பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 06, 2007

தமிழ்ச்செல்வனுக்கு கருணாநிதி இரங்கல் - ஏற்றுக்கொள்ள முடியாது - காங்கிரஸ்

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

சுப.தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி கவிதை எழுதி உள்ளார். இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?


தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கள், அவரது சொந்த கருத்து. விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆகும். இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தியை, விடுதலைப்புலிகள் படுகொலை செய்ததை ஒட்டுமொத்த நாடும் மறக்கவில்லை. விடுதலைப்புலிகளின் செயலை நாங்களும் மறக்க மாட்டோம். தீவிரவாதத்தை எந்த வகையிலும் நாங்கள் புகழ மாட்டோம். எங்களுடைய நிலை தெளிவானது. ராஜீவ்காந்தியை படுகொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் அடிப்படை கோரிக்கை

தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்தது குறித்து மேலும் பல கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த ஜெயந்தி நடராஜன், "அது அவரது தனிப்பட்ட கருத்து அதில் நாங்கள் தலையிட முடியாது' என்றார்.

அரசியல் சட்ட ரீதியிலான பதவி வகிக்கும் முதல்வர் ஒருவர் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களை புகழலாமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.

கடந்த வாரம் முதுகுளத்தூர் அருகே ஒரு கும்பலின் தாக்குதலில் காயமடைந்து, சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமியை, ஜெயலலிதா சந்தித்தது பற்றி ?

அதற்கு "ஜனநாயக அரசியலில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவரை மற்றொரு கட்சியின் தலைவர் சந்திப்பது, வழக்கமானது தான். இந்த கோணத்தில், இந்த விஷயத்தை பார்க்க வேண்டும்''

0 Comments: