பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 15, 2007

இது, மாய்மாலம் ! - கலைஞர் கவிதை - துக்ளக் கருத்து

இது, மாய்மாலம் ! என்ற தலைப்பில் கலைஞர் எழுதிய கவிதைக்கு சோவின் காட்டமான விமர்சனம்.


ஒரு முன்னாள் இந்தியப் பிரதமரைக் கொலை செய்த இயக்கத்தைச் சார்ந்தவர்
– தமிழகத்தில் அடைக்கலமாகியிருந்த, ஒரு இலங்கைத் தமிழர் இயக்கத்தைச் சார்ந்த பதினான்கு பேரையும், அவர்களுடைய தலைவரையும் தமிழகத்தின் தலைநகரிலேயே கொன்றுபோட்டக் கூட்டத்தைச் சார்ந்தவர் – தமிழகத்தில் வேறு பல குற்றங்களையும், இன்றுவரை ஆயுதக் கடத்தல்களையும் நடத்தி வருகிற அமைப்பைச் சார்ந்தவர்
– இலங்கையிலேயே பல தலைவர்களை மட்டுமல்லாமல், தமிழர்களையும், தமிழர் தலைவர்களையும் கொன்று குவித்த தீவிரவாதிகளைச் சார்ந்தவர் – தானாகவும் நிறையபேரைக் கொன்றவர் – தமிழ்ச்செல்வன் என்ற பெயருடையவர், இலங்கை ராணுவத்தின் விமானத் தாக்குதலின்போது மரணமடைந்தார்.

அதற்கு தமிழக முதல்வர் கலைஞர் கவிதை எழுதி கண்ணீர் அஞ்சலி
செலுத்தியிருக்கிறார். "இந்தியர்கள் அயல் நாட்டினர்; நாங்களும், சிங்கள மக்களும் சகோதரர்கள்; எங்களுக்குள் நடக்கிற விவகாரத்தில் தலையிட அந்நியர்களான இந்தியர்களுக்கு உரிமை இல்லை' – என்று பிரகடனம் செய்தவர்கள் விடுதலைப்புலிகள்.

இந்தியாவில், அவர்கள் அட்டூழியங்களைச் செய்ததற்காக – குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததற்காக – தடைசெய்யப்பட்ட இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். இந்தத் தடையை விதித்துள்ள மத்திய அரசில், அங்கம் வகித்து, பல பதவிகளை அனுபவித்து வருகிற தி.மு.க.வின் தலைவர் கலைஞர், இப்போது விடுதலைப்புலிகளில் ஒருவரின் மரணத்திற்குக் கண்ணீர் வடித்து கவிதை எழுதியிருக்கிறார். இது தமிழக அரசின் செய்தித்துறை மூலமாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, அதிகாரபூர்வமான அழுகை.

இந்திய மாநிலங்களின் ஒன்றின் முதல்வர், மத்திய அரசினால் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருடைய மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறார்; மத்திய அரசில் பங்கு வகிக்கிற கட்சியின் தலைவர், அந்த அரசின் தடை உத்திரவை துச்சமாக மதித்து, தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் நஷ்டத்திற்கு துக்கப்பட்டிருக்கிறார்.

அல்கொய்தா இயக்கத்தில் ஒருவர் மரணம் அடைந்தால் – அமெரிக்க மாநிலங்களில் ஒன்றினுடைய கவர்னர் துக்கம் தெரிவிப்பாரா? அப்படி தெரிவித்தால், அதற்குப் பிறகு அவர் தனது பதவியில் தொடர முடியுமா?

பிரிட்டனில் நாசவேலை புரிந்த இயக்கத்தின் தலைவர் ஒருவர் இறந்தால்,
அந்நாட்டில் முக்கிய பதவி வகிக்கிற யாராவது அழுது தீர்க்க முடியுமா? அப்படி அழுதுவிட்டு பதவியையும் அனுபவிக்க முடியுமா?

இவ்வளவு ஏன்? காஷ்மீரில் அராஜகம் புரிந்து வருகிற இயக்கங்களில் ஒன்றினுடைய தலைவர்களில் ஒருவர் மரணமடைந்தால், இந்திய அரசைச் சார்ந்த ஒரு அமைச்சர் கலங்கி கண்ணீர் சிந்தி, கவிதை எழுத முடியுமா? அப்படி ஒருவர் செய்தால், அதற்கு மேல் அவர் பதவியில் நீடிப்பாரா?

