பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 13, 2007

சுடுகாட்டில் நள்ளிரவில் வடை, டீ விருந்து

மக்களின் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக, சுடுகாட்டில், நள்ளிரவுக்கு பின், வடை, டீ சாப்பிடும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துயுள்ளார்கள், "பாரத் ஜன் விஞ்ஞான் ஜதா' அமைப்பினர்.

வடமாநிலங்களில், தீபாவளிக்கு முதல் நாள், காளி சதுர்தசியாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில், நள்ளிரவுக்கு பிறகு, சுடுகாட்டில், சாமியார்கள் அல்லது பூஜாரிகளைக் கொண்டு யாகம் நடத்துவது வழக்கமாக உள்ளது. இந்த சிறப்பு பூஜை மூலம், அமானுஷ்ய சக்திகளை கட்டுப்படுத்தி, வசப்படுத்தலாம் என்று மக்கள் நம்புகின்றனர்.

இது மூட நம்பிக்கை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறப்பு பூஜை நடத்தும் நேரத்தில், சுடுகாட்டில் தேநீர், வடையுடன் காலை உணவு உட்கொண்டு பிரச்சாரம் செய்திருக்கிறார்கள் , "பாரத் ஜன் விஞ்ஞான் ஜதா' அமைப்பினர்.

குஜராத் மாநிலத்தில், பரவலாக அனைத்து சுடுகாடுகளிலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தாலும், மாநில அளவில் போர்பந்தரில் உள்ள சுடுகாட்டில், காலை உணவு சாப்பிடும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள்.

சாமியார்களும், பூஜாரிகளும், மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்டு, அதன்மூலம் பணம் சம்பாதிப்பதாகவும், தேவையின்றி மக்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், "பாரத் ஜன் விஞ்ஞான் ஜதா' அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஜினி பற்றி ஒரு செய்தி போட்டால், கமல் பற்றி ஒரு செய்தி போடனும், விஜய் பற்றி என்றால் அஜித் பற்றி போடனும். அதே போல தான் இட்லி பற்றி செய்தி போட்டால், வடை பற்றி போடனும் :-)

5 Comments:

R.Subramanian@R.S.Mani said...

I was told by a ghost that the Tea and Vadais are gone in seconds and the guests there felt as some ghosts have also come as guests. suppmani

Anonymous said...

I condemn them for not giving Idlys. Btb is idlyvadai is ghost
of a group :)

Anonymous said...

கடைசில இந்த வெப் சைட் ஒரு பாஸ்ட் பூட் மெனுவா மாறிடும் போல இருக்கே! இட்லி இருந்தால் வடை, வடை இருந்தால் பொங்கல், பொங்கல் இருந்தால் போண்டா, போண்டா இருந்தால் தோசை, தோசை இருந்தால் பூரி.....இனிமே அரசியல் நீயுஸ் பார்க்க முடியாதா?
பகுத்தறிவு பாசறை சேந்தவங்களை பத்தி வெயிட்டா ஒரு நீயுஸ் போடுங்க தலைவா...

Unknown said...

நள்ளிரவில்.. அது ஒண்ணு தான் செய்யாததது பாக்கி..விட்டா நள்ளிரவில்..நாய பிடிச்சி வறுத்து தின்னுவாங்க போல இருக்கு... எப்படிய்யா நடு நிசியில இட்லி வடை உள்ளாற எரங்குது இவனுங்களுக்கு ?... இது..என்ன "பாரத் ஜன் விஞ்ஞான் ஜதா'..வா இல்ல புங்காத்தா கோயில்ல தேங்கா பொறுக்குற கும்பலா ?

Anonymous said...

Jahe, this could be the same gumbal which enacted the "fast unto lunch" drama against the SC verdict on Ram Sethu project.