பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 10, 2007

சீதைக்கு ராமர் சித்தப்பா; கலைஞரின் ராமாயண அறிவு, சொத்தைப்பா

சிடி வடிவில், வாலியின் குரலில் கலைஞர் காவியம் ! விழாவில் கலைஞர், வாலி உரை..

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் சீதை ராமனின் மனைவி. துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் சீதைக்கு ராமன் அண்ணன். இதை வாலியை சாட்சியாக வைத்து சொல்கிறேன்.


இதற்கு சோ எதிர்வினை....

ஸீதைக்கு, ராமர் சித்தப்பா ! – (முதல்வரின் புதிய புருடா – துளசிதாஸர் ராமாயணம் பற்றியது ) – சோ ...


பொய் பேசுவதில்லை – என்பது சிலருடைய விரதமாக இருக்கலாம்; ஒரு குறிப்பிட்ட தினத்தில் எதுவும் உண்பதில்லை – என்பது சிலருடைய விரதமாக இருக்கலாம்; கோவிலுக்கு போகாமல் ஒரு தினத்தையும் கழிப்பதில்லை – என்பது சிலருடைய விரதமாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் எவ்வளவு உறுதியுடன், தங்கள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்.

ஆனால், தமிழக முதல்வர் இருக்கிறாரே – அவர் தன்னுடைய விரதத்தில் காட்டுகிற உறுதி பிரமிக்கத்தக்கது.

"ராமாயணத்தைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பத்தைத் தேடி, அப்படி பேசும்போது பிதற்றாமல் விடுவதில்லை' என்பது அவருடைய விரதம். அதை அவர் காப்பாற்றுகிற விதம் இருக்கிறதே, அது மிகவும் வியக்கத்தக்கது. முன்பு "வசிஷ்டர் குறித்த தினம்' என்று ஒரு உளறலைப் பிரகடனப்படுத்தினார்; பின்னர் "ஸீதை மீது மரவுரி திணிக்கப்பட்டது' என்ற பிதற்றலை அவிழ்த்துவிட்டார். இதற்கும் பின்னர், சமீபத்தில் "ராமர் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது' என்றார்.

இப்போது மீண்டும் "வால்மீகி ராமாயணத்தில் ராமர் மதுபானம் குடித்தார் என்று கூறப்பட்டிருக்கிறது' என்கிறார். இது ஒரு டெலிவிஷன் பேட்டியில் அவர் கூறியது :

"வால்மீகி ரைட்ஸ் (ஙச்டூட்டிடுடி ஙிணூடிtஞுண்) – என்ன சொல்றான்? (அதாவது வால்மீகியை மரியாதையுடன் "அவன்' என்கிறார். சந்தன வீரப்பனைக் கூட "அவர்' என்றுதான் தான் குறிப்பிடுவதாகவும், அதுதான் பண்பு' என்றும் கூறியவர், வால்மீகியைப் பற்றி "என்ன சொல்றான்?' என்று குறிப்பிடுகிறார். அது அவருடைய பண்பாகவே இருக்கட்டும்.)

"ஸீதையைப் பார்த்து அனுமான் சொல்றாரு – உன்னைப் பிரிஞ்சதும், ராமர் வந்து, பத்து நாளா மதுபானமே சாப்பிடாம இருக்கார்னு சொல்றாரு' என்று கூறி விட்டு, "இது வால்மீகியிலே இருக்கா, இல்லையா?' என்று சவால்விட்டிருக்கிறார்.

ராமர் "மதுபானம்' அருந்தியதாக வால்மீகி ராமாயணத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. இது பற்றி ஏற்கெனவே "துக்ளக்' 3.10.2007 இதழில் விளக்கியாகிவிட்டது.

இப்போது "பத்து நாளாக' என்று ஒரு தமாஷ் புருடாவை கலைஞர் சேர்த்திருக்கிறார். அரை நாள் உண்ணாவிரதமே பெரிய சாதனை என்று நினைப்பவர்களுக்கு, 10 நாள் விரதம் என்பது பெரிய விஷயமாக இருக்கலாம். அதனால்தான் இப்படி "பத்து நாள்' என்று கலைஞர் கூறியிருக்கிறார். இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை. இது போகட்டும்.

கலைஞர் இப்போது டெலிவிஷன் பேட்டியில் கூறியிருக்கிற இமாலயப் பிதற்றல் இது :

"துளசிதாஸ் ராமாயணத்திலே ஸீதா நாட் ராமாஸ் வைஃப் (குஞுஞுtடச் ணணிt கீச்ட்ச்'ண் தீடிஞூஞு)
– ஸிஸ்டர் ஆஃப் ராமா – ஸீதா. (குடிண்tஞுணூ ணிஞூ கீச்ட்ச் குஞுஞுtடச்) – வால்மீகி ராமாயணத்தில் மட்டும்தான் ஸீதை ராமரின் மனைவி. (ஙச்டூட்டிடுடி கீச்ட்ச்தூச்ணச் ணிணடூதூ, தீடிஞூஞு ணிஞூ கீச்ட்ச் குஞுஞுtடச்).'