ஆனாலும், முன்னாள் இந்தியப் பிரதமரைக் கொன்ற இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரின் மரணத்திற்கு, இங்கே ஒரு மாநில முதல்வர் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்; பதவியிலும் தொடர்கிறார்! மத்திய அரசில் அமைச்சர்கள் பதவிகளை கேட்டுப்பெற்று, அனுபவித்துக் கொண்டே, அந்த அரசின் உத்திரவை எள்ளி நகையாடவும் செய்கிறார். நமது நாட்டைத் தவிர, (அதுவும், இந்த மாதிரி ஒரு விவஸ்தை கெட்ட கூட்டணி அரசு அரசாளுகிற சமயம் தவிர) வேறெங்கும் இது நடக்காது.

தமிழகத்தில் வேறு பல கட்சிகளின் தலைவர்களும் (வைகோ உட்பட) இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பதவிகளில் இல்லை. அவர்கள் செய்துள்ளது சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும், இந்நாட்டின் இறையாண்மை பற்றிய அக்கறையின்மை அவர்களிடம் தெரிகிறது. இதை மக்கள் கண்டிக்க வேண்டும். "இத்தகையவர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகிற தகுதியுடையவர்கள்தானா?' என்பதை வாக்காளர்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஆனால் முதல்வரின் அஞ்சலி, மற்றவர்களின் கண்ணீரிலிருந்து மாறுபட்டது. அவர் "இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடப்பதாகவும், இந்தியாவின் மாட்சிமையை மதிப்பதாகவும் – சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றவர். ஒரு மாநில முதல்வர், மத்திய அரசின் உத்திரவை கால்தூசியெனக் கருதுகிறார் என்றால், அது அரசியல் சட்டவிரோதம். இந்திய மாட்சிமைக்கு குந்தகம்.

ஆகையால் முதல்வரின் அஞ்சலி பற்றி அவரிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும். இப்படிப்பட்ட முதல்வர், விடுதலைப்புலிகளின் மீதான தடையை இந்த
மாநிலத்தில், முறையாக அமல்படுத்துவாரா என்பதையும் மத்திய அரசு யோசிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட இயக்கத்தினர் பற்றி, இவ்வளவு நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளவர், அந்தத் தடையை அமல்படுத்துவாரா? அல்லது அந்தத் தலைவர்களுக்கு இவர் வசதி செய்து தருவாரா? மத்திய அரசு இவ்விஷயத்தை நன்கு பரிசீலிக்க வேண்டும்.

முதல்வர், "இறந்தவர் தமிழர், நானும் தமிழன். அதனால் அஞ்சலி' என்று விளக்கம் அளித்திருக்கிறார். ஆட்டோ சங்கர், வீரப்பன் போன்றவர்கள் எல்லாம் கூட தமிழர்கள்தான். அவர்களுடைய மரணங்களுக்கு முதல்வர் ஏன் கண்ணீர் அஞ்சலி செலுத்தவில்லை? விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்ட தமிழர்கள், மற்றும் தமிழர் தலைவர்களில் எத்தனை பேருடைய மரணங்களுக்கு முதல்வர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்? ஒவ்வொரு தமிழனின் மரணத்திற்கும் இவர் அஞ்சலி செலுத்திக்கொண்டே இருக்கிறாரா?

ஆக, "தமிழன் என்பதால் "அஞ்சலி' என்பது மாய்மாலம். முதல்வருக்கு புலிகள் மீதுள்ள பரிவுதான் அவருடைய அஞ்சலிக்குக் காரணம். இப்படி இந்நாட்டின்
முன்னாள் பிரதமரைக் கொன்ற இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருக்கு – இன்னமும் இந்திய சட்டத்தைப் பொறுத்தவரையில், ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி என்கிற நிலையில் உள்ளவரின் இயக்கத் தலைவர்களில் ஒருவருக்கு – அஞ்சலி செலுத்தி, அந்த இயக்கத்தின் மீது தனக்குள்ள பரிவை, பட்டவர்த்தனமாக முதல்வர் காட்டிக்கொண்டுள்ள நிலையில் – "தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை, இவருடைய அரசு எப்படி முறையாக நிர்வகிக்கும்?' என்ற கேள்வி எழுகிறது.

