பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 08, 2007

தலைவர்கள் தீபாவளி வாழ்த்து - ஒருவர் மட்டும் சொல்லவில்லை

வழக்கம் போல் இந்த வருட தலைவர்கள் தீபாவளி வாழ்த்துக்கள். முதலமைச்சர் மட்டும் சொல்லவில்லை. ஏன் ?

ஜெயலலிதா

ஜெயலலிதா

தித்திக்கும் தீபாவளித் திருநாளை திக்கெட்டும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் அகம் மகிழ்கிறேன். தீபாவளி என்பது தீபங்களின் அலங்காரங்களால் எங்கும் ஒளிவிளங்கச் செய்வது அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞானம் பெற வேண்டும் என்பதுதான் தீபாவளித்திருநாளின் தத்துவம்.

அறியாமை, சாதிக்கலவரம், மதக் கலவரம், தேசத் துரோகம் போன்றவற்றை அகற்றி அறிவு, சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம், தேசபக்தி ஆகியவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நாள்தான் தீபாவளித் திருநாள்.

இந்த நன்னாளில் பணபலம், படை பலம், அதிகார பலம், வன்முறைக் கலாசாரம் ஆகியவற்றை தன்னுள் வைத்துக்கொண்டு நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் தீய சக்திகள் அகன்று, அனைவரது இல்லங்களிலும் தீப ஒளி பரவி குதூகலமும், கொண்டாட்டமும், மகிழ்ச்சியும், ஆரவாரமும் பெருகட்டும் என்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்து, இந்தத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.கிருஷ்ணசாமி

மனித சமுதாயத்தில் தீவிரவாதம், கொடுங்கோன்மை, அகங்காரம், ஆணவம் அழிக்கப்பட்டு அமைதி, சமாதானம் உருவானதை நினைவுறுத்தும் நன்னாள்தான் இது. புத்தாடை அணிந்து குடும்ப உறவினர்கள், நண்பர்களோடு கூடி விருந்துண்டு குழந்தைச் செல்வங்களோடு பட்டாசு, மத்தாப்பு கொளுத்தி சிரித்து மகிழும் நோன்பு நாள் இது.

இப்புனித நாளில் நாடெங்கும் சமூகவிரோதச் செயல்கள் ஒழிந்து மக்கள் மத்தியில் வறுமை, வன்முறை மறைந்து மதநல்லிணக்கம் மேம்பட்டு மகிழ்ச்சியும், அனைத்து பொருளாதார வளர்ச்சியும் காண ஒற்றுமை உணர்வோடு உழைப்போம் என்று உறுதி ஏற்போம். அனைவருக்கும் எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஜி.கே.வாசன்

தீமை எனும் இருள் அகற்றி நன்மை எனும் ஒளி தீபத்தை ஏற்றும் நன்னாளே தீபாவளித் திருநாள். இந்த நல்ல நாளில் உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம், பயங்கர வாதம் போன்ற தீயவைகளை அகற்றி, அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டும். மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, மனிதநேயம் மலர்ந்து எங்கும் சமத்துவ மணம் வீசிடவும், வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாகவும் தீப ஒளி ஏற்றி தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

சு.திருநாவுக்கரசர் எம்.பி.:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளித்திருநாள் தீமைகள் அகன்று புதுமையும், நன்மைகளும் உருவாகும் ஒளித் திருநாளாக அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாதி, மத, மாநில, மொழி வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படும் இத் தீபாவளித் திருநாளில் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட மனமாற வாழ்த்துகிறேன்.

விஜயகாந்த்

சாதி, மத, இனபேதங்களைக் கடந்து நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீமைகளை ஒழித்து நன்மைகளை வளர்ப்பதன் அடையாளம் தான் இந்த விழா. அறியாமை எனும் இருளைப் போக்கி வெளிச்சம் தந்து அனைத்து தரப்பினரின் வாழ்க்கை வளம் பெற அராஜகத்தை அகற்றி, வன்முறையைப் போக்கி ஜனநாயகம் தழைத்திட, தீப ஒளி ஏற்றி, இந்த நன்னாளை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

சரத்குமார்

அநீதி அழிந்தே தீரும், நீதி நிச்சயம் நின்று வெல்லும் என்பதை உலக மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் நீதியுரை திருவிழாவாக கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு உலகெங்கும் வாழும் தமிழ்மக்களுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் இதயங் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தீபாவளி கொண்டாட்டங்களின் போது விபத்துக்கள் நிகழாவண்ணம் எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் பட்டாசு வெடித்து இந்நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து அனைவருக்கும் மீண்டும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏ.சி.சண்முகம்

