பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 27, 2007

நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு

நீண்ட நேரம் லேப் டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்குவது ஆண்மைக் குறைவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எவ்வளாவு தூரம் உண்மை என்று தெரியலை. அனுபவம் உள்ளவர்கள் சொல்லலாம் :-)

நீண்ட நேரம் லேப் டாப்களை மடியில் வைத்து இயக்கும் போது அதிலிருந்து வெளியாகும் உஷ்ணம் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக வெப் எம்டி என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷெய்ன் கின் மற்றும் அவரது உதவியாளர்கள் 21 முதல் 35 வயது வரை உள்ள 29 இளைஞர்கள் மத்தியில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் போது சிலரது மடியில் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஆன் செய்து சோதிக்கப்பட்டதாகவும், சிலரது மடியில் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஆப் செய்யப்பட்டு வைக்கப்பட்டதாகவும் இந்த ஆய்வின் முடிவில் ஆன் செய்யப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்களிலிருந்து வெளியான உஷ்ணம் அதை பயன்படுத்துபவர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது தெரியவந்ததாகவும் ஷெய்ன் கின் தெரிவித்துள்ளார்.

எனவே, லேப் டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்குவது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

3 Comments:

Anonymous said...

There is cool-tap board available for this issue, Just buy connect it through an isb cable to the lap top, keep the laptop over the board and use it. The cool pad has a small fan it that takes power from laptop itself. This product is available in electronic stores like fryz etc. Dont keep the laptop on the lap and operate it for long time, lest you will have operation problems elsewhere :))

Anonymous said...

That is why I keep it on my girl friend's lap when I want to use it :)

Tech Shankar said...

மடிமீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம். மறுநாள் எழுந்து பார்ப்போம்.

அப்படின்னு அவர் எழுதினார்.

மடியில் லேப்டாப் வைத்தால் அந்தப் பிரச்சினை வரும் என்று இவர் சொல்கிறார்.

6 சொல்வதைக் கேட்பது?

நல்ல பதிவு. வேறென்ன வேறென்ன வேண்டும்...