அடுத்த தேர்தலின்போது, வாக்காளர்களின் மனதை விட்டு இந்தக் கேள்வி அகலக்கூடாது.

21 Comments:

Anonymous said...

அவர் சொல்றதும் சரிதான்.. அதிகாரபூர்வமாக வெளியிட்டது தான் கொடுமை.. சோ சோதான்..

...ராம்...

RATHNESH said...

சோவின் தேசிய உணர்வு நம்மை சிலிர்ப்பில் ஆழ்த்துகிறது. இந்த சூட்டோடு இவர், 'நமது தேசப்பிதாவைக் கொன்ற கயவர்களின் கூடாரமான ஆர்எஸ்எஸ் இன்னும் ஏன் தடை செய்யப்படவில்லை?' என்றும் கேள்வி எழுப்பி, 'அந்தக் கொடூரக் கொலைகார இயக்கத்தின் OFF SHOOTகளான பஜ்ரங்தள், பாஜக விஷ்வ இந்து பரீஷத் போன்றவையும் உடனடியாகத் தடை செய்யப்பட்டு, தடைசெய்யப்படவேண்டிய பயங்கரவாதச் செயல்கள் புரிந்த இயக்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட எம்பி பதவியின் சுகத்தை அனுபவித்த என்னையும் கூண்டில் ஏற்றி விசாரிங்கள்' என்று சரணடைவார் என்றும் எதிர்பார்க்கலாமா?

Anonymous said...

மக்கு ரத்னேஷ்,
உன் புத்தியை காண்பித்து விட்டாயே? ஆ எஸ் எஸ் இன்னும் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்படவில்லை.அப்படி தடை செய்திருந்தால்,அதை ஒரு மாகாணத்தின் முதல்வர் போற்றிப் புகழ்ந்தால் அதுவும் குற்றமே.இங்கு புலிகளின் இயக்கம் தடை செய்யப் பட்ட ஒரு இயக்கம்.மேலும் பல நாடுகள் அந்த இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவுத்துள்ளன.புரிஞ்சுக்க முயல். (முயல் பெயர்ச்சொல்லாகவும்,வினைச் சொல்லாகவும்).

Anonymous said...

could you able to give a valid record to prove that rss link?
Nehru (super secular man) himself said that there is no connection with rss.

read history properly.........

Anonymous said...

அதிகாரபூர்வமாக வெளியிட்டது தான் கொடுமை..
If this true, this will go against
MK and Jayalalitha is putting Congress in a tight spot with the case against MK.

Anonymous said...

Rathnesh should know some facts.
RSS was banned after assasination of Gandhiji but it was revoked as no proof against RSS could be established. Even in Kerala and
West Bengal RSS is not banned.
CHO is a nominated member of Rajya Sabha, and is not an elected member.

Unknown said...

ரத்நேஷ்!!!
நீங்கள் வரலாறு(அஜித் படம் அல்ல) பாடத்தில் பெயிலோ!!!!
மீண்டும் ஒரு முறை நன்றாக படித்துவிட்டு பின்னூட்டம் இடவும்!!!
"இட்லிவடை"!!!தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி!!!இன்றுதான் நான் துக்ளக் வாங்க வேண்டும்!!!

Anonymous said...

ஏம்பா!

இத படிச்சிட்டீங்களா அப்படீன்னு கேட்டு நான் ஒரு சுட்டி கொடுத்தா அத்த விளம்பரம்னா சொல்லுவாய்ங்க?

வால்பையன் said...

கலைஞர் பாணியில் கருத்து தெரிவிக்க இரங்கற்பா பாடினார்,
வைகோ அவர் பாணியில் இரங்கல் தெரிவித்தார், அவரை கைது செய்த தமிழக அரசு பற்றி உங்கள் கருத்து,
அபடியனால் சோ கருத்து படி கலைஞரையும் கைது செய்ய வேண்டுமா ?

Anonymous said...

Sonia ignoring Karunanaidhi's govt approced obituary on her husband's own killer proves that Sonia was also had in glove with Raji'v murder. So that why she is keeping mum on Karunanidhi's poem. Shame on congress. Karunanidhi is a traitor and he should be immediately hanged for this heinous crime

RATHNESH said...