அரக்கனான நரகாசூரனை இறைவன் கண்ணன் அழித்த நாளான இந்நாள் தீமைகள் அழிந்து நன்மைகளுக்கு வரவு கூறும் நன்னாள் ஆகும். இந்த நாளை கொண்டாடுவதன் நோக்கம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தீமைகள் அழிய வேண்டும், மக்களுக்கு நன்மைகள் பெருக வேண்டும் என்பதாகும். பல்வேறு சிறப்புகள் அமைந்த இந்த நல்ல நாளில், இறைவன் எல்லோருக்கும் நல்லனவற்றை நல்கிட வேண்டும். நம் நாடு செழித்திட அருள் செய்திட வேண்டும் என்று வேண்டி இந்தியர்கள் அனைவருக்கும் புதிய நீதிக் கட்சியின் தீபாவளி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு ஜனதாதளம் தலைவர் கே.ஜான்ஜோசப்

எல்லோரும் எல்லாம் பெற்று சமதள சமூகம் நோக்கி மனிதகுலம் வீறு நடை போட தீபாளித் திருநாள் உதவும். இந்தியா முழுவதும் இந்தியர்களால் கொண்டாடப்படும் தீபாவளி நாளில் சாதி, மத பேதம் கடந்து மனிதம் காப்போம், மனித நேயம் வளர்ப்போம். அனைத்து நெஞ்சங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஜெகத்ரட்சகன்


கடந்த காலங்களில் புழுங்கி கிடந்த உள்ளங்களில் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நல்ஆட்சியால் பூரிப்பை காண்கின்றோம்.

தமிழக மக்களுக்கு தீபாவளி திருநாள் பரிசாக புதிய தொழில் கொள்கையை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகம் தொழில் வளத்தில் சிறக்கவும், வேலைவாய்ப்பு பெருகவும், இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைத்திடவும், இத்தொழில் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் நல்வாழ்விற்கென்றே தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டுள்ள தமிழினத்தலைவர் கருணாநிதியின் நல்லாட்சியில் தமிழகம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுகிறது.

நல்லாட்சி மலர்ந்துள்ளது. நன்மைகள் விளைந்துள்ளது நாடும், வீடும் நலம்பெற அறம் தலைநிறுத்துவோம் என்று கூறி இந்த இனிய நன்னாளில் என் சார்பிலும், ஜனநாயக முன்னேற்றக்கழகம் சார்பிலும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எச்.வசந்தகுமார்

தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ``அதர்ம இருள் அகற்றி தர்மம் புத்தொளி பாய்ச்சிய பெருநாளே தீபாவளி திருநாள். சோனியா தலைமையில் சர்வமதத்தினரும் சகோதரத்துவ தீபத்தை இணைந்தே ஏற்றி கொண்டாடி மகிழ்வோம்'' என்று கூறியுள்ளார்.

ஆற்காடு இளவரசர்

ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ``இந்தநாளில் ஒவ்வொருவர் வீட்டிலும் இந்த ஆண்டு முழுவதும் ஒளிவீசட்டும். தீயதை ஒழித்து நல்லது மேற்கொண்ட தினமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. எல்லா மதநம்பிக்கைகளும் சமுதாய ஒற்றுமையையும், உண்மையான அன்பையும் பிரதிபலிக்க வேண்டும். அதன் மூலம் உலகத்தில் உள்ள அனைவர் மீதும் சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு எல்லா மக்கள், சமுதாயங்களுக்கிடையே ஏற்பட வேண்டும் என்று வாழ்த்துவதாக'' கூறியுள்ளார்.

கட்சி, அமைப்பு தலைவர்கள்

மேலும், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எம்.பஷீர்அகமது,
தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக்தாவூத்,
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன்,
பாரதீய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் கனிபாய், சமதாகட்சி பொதுச்செயலாளர் கே.ஆர்.வீரசேகரன், விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கதலைவர் பொன்குமார், அனைத்து செட்டியார் முன்னேற்றப்பேரவை மாநில தலைவர் கே.சி.அருணாசலம், புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., தலித் மக்கள் முன்னணி மாநில தலைவர் குமரி அருண், தென் இந்திய பொதுநலச்சங்க பொதுச்செயலாளர் பி.வி.ராஜன், சென்னை குடிநீர் வாரிய பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் சி.ஆர்.ராஜன், ஸ்ரீகாளிகாம்பாள் கல்வி அறக்கட்டளை தலைவர் மு.உதயகுமார், இந்து சமய வளர்ச்சிப்பேரவை பொதுச்செயலாளர் முத்தமிழ் மு.ராமச்சந்திரனார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில அமைப்பாளர் ஆர்.ஜெயச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் மïரா ஜெயக்குமார், அம்பேத்கர் முன்னணி கழக மாநில பொதுச்செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமுலு, வன்னிய மாணவர் நலக்கழகத் தலைவர் அ.சாம்பசிவம், சென்னை அண்ணாசாலை தர்கா அறங்காவலர் சையத்மொய்னுதீன், ஆகியோரும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

திமுக தலைவர்கள், யாரும் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லவில்லல. ( ...எந்த விருப்பு வெறுப்பு இன்றி... என்று பதவி பிரமானம் எடுத்தார்கள் என்பது குறிபிடத்தக்கது. )

14 Comments:

PKS said...

