பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 15, 2007

பாஸ் - லாஸ் ?

"சிவாஜி’ படத்தில் ரஜினி மொட்டை போட்டுக் கொண்டார். நிஜத்தில் எங்களுக்குத்தான் மொட்டை போட்டிருக்கிறார். கோடிக்கணக்கில் நஷ்டப்பட்டிருக்கிறோம். குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற அளவுக்கு விரக்தி எங்களை வாட்டுகிறது"
என்று படத்தை வாங்கிய (பெயர் சொல்ல விரும்பாத) விநியோகஸ்தர்கள் பலர் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜூவியில் கட்டுரை வந்திருக்கிறது.

என்னுடைய ஐந்து கேள்விகள் கீழே..

1. சிவாஜி படத்துக்கு டிக்கெட் விலையை அதிகமாக வைத்து விற்ற போது கலைஞர் ராஜாஜி எழுதிய ராமாயணம் படித்துக்கொண்டிருந்தார். சின்ன சின்ன கிராமத்தில் கூட முதல் ஒரு மாசத்துக்கு டிக்கெட் விலை அதிகாமாக வைத்து தான் ஓட்டினார்கள். அப்படியுமா லாஸ்
?

2. முதல் 4 வாரம் புக்கிங் என்று ரஜினி ரசிகர்கள் திரும்ப திரும்ப போய் படம் பார்த்தார்கள். என்ன சார் சவுக்கியமா என்று கேட்ட்வர்கள் கூட, என்ன சார் சிவாஜி படம் பாத்தாச்சா ? என்று கேட்டார்கள் ?" அப்படியுமா லாஸ் ?

3. ஷேர் மார்கெட்டில் பணம் போடுகிறோம், சில சமயம் ஊத்திக்கும், சில சமயம் நல்ல லாபம் வரும். அதே போல் தான் ரஜினி படமும். நல்ல லாபம் வரும் என்று வாங்கிவிட்டு, இப்ப ரஜினியும், ஏ.வி.எம், ஷங்கரை குறை சொன்னா எப்படி ?

4. 'ஒரு கூடை சன் லைட்' பாடலுக்கு கருப்பாக இருக்கும் ரஜினிக்கு வெள்ளையாக மேகப் போட்டு அசத்தியிருப்பார்கள். அதே போல இவர்களின் கருப்பு பணத்துக்கு இந்த மாதிரி நியூஸ் போட்டு வெள்ளையாக மேகப் போட டிரை பண்ணுகிறார்களா ?

5. ரஜினியை வைத்து ஷங்கர், ஏ.வி.ம் சம்பாதித்தார்களா, அல்லது இந்த நியூஸை போட்டு ஜூவி சம்பாதிக்கிறதா ? எது எப்படியோ கிளைமேக்ஸில் ரஜினி தலை மொட்டை, இப்ப நம்ப தலை.

இன்றைய பரண் பதிவு
இன்னும் படம் பார்க்காதவர்களுக்கு சிவாஜி படம் விமர்சனம்.

4 Comments:

வெங்கட்ராமன் said...

ரஜினியை வைத்து ஷங்கர், ஏ.வி.ம் சம்பாதித்தார்களா, அல்லது இந்த நியூஸை போட்டு ஜூவி சம்பாதிக்கிறதா ?

ரஜினி சம்பாதிச்சதை விட, ரஜினி ய வச்சு இந்த பத்திரிக்கைங்க சம்பாதிச்சது அதிகம்.

அருண்மொழி said...

//ரஜினி சம்பாதிச்சதை விட, ரஜினி ய வச்சு இந்த பத்திரிக்கைங்க சம்பாதிச்சது அதிகம்.//

எல்லாத்தையும் விட அவர் பேரை உபயோகப்படுத்தி அதிகம் சம்பாதித்தவர் அவரின் திருமதிதான்.

கருப்பு பணமா!!! அப்படின்னா இன்னாபா?. ஜங்கரு படத்த பார்த்தவுடன் எல்லா சினிமாகாரர்களும் மனம் மாறி விட்டனர். No more கருப்பு பணம் in the industry.

இட்லிவடையாரே,

Please update BABA - Supreme Star story. ரிப்போட்டரில் வேறு மாதிரி செய்தி வந்துள்ளது.

Anonymous said...

All this posturing by the distributors of Sivaji is only to ward off the eagle eyes of the Income Tax department. JV, as per its ethics, is doing the "sindu mudichal".

Unknown said...

அனானி சொன்னது சரி... சிண்டு முடியுற வேலைய ஜூ வி சரியா செய்யுறாங்க...

இந்த கொரங்கு...என்ன பண்ணுமாம்..!! தனக்கு ஒரு சின்ன புண் வந்தா.. அத்த நோண்டி.. நொங்கேஃடுத்து வலி தெரிஞ்ச பின்ன கத்திகினு ஒருமாம்... அது போல...

சம்பாதிக்க வேண்டியவன் எல்லாம் சிவாஜி படம் மூலியமா காச பாத்துட்டான்னுங்க.. இப்போ ஜூ வி .தேவையில்லாத நியூஸ் அ போட்டு.. எவன்னவது..கேஸ் போடணும்.. மறுபடியும் மேல சொன்ன கொரங்கு கதை ....