பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 03, 2007

எதிர்த்தால் எதிரிகள்தான் - வீரபாண்டி ஆறுமுகம்

"சேலம் ரயில்வே கோட்ட விழாவில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தும், தமிழக நலனுக்காக அவற்றை பொறுத்துக் கொண்டோம்' என்று அமைச்சர் வீரபாண்டி

சேலம் கோட்டம் எங்களால் தான் துவக்கப்பட்டது என சிலர் பேசி வருகின்றனர். எனக்கு 42 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளது. சேலம் ரயில்வே கோட்டம் வேண்டும் என்ற எனது கோரிக்கையை சட்டசபை ஆவணங்களைப் பார்த்தாலே தெரியும். தி.மு.க., ஆட்சியை அவர்கள் தான் நடத்துவது போலவும், மத்திய அரசை வழிநடத்திச் செல்வது போலவும் செயல்படுகின்றனர். ரயில்வே கோட்டத் துவக்க விழாவில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தும், தமிழக நலனுக்காக அவற்றை சகித்துக் கொண்டோம். அரசியலில் முகவரி இல்லாத, அப்போது கட்சியே இல்லாத, நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் இன்று ரயில்வே கோட்டத்தை கொண்டு வந்ததாக பேசுகின்றனர். நம்மை எதிர்க்க ஆரம்பித்துவிட்டால், நமக்கு அவர்கள் எதிரிகள் தான். கூட்டணி என்பதற்காக இனி பொறுத்துக் கொள்ள முடியாது

0 Comments: