பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 29, 2007

கருணாநிதிக்கு மலேசிய மந்திரி கண்டனம்

மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் கருணாநிதிக்கு அந்நாட்டு அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பொறுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


மலேசியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். சுமார் 18 லட்சம் இந்தியர்கள் அங்கு வாழ்கிறார் கள். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் ஆவார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மலேசியாவில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கு அழைத்துச் சென்றது.

ஆனால், அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்றும் அவர்கள், 3ம் தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்றும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமைப்பு ஒன்றை நிறுவி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர்.

தங்களது மூதாதையினர் கண்ணிய குறைவாக நடத்தப்பட்டதால் தங்கள் சந்ததியினருக்கு படிப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் உரிய உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி, அதற்கு இழப்பீடாக 4 டிரிலியன் அமெரிக்க டாலர் தொகை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை சட்ட விரோதம் என்று கூறிய மலேசிய அரசு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டினார்கள்.

மேலும் தமிழர்கள் மீது தடியடி பிரயோகமும் நடத்தப்பட்டது. இதில் பலர் காயம் அடைந்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் விடாமல் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டால், உள்நாட்டு பாதுகாப்புச்சட்டம் பாயும் என்றும் மலேசிய அரசு எச்சரித்தது.

இந்நிலையில், மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழகத்தில உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.
மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழர்களின் வாழ்வுரிமைகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

முதலமைச்சர் மு. கருணாநிதியும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த செவ்வாய்கிழமை கடிதம் எழுதி தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். கருணாநிதியின் இந்த கடிதம் மலேசிய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் நஸ்ரி அசீஸ், கருணாநிதி தேவையில்லாமல் மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதியின் கடிதத்தை தாம் பார்க்கவில்லை என்று கூறிய அந்த அமைச்சர், இது தமிழ்நாடு அல்ல, மலேசியா என்றும், இந்த நாட்டு விவகாரங்களில் அவர் தலையிட தேவையில்லை என்றும், வேறு வேலை இருந்தால் அவர் பார்க்கலாம் என்றும் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

5 Comments:

Anonymous said...

Lord Rama and the dirty politicians in India can keep mum to Karunanidhi's stupid statements but how can Malaysia -- primarily they are Malaysian citizens, and only secondarily they are people of indian origin -- the Indian Government cannot intervene in this issue !! Bravo Aziz

Kattabomman said...

இதை பத்தி நான் முன்னாடியே என்னோட வலைபதிவில் சொல்லிஇருன்தேன். கலைஞர் அதை பார்த்திருந்தாரானால் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டிருக்க மாட்டார்.

http://vandhutanya.blogspot.com/2007/11/blog-post_8781.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழக முதல்வரின் கடிதம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.(பிற்காலத்தில் நான் கடிதம் எழுதினேன் என்று சொல்லிக்கொள்ள வாய்ப்பாக அமையும்) இவரது ஆட்சிதானே மத்தியில் நடக்கிறது. கடிதத்துடன், தொலைபேசியில் பேசி அவசரத்தை/அவசியத்தை தெரிவிக்க வேண்டியதுதானே.
தமிழக முதல்வருக்கு மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

உதாரணம்: முரசொலி மாறனுக்கு நாடளுமன்றத்தில் சிலை. கனிமொழி பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மன்மோகன் சிங்கே வந்தது. குடியரசு தலைவர் தேர்வில் முக்கிய பங்கு ஆற்றியது. தனது பேரனுக்கு தொலைதொடர்பு துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப துறைகளை மன்றாடி பெற்றுத்தந்தது.

மலேசிய அமைச்சருக்கு இந்தியர்களை பற்றிய புரிந்துணர்வு எப்படி உள்ளது என்பதை அவருடைய பேச்சு சொல்கிறது. தமிழக முதல்வரைப்பற்றிய அவருடைய கூற்று மிகவும் கண்டிக்கத்தக்கது.

முக்கியமான விஷயம்: இதையும் நம் அரசியல்வாதிகள் அரசியலாக்கி ஆதாயம் தேடாமல் இருந்தால் நல்லது என்பது என் கருத்து.(குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் வல்லவர்களாச்சே நம் அரசியல்வாதிகள்)நன்றி,
ஜோதிபாரதி.
http://jothibharathi.blogspot.com

Dhavappudhalvan said...

நம் நாட்டிலேயே, தமிழர்கள் பல இடங்களில் நாதியற்றவற்களாக உள்ளார்கள்.

Anonymous said...

In Organizations we make sure that we send emails for any communication that is official. It doesnt matter whether the purpose is solved or not. This is just to save your arse or just to point out during meetings that I have already sent a mail about this..As simple as 'for records'. Mr.M.K. is doing the same here. We can always learn all the arse saving methods from this person. :))

-- Nokia Fan