பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 22, 2007

காங்கிரஸுக்கு ஆதரவு - தேவகவுடா

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. அரசியல் மாற்றம் நாளுக்குநாள் கர்நாடகாவில் மாறிவருகிறது. பா.ஜ. ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி கர்நாடகாவில் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து எவ்வித தகவலும் இல்லை.

சீக்கரம் எலக்ஷன் வைத்தால் நல்லது !

2 Comments:

Anonymous said...

குரங்குகள் அடிக்கின்ற குட்டி கரணங்கள் எவ்வளவோ மேல். இவர்களிடம் ஒரு கொள்கையும் இல்லை...
கொள்ளை அடிக்க மட்டும் தான் பார்கின்றனர்...
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.....

Dhavappudhalvan said...

நல்லா சொன்னிங்க ராம்ஜி !. இவங்கள புரிஞ்சிக்கிட்டு மக்கள் ஓட்டு போட்ட நல்லதுங்க.