பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 05, 2007

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா? வீரமணீக்கு வைகோ கேள்வி

ஈழத் தமிழர்களுக்கு சேகரிக்கப் பட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்காமல் துரோகம் செய்யும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா? வைகோ கேள்வி

விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு நிலை மேற்கொண்டு உள்ள அதிமுகவோடு மதிமுக கூட்டணி தொடர்வது சரியல்ல என்றும், விலக வேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழப்பிரச்சனையில் விடுதலைப்புலிகள் குறித்த அதிமுக வின் அணுகுமுறையை அறிந்து இருந்த நிலையில் தான் வீரமணி, 2006 சட்டமன்றத் தேர்தலில் வைகோ அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்றும் வற்புறுத்தினார். தானே தூது செல்வதாகவும் கூறினார். பின்னர் திடீரென்று அவரே திமுகவை ஆதரித்தார். தற்போது அதிமுகவை வைகோ எதிர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்.

மதிமுகவை அழிக்க நினைக்கின்ற சக்திகளும், அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுகவை வேறு படுத்த திட்டமிட்டு விமர்சனங்களைச் செய்கிறார்கள். அவர்கள் அனைவ ருக்கும் பதில் சொல்லும் முகமாகத் தான் சில கேள்விகளை எழுப்புகிறேன்.

தமிழ் ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் கடந்த ஆண்டு நான் ஆதரித்து பேசியதற்குக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, என்னை கைது செய்ய வேண்டும் என்றும், மதிமுகவை தடை செய்ய வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்பினார்களே, அப்போதெல்லாம் இந்த ஆலோச னையாளர்கள் வாய் மூடிக்கிடந்தது ஏன்?
மதிமுக அமைப்பு செயலாளர் சீமா பசீரும், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறனும், தமிழக அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது அதைக் கண்டிக்காதது ஏன்?

சிங்கள அரசு நடத்தும் இன படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்டு ரேடார்களையும், ஆயுதங் களையும் வழங்கி மன்மோகன் சிங் அரசு ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்து வருகிறதே?

பசியால், நோயால் மடிகின்ற ஈழத்தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் திரட்டப்பட்ட உணவையும், மருந்தையும் அனுப்பிட, செஞ்சிலு வைச் சங்கத்துக்கே அனுமதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சகம் புரிகிறதே?

தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் அந்த அரசில் இருந்து, திமுக வெளியேற வேண்டும் என்று வீரமணி உள்ளிட்டோர் கூறும் துணிச்சல் உண்டா?
புலிகளை மன்னிக்க மாட்டோம்' என்று இன்றும் சொல்லுகிற காங்கிரசுடனான உறவை, திமுகவும் மற்ற கட்சிகளும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்ல வீரமணி தயாரா?

1998ம் ஆண்டில், திமுக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஜெயின் கமிஷனிலும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாகக் கூறி, அந்தத் திமுகவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றாததால் ஐக்கிய முன்னணி அரசைக் கவிழ்த்த அதே காங்கிரஸ் கட்சியோடு, 2004ல் திமுக எந்த அடிப்படையில் கூட்டணி அமைத்தது?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டவர்களா? எத்தனையோ பிரச்சனைகளில் எதிரும் புதிருமான நிலையைத்தானே மேற் கொள்ளுகின்றனர்?

மதிமுக தனது அடிப்படைக் கொள்கைகளில், லட்சியங்களில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் அதிமுக உடன் தோழமையோடு மதிப்பும், அன்பும், நம்பிக்கையும் கொண்டு, தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிற திமுக பாசிச அரசை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டும் ஜனநாயகக் கடமையைத் தொடர்ந்து செய்யும்

1 Comment:

paddhusjottings said...

மதிமுகவின் அடிப்படைக்கொள்கையே சேதுசமுத்திரத்திட்டம் விடுதலைப்புலிகளுக்குத் தீவிர ஆதரவும்தானே! இவை இரண்டையுமே முழுமூச்சுடன் எதிர்க்கும் அதிமுகவுடன் எந்தவிதத்தில் தோழமை,மதிப்பு நம்பிக்கையோடுகூட்டணி வைத்திருக்கிறீர்கள்? ஜெயலலிதா கிழித்து வைத்த
கோட்டைத் தாண்டாதவர்
---------------------
என்பதால்தான் உங்கள்பெயர் வைகோவாமே ? உண்மையா?

டி.எஸ்.பத்மநாபன்