பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 29, 2007

நடிகை குஷ்பு மீது வழக்கு - இந்து முன்னணி தொடர்ந்தது

"28.11.07 தேதியிட்ட ஒரு வார இதழை படித்தபோது அதில், குஷ்பு முப்பெரும் தேவியர் சிலைகள் மற்றும் முப்பெரும் தேவியரின் திரு உருவங்களுக்கு பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்கள் ஆகியவற்றை அவமதிக்கும் வண்ணம் முப்பெரும் தேவியரின் திரு உருவ விக்கிரகங்களுக்கு அருகில் நாற்காலியில் காலணியுடன் கால்மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். இந்த புகைப்படம் அதில் பிரசுரமாகி உள்ளது.


குஷ்புவின் இந்த செயல் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வண்ணமாக அமைகிறது. இந்து கடவுள்களின் திரு உருவ சிலைகள் பூஜிக்கப்படும் இடங்களில் ஆன்மீக சம்பிரதாயங்கள், வேதங்களின்படி அனுசரிக்கப்பட வேண்டும்.

முப்பெரும் தேவியர் இந்துக்களால் குறிப்பாக தமிழ் மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வங்களாவர். இந்த தெய்வ திரு உருவ சிலைகளையும், தெய்வ திருவுருவ சிலைகளுக்கு பூஜிக்க வைக்கப்பட்டுள்ள புனித பொருட்களையும் அவமானப்படுத்துவது இந்து சமயத்தையே அவமானப் படுத்தும் செயலாகும்.

இந்த செயல்கள் இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 295, 295 ஏ மற்றும் 296 படி குற்றமாகின்றன.

வழிபாட்டுத்தலம், வழிபாட்டுக்குரிய தெய்வ திரு உருவங்களை அவமதிக்கும் வண்ணம் குஷ்பு செயல்பட்டுள்ளதால் அவரை நீதிமன்றத்தார் சம்மன் செய்து விசாரித்தும், மனுதாரர் தரப்பு சாட்சியங்களை விசாரித்தும் மற்றும் மனுதாரர் தரப்பு ஆவணங்களை பரிசீலனை செய்தும் தகுந்த உத்தரவிட வேண்டும்.''

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நடுவர் பாபுலால், மனு மீதான விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

7 Comments:

Anonymous said...

photo engabaa eduthaanga?yethaavathu shooting set-la vachu eduthaangaLO?

வால்பையன் said...

முதலில் சும்மா இருந்த குஷ்பூவை கூப்பிட்டு அங்கெ உட்கார வைத்தவர்களின் மீது கேஸ் போடுங்கள் சார்,

வால்பையன்

Anonymous said...

A shooting spot is not a temple and there is no worship there.
Its a work place like any other
work place, office, factory,
workshop etc. Images of Nataraja can be found in many houses along with other artificats in drawing rooms in many houses/offices. People keep small statues of gods (vinakaya, Srinivasa etc) in cars and wear footwear including shoes when they drive. Does it mean that all these persons are 'hurting' sentiments of Hindus or showing disrespect to Hinduism. If so one
has to file cases against most of the Hindus.

I dont know why such pettitions are accepted in the first place.
They should be dismissed at the
admission stage itself. The purpose behind them is to seek
publicity and create mischief.
Courts should not become parties
to actions of parties acting with ulterior motives.

Anonymous said...

She herself is a goddess in a temple. She should be exempt from laws made for mere mortals !!

RATHNESH said...

அறிவிலிகளே! குஷ்பூவே கோயில் கட்டப்பட்டுள்ள ஒரு தெய்வம் தானே? பெண் தெய்வங்கள் கால் மேல் கால் போட்டு அமர்வது எல்லா சிலைகள் மற்றும் படங்களில் காணக் கிடைக்கும் காட்சி தானே!

தெய்வத்தின் காலடி / செருப்பு மண் பட்டுள்ள பூஜை சாமான்களைக் கண்களில் ஒற்றி பகிர்ந்து கொண்டு பரலோக இன்பம் அனுபவிப்பதை விட்டு இப்படி வழக்குப் போடுவது என் போன்ற பக்தர்களின் மனதைப் புண்படுத்துகிறதே.

நக்கீரன் said...

ஆன்மீகம், நகைச்சுவைங்கற lableல
இந்தப்பதிவ போட்டிருக்கீங்க. நீங்க என்ன சொல்ல வர்ரீங்க? ஆன்மீகத்தை நகைச்சுவையாக்கிட்டாங்கனு சொல்ல வர்ரீங்களா? அல்லது நகைச்சுவைய ஆன்மீகம் ஆக்கீட்டங்கனு சொல்ல வர்ரீங்களா?
அப்புறம் இன்னொரு கேள்வி இந்த இந்து முன்னணிக்காரங்க கடவுள் படம் போட்ட காலண்டரை வருசம் முடிஞ்சப்புறம் தூக்கித்தூரப் போட்டுர்ராங்களா? இல்ல ஐயோ யாராவது கால்ல போட்டு மிதிச்சிருவாங்கனு பத்திரமா பூஜை அறைல வச்சுக்குவாங்களா?
கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.

Anonymous said...

குஷ்புவுக்கு குரங்கின் செய்தி..

நாயை அடிப்பானேன் ... பீயை சுமப்பானேன்.... ?