துளஸிதாஸர் இயற்றிய ராமாயணத்தில் ஸீதை ராமருக்கு மனைவிதானே தவிர, சகோதரி அல்ல. அப்படியிருக்க துளஸிதாஸ் ராமாயணத்தில், ஸீதை ராமரின் சகோதரி – என்று அடித்துச் சொல்கிறார் கலைஞர்.

எதற்காக இப்படி உளற வேண்டும்? அதுதான் விரதம். அதுதான் விரதத்தில் உறுதி. எதனால் இப்படி ஒரு வைராக்கியத்துடன், அவர் தனது ராமாயண உளறல்களைத் தொடர்ந்து பேசி வருகிறார்?

ராமாயணத்தில் தான் அறியாத பகுதியே இல்லை என்று மற்றவர்கள் நம்ப வேண்டும் – என்பது அவருடைய ஆசை. அல்லது, குறைந்தபட்சம் தன் கட்சித் தொண்டர்களாவது அப்படி நினைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அதனால்தான், துளஸிதாஸர் ராமாயணத்தைப் பற்றி, இமாலயப் பிதற்றலை
முன் வைத்த பேட்டியிலேயே, அவர் இப்படியும் சொல்லியிருக்கிறார் : "எல்லா ராமாயணத்தையும் நான் படித்திருக்கிறேன் (அடூடூ கீச்ட்ச்தூச்ணச்). வால்மீகி ராமாயணம், துளசிதாஸ் ராமாயணம், எல்லா ராமாயணமும்'.

பேட்டி எடுத்தவரும், டெலிவிஷனில் அதைப் பார்த்தவர்களும் இதை நம்ப வேண்டும் என்று கலைஞர் ஆசைப்படுகிறார். அதனால்தான், அவருடைய மகள் கனிமொழி கூட, தான் அளித்த ஒரு பேட்டியில் "மெய்ஞானிகள் மற்றும் மதகுருமார்களிடம் விடவேண்டிய விஷயத்தைப் பற்றி, முதல்வர் ஏன் பேசுகிறார்?' என்று கேட்டதற்கு, "நன்கு கற்றறிந்தவர் எங்கள் முதல்வராக இருக்கிறாரே!' என்று கூறியிருக்கிறார். அதாவது மெய்ஞானிகள், மதகுருமார்களைப் போல ராமாயணத்தைப் பற்றி முதல்வரும் பேசலாம். ஏனென்றால் அவர் "நன்கு கற்றறிந்தவர்'!

எல்லா ராமாயணங்களையும் படித்துள்ளதாக பெருமை பேசிக்கொள்கிற, இந்த நன்கு கற்றறிந்தவர், "துளஸிதாஸ் ராமாயணத்தில் ஸீதையும், ராமரும் சகோதர, சகோதரிகள்' என்கிறார்!

துளஸிதாஸரின் ராமாயணத்தை – ஆழ்ந்து படிப்பது கூட அல்ல – மேலெழுந்தவாறு புரட்டிப் பார்த்திருந்தால் கூட, இப்படிப்பட்ட ஒரு குழப்பம் அவருக்கு ஏற்பட்டிருக்காது. ஒன்று – அவர் வால்மீகி ராமாயணத்தையோ, துளஸிதாஸர் ராமாயணத்தையோ படித்ததே இல்லை – அல்லது படித்தது நினைவில்லை. இல்லாவிட்டால் இப்படி உளறமாட்டார்.

இப்படி ஒரு சொல் வழக்கில் உண்டு : "விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு, ஸீதைக்கு ராமர் சித்தப்பா, என்றானாம்!'.

கலைஞர் இன்னமும் அதைச் சொல்லவில்லை. ஆனால் நாம் அவசரப்படக் கூடாது. அவர்தான் எல்லா ராமாயணத்தையும் படித்தவர் ஆயிற்றே! நன்கு கற்றறிந்தவர்
ஆயிற்றே! அதனால் இதையும் சொல்வார். ஆகையால், தமிழக முதல்வரின் அடுத்த ராமாயண உளறல் அதுவாக இருக்கலாம்; யார் கண்டது!

ஸீதைக்கு ராமர் சித்தப்பா; கலைஞரின் ராமாயண அறிவு, சொத்தைப்பா !
நன்றி: துக்ளக்

2 Comments:

Anonymous said...

௧லி முற்றி விட்டதாம்
இயற்கையை மீறி விட்டோமாம்
ஏதோ கல்கி அவதாரமாம்
கர்த்தர் வேறு வருகிறாராம்
என்னை பொறுத்த வரை
என் சாவில் இந்த ௨லகம் அழிந்து விடும்

mrsekar said...

karunanithi yean hindu madhatha mattum ippadi ilivu paduthi pesuran