பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 07, 2007

கர்ப்பிணிகள் மது குடித்தால் முரட்டு குழந்தை பிறக்கும்

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைககழகத்தை சேர்ந்த டாக்டர் புரியான் டி ஒனாபிரியோ கர்ப்பிணி பெண்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டார்.....

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒருபோதும் மது குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி குறைவாகவே இருக்கும். அந்த குழந்தைகள் முரட்டு குணம் உள்ளவர்களாகவே இருப்பார்கள். ஒழுங்கினம் அதிகரிக்கும், அடங்காத குழந்தைகளாகவே இருப்பார்கள். அடுத்த குழந்தைகளுடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். 4 வயது ஆகும் போதுதான் இது தெரியவரும்.

மற்ற போதை பொருட்களை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தினாலும் இதே நிலைதான் ஏற்படும்.

அவர்கள் நடத்திய ஆய்வில் 8600 குழந்தைகள் முரட்டு குழந்தைகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த குழந்தைகளின் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் மது குடித்தவர்கள்.

0 Comments: