ட அந்த வெண்பாறைப் படிமங்கள் உடைத்து தூளாக்கப்படுகிறது. தூளாக்கபட்ட மண்ணுடன் சிறுது தண்ணீர் சேர்த்து கூழாக்கி செக்கு ஆலையில் கொட்டி பதமாக அரைக்கின்றனர். இதற்கு 'ஆலை ஓட்டுதல்' என்று பெயர். தேவையான பதம் கிடைக்க குறைந்தது மூன்று மணி நேரம் பிடிக்கிறது.

இதற்கு பிறகு தான் சவாலான வேலை. ஒன்றொடு ஒன்று குழாய்கள் மூலம் இணைக்கப்ப்ட்ட தொட்டிகள் இருக்கின்றன. தயாரிப்பின் அளைவைப் பொறுத்து இந்த தொட்டிகளின் என்ணிக்கை பத்திலிருந்து பதினைந்து வரை இருக்கிறது. கூழாக அரைக்கப்பட்ட மணல் கலவையை ஒரு தொட்டியில் கொட்டி, முழுவதும் தண்ணீரால் நிரப்பிக் கரைக்கின்றனர்.

இறுதியாக கிடைக்கும் வெள்ளைப் படிமக் குழைவை பெரிய பெரிய உருண்டைகளாகப் பிடித்து காய வைக்கின்றனர். மிதமான அளவு காய்ததும், அந்தக் குழைவை ஒன்று சேர்த்து உலக்கையால் இடித்து நன்கு மிருதுவாக்குகின்றனர். மிருதுவான மண்ணை ஒருவர் சிறிய துண்டுகளாக பிடித்துப்போட, இன்னொருவர் அதற்கு மரக்கட்டையால் தட்டி வடிவம் கொடுக்கிறார். ஒரே ஒரு நாள் வெயிலில் காய்ந்தால் போதும். நாமக்கட்டி தயார்.

100 நாமக்கட்டிகள் கொண்டது ஒரு பேக், 3000 பீஸ் கொண்டது ஒரு மூட்டை. சிறு உருண்டைகளை சாம்பலுடன் சேர்த்து திருநீறு உருண்டைகளாகவும் தயாரிக்கிறார்கள்.

திருப்பதி, ஸ்ரீரங்கம், பழனி, மைசூர் என பல ஊர் கோயில்களில் கிடைக்கும் நாமக் கட்டிகளும் திருநீறும் ஜடேரி கிராம மக்களின் உழைப்பு.


எங்களை வாழ வைக்கிறதுக்கு கடவுளா பாத்து இந்த திருமண்ணை கொடுத்திருக்காரு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பீஸ் நாமக்கட்டி போடுவேன். பீஸ் வேகமா போடலாம். ஆனா ஷேப் கொடுக்கிறதுதான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். - ஆரிமுத்து.

"இதானே பொழைப்பு.. வயித்தை நிரப்ப இந்த விட்ட வேற வழி? இந்த வயசுல வயக் காட்டில போய் வேல செய்ய முடியுமா? எங்கள வாழ வைக்கிறதே இந்த மண்ணுதான். இப்ப இந்த மண்ணையும் எடுக்கக்கூடாதுன்னு சொல்லி எங்க வயத்துல மண்ணை அள்ளிப் போடுறாங்க" - சரோஜினி பாட்டி வயது 85

எனக்கு விவரந் தெரிஞ்சு கரண்ட் வசதி இல்லாத நாள்லேர்ந்து செஞ்சுகிட்டு இருக்கோம். இதுவரைக்கும் இலவசமா மண் எடுத்திட்டு இருந்தோம். சிலருக்கு ஓட்டு போடலைங்கிறதால இப்ப வண்டி மண்ணுக்கு 35 ரூபா வாங்குறாங்க. அதனால நெரும்பிறை கிராமத்துல மண் எடுத்து பாத்தோம். அது அவ்வளவு தரமா இல்லை. ஒரு மூட்டை நாம கட்டி 150 ரூபாய். புரட்டாசி மாதிரி மாதங்கள்ல டிமாண்ட் இருக்கும் அப்ப ஒரு மூட்டை 300 ரூபாய். - தெய்வசிகாமணி.