I remember reading in Thatstamil last year (or before that) that Tamil Nadu CM Mr. MK conveying Diwali Wishes. I may be wrong. Please check. - PK Sivakumar

Anonymous said...

"தீபாவளி வாழ்த்து சொல்வேன்..." என்று எந்த தலைவரும் உறுதிமொழி எடுப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அதேநேரம் - "தீபாவளி வாழ்த்து சொன்ன அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி செயல்படுபவர்கள்" என்று சொல்ல நீங்களே கூட முன்வரமாட்டீர்கள்.

பிறகு எதுக்கு இந்த பில்டப்பு - மாப்பூஊஊ

Anonymous said...

"தீபாவளி வாழ்த்து சொல்வேன்..." என்று எந்த தலைவரும் உறுதிமொழி எடுப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அதேநேரம் - "தீபாவளி வாழ்த்து சொன்ன அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி செயல்படுபவர்கள்" என்று சொல்ல நீங்களே கூட முன்வரமாட்டீர்கள்.

பிறகு எதுக்கு இந்த பில்டப்பு - மாப்பூஊஊ

Anonymous said...

இந்துக்கள் மீது அளவில்லாத வெறுப்பையும் காழ்ப்பையும் உமிழும் கருணாநிதி என்றுமே தீபாவளி வாழ்த்துச் சொன்னது கிடையாது. இந்தக் காலத்திலும் அசுரர்கள் இருப்பதை கருணாநிதி மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்துகிறார்

Boston Bala said...

பாமக ராமதாஸ்?

---எந்த விருப்பு வெறுப்பு இன்றி...---

(தீபாவளி) விருப்பு இன்றி செயல்படுவதாக பிரமாணம் எடுத்திருக்காங்களோ :)

Baby Pavan said...

சரி சரி, வருங்கால தலைவர்கள் நாங்கள் உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிக்கறொம்....

Anonymous said...

//"தீபாவளி வாழ்த்து சொன்ன அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி செயல்படுபவர்கள்" என்று சொல்ல நீங்களே கூட முன்வரமாட்டீர்கள்.//

விருப்பு,வெறுப்பு என்பது ஒருபக்கம் இருக்கட்டும். காலம் காலமாய் கொண்டாடப்படும் ஒரு பண்டிகைக்கு "சம்பிரதாய" அடிப்படையிலாவது, முதல்வர் பதவியில் இருக்கும் கலைஞர் வாழ்த்து சொல்லி இருக்கலாம்தானே?

Anonymous said...

karunanidhi eppo diwali greeting solli irukkaaru? ippo solla?

Anonymous said...

avare innaikko naalaikko nnu irukkaaru.. avara empa thittureenga... [:P]

Anonymous said...

அட போங்கப்பா புரியாதமாதிரி பேசிகிட்டு ! தீபாவளி தமிழன் பண்டிகையா ? தமிழினத்தலைவர் வாழ்த்து சொல்ல !! ரம்ஜான் திருநாளுக்கும், கிறிஸ்துமஸ் திருநாளுக்கும் வாழ்த்து சொல்லலேனா அப்ப கேளுங்க , அதை வுட்டுட்டு சும்மா பேசிகிட்டு இருக்கிங்களே !!!


-கரிகாலன்

Anonymous said...

நெத்தியடி அடிச்சீங்க அனானி (கரிகாலன்).

Anonymous said...

கரிகாலன் நீங்க தான் கரெக்டா சொல்லி இருக்கீங்க! ரம்ஜான் தாங்க த்மிழர் பண்டிகை - தீபவளியாவது மண்ணாவது!

அதே சமயம், கருணாநிதி மாதிரி ஆளுங்க வாழ்த்து சொல்லி தான் நம்ம தீபவையை சந்தோசமாய் கொண்டனும்னு இல்லை...

Anonymous said...

வைகோ ஏன் ஒன்றும் சொல்லவில்லை?

Anonymous said...

வாழ்த்தாவிட்டால் என்ன? ஹிந்துக்கள் குடி முழுகி விடவில்லை.