பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 02, 2007

கிருஷ்ணசாமியை சந்தித்து நலம் விசாரித்தார் ஜெயலலிதா

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து நலம் விசாரித்தார் ஜெயலலிதா

மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை, அ.தி.மு.க., பொதுச் செயலர், ஜெயலலிதா நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
கடந்த 29ம் தேதி அன்று முதுகுளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். கத்திக் குத்து காயம் அடைந்த கிருஷ்ணசாமி, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கிருஷ்ணசாமி அழைத்து வரப்பட்டார், பலத்த பாதுகாப்புடன் சென்னை, அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு உடனடியாக சிகிச்சைகள் துவங்கின. இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மருத்துவமனைக்கு தனி அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமியிடம் ஜெயலலிதா உடல் நலம் விசாரித்தார். தாக்குதல் சம்பவம் குறித்து ஜெயலலிதாவிடம் கிருஷ்ணசாமி விளக்கினார்.

3 Comments:

Anonymous said...

அஇதிமுக, மதிமுக, பிஜேபி, காங்கிரஸ்.. பத்திரிக்கை, மாணவர்கள், நிதிபதி, கோவில், அடுத்தது யாரு?
அவ்வுளவுதான் பாவம் இனி உயிர்மேல் ஆசை உள்ள தலைவர்கள் யாரும் தமிழ்நாடு பக்கம் வரமாட்டார்கள்.

paddhusjottings said...

ஆடுநனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான்! திமுகவையும் கருணாநிதியையும் போட்டுத்தாக்க சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவாரா?
டி.எஸ்.பத்மநாபன்

paddhusjottings said...

ஆடுநனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான்! திமுகவையும் கருணாநிதியையும் போட்டுத்தாக்க சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவாரா?
டி.எஸ்.பத்மநாபன்