அனானிசார்களே ஒருவருக்கொருவர் ஒரே விஷயத்தைப் பற்றி (கடவுள் கதைகள் போல்) முரணாகச் சொன்னாலும் ஒருவர் கடிதத்தில் மற்றவருக்குப் பதில் கொடுத்துக் கொண்டுள்ளதற்கு நன்றி.

ADJECTIVEகள் என்னை பாதிப்பதில்லை. அது பேசுவோருடைய பலவீனம் மறைக்க உதவும் விஷயம் என்பதில் எனக்குத் தெளிவு இருக்கிறது.

அன்பர்களே, நான் கருணாநிதி செய்ததை சரி என்று என் பின்னூட்டத்தில் சொல்லவே இல்லை. ஊகத்தில் எழுதாதீர்கள். தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றியாவது மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு இருக்கும். ஆனால் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று, தப்பிக் கொண்டிருப்பது குறித்த ஜாக்கிரதை உணர்வு தானே அவசியம் (பாம்பு இருக்கும் வீட்டில் குடியிருப்பது போல்)?

நேருவின் வார்த்தைகளைச் சாட்சியாக்க வேண்டாம். அவர் சீனாவையும் பாகிஸ்தானையுமே மன்னிக்கும் அளவுக்கான பரந்து பட்ட ஜனநாயகவாதி. (நல்லவேளை எனக்கு இன்னொரு அனானி சார் சோனியா பற்றிச் சொல்லி இருப்பது போல் நேருவுக்கும் காந்தியின் கொலையில் தொடர்பு உண்டு என்று சொல்லும் அள்வுக்கு ஜெ-பாணி சிந்தனை இல்லை).

RSSக்கு காந்தியைக் கொன்றதில் தொடர்பில்லை என்கிற வரலாறு எல்லாம் அஜித் படத்தை மட்டுமே வரலாறு என்று நினைத்தால் மட்டுமே சாத்தியம்.

சோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பி ஆக முடியும் என்றால் அது ஏதாவது நகைச்சுவைப் படத்தில் தான் சாத்தியம். ஆர் எஸ் எஸ் தொடர்புடைய இயக்கங்களுக்கு அவர் காலகாலமாக ஊதி வரும் சங்குக்கு பாஜக கொடுத்த தட்சணை தான் எம்பி பதவி என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே?

'பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது' என்பதற்கு தன் பதிவின் பின்னூட்டங்கள் மூலம் சான்று காட்டிய இட்லி வடையாருக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

ரத்னேஷ் அண்ணே,

facts இல்லாம பேசுவதுதான் உங்கள் வழக்கமோ. வி.புலிகளையும் RSSஐயும் எப்படி ஒப்பிடுகிறீர்கள். ராஜீவைக் கொன்றது ஒரு இயக்கம் சார்ந்த முடிவு என்பது எல்லோருக்கும் தெரியும், புலிகளின் தலைவனிலிருந்து தொண்டன் வரை அதற்கு ஒப்புதல் உண்டு என்பது அவர்களே ஒப்புக்கொண்டது. ஆனால் RSS விவகாரம் அப்படி அல்ல. RSSக்கு தொடர்பு உண்டு என்று நிரூபிக்கவும் முடியவில்லை. எனவே நீங்கள் போடுவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் ஆன முடிச்சு. இதிலும் ரொம்பக் கொடுமை RSS இந்திய தேசியத்துக்கு எதிரானது என்று நீங்கள் சொல்லியிருப்பதுதான். இப்படி நீங்கள் எழுத அஜித் நடித்த வரலாறு போதும் என்பதால் அதைப் பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

Hari said...

Idlyvadai,
I think the Pseudo-DK can be changed as Pseudo-radicals. Why DK alone should be offended?

H

Anonymous said...

You can wake up one who is really
sleeping but can't one is pretending. Rathnesh is one such.
He not only doesn't know history but covers up his ignorance by
obfuscation and bringing in extraneous issues not relevant
to the issue here. Enough to state here that we are still enduring
all the after (ill) effects of
Nehru's mistakes.

Anonymous said...

