எங்கள் தலைவர் ராஜிவ்காந்தியை கொலை செய்தவர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து நாங்கள் கட்சி மேலிடத்திற்கு எங்கள் உணர்வுகளை தெரியபடுத்துவோம் - ஜி.கே.வாசன்
சுப்பிரமணியசாமி .
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை:
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கவிதை மூலம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது.
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற குற்றத்திற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். இன்டர்போல் அவரை தேடி வருகிறது.
ராஜீவ்காந்தி படுகொலைக்கு காரணமான இயக்கத்திற்கு மத்திய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த கருணாநிதி, கவிதாஞ்சலி செலுத்தி இருப்பதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், முதல்வர் கருணாநிதி இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை மீறி விட்டதால் திமுக அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு வீரமணி கண்டனம்
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஜீவமரணப்போராட்ட மாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவர் களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடைய முக்கியத் தளபதிகள் ஐவரும் இலங்கை ராணுவத்தால் வான் வழித்தாக்குதல் மூலம் கொல்லப் பட்டதைக் கண்டு உலகமே கண்ணீர் வடித்து கதறிப் புலம்பி தனது மனிதாபி மானத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முதலமைச்சர் கருணாநிதி விடுத்த இரங்கலில் கண்ணீரை கவிதைப் பூக்களாக்கி சோகக் கடலில் உள்ள தமிழினத்தின் ஒட்டு மொத்த உணர்வினைத் தெரிவித்தார். அவர் மட்டும் அல்ல இதயம் படைத்த அத்துணை பேரும் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, இதற்காக முதல்வரைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்; புலிகளுக்கும் இவருக்கும் ரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றெல்லாம் பிதற்றியுள்ளார்.
மனிதநேயம் படைத்த அனைவருடைய ஒட்டு மொத்தக் கண்டனத்திற்குரியதாக, ஜெயலலிதா வின் அறிக்கை அமைந்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினைச் சார்ந்தவருக்கு, இரங்கல் தெரிவிப்பது கூடாதாம். என்னே விசித்திரம்!
கருணாநிதி ஒரு பச்சைத் தமிழர்; அவர்தம் உணர்வு களும் குருதியோட்டமும் தமிழ் இனத்தின் இயல்பான சொத்துக்கள். மனிதநேயத் தோடு மட்டுமல்ல, தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாயமாக குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்குக் கூட அவருக்கு உரிமை இல்லையா?
"தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்பதற்கொப்ப மனத்தாலும், இனத்தாலும் ஒன்றுபட்டவர் என்பதால் உடனடியாக இப்படி எழுதி தனது துயரத்தினை வெளியே கொட்டி ஆறுதலைத் தேடினார். ஆனால் ஜெயலலிதாவுக்கு மனமும் வேறு; அவர்தம் இனமும் வேறு. பரம்பரை யுத்தத்தினை இதிலும்கூடத் தொடர்ந்து தனது அற்பத்தனத்தைக் காட்டியுள்ளார் ஜெயலலிதா.
எதிரியாக இருந்தாலும்கூட, இறந்த வர் என்றால் அனுதாபம் தெரிவிப்பது சராசரி மனிதாபிமானம். இதுகூட இல்லை என்பதோடு இதனைக் கண்டித்து அறிக்கை விடும் அளவுக்குச் சென்றால், தமிழனத்தின் பகைவர்களை இதன் மூலம் அடையாளம் காண ஒரு சரியான சந்தர்ப்பம் இது என்றுதான் தமிழ்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு இரங்கல் தெரிவித்தமைக்காக கருணாநிதிக்கு புலிகளுடன் தொடர்பு என்று அறிக்கைவிடும் ஜெயலலிதா வுடன் கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வின் நிலைப்பாடு பற்றி கவலைப் பட்டு அறிக்கை கொடுப்பாரா? அவரும் தானே இரங்கல் செய்தி விடுத்தார். அவரின் புலிகள் ஆதரவுக்காகத்தானே "பொடா' சட்டத்தை ஜெயலலிதா பிரயோகித்தார்.
சேரக் கூடாத இனத்தோடு சேர்ந்த வைகோ, இதற்கு பிறகும் கூட ஏதோ ஒரு சில சீட்டுக்களுக்காக இப்படிப் பட்டவர்களோடு கூட்டணியில் தொடர்வது எந்த வகையில் நியாயம்? உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் உரிமையான கேள்வி இது. ஆத்திரப்படாமல் வைகோ யோசிக்க வேண்டும் என்று வீரமணி கூறியுள்ளார்.
ஜெக்கு கலைஞர் பதில்
கேள்வி, பதில் அறிக்கை:
கேள்வி: தமிழ்ச்செல்வன் மறைவுக்கு நீங்கள் மனிதாபிமானத்துடன் இரங்கல் தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதா அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: பாவம், ஆட்சியில் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் அல்லற்படுகிறார். எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் மறைந்தாலே இரங்கல் தெரிவிப்பது மனித நேயப் பண்பாடு என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தெரியும். அந்த அடிப்படையில் தான் அதிமுகவிலே இருந்த நாவலர் மறைந்த போது கூட நான் தேடிச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன்.
இலங்கையிலே கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடலில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால் தான் நான் இரங்கல் தெரிவித்தேன். ஏன், ஜெயலலிதாவுடன் இன்றளவும் தோழமை கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஜெயலலிதா இல்லத்திற்குச் சென்று வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்ச்செல்வன் மறைவுக்காக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து கண்டிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தால் அதற்கு ஜெயலலிதா ஒப்புதல்.
அதே தமிழ்ச்செல்வன் மறைவுக்காக நான் அறிக்கை விடுத்தால் என்னுடைய ஆட்சியைக் கலைக்க வேண்டுமா? எப்படியாவது ஆட்சி கவிழ்க்கப்படாதா? தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து சுரண்ட முடியாதா என்று ஜெயலலிதா, தவியாய் தவிக்கிறார். என்ன செய்வது? ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் மக்கள் ஆதரவு வேண்டுமே?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, November 04, 2007
தமிழ்ச்செல்வன் மறைவு - ஜி.கே.வாசன், சுப்பிரமணியசாமி, வீரமணி கருத்து
Posted by IdlyVadai at 11/04/2007 02:23:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
As an CM Mr.MK should think first about Country then about community,LTTE have killed our Ex Prime minister,and they have not even cleared the reason,After 10 years in press meet they told that 'athu oru thunbiyal sambavam'
a single word answer for justifying a Prime Minister's Murder.IS it OK
As an CM Mr.MK should think first about Country then about community,LTTE have killed our Ex Prime minister,and they have not even cleared the reason,After 10 years in press meet they told that 'athu oru thunbiyal sambavam'
a single word answer for justifying a Prime Minister's Murder.IS it OK
Mystry of Tamilselvan death: Whether he is killed by LTTE?
MYSTERY BEHIND THAMILCHELVAN'S DEATH-INTERNATIONAL TERRORISM MONITOR--PAPER NO. 299
By B.Raman (http://www.saag.org/papers25/paper2445.html)
Normally, whenever the Sri Lankan Air Force (SLAF) makes an air strike on areas held by the Liberation Tigers of Tamil Eelam (LTTE), it makes an announcement immediately after its planes safely return to base and a claim regarding the successes achieved. The LTTE then makes a counter-claim refuting the version of the SLAF.
2. In the case of the death of S.P.Thamilchelvan, the head of the political wing of the LTTE, supposedly in an SLAF air strike on November 2,2007, this reportedly did not happen. The SLAF initially did not come out with any statement or claim.
3. It was the LTTE, which made the first announcement, about six hours after the alleged air strike and then the Sri Lankan Government went to town about it. There was apparently an air strike in the Kilinochi area at 6 AM on November 2,2007, but it was not a targeted air strike directed to killing Thamilchelvan.
4. It did not make any sense for the SLAF to kill him.The LTTE has two wings--- a conventional warfare wing and a terrorist wing centred around the Black Tigers and the Black Sea Tigers. Karuna, the leader of the Eastern Province, who deserted Prabhakaran in 2004 and Thamilchelvan belonged to the conventional wing and not to the terrorist wing.
5.Thamilchelvan was an acceptable face of the LTTE for the international community if it wanted to work towards an LTTE minus Prabhakaran and others involved in the assassination of Rajiv Gandhi just as it worked for a Palestine Liberation Organisation minus Yasser Arafat. In fact, I have myself been suggesting this formula for many years in order to re-start the peace process again.
6. Since the interrnational community liked Thamilchelvan and his pleasant ways of interacting with people, many of his interlocutors were working towards making him see reason and make the LTTE break with its reputation as a terrorist organisation.
7. If the Sri Lankan Government also wanted to work towards this scenario, it would not have targeted him. Instead, it would have tried to spare him. One had the impression that this was its policy till now.
8. Sri Lankan officials, including its Defence Secretary, have claimed that they had pinpoint information about Thamilchelvan's place of residence and hence were able to target him. In fact, many knew his place of residence since he was freely receiving his foreign interlocutors there. He felt that the Sri Lankan Government would not target him since he represented the internationally-acceptable face of the LTTE and there could not be a revival of the political process without his playing a role in it.
9. Many well-informed persons with their ears to the ground feel there is more than meets the eye in the case relating to Thamilchelvan's death. They do not rule out the possibility that the LTTE's intelligence wing had him and his close associates killed and then put the blame on the SLAF, thereby killing two birds with one stone---it eliminated a possible rival to Prabhakaran and aggravated the anger against the Sri Lankan authorities.
10. According to these sources, in their anxiety to overcome the embarrassment caused by the LTTE's recent successful raid in the Anuradhapura base, the Sri Lankan authorities, instead of waiting and watching in order to analyse why the LTTE took the initiative in making the announcement, walked into the trap and claimed credit for eliminating him, thereby unwittingly providing a deniability to the LTTE's intelligence wing.
courtesy: indiainteracts
Ivlo pesum Arummai annan thanmaana singam, karunaanidhi, saha tamilanaana veerapan irandhapodhu, edhiri enra pothilum, yen irangarpaa paadavillai...
