பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 05, 2007

ரெயில்வே கோட்டம் தொடக்க விழாவில் கருணாநிதிக்கு அவமதிப்பு

`ரெயில்வே கோட்டம் தொடக்க விழாவில் முதல்- அமைச்சர் கருணாநிதியை பா.ம.க.வினர் அவமதித்து விட்டார்கள்' - அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்

1962-ல் சட்டமன்ற உறுப் பினர் ஆனது முதல் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு குரல் கொடுத்து வருகிறேன். தி.மு.க. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதற்காக போராடி வந்துள்ளது. அனைத்து எம்.பி.க்களின் தொடர் முயற்சியால் சேலம் கோட்டம் கிடைத்தது.

தொடக்க விழாவை செப் டம்பர் 16-ந்தேதி சேலத்தில் அரசு விழாவோடு நடத்த லல்லு ஒப்புதல் தந்தார். ஆனால் ரெயில்வே கோட்டம் விழாவை தனியாக நடத்த வேண்டும் என்று அந்த துறை இணை மந்திரி வேலு மூலம் அதை பா.ம.க. தலைமை முயன்று தடுத்தது. நவம்பர் 1-ந்தேதி நடந்த தொடக்க விழாவிலும் மரபுகள் கடை பிடிக்கப்படவில்லை.

தங்கள் கட்சி பலத்தை காட்டுவதற்கு நடந்த விழா போல, அந்த கட்சியின் செயல் பாடு இருந்தது. விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும்போது, "பா.ம.க.வினர் கொடி அசைத்து குரல் எழுப்புவதில் ஈடுபட்டனர். அவர்களை யாரும் அமைதிப் படுத்தவில்லை.

இதனால் அவர் தனது பேச்சை இடையிலேயே நிறுத் தும் நிலைமை ஏற்பட்டது. இதில் முதல்-அமைச்சருக்கு இழைக்கப்பட்ட அவமரி யாதை. இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

கூட்டணி என்பதற்காக எதையும் சகித்துக் கொள்ள முடியாது. இனியும் பொறுமை தேவையா என்றே தோன்றுகிறது. விழாவில் பேசிய பா.ம.க. நிறுவனர், மந்திரி அன்புமணி, கட்சி தலைவர் ஆகியோர் இந்த மாவட்ட அமைச்சரான எனது பெயரைக்கூட குறிப் பிடவில்லை. இதுதான் அவர் களுடைய அரசியல் நாகரீ கமாப

தென்னக ரெயில்வே நடத்திய விழா மேடையில் மரபு கடை பிடிக்கப்பட்டதாப பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மேடையில் அந்த கட்சி நிறுவனருக்கு அடுத்து அமர வைக்கப்பட்டு இருந்தது எப்படிப நாங்கள் சந்திக்காத அரசியல் போக்கு இல்லை. யாராலும் எங்களை மறைக்க முடியாது.

0 Comments: