சற்றுமுன் கிடைத்த மின்னஞ்சல்.
நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கேட்டதற்கு, அவரும் அக்மார்க் கதனகுதூகலப்பாடல் என்றார். எனக்கு ராகம் பற்றி எல்லாம் அவ்வளவாக தெரியாது அதனால் வாசர்களிடமே விட்டுவிடுகிறேன். :-)
மின்னஞ்சல் அனுப்பியவருக்கு பெயர் சொல்ல விரும்பாத நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
( ஐபாட் ஐயாசாமி புதிருக்கான விடை )
மெயில் கிழே...
டியர் இட்லிவடை
நீண்டநாள்களாக உங்கள் வலைப்பதிவின் வலதுபக்கக் கேள்வி என்னைக் குடைந்துகொண்டே இருந்தது. கதனகுதூகலத்தில் அமைந்த சினிமா பாடலென்று பொதுவாக, கண்டுகொண்டேன் படத்தில் வரும் அதே வார்த்தைப் பாடலைச் சொல்லுவார்கள். ஆனால் அதில் பல இடங்களில் சுரங்கள் வேறுபடும்.
படு சுத்தமான அக்மார்க் கதனகுதூகலப்பாடல் ஒன்று வந்திருக்கிறது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வருகிற 'கதவு திறந்து கிடக்கின்றது' என்கிற பாடல். கமலும் சிநேகாவும் பாடுவது. முழு கதனகுதூகலம் இது. இடையே க-ம-க-ரி-க-ப-ரி-க-ஸ என்கிற மதுரை மணி ஐயர் நோட்டும் ஒட்டிக்கொண்டு வரும்.
நேற்று சானல் பிரவுசிங்கின்போது சட்டென்று எதிலோ இது ஒலிக்க, உடனே உங்கள் ஞாபகம் வந்துவிட்டது. ஆனால் போன் நம்பர் கொடுக்காத அநாமதேய நண்பர் என்பதால் ஒருநாள் பொறுத்து இப்போது எழுதுகிறேன்.
படு சந்தோஷமாக இருக்கிறது இக்கண்டுபிடிப்பு
XXX
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, November 09, 2007
அக்மார்க் கதனகுதூகலப்பாடல்
Posted by IdlyVadai at 11/09/2007 11:57:00 AM
Labels: புதிர்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
அய்யோ, இப்பவே கண்ண கட்டுதே....
சமீபத்தில் 1936ல், பாபநாசம் சிவன் அவர்கள் நடித்து வெளிவந்த "பக்த குசேலா" படத்தில், வரும் "திருமங்கை உள்ளக் கருணை இதோ" என்ற பாடல், கதன குதூல ராகத்தில் அமைந்த பாடல் மட்டுமல்ல; "ரகுவம்ச சுதா" பாடலின் அதே மெட்டாகும்.
-சிமுலேஷன்
Thanks for the info! Looking forward to the next "ipod iyyas(w)amy"
I have't heard the song you'e mentioned - but there is this song from Pudhiya Mannargal - called 'vaadi en saathukudi' - (yes, "...come here my orange..") which has liberal doses of k.k.halam all over in terms of string section.
Chiranjeev's Telugu Movie Choodalani Undi has a KathanaKudhookalam - Yamaho Nagari kalkatthapuri - but thats just a note-by-note reproduction of a keerthanai in the same raga so it probably shouldnt count.
நான் என்னமோ எதோ ராகம்னு நினைச்சேன். "ஒக்காந்து யோசிப்பாங்களோ" அப்படிங்கற டயலாகை ராகத்துக்கு பேரு வச்சவங்கள பாத்து சொல்லணும்.
ஏங்க, ரொம்ப நாள் முன்னாடியே இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டேனே.
//சைட்பார் கேள்விக்கு. நான் ஒரு மௌலி படம் பார்த்து இருக்கேன். பேர் ஞாபகம் இல்லை. அதுல ஒரு கதனகுதுகுலம் பாட்டு இருக்கு - ரகு வம்ச ராஜா ரகு ராமனே... எனத் தொடங்கும் பாடல். அதே ராகம்தான். கொஞ்சம் படம் பேரு தெரிஞ்சாலோ அந்த பாடலோட MP3 கிடைச்சாலோ சொல்லுங்களேன்.//
Post a Comment