Why veeramani is pulling 'ottumotha ulaham', 'tamilinathina ottumotha unarvu' stuff.. Muruga...ennakkithaan naamkku vidivu kaalamo..
--Nokia Fan..
first i want to write in tamil,i tried with google, but i don't know how to post it to idlyvadai
திரு சுப்பிரமணியசாமி மற்றும் திரு ஜகே வாசன் அவர்களே !
நீங்கள் உங்கள் தலைவரை மறக்கவில்லை அதே நேரம் ஈழத்தமிழர்கள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட 8118 அப்பாவித்தமிழ் மக்களையும் கற்பழிக்கப்பட்ட 3607 தமிழ் பெண்களையும் மறக்கவில்லை. இது தவிர புலிகளிடம் இருந்து ஆயுதங்களை கழைந்து விட்டு முக்கிய தளபதிகளை கொன்றதையோ, தியாகி திலீபன் அன்னை பூபதி போன்றோர் உங்கள் தலைவரிடம் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட வடுக்களையோ மறக்கவில்லை. உங்கள் தலைவர் செய்த கொடுமைகளை ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். ஒரு அழிக்க முடியாத கொடிய வரலாறு.
யாரும் எதையும் மறக்க வேண்டியதில்லை ஆனால் நியாயம் என்பதும் உயிர் என்பதும் எல்லோருக்கும் பொதுவானது. என்பதை உணர்ந்தால் போதுமானது.
/////யாரும் எதையும் மறக்க வேண்டியதில்லை/////
உங்களுக்கு ஒண்ட எடங்குடுத்தோமுல்ல, பேசுவீங்ஙடா பேசுவீங்ங...
பச்சைத்தமிழர்களுக்கு இரங்கல் மட்டுமல்ல, பச்சைதமிழர்களை கண்காணிக்கவும் செய்வார் பச்சைத்தமிழர் தலைவர்
நன்றி தினமலர்
15. அகதிகளை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவு
விருதுநகர் :இலங்கை தமிழ் அகதிகளை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்காக 25 மாவட்டங்களில் 117 முகாம்கள் உள்ளன. இவற்றில் 74 ஆயிரத்து 219 பேர் தங்கியுள்ளனர். வெளியே 23 ஆயிரத்து 489 பேர் தங்கியுள்ளனர். இவர்களைக் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தினமும் இருவேளையும் கணக்கெடுத்து கண்காணிப்பதில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கண்டனங்களை விட அனுதாபங்களை மட்டுமே தந்த தமிழ்ச்செல்வன் படுகொலை
நீ எனது இருதைய மையப்பகுதியில் கைவைத்தால், நானும் வைப்பேன். அனுராதபுரத்திரத்திற்கு பதில் புலிகளின அரசியல் துறையைப் பலியெடுத்து அரசு தரப்பு
- அர்ச்சுனன்
தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ் மாவட்ட பிஸ்ரல் குழு தலைவரும்(தினேஷ்) தற்போதைய அரசியல் துறைப் பொறுப்பாளருமான சுப்பையா பரமு தமிழ் செல்வன் அவர்கள் சிறிலங்கா ஆகாய விமானங்கள் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (2007-11-02) காலை 6 மணிக்கு நடத்தப்பட இந்த தாக்குதலில் புலிகளின் லெப்ரினன் கேணல் தர முக்கிய தளபதிகளில் ஒருவரான அலெக்ஸ், மற்றும் பிரதான பொறுப்புகளில் இருந்தாக கூறப்படும் மிகுதன், கலையரசன், ஆட்சிவேல், மாவைக்குரன் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளார்கள். புலிகளும் அரச படைகளும் தமது மக்களுக்காக போராடுகின்றோம் என கூறிக்கொண்டாலும் எப்போது தம்மை பாதுகாக்கும் வகையில் திரை மறைவில் பேரங்களை பேசி கொள்வது வழக்கம். நீங்கள் எங்கள் பிரதான நிலைகளை தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என புலிகள் அரச படைகளுக்கு அவ்வப்போது எச்சரித்து வருவார்கள். அதே போன்று அரசும் அவ்வப்போது அவர்களுடன் பேரங்களை பேசி கொண்டு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும். .பொட்டம்மானுக்கு அடுத்த படியாக புலனாய்வு துறையில் பிரதான பதவி வகித்த நியூற்றன் என்பவர் அரசாங்க உத்தியோகஸ்தர் (கல்வி அதிகாரி) ஒருவருடன் கொழும்பில் இருந்த் கண்டிக்கு செல்லும் வேளை அரச புலனாய்வு துறையினரிடம் அகப்பட்டு கொண்டார். இவர் தன்னை ஒரு செல்வந்தராக காண்டிக்கொண்டு பென்ஸ் (Benz) வாகனத்தில் உலாவி வந்தவர். இவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு புலிகள் திரைமறவில் அரச படைகளுடன் பேரம் பேசியிருந்தார்கள்.அரச முக்கியஸ்தர்களும்,பிரதான படை அதிகாரிகளும் தமது இலக்கில் இருக்கின்றார்கள் எனவும் அவர்களை தாம் இன்னமும் கொல்லவில்லை என்றும், நீங்கள் நியூற்றனை விடுதலை செய்யாது விட்டால் அவர்களை நாம் இலக்கு வைப்போம் என எச்சரித்து இருந்தார்கள். ஆனால் அரச படைகளும், புலனாய்வு துறையும் தாம் நீயூற்றனை கைது செய்யவே இல்லை என மறுத்து விட்டனர். இதன் பின்னர் புலிகள் பட்டப்பகலில் கொழும்பில் இருந்த அரச புலனாய்வு துறை அதிகாரியான ஜெயரட்ணத்தினை கடத்திக்கொண்டு வன்னி சென்று இருந்தார்கள், இதன் பின்னரும் அரச படைகள் மசியவில்லையாதலினால் இலக்கு வைத்து நீண்ட நாட்களாக பிற்போடப்பட்டு வந்த முக்கிய அரச புள்ளிக்கு புலிகள் பொட்டு வைத்தார்கள். அது வெறு யாரும் அல்ல முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரேயாவார்.
