பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 04, 2007

தமிழ்ச்செல்வன் மரணம் - கலைஞர் இரங்கல், ஜெ கண்டனம்

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மரணம் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் கவிதை

தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி அவரை முதல்வர் கருணாநிதி வானளாவ புகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது - ஜெயலலிதா கண்டனம்



கருணாநிதி இரங்கல், கவிதை
எப்போதும் சிரித்திடும் முகம்-
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை, இளமை, இதயமோ;
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்,
பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத்தளபதி!
உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன்- உயிரனையான்-
உடன்பிறப்பனையான்;
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன் புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?

ஜெயலலிதா அறிக்கை

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.

இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெளனம் சாதித்தார்.

அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.

இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்

8 Comments:

யோசிப்பவர் said...

கருணாநிதி மட்டுமா இரங்கல் தெரிவிக்கிறார்? வைகோ என்ன செய்தார்?

ஆனாலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணத்துக்கு தெரிவிக்கப்படும் இந்த இரங்கல்களை(குறைந்த பட்சம் கலைஞரின் இரங்கலை மட்டுமாவது), ஜெயலலிதா ஒருவராவது தைரியமாக கண்டித்தாரே! பாராட்டுக்குரியது!!

SINGAM said...

I think JJ is correct and Mr.M.K has to be condomned .

SINGAM said...

I rhink JJ is correct and Mr.MK to answer this

Kattabomman said...

ஜெயலலிதா சொன்னது நூற்றுக்கு நூறு சரி. ஒரு முதல் அமைச்சராய் இருந்து கொண்டு கலைஞர் இந்த மாதிரி எழுதுவது எந்த விதத்தில் சரி? மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டால் அதிசயமே. ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றால் எது பலன் கிடைக்கலாம்.

IdlyVadai said...

லேட்டஸ்ட்: நான் வெறும் கவிதை தான் எழுதினேன், ஆனால் ஜெ அணியில் இருக்கும் வைகோ அதை கண்டித்து பேசியுள்ளார். வைகோ நீண்ட நாட்களாக LTTE ஆதரவாளர் - கலைஞர்

Hariharan # 03985177737685368452 said...

//லேட்டஸ்ட்: நான் வெறும் கவிதை தான் எழுதினேன், ஆனால் ஜெ அணியில் இருக்கும் வைகோ அதை கண்டித்து பேசியுள்ளார். வைகோ நீண்ட நாட்களாக LTTE ஆதரவாளர் - கலைஞர்//



ஜெ. வும் ஜெ. கூட்டணியில் இருக்கும் வைகோவும் எதிரி .. எதிரிக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் ரேஞ்ச் பதில்:-))

என்ன ஒரு மெய்யான இன உணர்வு கருணாநிதிக்கு !

இறந்து போன நபரை ஸ்பெஷல் இன உணர்வு ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சி-பதவி-அதிகாரத்திற்கு அபாயம் என்றால் அந்தர்பல்டி அடிக்கும் அமுதசுரபி சாணக்கியத்தனம் கருணாநிதிக்கு மட்டுமே உண்டு!

paddhusjottings said...

விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோவைத் தன் கஷ்கத்தில் இடுக்கிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா கருணாநிதியைக் கண்டிப்பது வேடிக்கை- ஆனால் இதுதானே அவரது வாடிக்கை.
இலங்கையில் தமிழர்களும் மற்ற இனத்தவர்களும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும்,அங்கே அமைதி நிலவவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தமிழனின் இந்தியனின் எதிர்பார்ப்பு. விடுதலைப்புலிகள் அல்லது இலங்கை ராணுவத்தினர் யார் மடிந்தாலும் அது பேரிழப்புத்தான்.
இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் இறுதிஅஞ்சலியும் மனிதர்களின் பண்பாடு- அவர்கள் எதிரியாக இருந்தாலும் கூட. இந்தக் குறைந்த பட்ச பண்பாட்டைக்கூட நாம் மறந்துவிட்டால் மனிதநேயமே மரித்துவிட்டது என்றுதான் பொருள்.
இதை விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்று கருதுவது காமாலைக் காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரிவதுபோலத்தான்
டி.எஸ்.பத்மநாபன்

Anonymous said...

தமிழரின் ரத்தம் / அரசியலுக்காக / மனிதாபிமானம் ஏதோ ஒரு காரணத்திற்க்காக கருணாநிதி சொன்னாலும் கூட
ஜெயலலிதா வால் அதை கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை
ஒரே வார்த்தையால் சொல்ல வேண்டும் என்றால் கேவலம்