பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 13, 2007

நாய்க்குத் தாலி கட்டிய நவீன வாலிபர்

மானாமதுரை அருகே நடந்த சம்பவம் - தனது தோஷம் நீங்க தடபுடல் விருந்துடன் நாய்க்கு ஒரு இளைஞர் தாலி கட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். 33 வயதாகும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஜாலியாக இருந்த 2 நாய்களை அடித்துக் கொன்று மரத்தில் கட்டித் தொங்கவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து செல்வக்குமாரின் கை,கால்கள் முடங்கின. காதும் சரிவரக் கேட்கவில்லை. இதற்குப் பல டாக்டர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்றார். இதன் விளைவாக செல்வக்குமார் கடந்த 2 ஆண்டுகளாகக் கம்பு ஊன்றி நடக்கிறார். சிறு, சிறு வேலைகளை மட்டும் தனக்குத் தானே அவர் செய்து கொண்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் ஒரு ஜோதிடரைப் பார்த்துள்ளார். இது நாய்களின் சாபம். நாய்க்குத் தாலி கட்டினால் இந்த தோஷம் நீங்கும் என்று அவர் யோசனை கூறியுள்ளார். அதன்படி செல்வக்குமாருக்கும், செல்வி என்ற நாய்க்கும் திருமணம் நடந்தது. முன்னதாக மணமகள் 'செல்வி'க்கு சேலைகட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடைக்கு வந்தார். இருவரும் மாலை மாற்றிக் கொண்ட பிறகு, மணமகன் நாய்க்குத் தாலி கட்டினார். தொடர்ந்து ஊராருக்கு தடபுடல் விருந்து கொடுக்கப்பட்டது. நாய்க்கு பன் கொடுக்கப்பட்டது. இது குறித்து மணமகன் செல்வகுமார் கூறுகையில், நான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன் என்றார்

4 Comments:

tamizh ilakkia said...

ivarkalai 100 periar vanthalum thiruttha mudiyathu.

வெங்க்கி said...

////....அதன்படி செல்வக்குமாருக்கும், செல்வி என்ற நாய்க்கும் திருமணம் நடந்தது. முன்னதாக மணமகள் 'செல்வி'க்கு சேலைகட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடைக்கு வந்தார். இருவரும் மாலை மாற்றிக் கொண்ட பிறகு, மணமகன் நாய்க்குத் தாலி கட்டினார். தொடர்ந்து ஊராருக்கு தடபுடல் விருந்து கொடுக்கப்பட்டது. நாய்க்கு பன் கொடுக்கப்பட்டது. இது குறித்து மணமகன் செல்வகுமார் கூறுகையில், நான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன் என்றார்////

என்ன தான் ராக்கெட் உட்டாலும்....அணுகுண்டு செஞ்சாலும்... இந்த மாதிரி மொக்கைகள திருத்தவே முடியாது.... விஷயம் என்னன்னாக்க..நாய்க்கு தாலி கட்டி தடா புடலா விருந்து வெச்சானாம்..... தாலி..சரி...விருந்து சரி... (பன்னு வாங்கி கொடுத்திருக்கு...மாப்பிள்ளை பன்னாடை..)

அப்பால...first நைட்...(சாந்தி முகுர்த்தம்) எப்படி.....என்னக்கு...கவுண்டமணி..சொக்கதங்கம் படத்துல சொல்லுவார்..." பாவம்டா...நான் கழுதைய கஷ்டப்படுத்த மாட்டேன்..ன்னு"

அதன் ஞாயபகத்துக்கு... வருது....பாவம்...நாயி...

Anonymous said...

//ivarkalai 100 periar vanthalum thiruttha mudiyathu.
//

இது இப்பதான் உங்களுக்கு புரியுதா..... :))))

Thanjai Ram said...

தலைமைசெயலகத்தில் யாகம் செய்பவர்கள் ஆளும் நாடு இது