தற்பொழுது புலிகள் அரச கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மையப்பகுதியான அனுராதபுரத்திற்குள் சென்று 9 இற்கு மேற்பட்ட பாவனையில் இருந்த விமானங்களை தாக்கியழித்திருந்தார்கள். அதற்கு பதிலடியாக அரச படையினர் குறி வைத்து விட்டு காத்திருந்த புலிகளின் பிரதான இலக்குகளில் ஒன்றில் மேல் பதிலடி கொடுதுள்ளார்கள் . புலிகள் எப்படி அரசின் பல நிலைகளை இலக்கு வைத்துள்ளார்களோ அதே போன்று வன்னிக்குள் இருக்கும் புலிகளின் மறைவிடங்கள் பல அரச புலனாய்வு துறையினரால் சேககரிக்கப்பட்டு விமானப்படையினரிடம் கையளிக்கப் பட்டுள்ளது. புலிகள் தெற்கில் தாக்குதலை தீவிரப்படுத்தினால் படையினரின் விமானங்கள் வன்னிக்குள் தினம் வலம் வரும் என்கின்ற எச்சரிக்கையினை அரசு தற்பொழுது விடுத்திருக்கின்றது. கிழக்கின் வெற்றியை கொண்டாடிய அரச தரப்பிற்கு அனுராதபுர சம்பவம் மிகவும் அதிர்ச்சியை கொடுத்ததுடன்,எதிர்கட்சியினர் எள்ளி நகையாடும் நிலை ஏற்பட்டது. ஆகவே நீ எனது இருதய பகுதியை தாக்கி விட்டாய் நானும் தாக்குகிறேன் பார் என மகிந்த சகோதரர்கள் புலிகளுக்கு சவால் விடுப்படியாக தமிழ்செல்வனை இலக்கு வைத்துள்ளார்கள். புலிகள் பல நூறு கோடி ரூபாக்களை பெற்றுக்கொண்டு வட கிழக்கு மாகாண மக்களை வாக்களிக்க விடாது ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வருவதினை நிறுத்தி மகிந்த ஆட்சிக்கு வருவதற்கு உதவி செய்திருந்திருந்தார்கள் .அந்த உதவிக்கு நன்றியாக மகிந்த தமிழ்செல்வனை இல்லாது செய்திருக்கின்றார். கடந்த காலங்களில் புலிகளின் உயர் மட்ட தளபதிகளை (மாத்தையா,கிட்டு,விக்ரர்,பதுமன் ?) புலிகளின் தலைவரே கொலை செய்வார். முதல் தடவையாவாக இம்முறை அரசு செய்திருக்கின்றது
வன்னிக்குள் இருந்து வெளியே வரும் தகவல்கள்
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தமிழ்செல்வன் எங்குள்ளார் என்பது எப்படி அரச படைகளுக்கு தெரிந்தது என்பது இன்னமும் புதிராக இருகின்றது. இதனையே பி.பி.சி செய்தி நிறுவனத்தின் இலங்கை தொடர்பாளார் ரொலன் பேர்க் (Roland Buerk) கொழும்பில் இருந்து தெரிவித்திருக்கின்றார் (It remains unclear how the milirary knew of Mr Thamilselval’s whereabouts.). புலிகள் எவ்வாறு பெருந்தொகையான பணத்தினை படை உயர் அதிகாரிகளில் இருந்து இராணுவ வீரர் வரை கொடுத்து தகவல்களையும் உதவிகளையும் பெற்றுக் கொள்ளுகின்றார்களோ அவ்வாறு தற்போதைய அரசும் வன்னிக்குள் இருக்கும் மக்களுக்கு பெருந்தொகையான பணங்களை வீசி தகவல்களை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு பணம் மட்டும் காரணம் அல்லாது வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுயில் வாழும் மக்களுக்கு புலிகளின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பும் ஒரு காரணமாகும். அனுராதபுர விமான தளம் மீதான தாக்குதல் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் மட்டுமே கவர்ச்சிகரமாக இருந்தது. பிள்ளைகளை பறிகொடுத்த வாறு இருக்கும் வன்னி மக்களுக்கு இவைகள் சாதனைகளாக தெரியவில்லை.
தமிழ்மக்கள் இறந்தாலும் ,அல்லது சிங்கள மக்கள் இறந்தாலும் அதை ரசிக்கும் தன்மையானது புலம் பெயர்ந்து வாழும் மக்களின் ஒரு பகுதியினரிடம் பற்றிக்கொண்டுள்ளது.கரும் புலி பலியானாலும்,பேரூந்துகளில் குண்டு வைக்கும் போது சிங்கள பொதுமக்கள் பலியானாலும் இவர்கள் அதனை ரசிக்கின்றார்கள். வன்னியில் இருந்து புலிகள் அரச கட்டுப்பாட்டு பகுதியினை நோக்கி 10 ஏறிகணைகளை வீசினால், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் அது 30 ஆக விழுகின்றது. கரும் புலிகள் 6 மணித்தியாலங்ளில் 9 விமானக்களை தாக்கியழித்து விடுகின்றார்கள்,ஆனால் புலிகளின் ஊடகங்களின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்னம் உள்ளன. தமிழ் செல்வன் கொல்லப்பட்டிருக்காவிடில் மாவீரர் உரை வரும் போது கரும் புலிகள் தாக்கிய விமானங்களின் எண்ணிக்கை ஐம்பதை தாண்டியிருக்கும். புலம் பெயர்ந்து வாழும் மக்களினால் மட்டுமே இதனை ரசிக்க முடிகின்றது. வன்னியில் இருக்கும் மக்கள் தமது பிள்ளைகளை புலிகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், நேரடியாக யுத்த பாதிப்புக்களுக்கு உள்ளாவதாலும் அவர்களினால் இதனை ரசிக்க முடிவதில்லை.விரையில் ஒரு நிரந்தர தீர்வு வரவேண்டும் என்பதினையே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். புலிகளின் கட்டாயப்படுத்தலாலும், வற்புறுத்தலாலும் மட்டுமே அவர்கள் புலிகளின் கொண்டாண்டங்களுக்கு செல்லுகின்றனர். புலிகள் வன்னிக்குள் இருக்கும் சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இழுத்து செல்வதினால் பெற்றோர்களும் சகோதரர்களும் புலிகள் மீது பெரும் வெறுப்பு கொண்டுள்ளார்கள்.புலிகள் இவ்வாறு வலுக்கட்டாயமாக பிள்ளைகளை இழுத்து செல்ல வந்தபோது சில பெற்றோர்கள் தமது கண்ணுக்கு பட்ட கத்திகள் பொல்லுகளை கொண்டு தாக்கிய சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. புலம் பெயர் தமிழர்களின் பிள்ளைகள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதினால் ஏனையோர்களின் பிள்ளைகள் தாக்குலுக்கு சென்று மடிவதினை இவர்களினால் ரசிக்க முடிகின்றது. 21 கரும்புலிகள் மடிந்து 13படையினர் மட்டுமா செத்தார்கள் என கேள்வி கேட்பதோடு, முல்லைதீவு போன்று ஆயிரக்கணக்கான படையினர் செத்திருக்க வேண்டும் என இதற்குள் வியாக்கியானம் வேறு பேசுகின்றார்கள். மோதல்கள் குறித்த செய்திகளை கேட்கும் போது இவர்களுக்கு ரம்போ, மிஸ்சிங் இன் அக்ஷன் (Rambo, Missing in Action) போன்ற அடிபிடி திரைப்படங்களை (Action Movies) பார்த்த திருப்தி கிடைக்கின்றது.
தமிழ் செல்வன் கொல்லப்பட்டது அரச விமானப்படை தாக்குதலில் தான் என்பது சந்தேகமில்லாது இருந்த போதும், விமானப்படையினருக்கு துல்லியமாக தமிழ் செல்வனின் இருபிடம் எப்படி தெரிந்தது என்பது சந்தேகத்திற்கு உரிய விடயமாகவே உள்ளது. வன்னிக்குள் வாழும் மக்களுக்கு புலிகள் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கின்ற போதிலும், புலிகளின் உயர்மட்ட தலைவர்களின் மறைவிடங்கள், சந்திக்கும் இடங்கள் என்பன அந்த மக்களுக்கு கூட தெரியாமலே பாதுகாக்கப்படுகின்றது. ஆகையினால் புலிகளுக்குள் இருப்பவர்களால் மட்டுமே உயர் மட்ட தலைவர்களின் மறைவிடங்கள், சந்திக்கும் இடங்கள், நேரங்கள் என்பன தெரிய வாய்புண்டு. புலிகளின் சர்வதேச தொடர்பு மையத்தில் தமிழ்செல்வன் நின்றிருந்த போதே தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகின்றது. புலிகளுக்குள் இருக்கின்ற தலமைபோட்டியினால் அரசிற்கு புலிகளுக்கு உள்ளே இருந்தே தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் என சிங்கள பதிரிகையாளர் ஒருவர் ஆங்கில இணையதளத்தில் கூறியிருக்கின்றார். புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த படியாக இருக்கும் தலைவர்களை இல்லாது ஒழிக்கும் நடவ்டிக்கைகளை பொட்டம்மான ஆரம்பித்துள்ளார் என்றும், முதலில் சூசையினை முடமாக்கினார்,தற்பொழுது தமிழ்செல்வனை அரச படையினை கொண்டு முடித்திருக்கின்றார், அவரின் அடுத்த இலக்கு இருவர் என்றும் ,அவர்களில் ஒருவர் புலிகளின் தலைவர் ,மற்றையவர் சார்ள்ஸ் அன்ரனி என்ற பெயருடைய புலிகளின் தலைவருடைய புதல்வர் என்றும் அந்த பத்திரிகையாளர் தனது ஊகத்தினை தெரிவித்து இருக்கின்றார். இவரின் கருத்து ஊகமாக இருந்தாலும், புலிகள் இவ்வாறு கடந்த காலங்களில் நடந்து கொண்மையினால் அவரின் ஊகத்தினை முற்றாக தட்டி கழிக்க முடியாது. புலிகளின் தலமை தமக்கு வேண்டாதவர்கள் என முடிவு செய்து விட்டால் அவர்கள் யாராக இருந்தாலும், தீர்த்து கட்ட தயங்க மாட்டார்கள். அதற்கு எதிரியின் உதவியினை கூட நாடுவார்கள். இதற்கு உதாரணகள் பல இருக்கின்றன.
நீர்வேலி வங்கி கொள்ளையில் ஏற்பட்ட பிணக்கினால் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் பிரபாகரன் முரண்பட்டிருந்தார், கொள்ளையடித்த 90லட்சத்தின் பங்கை தருவதாகவும் ,அதற்கு காத்திருக்குமாறும் கூறிவிட்டு பொலிசாருக்கு புலிகளின் தலைவர் தகவல் கொடுத்திருந்தார்.
முதலில் கிட்டுவிற்கு காலில்லாது செய்தனர். பின்னர் கிட்டு வந்த கப்பலை இந்திய கடற்படையினர் சுற்றி வளைத்திருந்த போது அதற்குள் யார் இருக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு உறுதியாக தெரியாமல் இருந்தது. கப்பலுக்குள் கிட்டு இருக்கின்றார் என நாம் இந்தியாவிற்கு கூறிய பின்னரும் அவர்கள் அந்த கப்பலை தாக்கினார்கள் என பாலசிங்கம் பின்னர் கூறியிருந்தார். கப்பலுக்குள் கிட்டு இருக்கின்றார் என்பதினை பாலசிங்கமே இந்தியாவிற்கு உறுதிப்படுத்தி இருந்தார். இவர் பிரபாகரனின் உத்தரவிற்கு அமையவே இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
1987ஆம் ஆண்டு எதிரியிடம் (பிரேமதசாவிடம்) ஆயுதம் பெற்றுக்கொண்டு இந்திய படையினருடன் மோதலில் ஈடுப்பட்டனர், இதே ஆண்டில் இலங்கை அரசின் துணைப்படையாக நடந்து கொண்டு இராணுவத்தின் உதவியுடன் கொழுப்பில் தங்கியிருந்த புளொட் உறுப்பினர்களை கடத்தி வந்து வெட்டி கொலை செய்திருந்தனர். அரச படையுடன் வந்து புளொட்டினரின் முள்ளிக்குளம் முகாமை தாக்கியிருந்தனர்.
1985 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் இருந்த உமா மகேஸ்வரன் தமது அமைப்பின் சொந்த பாதுகாப்பில் சுழிபுரத்திற்கு சென்ற பொழுது இலங்கை இராணுவத்தினருக்கு புலிகள் தகவல் கொடுத்ததிருந்தனர். (இராணுவத்தினர் ஹெலியில் தாழ்வாக வந்து சுற்றி வழைத்தபோது ஹெலியை தாக்குவதற்கு புளொட் போராளிகள் முற்பட்டிருந்தார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்த உமா மகேஸ்வரன் , நாங்கள் தாக்கிவிட்டு சென்று விடுவோம் பின்னர் படையினர் வந்து இந்த கிராமத்தினை அழித்து விடுவார்கள் என கூறி தடுத்திருந்தமை குறிப்பிட தக்கது). புலிகளின் தலமையினை பொறுத்த மட்டில் தமது உயிர் வாழுதலுக்கு எவரையும், எவரிடமும் காட்டி கொடுக்கவும், அழித்தொழிக்கவும் தயங்காது உள்ளார்கள்.
யார் இந்த தமிழ்செல்வன்?
சுப்பையா பரமு என்ற பிறப்பு பெயர் உடைய தமிழ் செல்வன் 1967 ஆம் ஆண்டு பிறந்ததிருந்தார். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தினை அடுத்து தினேஷ் என்ற பெயரில் தன்னை புலிகளில் இணைத்துக் கொண்டு, புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரின் பாதுகவலர்களில் ஒருவராக சில காலம் செயற்பட்டு இருந்தார். புன்னகை புலி (Smiling Tiger) புன்னகை மன்னன (King of Smile) என அழைக்கப்பட்ட தமிழ் செல்வன் புலிகள் இயக்கத்தில் தளபதி, அரசியல் துறை பொறுப்பாளர் என பல பதவிகள் வகித்த போதும் யாழ் மாவட்ட பிஸ்ரல் குழு பொறுப்பாளராக கடையாற்றிய போது அவர் செய்த சாதனைகள்தான் அளப்பரிவை. இளையவர்கள், நடுத்தர வயதுடையோர் என பாராபட்சம் இல்லாது தமது இயக்கத்திற்கு எதிரானவர்களை எல்லாம் மண்டையில் போட்டவர். இவருக்கு இத்தகைய திறமை இருப்பதினை கண்டு பெருமை கொண்ட புலி தலைவர் இந்திய படையினருடான மோதலின் போது பொட்டம்மானை எப்படியாவது வன்னிக்குள் கொண்டுவந்து சேர்ப்பது உனது பொறுப்பு என கூறிவிட்டு வன்னி சென்றார்.அதே போன்று பாதுகாப்பாக பொட்டம்மானை அவர் வன்னிகொண்டு சேர்த்தும் இருந்தார். 1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற பூனைகரி மோதலில் ஈடுபட்ட இவருக்கு ஒரு காலில் கடும் காயம் ஏற்பட்டதினால், ஊன்று கோலின் உதவியுடன் உலாவ வேண்டி வந்தது. இவரை ஒரு அப்பாவி என பாராளுமன்ற உறுப்பினர் சமபந்தன் கூறியிருப்பது பரிகாசத்திற்கு உரிய விடயமாகிறது. அவருடைய இராணுவ செயற்பாட்டிக்காக புலிகளே இராணுவ உயர் மட்ட பிரிகெடியர் பட்டத்தினை வழங்கியிருக்கும் போது இவரை அவர் அப்பாவியென கூறுகின்றார்.ஏதனையாவது கூறவேண்டும் என்பதற்காக பேசுகின்றார்கள் போல் தெரிகின்றது.
ஆயுதங்களுடன் தொடர்பில்லாத, தற்கொலை தாகுதல்களை நிகழ்த்தாத , இராணுவ நடவடிக்கைகளை எதனையுமே செய்யாத ஒரு அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டுவிட்டார் என்கின்ற தோரனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், புலிகளின் ஊடகங்களும் அழுது தொலைக்கின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் எந்த அமைப்பு அரசின் அனுராதபுர விமான தளம் மீது தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியதோ அந்த அமைப்பின் உயர்மட்ட தலைவர் ஒருவரேயே அரச விமான படையினர் இலக்கு வைத்து தாக்கியுள்ளார்கள். அரசின் வர்த்தக மையங்களை தாக்குவோம் என மிரட்டும் ஒருவரை அரசியல் துறை பொறுப்பாளரென கூற முடியுமா? காலம் சென்ற பாலசிங்கம் அவர்கள் கொடுந்தமிழை பாவித்தாலும் புலிகள் இயக்கத்தில் ஆயுதங்களை கையில் எடுக்காது அரசியல் பேசிய ஒருவரென்று கூறலாம். தமிழ் செல்வனை பொறுத்த வரையில் இறக்கும்வரையில் சில படை பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்துள்ளார். எதிரிகள் மீது தாக்குதலை நிகழ்த்தும் ஒரு இராணுவ அமைப்பு எதிர்தாக்குதலையும் எதிர்பார்த்தே இருக்கவேண்டும். புலிகள் தம்மிடம் இருக்கும் இறுதி ஆயுதமான கரும்புலிகளை அனுப்பி தாக்குதலை நடத்தினார்கள்.இதற்கு பதிலடியாக படையினர் விமான தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். தாம் மட்டும் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் , ஆனால் அரசு அதனை கண்டிப்பதோடு நிறுத்த வேண்டும் என்று புலிகள் எதிர்பார்கின்றார்கள்.
