பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 03, 2007

ஸ்டாலின் வெளிநாடு சென்றது முறையற்ற செயல் - கேப்டன்

உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கும் தெரியாமல் வெளிநாடு சென்றது முறையற்ற செயல் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வெளிநாட்டு பயணம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது முதலமைச்சரின் ஜனநாயக கடமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.


அமைச்சர் பதவி என்பது உயர்ந்த நிலையில் உள்ள பதவியாகும். நாட்டுப் பிரச்சனைகள் சம்பந்தமாக முடிவு எடுக்கக் கூடிய உயர்ந்த இடத்தில் உள்ளதாகும். அதனால் தான் அந்தப் பதவியிலிருப்போருக்கு எந்த விடுமுறையும் கிடையாது. அவருக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் வேறு ஒருவருக்கு இருக்க முடியாதல்லவா?

மேலும் ஒரு அமைச்சராக இயங்கு பவர் பொதுநலன் கருதியே செயல்பட வேண்டியவர். அவர் முழுக்க முழுக்க அரசாங்க அலுவலர் ஆவார். அவர் அலுவலகத்திலிருந்தாலும், வெளியூர் சென்றாலும் அரசே செலவு செய்வது மட்டுமல்ல அவருக்கு முழு பாதுகாப்பு தரவும் கடமைப் பட்டுள்ளது. அவரது அலுவல்களுக்கு எந்த இடையூறும் எவரும் செய்யக் கூடாது.

சுருங்கச் சொன்னால் ஒரு அமைச்சரது வாழ்க்கை பொது வாழ்க்கையே தவிர தனிப்பட்ட வாழ்க்கையென்று கிடையாது. அது திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். மர்மங்கள் அடங்கிய நாவலாக இருக்கக் கூடாது. இதுதான் நியதி. அப்படியிருக்க தமிழ்நாட்டில் இது வரையில் நடந்திராத ஒரு விசித்திரம் நடந்துள்ளது.

உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக் கிழமை முதல் காணவில்லை என்கின் றனர். பின்னர் தாய்லாந்து நாட்டுக்கு சென்று விட்டதாகவும் அதன் தலை நகரான பாங்காக்கில் முடி அலங்காரம் செய்து கொள்வதாகவும் செய்தி பரப்பப்படுகிறது. குடும்பத்தகராறு காரணமாக சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனர். தனிப்பட்ட முறையில் சென்றதாகவும் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

எது உண்மை என்பது தெரிய வில்லை. எனினும் மு.க.ஸ்டாலின் முக்கியமான துறைக்குப் பொறுப்பு வகிப்பவர். அவர் வகிக்கும் உள்ளாட்சித் துறை சார்பாக "உள்ளாட்சி நாள்' தமிழ்நாடெங்கும் 1.11.2007 அன்று கொண்டாடப்பட்டது. அதில் எந்த நிகழ்ச்சியிலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. இது முக்கியமாக தெரியவில்லை போலும்.

தமிழ்நாடெங்கும் மழை, வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி மன்றங்கள் நிவாரண பணிகளில் துரிதமாக ஈடுபட வேண்டிய நேரம், ஒரு நாள் மட்டும் சென்னையில் பேட்டிய ளித்தார். பிறகு எங்கே போனார் என்று தெரியவில்லை.

அதிலும் ஒரு அமைச்சர் வெளிநாட்டுக்கு போவது என்பது இந்திய அரசின் அனுமதி பெற்று வெளிநாட்டில் உள்ள தூதரகங்கள் வரவேற்பும், பாதுகாப்பும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

ஒரு தனி நபர் எப்போது வேண்டுமானாலும் வெளிநாட்டுக்கு போகலாம். ஆனால் ஒரு அமைச்சர் தனிப்பட்ட முறையில் போகிறேன் என்று சொல்லி வெளிநாட்டுக்கு போக முடியாது. இந்திய அரசு அனுமதித்த பிறகே முறைப்படி வெளிநாட்டிலுள்ள தூதரகங் களுக்குத் தெரிவித்த பிறகே செல்ல வேண்டும். வெளிநாட்டுப்பயணமும் பொதுமக்கள் நன்மை கருதியே இருக்க வேண்டும். இந்தியாவின் பிரதிநிதியாகத்தான் மாநில அமைச்சரானாலும், வெளிநாட்டில் செயல்பட வேண்டும். இதுதான் முறை.

ஆனால் தமிழ்நாட்டு அமைச்சரவையில் முக்கிய பணியாற்றும் மு.க.ஸ்டாலின் யாருக்கும் தெரியாமல் வெளிநாடு சென்றிருந்தால் அது முறையற்றது மட்டுமல்ல, மக்கள் நலன்களுக்கு விரோதமானது. ஒரு வருங்கால முதல்வர் என்று திமுகவினரால் அழைக்கப்படும் ஒருவருக்கே இது தெரிய வேண்டாமா? ஒரு அமைச் சருக்குத் தனிப்பட்ட வாழ்க்கையும் கிடையாது. தலைமறைவு வாழ்க்கையும் கிடையாது என்பதை அறிய வேண்டாமா?

இதுவரையில் இல்லாத இத்தகைய பொறுப்பற்ற செயலுக்கு நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது முதலமைச்சர் கருணாநிதியின் ஜனநாயக கடமையாகும். நாடு அவரின் விளக்கத்தை எதிர்பார்க்கிறது. அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

2 Comments:

paddhusjottings said...

அப்பா அம்மாவிடம் கோபித்துக்கொண்டு பழம் கிடைக்கவில்லையென்று பழனி மலையில் போய் அமர்ந்துகொண்டார் முருகன். தனக்கு இன்னும் மகுடம் சூட்டாத கோபத்தில் பாங்காக்கிற்கு செல்கிறார் வாரிசு.நமக்கெல்லாம் ஏதாவது சோகம் அல்லது கோபம் என்றால் அதிகபட்சம் பனகல் பார்க்கில் அமர்ந்து ஆற்றிக்கொள்வோம்- மயிருள்ள சீமாட்டி- ஸ்டாலின் பாங்காக்கிற்குப் பறக்கிறார் எல்லாம் முறைப்படியா நடக்கிறது, இதை முறையற்ற செயல் என்று சொல்வதற்கு!

டி.எஸ்.பத்மநாபன்

Anonymous said...

// மயிருள்ள சீமாட்டி- ஸ்டாலின் பாங்காக்கிற்குப் பறக்கிறார்//
Unmayileyee adhukkudhaname!

http://www.ndtv.com/convergence/ndtv/showflipped.aspx?id=FLIEN20070031649

Siva
(sivaramang.wordpress.com)