//RSSக்கு காந்தியைக் கொன்றதில் தொடர்பில்லை என்கிற வரலாறு எல்லாம் அஜித் படத்தை மட்டுமே வரலாறு என்று நினைத்தால் மட்டுமே சாத்தியம்.//

ஏப்பா ரத்துனேசு, ராசீவ் கொலைக்குற்றவாளின்னு தீர்ப்பு சொல்லினவுகளே ஒத்துக்கிட்டது வி.பு பற்றியது...ஆனா நீதி இன்னும் தெளிவா அரசியல் சார்பு இல்லாத காலத்திலேயே காந்திய கொன்னது ஆரெஸ்ஸ்ன்னு நிருபிக்க முடியல்ல...அந்தக்காலத்து கோர்ட் அப்ப தப்பா?.... (ஒடனே கோர்ட் பூரா அவாள் அதனால அப்படி-இப்படின்னு ஆரம்பிச்சுடுவானுகளே)

அருண்மொழி said...

ரத்னேஷ்,

காந்தியை சுட்டு கொலை செய்தது "இஸ்மாயில்" என்ற நபர் :-)

அவருக்கும் RSSக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Unknown said...

Think different! Ok..

We normally react to situations and news. There are couple of questions for everyone.
1. What is the solution for the ethnic problem at Srilanka?
2. How should our government act?

முத்துகுமரன் said...

//"இந்தியர்கள் அயல் நாட்டினர்; நாங்களும், சிங்கள மக்களும் சகோதரர்கள்; எங்களுக்குள் நடக்கிற விவகாரத்தில் தலையிட அந்நியர்களான இந்தியர்களுக்கு உரிமை இல்லை' – என்று பிரகடனம் செய்தவர்கள் விடுதலைப்புலிகள். //

இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து வைத்திருக்கிறார்கள் போலும்!

//அவர் சொல்றதும் சரிதான்.. அதிகாரபூர்வமாக வெளியிட்டது தான் கொடுமை//

அதிகாரப்பூர்வமாக சொன்னதுதான் சிறப்பே. தமிழர்களின் உணர்வு அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டிருக்கு.

சோ, கார்ட்டூனும் தலையங்கமும் எழுதி தன்னை தணித்துகொள்ளட்டும் :-), துணைக்கு வேண்டுமானால் நீதிபதிகளையும் கூட்டிக்கொள்ளட்டும்

//அடுத்த தேர்தலின்போது, வாக்காளர்களின் மனதை விட்டு இந்தக் கேள்வி அகலக்கூடாது//

ஆமாம்.

அவசியம் அகலக்கூடாது.

நன்றி இ.வ

Anonymous said...

>> இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து வைத்திருக்கிறார்கள் போலும்!

ஆமாம், பாலுக்கும் அதன் வெண்மை நிறத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்திருப்பதுபோல.

Anonymous said...

1) IPKF அனுப்பி வேறு நாட்டில் 5000 மக்களை கொன்றால் ராஜீவை கொண்டாடுவார்களா என்ன? கொல்லத்தான் செய்வார்கள்.
5000 மக்களை கொன்ற ராஜீவும் தீவிரவாதிதானே?

2)காங்கிரஸ் என்றாலே Pseudo secular என கசக்கும் சோ வகையறாவிற்கு விடுதலைபுலிகள் என்றால் மட்டும் ராஜீவை தூக்கிப் பிடித்துக்கொண்டு வருவார்கள்.

3) இப்பொழுது "செல்வி" ஜெயாவும் "நான் தமிழச்சி" என்று அறிக்கை விட்டு பல்டி அடிக்கிறாரே அதற்கு என்ன பதில்?

தமிழர்கள் கொல்லப்படுவதை விட "சிங்கள ரத்னா" வாங்குவதில் கவனமுள்ள சோவிற்கு இதெல்லாம் புரியாது

கீதன் said...

சோவின் பிதற்றல்களுக்கு யால்ர போடுபவர்கள் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும், ஈழத்தமிழர்களது பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள், இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட போதும், இந்தியா அன்னிய நாடு என்பதும், அவர்களே எம் விடுதலைக்கு இடையூறு செய்பவர்கள் என்பதையும் ஈழத்தமிழர்கள் மறந்து விடப்போவதில்லை.

ஆனால் இந்திய தேசியத்தையும், தமிழ் உணர்வையும் ஈழத்தமிழர்கள் இருவேறு தட்டில் வைத்துள்ளனர் என்பது மட்டும் உண்மை..!