சுழிபுரத்தில் திருமணம் முடித்த சு.ப
வட மாகாணத்தில் கரையோரமாக மாதகலுக்கு நெருக்கமாக உள்ள சுழிபுரம் முன்னர் புளொட் இயக்கத்தின் கோட்டையாக இருந்தது. அந்த இயக்கத்தின் ஆணி வேராக இருந்த புதியபாதை ஆசிரியர் தோழர் சுந்தரமும் சுழிபுரத்தினை சேர்ந்தவரேயாவார். இங்கு தாழ்த்தப்பட்ட சமூகம் என்று அழைக்கப்படுகின்ற (தலித்துக்கள்) சமூகத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், உயர்ந்த சாதியினர் என்று தம்மை அழைக்கும் குடுபத்தினை சேர்த ஒரு பெண்ணுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருந்தது. புளொட் இயக்கத்தினர் இந்த காதலுக்கு ஆதரவு கொடுத்து திருமணம் முடிக்கவும் உதவி புரிந்திருந்தனர். இதனால் புளொட் இயகத்தினர் மீது கோபம் கொண்ட பெண்ணின் குடும்பத்தினை சேர்த ஒரு பெண்மணி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக புலிகளை அழைத்து வந்து தனது காணிக்குள் தங்க வைத்தார். அங்கு வந்து சென்ற தமிழ்செல்வன் பின்னர் அந்த பெண்மணியின் மகள் மீது காதல் கொண்டு அழைத்து சென்றார். தமிழ்செல்வன் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் முடித்தாக சிலர் கூறுகின்ற போதிலும் அதற்கான ஆதாரம் இல்லை.மொத்தத்தில் பாலுக்கு பூனையை காவல் வைத்தது போன்று அந்த பெண்மணியின் கதை ஆகிப்போனது. புலி தலைவர்களின் திருமணங்கள் சீர் சிருத்தமானவை, உண்ணா விரதம் இருந்த பெண்ணை காப்பாற்றுவதாக கூறி கடத்தில் சென்று காதல் கொண்டார் புலிகளின் தலைவர், புலிகளின் வான்பிரிவை ஆரம்பித்த சங்கர் தனது சகோதரரின் மனைவியை கைபிடித்தார், மாத்தையா இயக்க தோழர் சீலனின் மனைவிக்கு வாழ்க்கை கொடுததிருந்தார். இவ்வாறாக தமிழ் சமூகத்திற்கு எடுத்து காட்டாக இவர்களின் திருமணங்கள் அமைந்து விட்டது.
புலிகளின் சூளுரைப்பு
தமிழ் செல்வனின் கொலைக்கு பதிலடி என்ன என்பதினை நாம் பேச மாட்டோம் ,ஆனால் செயலில் காட்டுவோம் என புலிகளின் இராணுவ பேச்சாளார் கூறியதாக பி.பி.சி இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது . (The Tamil Tigers' spokesman, Rasiah Ilanthiriyan, told the BBC the group's response to the killing would be in deeds> not words.)
எம்மால் புலிகளை ஒவ்வொருவாரக இலக்கு வைக்க முடியும்,அவர்கள் தம்மை பாதுகாக்க வேண்டும் எனில் , தமது மறைவிடங்களை மாற்றியாக வேண்டும், இவ்வாறு அரச பாதுகாப்பு செயலாளர் கோதாபெய ராஜபக்ஷ மார்பு தட்டியுள்ளார். (If we want we can take them one by one, so they must change their hideouts ) மாவீரர் உரைக்கு முன்னர் புலிகள் நிட்சயம் பதிலடி கொடுப்பார்கள்,ஆனால் பதிலுக்கு புலிகள் பூனைகரியை இழக்க நேரிடும். புலிகள் இயக்கத்தில் யுத்த களத்தில் அனுபவம் உடைய, நன்கு பயிற்ச்சி பெற்ற போராளிகள் மூவாயிரம் மட்டிலேயே இருப்பதாக நம்பப்படுகின்றது. புதிதாக சேர்கப்பட்டவர்களின் தொகையே அதிகமாக உள்ளது. படையினர் முன்னேறினால் உங்கள் உடல்களை தாண்டித்தான் வரவேண்டும்,நீங்களாக பின்வாங்க கூடாது என புலிகள் புதியவர்களுக்கு எச்சரித்து உள்ளார்கள். படையினர் கல்முனையை கைப்பற்றி பின்னர் பூனைகரியை கைப்பற்றும் நோக்கத்தில் இருப்பதாக புலன்படுகின்றது. இதற்கு முன்னால் புலிகள் சிங்கள் மக்களுக்கு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி ஒரு இனக்கலவரத்தை உண்டு பண்ண முயற்சிப்பார்கள்.
//Anonymous said...
உங்களுக்கு ஒண்ட எடங்குடுத்தோமுல்ல, பேசுவீங்ஙடா பேசுவீங்ங...//
உங்க தலைவர்களை நம்பி மோசம் போனோமே, சொல்லுவீங்கடா சொல்லுவீங்க
http://www.asiantribune.com/index.php?q=node/8153
தமிழ்செல்வனின் ஊர்வலத்தில் குழந்தை போராளியின் உருவத்தை பார்க்க இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
இணையத்தில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கிற யாருடையவரின் குழந்தை இங்கே புலிகளின் குழந்தை போராளியாக காட்சி அளிக்கிறது?
Post a Comment