குடிசை தொழிலாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் இவர்களை இன்னும் எத்தனை தலைமுறை இப்படியே இருக்கபோகிறோம் என்ற கவலை வாட்டுகிறது.

இந்த கிராமத்தின் நுழைவாயிலில் கண்ணில்பட்ட வாசகம் "இலக்கு இல்லாத செயல் - ஒரு கனவு. செயல் இல்லாத இலக்கு - நேரத்தை வீணாக்குவது. இலக்குடன் கூடய செயல் - வளர்ச்சி"


வெளிநாட்டில் இருக்கும் ஐயாங்கார்ஸ் எல்லாம் கோவிலுக்கும் மடத்துக்கும் அள்ளி கொடுக்கும் டாலர்களின் ஒரு சிறு பகுதியை இந்த கிராமத்தை முன்னேற்ற, பள்ளிக்கூடம் கட்ட, கொடுப்பார்களா ?

10 Comments:

Anonymous said...

Beautiful article, thanks IV!
Btw does the magazine also tell how to contribute?

IdlyVadai said...

அனானி கடைசி கமெண்ட் ( மஞ்சள் கலரில் ) என்னுடையது :-)
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

Arun said...

//வெளிநாட்டில் இருக்கும் ஐயாங்கார்ஸ் எல்லாம் கோவிலுக்கும் மடத்துக்கும் அள்ளி கொடுக்கும் டாலர்களின் ஒரு சிறு பகுதியை இந்த கிராமத்தை முன்னேற்ற, பள்ளிக்கூடம் கட்ட, கொடுப்பார்களா ?//

idhu oru nallllllllllla kelvi!!
Yosippaangala?!

Anonymous said...

//வெளிநாட்டில் இருக்கும் ஐயாங்கார்ஸ் எல்லாம் கோவிலுக்கும் மடத்துக்கும் அள்ளி கொடுக்கும் டாலர்களின் ஒரு சிறு பகுதியை இந்த கிராமத்தை முன்னேற்ற, பள்ளிக்கூடம் கட்ட, கொடுப்பார்களா ?//

Sun TV தினகரன் என்ன ஒரு 10 கோடி கொடுத்தாங்களாமா ?

Unknown said...

Your intention is good....

Kodukka aasai thaan.. Yenge yaaridam koduppathu.... ??

Arasiyal vaathiyidamaa ??

First find a honest person who can reach the money to those poor people with out any brokers in between. Then this can be done..

Anonymous said...

இட்லிவடை அய்யா,

எல்லாருக்கும் நாமம் போடுபவர்கள்னு யாரை சொல்றீங்க?தி மு க, தி க,
மார்க்ஸிஸ்ட் கும்பலை சொல்றீங்களா?கண்டிப்பா அவங்க படிக்க வேண்டிய பதிவு தான்.இது மட்டும் அல்ல;உங்க பதிவுகள் எல்லாத்தையும் அவங்க படிக்கணும்;உள்வாங்கணும்.

பாலா

Anonymous said...

Avanga kaila panra namakatiya naan daily use panren ennala mudinja help idudhan.

கலைடாஸ்கோப் said...

ஐயா இட்லிவடையாரே...
தினகரன் மலரிலும், மற்ற மலர்களிலும் உள்ள இன்னும் சுவாரஸ்யமான கட்டுரைகள் பற்றியும் எழுதலாமே... முழுக்க டைப் அடிக்க விட்டாலும், உங்கள் விமர்சனம் போல...
தினகரன், விகடன் - இரண்டு மலர்களும் கடையில் கிடைக்கவில்லை.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நல்ல பதிவு

Anonymous said...

Just it seems that this posting is another brahmin baiting. Did any body has made a research of 1) "dhoties" worn by our politicians 2) cross worn by christians 3) lungies used by Muslims and finally 4) loin cloth/other inner wear used by so called self respect "Tamilians"?

what contributions do politicians/christians/muslims and self respect tamilians make to these creators?