பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 12, 2007

குஜராத் ஆகிறது கர்நாடகம் - எடியூரப்பா பதவி ஏற்றார்

இன்று பகல் 12 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்தது. முதல் - மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ராமேஸ்வர் தாகூர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

"எடியூரப்பாவிடம் ஆட்சியை ஒப்படைத்தால் கர்நாடகா இன்னொரு குஜராத் ஆகும்" சில வாரங்களுக்கு முன் குமாரசாமி சொன்னது.

துக்ளக் தலையங்கத்தின் ஒரு பகுதி கீழே...


கர்நாடகத்தில் இவ்விஷயத்தில் என்ன நடந்தாலும், அது கேவலம்தான்.
பா.ஜ.க.விற்கு ஜனதா தளத்தின் ஆதரவு உறுதியான நிலையில் (நிபந்தனைக்கு முன்), அவர்களை ஆட்சி அமைக்க அழைக்காதது – கவர்னர் நடத்திக் காட்டிய கேவலம்; பா.ஜ.க.விற்கு ஜனதா தளத்தின் நிபந்தனையற்ற ஆதரவு கிட்டியபோது, அவர்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காதவாறு பார்த்துக் கொண்டது – சோனியா காந்தி புரிந்த கேவலம்; ஜனதா தளத்தைப் பிளந்து ஒரு ஆட்சி உருவாக்க முனைந்தது – காங்கிரஸின் கேவலம்; இப்போது ஜனதா தளம், மீண்டும் தனது ஆதரவை சந்தேகத்திற்குரியதாக்கியுள்ள நிலையில், எப்படியாவது அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயல்வது – அக்கட்சிக்கு கேவலம்.

இந்தக் கேவலங்களின் ஊர்வலத்தில், மிகவும் மட்டமான கேவலம் – பா.ஜ.க.வின் கேவலம்தான்.


8 Comments:

Unknown said...

Inge yarukkum vetkam Illai.This is waht comes to mind on BJP assuming power in Karnataka.
A Party without any difference.

Unknown said...

கவுண்டமணி..சூரியன் படத்துல..சொல்லுவாரே... "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..." ன்னு...

இதுக்கு பேசாம பிச்சை எடுக்கலாம்...தேவ கவுடா குடும்பத்துக்கே மானம் வெட்கம் கிடையாது..அப்புறம் என்ன ...

வால்பையன் said...

இதில் முக்கியமான விஷயம் , குமாரசாமி மறு தேர்தலுக்கு அழைத்தும் உடன் இருந்தவர்களே அவரை குழப்பியது தான் jahe சொன்னது போல அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா.

IdlyVadai said...

வால் பையன் - கடைசி செய்தி இது -

துணை முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் குமார சாமிக்கும், அவரது அண்ணன் ரேவண்ணாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நேற்று பதவி ஏற்கவில்லை. துணை முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்துக்கு இன்னும் தீர்வு காண முடியவில்லை. கட்சியில் மந்திரி பதவி கேட்டு பல எம்.எல்.ஏ.க்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். அதனால் எடியூரப்பா அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்று தேவேகவுடா முடிவு எடுத்துள்ளார் :-)

வால்பையன் said...

//கட்சியில் மந்திரி பதவி கேட்டு பல எம்.எல்.ஏ.க்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். அதனால் எடியூரப்பா அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்று தேவேகவுடா முடிவு எடுத்துள்ளார்//

தமிழக கட்சி பூசலை மிஞ்சி விடும் போலிருக்கே, என்ன செய்வது எல்லா இடத்திலும் அதிகாரத்திற்கு ஒரே மதிப்பு தானே

Unknown said...

கன்னடா காரனுங்க ...அடிபடையிலேயே..Tube லைட் ...தேவ கவுடா..குருப் சொல்லவே வேணாம்..கொரங்காட்டி..கும்பல்... பதவிக்காக நரகலையே திங்க ரெடி... அப்புறம் என்ன சொல்ல ......

Unknown said...

அதனால் எடியூரப்பா அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்று தேவேகவுடா முடிவு எடுத்துள்ளார்

வெளியில போயி இருந்தா என்ன...உள்ளாரையே இருந்தா என்ன..தேவ கவுடாவுக்கு மானம் ரோஷம் வெக்கம் கெடயாது... typical அரசியல் புண்ணாக்குன்னா அது தேவ கவுடா & sons தான்.. பேசாம நாக்க புடுங்கிக்கலாம்..

Unknown said...

எந்த கட்சிக்கும் மானம் ரோஷம் எதுவும் இல்ல!!!!
கருமான் கருமம்னு போகவேண்டியதுதான்...வேற என்ன செய்யறது..